04/11/2025
ராஜஸ்தான் மாநிலம் புஷ்கர் நகரில் கலாசார பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக ஆண்டுதோறும் ‘புஷ்கர் கண்காட்சி’ நடைபெறுகிறது. இதில் ஒட்டகம், குதிரை, எருமை மாடுகள் விற்பனை கண்காட்சியும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டின் கால்நடை கண்காட்சி கடந்த மாதம் 29-ந் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது.
இந்த கண்காட்சியில் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கவனத்தையும் ‘அன்மோல்’ என்ற எருமை மாடு ஈர்த்தது. 1,500 கிலோ எடை கொண்ட இந்த எருமை மாட்டின் விலை ரூ.21 கோடியாகும்.
இந்த கண்காட்சியில் வைரலான ரூ.21 கோடி மதிப்பிலான எருமை மாடு திடீரென உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.