திருக்குர்ஆன் நற்செய்தி மலர்

  • Home
  • திருக்குர்ஆன் நற்செய்தி மலர்

திருக்குர்ஆன் நற்செய்தி மலர் இறைவனின் நற்செய்திகள் எளிய தமிழில் அனைத்து மக்களுக்கும்...

இது பிடிபட்ட கேஸ் பிடிபடாமல் எத்தனையோ சம்பவங்கள் அன்றாடம் நடந்து கொண்டு இருக்கின்றன. இவற்றுக்கான தீர்வு என்ன என்று யோசித...
24/07/2025

இது பிடிபட்ட கேஸ் பிடிபடாமல் எத்தனையோ சம்பவங்கள் அன்றாடம் நடந்து கொண்டு இருக்கின்றன. இவற்றுக்கான தீர்வு என்ன என்று யோசித்தோமா?
உண்மையான கடவுள் நம்பிக்கையும் மறுமை வாழ்க்கை பற்றிய நம்பிக்கையும் மனித மனங்களில் பகுத்தறிவு பூர்வமாக விதைக்கப்பட வேண்டும். இந்த பரீட்சை வாழ்க்கையில் நமது செயல்களுக்கு #இறுதித்தீர்ப்பு_நாள் அன்று கடவுளிடம் விசாரிக்கப்பட உள்ளோம்.. பாவிகளுக்கு நரகமும் புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் மறுமையில் விதிக்கப்பட உள்ளது என்ற கல்வியை நாம் அடிப்படையாக மக்களுக்கு போதித்தே ஆக வேண்டும்.. இஸ்லாம் அதைத்தான் செய்து வருகிறது.
#நாம்_ஏன்_பிறந்தோம்

| தமிழ்நாட்டையே உலுக்கிய வழக்கில் தீர்ப்பு!

| |

அதிரடி விலைக்கு ஏழு நூல்கள்!ரூ.340 மதிப்புள்ள 7 புத்தகங்கள் ரூ 200 க்கு தள்ளுபடி மற்றும் STOCK CLEARANCE SALE!1.  #உலகம்...
23/07/2025

அதிரடி விலைக்கு ஏழு நூல்கள்!
ரூ.340 மதிப்புள்ள 7 புத்தகங்கள் ரூ 200 க்கு
தள்ளுபடி மற்றும் STOCK CLEARANCE SALE!
1. #உலகம்_இப்படித்தான்_அழியும் (pages 101)
சாட்ஜிபிடி துணையோடு ஆதாரங்களுடன்
- மகத்தான் யதார்த்தத்தை எதிர்கொள்ள துணை செய்யும் தெளிவான நூல்!
2. #நாம்_ஏன்_பிறந்தோம்? (pages 32)
நம் வாழ்க்கைக்கு பின்னால் நோக்கம் உள்ளதா அல்லது வீணுக்காக நாம் உள்ளோமா? தெளிவை ஏற்படுத்தும் சிறு நூல்!
3. விண்ணியல் பாதை வெற்றிப் பயணம் (p 24)
- விண்வெளியின் ஆச்சரியம் மிக்க உண்மைகளும் அவற்றில் மனிதன் பெறவேண்டிய படிப்பினைகளும்
4. #தவறான_புரிதல்கள் (pages 258)
- இஸ்லாததின் மீது தொடுக்கப்படும் குற்றச்சாட்டுகளும் அவற்றுக்கான தெளிவான பதில்களும்.
5. #நபிகள்_நாயகம் - வாழ்க்கை, போதனைகள், சாதனைகள், விமர்சனங்கள். (p 72)
- தலைப்பில் கூறப்படும் அனைத்து விஷயங்களையும் விளக்கும் தெளிவான நூல.
6. #அமைதிக்கு_வழி (p 32)
- தனி மனித மற்றும் சமூக அமைதிக்கான வழி இஸ்லாம்தான் என்பதை தெளிவாக விளக்கும் நூல்.
7 . #இல்லறத்தை_நல்லறமாய்_துவங்கிடவே .. (p 24)
-- இஸ்லாமிய திருமணம், வழிமுறைகள், ஒழுங்குகள், வாழ்க்கைத் துணை தேர்வு, வரதட்சணைக்கு மாற்றாக வதுதட்சனை, திருமண விருந்து, இன்னும் இவை பற்றிய புத்தகம்.
(திருமண அழைப்பிதழோடு அன்பளிப்பாக கொடுக்கத் தகுந்த புத்தகம்)
=========
அனைத்து நூல்களும் நல்லிணக்கம் கருதி உங்கள் மாற்றுமத நண்பர்களுக்கும் குடும்பங்களுக்கும் நூலகங்களுக்கும் அன்பளிப்பாக வழங்க உகந்தவை.
================
ஆன்லைனில் ஆர்டர் செய்ய கீழ்கண்ட லிங்கை க்ளிக் செய்யுங்கள்
https://www.tayyib-hope.in/product/32448359/7-Books-Combo

