Ponnamaravathi News

  • Home
  • Ponnamaravathi News

Ponnamaravathi News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ponnamaravathi News, Media/News Company, .

10/05/2024
திறமையுள்ள படைப்பாளிகளுக்கு ஓர் வாய்ப்பு. காரைக்குடி நியூஸ் சேனல் வழங்கும் குறும்பட போட்டி சீசன் 1 முதல் பரிசு ரூ. 10,00...
21/09/2022

திறமையுள்ள படைப்பாளிகளுக்கு ஓர் வாய்ப்பு.

காரைக்குடி நியூஸ் சேனல் வழங்கும் குறும்பட போட்டி சீசன் 1
முதல் பரிசு ரூ. 10,000/-
இரண்டாம் பரிசு ரூ.3,000/-
மூன்றாம் பரிசு ரூ. 2000/-

விதிமுறைகள்:
1.குறும்பட போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு இல்லை.

2.ஒரு நபர் ஒரு குறும்படம் மட்டுமே அனுப்ப முடியும். ஏற்கனவே பிற போட்டிகளில் கலந்து கொண்டதாகவோ, பரிசுகள் பெற்றதாகவோ இருக்கலாம். ஆனால் அவற்றை குறிப்பிட வேண்டும்.(வாட்டர் மார்க், லோகோ இல்லாமல் வீடியோவை அனுப்ப வேண்டும்)

3.குறும்படம் வீடியோ எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருக்கலாம்.
பொழுதுபோக்கு, காதல், சமூக சிந்தனை என்று எதைப் பற்றி வேண்டுமானாலும் கதையின் கரு இருக்கலாம்.

4.குறும்படங்கள் வந்து சேர்ந்ததும் தகுதியுள்ள குறும்படங்கள் மட்டும் காரைக்குடி நியூஸ் Facebook மற்றும் YouTubeல் வெளியிடப்படும்.குறும்படத்தின் ஒரு நிமிட வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்படும். . அதிக லைக்ஸ் மற்றும் பார்வைகள் (Views) பெறும் குறும்படங்கள் பரிசுகளுக்கு தேர்வாகும். மூன்று தளங்களிலும் பெறும் மொத்த பார்வைகள் (total views) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பேஸ்புக் மற்றும் யூடியூபில் இரு மடங்கு மதிப்பெண்களும் இன்ஸ்டாகிராமில் ஒரு மடங்கு மதிப்பெண்களும் அதன் பார்வையாளர்களை பொறுத்து கூட்டப்படும். ( Facebook viewers × 2 + Youtube viewers × 2 + Instagram viewers × 1 = Total viewers) இதில் தீர்ப்பு வழங்குவது பார்வையாளர்கள் மட்டும்தான்.

5.படைப்புகளை குழுவாகவோ, தனி நபராகவோ அனுப்பலாம். சொந்த படைப்பு என்ற உறுதி மொழியும், ஆதார் அட்டையின் நகலும் அனுப்ப வேண்டும். தமிழகத்தில் இருந்து யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

6.படைப்புகள் வந்து சேர்ந்ததும் ஒன்றன்பின் ஒன்றாக காரைக்குடி நியூஸ் சேனலில் (Facebook, YouTube, Instagram) வெளியிடப்படும்.

7. எங்கள் விதிமுறைகளுக்கு ஏற்றதாக இருக்கும் படைப்புகள் மட்டுமே வெளியிடப்படும். சிவகங்கை மாவட்ட படைப்பாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

8.படைப்புகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் 12:10:2022 முடிவுகள் வெளியாகும் நாள் 15:10:2022

9.பரிசுகளுக்கு தேர்வு பெறுவோருக்கு புதுயுகம் தொலைக்காட்சி மற்றும் காரைக்குடி நியூஸ் இணைந்து நடத்தும் தீபாவளி சிறப்பு பட்டிமன்றத்தில் (நாள்: 16:10:2022
இடம்: கவியரசு கண்ணதாசன் மணி மண்டபம், காரைக்குடி) கவிஞர் சினேகன் உள்ளிட்ட பிரபலங்கள் கரங்களால் பரிசுகள் வழங்கப்படும். (விருது தொகை மற்றும் நினைவு பரிசு)

10.செல்போன்/ வீடியோ கேமரா உள்ளிட்ட எதில் வேண்டுமானாலும் படங்கள் எடுக்கலாம். வீடியோ ஆடியோ தரமாக இருக்க வேண்டும்.

