11/11/2025
நீண்ட இடைவெளிக்கு பிறகு திரும்பும் வடகிழக்கு பருவகாற்றால் பருவமழை ஆரம்பமாக இருக்கிறது
அடுத்த Nov 15 வரை மழை எதிர்பார்க்கப்படும் பகுதிகள்:
கிழக்கு திசை காற்று காரணமாக Nov 11 முதல் ஏறத்தாழ Nov 14-16 வரை தென் தமிழகத்தில் ஆங்காங்கே மழையும், சமயத்தில் பரவலான மழையும் பெய்ய இருக்கிறது.. ஒரிரு இடங்களில் கன மழையும் இருக்கும். .
அதேபோல கொங்கு பகுதியில் Nov 11 முதல் ஏறத்தாழ nov 14-16 வரை மேற்கு கொங்கு பகுதியான கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஆங்காங்கே சில, பல இடங்களிலும், ஒரிரு இடங்களில் கன மழை வரையும் இருக்கும் மற்றும் ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஆங்காங்கே ஒருசில இடங்களில் மழையும், ஏதாவது ஒரிரு இடங்களில் கன மழை வரையும் இருக்கும். மற்றும் அதற்கு கிழக்கே உள்ள பகுதிகளில் ஆங்காங்கே ஒரிரு இடங்களில் மழை இருக்கும்.. ஆனால் கொங்கு பகுதிகளில் பரவலான மழைக்கு தோரயமாக Nov 15,16 வரை வாய்ப்பு இருக்காது என்பதால் அதுவரை அதிக எதிர்பார்ப்பு வேண்டாம்..
கருகி வரும் பயிர்களை குளிர்விக்க வரும் மழை
Nov 16,17ல் முழுமையான வடகிழக்கு பருவகாற்று திரும்பி Nov 17,18 வாக்கில் தென்மேற்கு வங்ககடலில் ஒரு தாழ்வு நிலை உருவாகும். Nov 17,18 முதல் தமிழக கடலோர பகுதிகளில் பரவலான மழை ஆரம்பமாகும்..
அந்த தாழ்வு நிலையானது தென்மேற்கு வங்கடலிலிருந்து மேற்கு நோக்கி மன்னார் வளைகுடா அல்லது குமரிக்கடல் நோக்கி நகர்ந்தால் மட்டும் தமிழக மேற்கு மாவட்டங்களுக்கு(கொங்கு பகுதி, தென் உள் மாவட்டங்கள்) பரவலான மழை கிடைக்கும்... வடகிழக்கு பருவகாற்றின் முழுமையான ஈரப்பதம், லேசான MJO, ITCZ, கடல் சார்ந்த அலைவுகள், கடல் மேற்பரப்பு வெப்பநிலை சாதகமாக இருப்பது போன்ற சாதகமான மழை காரணிகளால் அத்தாழ்வு நிலை மேற்கு (மன்னார் வளைகுடா அல்லது குமரிக்கடல்) நோக்கி நகரவே அதிக வாய்ப்பிருக்கிறது.. அவ்வாறு நகர்ந்தால் வாடி வதங்கி வரும் கொறங்காடு, மானாவரி பயிர்களுக்கும் பரவலாக உயிர் மழை கிடைக்கும்.. இதை வரும் நாட்களில் உறுதிபடுத்தலாம்..
அதற்கடுத்த சிஸ்டம் தோரயமாக Nov 22-26 வாக்கில் தமிழக கரையை நெருங்கலாம்.. அந்த சிஸ்டம் வலுப்பெற MJO சாதகமாக இல்லததால் அந்த சிஸ்டம் வலுப்பெற வாய்ப்பு குறைவாக உள்ளது. இருப்பினும் அந்த சிஸ்டம் வலுப்பெற கடல் வெப்பநிலை சாதகமாக உள்ளது.. வலுப்பெறாமல் இருப்பதே தமிழகத்திற்கு நல்லது அதைபற்றி வரும் நாட்களில் பார்ப்போம்..
டிசம்பரிலும் கடல் மேற்பரப்பு வெப்ப நிலை, MJO, ITCZ, கடல் சார்ந்த அலைவுகள் வருகை என மழைக்காரணிகள் சாதகமாக இருப்பதால் தமிழகத்தில் ஒரளவிற்கு பரவலான நல்ல மழை இருக்கிறது.. இதனால் 2016, 2017போல கடும் வறட்சி வரும் என்ற கவலை வேண்டாம். .. ஆனால் மழை பற்றாக்குறையால் லேசான, மிதமான வறட்சி இருக்கும்.... சில இடங்களில் அதிக வறட்சியும் இருக்கும். . ஆனால் கடும் வறட்சி ஏற்படாமல் இருக்க நவம்பர் இறுதி, டிசம்பரிலும் பரவலான மழையும் இருக்கிறது.. நவம்பரில் அடித்த இயல்பிற்கு மாறான வெப்பநிலையும், இயல்பிற்கு மாறன மேற்கு திசை காற்றும், மழை இல்லாமல் நீண்ட இடைவெளியும் நவம்பர் இறுதி, டிசம்பரில் பரவலான மழைக்கு சாதகமாக அமையும்.. அதேபோன்று தமிழக அணைகளுக்கு ஒரளவிற்கு நல்ல நீர்வரத்தும் இருக்கும்.... அமராவதி அணையும் குறைந்தது ஒரு முறையாவது நிரம்ப வாய்ப்பிருக்கிறது.. இயற்கையை அதன் மழைக்காரணிகளை வைத்து ஒரளவிற்கே கணிக்க இயலும். அதற்கு மேல் இயற்கையானது நாம் எதிர்பார்த்தை விட கூடுதலாக பெய்வதும், குறைவாக பெய்வதும் இயற்கையின் கையில் தான் உள்ளது.. இயற்கையை நம்புவோம்..