 # *நாம்_ஏன்_பிறந்தோம்* ?நமது செயல்பாடுகள் புண்ணியங்களாகவும் பாவங்களாகவும் பதிவாகும் பரீட்சைகளமே இவ்வுலகம்.  அதில் நாம் ...
17/07/2025

# *நாம்_ஏன்_பிறந்தோம்* ?
நமது செயல்பாடுகள் புண்ணியங்களாகவும் பாவங்களாகவும் பதிவாகும் பரீட்சைகளமே இவ்வுலகம். அதில் நாம் வெற்றியடைவதே நம் வாழ்வின் நோக்கமாகும். அதற்காக இறைவன் தந்த கையேடுதான் திருக்குர்ஆன் ஆகும்.

*தீர்ப்பு நாள்:*
தேர்வு என ஒன்று நடத்தப்பெற்றால் அதற்கான தீர்ப்பு என்று ஒன்று உண்டல்லவா... அத்தீர்ப்பு பற்றி இவ்வாறு கூறுகிறான்:

3:185. _ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் - இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை._

ஆம், மரணத்தில் இருந்து எப்படி யாரும் தப்பமுடியாதோ அதைப் போலவே அதற்குப்பின் வருவதில் இருந்தும் யாரும் தப்பமுடியாது. இங்கு வினைகளை விதைத்த நாம் அவற்றின் விளைவுகளை அனுபவிக்காமல் போய்விடுவோமா? இவ்வுலகில் அநியாயங்கள் செய்தவர்கள் அதற்குரிய தண்டனைகள் பெறாமலே தப்பித்து விடுவதையும் பிறருக்காக தியாகங்கள் செய்தவர்கள் அதற்குரிய பரிசைப் பெறாமலே மறைந்து விடுவதையும் நாம் காண்கிறோம். இறைவன் அவற்றை அப்படியே விட்டு விடுவானா?

ஆம் அன்பர்களே, நீதியின் வேட்கையை நிறைவு செய்வதற்காகவே வருகிறது இறுதித்தீர்ப்பு நாள்! நாமும் நமக்கு முன்சென்றோரும் நமது பின்தோன்றல்களும் என அனைவரும் மரணத்திற்குப் பின் மீண்டும் உயிர் கொடுத்து எழுப்பபடுவோம். அதிலிருந்து யாரும் தப்பமுடியாது.

78:17,18. _நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரம் குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது. ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள்._

அந்நாளில் பயங்கரமான நிகழ்வுகள் நடக்கும் என்று திருக்குர்ஆன் எச்சரிக்கிறது.தன் பெற்றோர், பிள்ளைகள், உறவினர், வாழ்க்கைத்துணைகள், நண்பர்கள் என பலரும் இருந்தாலும் யாரும் யாருக்கும் உதவி செய்யமாட்டார்கள். அந்நாளின் அமளியில் இருந்து தன்னைத் தற்காத்துக்கொள்வதிலேயே ஈடுபட்டிருப்பார்கள்.

