தூத்துக்குடி மாநகராட்சி 6 வது வார்டு

  • Home
  • தூத்துக்குடி மாநகராட்சி 6 வது வார்டு

தூத்துக்குடி மாநகராட்சி 6 வது வார்டு தூத்துக்குடி மாநகர பொதுமக்கள் நலன் காக்க கைககோர்த்திடுவோம் சமுதாயத்தை சீர்படுத்துவோம்.

11/11/2024

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அவர்களே வணக்கம்!!!!

138/039/903210 வரிவிதிப்பு எண்ணிற்கான வணிகக் கட்டிடத்தின் மொத்த பரப்பு 600.00 (ச.அ)அதன் மேல்புரம் வரிவிதிப்பு எண் 138/039/903209 குடியிருப்பு கட்டிடத்தின் மொத்த பரப்பு-1200 (ச.அ),அதன் கீழ் பகுதி வரிவிதிப்பு எண் 138/039/903211 வணிகக்கட்டிடத்தின் மொத்தபரப்பு -1000 (ச.அ)... என்ன முரண்பாடு???!!!!!!! அப்பாவி பாமர மக்களின் வீடுகளுக்கு வரிவிதிப்பு செய்ய அளவிடும் போது வெளிப்புறம்× வெளிப்புறம் அளவீடு செய்து துல்லியமாக கணக்கிடும் அதிகாரிகள் வசதி படைத்த பணக்காரர்களின் கட்டிடங்களை அளவீடு செய்யும் போது மட்டும் தூங்கி விடுவது ஏனோ????????

மேற்படி 1 வது வரிவிதிப்பிற்கு எவ்வாறு அளவீடு செய்து 600 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.மேற்படி வணிகக்கட்டிடத்தின் மீது ஏற்கனவே அளித்த புகாரின் மீது நேரடி ஆய்வு செய்த அப்போதைய கிழக்கு மண்டல உதவி ஆணையர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பது இதுவரை எனக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை..
உடனடியாக மேற்படி கட்டிடத்தை ஆய்வு செய்து அளவிட்டு வாகன நிறுத்துமிடம் இன்றி செயல்படும் அக்கட்டித்தின் மீது உரிய நடவடிக்கை மேற்க்கொள்வதுடன் புதிய கட்டிடத்தை பழைய கட்டிடம் என குறிப்பிடும் மாநகராட்சி அதிகாரிகள் அவை பழைய கட்டிடம் என்பதை உறுதி செய்யும் வகையில் அறிக்கை எனக்கு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அவர்களின் சான்றொப்பமிட்டு அறிக்கை வழங்கிடுவதுடன், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் செயல்பட்ட அனைவரின் மீதும் ஆணையர் அவர்கள் உடனடி நடவடிக்கை மேற்க்கொள்வதோடு,வருவாய் இழப்பை வசூல் செய்து மேற்படி எனது புகாருக்கான ஒப்புகைசீட்டு மற்றும் நடவடிக்கை தொடர்பான விவரங்களை எழுத்துப்பூர்வமாக 30 நாட்களுக்குள் வழங்கிடுமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்....

சமூக நலனில்
அ.செல்வகுமார்
சமூக ஆர்வலர்
மாவட்ட செயலாளர்
தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம்
தூத்துக்குடி.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .......
30/10/2024

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் .......

தூத்துக்குடி மாநகராட்சி 6 வது வார்டு பொன்சுப்பையாநகர் பகுதியில் நடைபெற்று வரும்  வடிகாலின் நடுவே இருந்த மரத்தை முழுமையாக...
14/09/2024

தூத்துக்குடி மாநகராட்சி 6 வது வார்டு பொன்சுப்பையாநகர் பகுதியில் நடைபெற்று வரும் வடிகாலின் நடுவே இருந்த மரத்தை முழுமையாக அகற்றாமல் பணிகள் நடைபெற்று வருகிறது.... மாநகராட்சி ஆணையர் அவர்கள் அதிகாரிகளை முழு நேரமும் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் கள ஆய்வுக்கும் அனுப்பி வைத்து பொதுமக்களுக்கான வளர்ச்சி பணிகள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டுமென பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்....

தூத்துக்குடி மாநகராட்சி 6 வது வார்டு லெட்சுமிபுரம் (தற்போது மாநகராட்சியால் பொன்சுப்பையாநகர் பிரதான சாலை) என பெயரிடப்பட்ட...
10/09/2024

தூத்துக்குடி மாநகராட்சி 6 வது வார்டு லெட்சுமிபுரம் (தற்போது மாநகராட்சியால் பொன்சுப்பையாநகர் பிரதான சாலை) என பெயரிடப்பட்ட பகுதியில் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.அதில் தோண்டப்படும் மணல்கள் தனியார் நிலத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ளது.அதே வார்டில் தஸ்நேவிஸ்நகர் (கடலை கம்பெனி தெருவில்) மிகவும் பள்ளமான பகுதி உள்ளது மேற்படி மணலை இப்பகுதி சாலையில் கொட்டி சரிசெய்து கொடுத்தால் அப்பகுதியில் மழைநீர் தேங்காமல் அப்பகுதி பொதுமக்கள் பாதுகாக்கப்படுவர்.அப்பகுதி புகைப்படங்களையும் இணைத்துள்ளேன் உரிய நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டுமென பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்....