_80:33. _ஆகவே, (யுக முடிவின் போது காதைச் செவிடாக்கும் பெருஞ் சப்தம் வரும் போது -_
80:34. _அந்த நாளில் மனிதன் விரண்டு ஓடுவான் - தன் சகோதரனை விட்டும் -_
80:35. _தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும்;_
80:36. _தன் மனைவியை விட்டும், தன் மக்களை விட்டும்-__
80:37. _அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போதுமானதாயிருக்கும்_ .

*பதிவேடுகள் சாட்சி கூறும் நாள்:*
நமது செயல்கள் அனைத்தும் இன்று பதிவாகின்றன. நம்மைச்சுற்றி எழும் ஒலி, ஒளி அலைகள் ஏற்படுத்தும் பதிவுகள் ஒருபுறம், நம்மைக் கேட்காமலே நமது மூளை செய்யும் பதிவுகள் ஒருபுறம் என பதிவுகளுக்குப் பஞ்சமில்லை என்பது தெளிவு. நமது ஒவ்வொருவரது வாழ்வின் அம்சங்களும் அணுவணுவாக அன்று வெளியிடப்படும்.

99:7,8. _எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அதனை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவர் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அதனையும் அவர் கண்டு கொள்வார்._
மேலும் அறிய
https://www.quranmalar.com/2014/05/blog-post_15.html
---------------+-------------
இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_25.html
அல்லாஹ் என்றால் யார்?
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_8.html
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html
ஒப்பிலா உயர்மறை திருக்குர்ஆன்!
http://quranmalar.blogspot.com/2015/07/blog-post_25.html
இதைப் படிக்காவிட்டால் இழப்பு! பேரிழப்பு!
http://quranmalar.blogspot.com/2012/10/blog-post_31.html

இஸ்லாமிய திருமணங்களின் போது அழைப்பிதழோடு அன்பளிப்பு செய்ய ஏற்ற அருமையான நூல். பொருளடக்கம்:இல்லறம் இனிதாக....திருமணத்தை ப...
13/07/2025

இஸ்லாமிய திருமணங்களின் போது அழைப்பிதழோடு அன்பளிப்பு செய்ய ஏற்ற அருமையான நூல்.
பொருளடக்கம்:
இல்லறம் இனிதாக....
திருமணத்தை புனிதமாக்கிடும் இறைமார்க்கம்
பாலியலை சமநிலைப்படுத்தும் வாழ்வியல்
வாழ்க்கைத் துணை தேர்வு
நல்ல துணையா? தீய துணையா?
திருமணம் நிறைவேற என்ன தேவை?
தட்சணை வரனுக்கா? வதுவுக்கா?
தொடரும் வரதட்சணை சாவுகள்
வரதட்சணையல்ல வது தட்சணை இங்கே!
திருமண சிற்றுரை
பெண்பார்த்து மனமுடியுங்கள்
இல்வாழ்க்கை இன்புற்றிருக்கவே!
தம்பதியரின் கடமை, உரிமைகள்
கணவனின் கடமைகள்
மனைவியின் கடமைகள்
குழந்தைச் செல்வங்களை காப்போம்!
---------------
இதன் pdf வாசிக்க க்ளிக் செய்யுங்கள்
https://www.quranmalar.com/2025/07/blog-post_13.html
இந்த நூலைப்பெற வாட்சாப்பில் தொடர்பு கொள்ளுங்கள் 9886001357

உங்களைப் படைத்தவன் தரும் தீர்வுகள் இவை..

09/07/2025

***********************************Welcome to ...

https://youtu.be/6ZpgVp1hHQY?si=jGK-GBHRacgIIbZQ #பரவும்_இஸ்லாம் #இஸ்லாம்_ஒன்றே_தீர்வு
06/07/2025

https://youtu.be/6ZpgVp1hHQY?si=jGK-GBHRacgIIbZQ
#பரவும்_இஸ்லாம்
#இஸ்லாம்_ஒன்றே_தீர்வு

Did you know that out of the 25,000 people who convert to Islam in the U.S. each year, 75% are from Gen Z?If they all gathered in one place, they could fill ...

Address


Alerts

Be the first to know and let us send you an email when திருக்குர்ஆன் நற்செய்தி மலர் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share