மக்கள் நலனில்
அ.செல்வகுமார்
சமூகஆர்வலர்
மாவட்ட செயலாளர்
தேசியமக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம்
தூத்துக்குடி

19/08/2024
15/08/2024

தூத்துக்குடி மாநகராட்சி 6 வது வார்டு துப்பரவு மேற்பார்வையாளரைக் காணவில்லை கண்டறிந்தால் பரிசு நிச்சயம்....

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் சுகாதார பணிகள் முறையாக மேற்க்கொள்வதை கண்காணிக்க துப்பரவு மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.மேற்படி 6 வது வார்டு துப்பரவு மேற்பார்வையாளர் திரு.ராஜ்குமார் அவர்களை தேடி தேடி பார்த்தாலும் கிடைப்பது அரிதாகி விடுகின்றது...
ஒப்பந்த நிறுவனமான Ourland நிறுவனம் மேற்படி நபருக்கு சிறப்பு சலுகை வழங்குகின்றதா????
தனது பணியை முறையாக செய்யாததால் சுகாதார பணிகள் முறையாக செய்யப்படாமல் உள்ளது.....
பணியில் இருப்பதாக வருகை பதிவு செய்து விட்டு கிரிக்கெட் விளையாடி மகிழ்வதை பார்த்தால் எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
பொதுமக்கள் பணத்தில் சம்பளம் வாங்கி கிரிக்கெட் விளையாடும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்காது அல்லவா???
மேற்படி நபரின் பணியை கவனிக்க வேண்டிய தூய்மைக் காவலர்,ஒப்பந்த நிறுவன மேற்பார்வையாளர்கள் என அனைவரும் இணைந்து தவறை மறைப்பதின் மர்மம் என்ன???

விரிவான விசாரணை நடைபெற்று நடவடிக்கை எடுக்கப்படுமா???

மக்கள் நலனில்
அ.செல்வகுமார்
சமூக ஆர்வலர்
மாவட்ட செயலாளர்
தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம்
தூத்துக்குடி

ஜெய்ஹிந்த்
15/08/2024

ஜெய்ஹிந்த்

தூத்துக்குடி மாநகராட்சி 6 வது வார்டு தஸ்நேவிஸ்நகர் பகுதியில் சாலை அமைக்காமல் விடுபட்ட பகுதி மழைநீர் தேங்கா வண்ணம் மணல் ந...
30/06/2024

தூத்துக்குடி மாநகராட்சி 6 வது வார்டு தஸ்நேவிஸ்நகர் பகுதியில் சாலை அமைக்காமல் விடுபட்ட பகுதி மழைநீர் தேங்கா வண்ணம் மணல் நிரப்பிடுமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறோம்...

மக்கள் பணியில்
அ.செல்வகுமார்
சமூக ஆர்வலர்
மாவட்ட செயலாளர்
தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம்
தூத்துக்குடி

28/06/2024

தூத்துக்குடி மாநகராட்சி வார்டு 6 லெட்சுமிபுரம் பகுதியில் பேவர்பிளாக் சாலை அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.அப்பகுதி குறுகிய பகுதி வடிகால் அமைக்காமல் சாலை அமைத்தால் வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியே செல்ல வழிவகை இல்லை என்பதை ஏற்கனவே தெரிவித்து உள்ளேன்.தற்போது அப்பகுதியில் பொதுமக்களின் வீடுகளுக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் உறைகிணறுகள் மூடப்படுகின்றன..சாலை அமைக்கப்பட்ட பின்பு கழிவுநீர் எவ்வாறு வெளியேற்ற முடியும்???

10 அடி சாலைக்குள் பெரிய வாகனங்கள் வர இயலாத சூழலில் கழிவுநீர் வெளியேற்ற இயலாமல் பொதுமக்கள் எதிர்கொள்ள போகும் சிரமத்தை போக்கிட மாநகராட்சி நிர்வாகம் என்ன மாதிரியான திட்டத்தை கையில் வைத்துள்ளது....

சிறிய பகுதி வடிகால் அமைக்க பெரிய அளவில் நிதி தேவைப்படாது.ஏற்கனவே பாதாள சாக்கடை இணைப்புக்கு பணம் செலுத்தியுள்ளோம் அதற்கான பணிகளும் நடைபெறவில்லை...

சாலை அமைக்கப்பட்ட பின்பு கழிவுநீரை வெளியேற்ற என்ன செய்வது என்பதை தெளிவுபடுத்தி அப்பகுதிகளுக்கு கழிவுநீர் செல்லும் வகையில் சிறிய வடிகால் போன்ற அமைப்பை ஏற்படுத்தி சாலை அமைக்குமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்....

மக்கள் நலனில்
அ.செல்வகுமார்B.com
சமூக ஆர்வலர்
மாவட்ட செயலாளர்
தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம்
தூத்துக்குடி.

Address


Telephone

+917010672787

Website

Alerts

Be the first to know and let us send you an email when தூத்துக்குடி மாநகராட்சி 6 வது வார்டு posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to தூத்துக்குடி மாநகராட்சி 6 வது வார்டு:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share