11.குறும்படங்கள் அனுப்ப வேண்டிய ஈமெயில் - [email protected]

WhatsApp / Telegram - 9790597137 (only message)
தொலைபேசியில் அழைத்தல் கூடாது. சந்தேகங்களை மெசேஜ் மூலமாக கேட்க வேண்டும்.
(தரமான வீடியோக்களை நல்ல ரெசல்யூசனில் அனுப்புவதற்கு டெலிகிராம் எண் 9790597137 பரிந்துரைக்கப்படுகிறது)

குறும்படம் போட்டி பற்றிய சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 7548829514
பார்வையாளர்களே இங்கு நடுவர்கள். எனவே அதிக பார்வையாளர்கள் பெற நீங்களும் முயற்சி செய்யலாம் (share short film to your friends) ஆல் தி பெஸ்ட்!

30/08/2022

பொன்னமராவதி

தாயின் நினைவாக அணிந்திருந்த தங்கச் செயின் காணவில்லை என தான் சென்று வந்த ஊர்களில் பிளக்ஸ் போர்டு வைத்து தேடி வரும் பாச மகன்*

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள செம்பூதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி நாராயணன் இவரின் தாய் கருப்பாயி அம்மாள் இவர் உடலை குறைவால் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காலமாகி உள்ளார் இவரது நினைவாக விவசாயி நாராயணன் தங்கத்தால் ஆன கைச்செயின் ஒன்றை தங்கச் செயின் அணிந்திருந்த வந்துள்ளார் கடந்த திங்கட்கிழமை உசிலம்பட்டியில் உள்ள தனது உறவினர் விட்டு வளைகாப்பு விழாவிற்கு சென்று வேகுபட்டி கொப்பனாபட்டி காட்டுப்பட்டி பொன்னமராவதி வழியாக தனது வீட்டிற்கு வந்துள்ளார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது கைச்செயின் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்த நாராயணன் வழி நெடுகிலும் தேடி உள்ளார் இருப்பினும் தனது நாள் தாயின் நினைவாக வைத்திருந்த கைச்செயின் தொலைத்து விட்டதா மனம் வேதனை அடைந்தார் தான் சென்று வந்த ஊர்களில் பிரம்மாண்ட பிளக்ஸ் போர்டு வைத்து தேடி வருகிறார் அதில் குறிப்பிட்டுள்ளதாவது அன்பு வேண்டுகோள் என தனது தாய் தொட்டிச்சி அம்மன் சாமியாடி எனவும் அவரது நினைவாக நான் கை செயின் அணிந்திருந்தேன் எனவும் எடுத்தவர்கள் திருப்பிக் கொடுப்பவர்களுக்கு மன நிறைவான பரிசு வழங்கப்படும் எனவும் வேகுபட்டி, கொப்பனாபட்டி ,காட்டுப்பட்டி, பொன்னமராவதி ஆகிய ஊர்களில் பிளக்ஸ் போர்டு வைத்து நூதன முறையில் தான் தொலைத்த தங்க செயினை தேடி வருகிறார் இதனை பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர்.

*பொன்னமராவதி பேருந்து நிலைய உயர்கோபுர மின் விளக்கை சீமைக்க பொதுமக்கள் கோரிக்கை*புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்த...
21/08/2022

*பொன்னமராவதி பேருந்து நிலைய உயர்கோபுர மின் விளக்கை சீமைக்க பொதுமக்கள் கோரிக்கை*

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலைத்தில் உயர்கோபுர மின் விளக்கில் ஐந்து மின் விளக்குகள் பொருந்தபட்டிருக்கும் ஆனால் கடந்த மாதங்களாக இரண்டு விளக்குகள் மட்டுமே செயல்பட்டு வருகிறது. பொன்னமராவதியில் இருந்து நாள்தோறும் புதுக்கோட்டை,திருச்சி,மதுரை,திண்டுக்கல், சிவகங்கை,தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களுக்கு அதிகாலை முதல் இரவு வரை பேருநதுகள் இயக்கபட்டு பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயனித்து வருகின்ற அதுமட்டுமின்றி பொன்னமராவதியை சுற்றியுள்ள கிராம பகுதிகளிருந்து பள்ளி,கல்லூரிகள் படிக்கும் மாணவர்கள் வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்,பெண் என அனைவருக்கும் திருட்டு,கொள்ளை,வழிப்பறி,சில்மிசம்,சன்டை ஆகிய செயல்களை தடுக்கும் விதமாக இருந்த வந்த உயர்கோபுர மின் விளக்கு கடந்த மாதங்களாக செயல்படாமல் இருந்து வருவதால் இரவு நேரகளில் சமூக விரோதிகளின் கூடாரமாக திகழ்வதுடன் பல்வேறு சட்டவிரோத சம்பவங்கள் நிகழ வழிவகுத்து வருகிறது.ஆகவே பொதுமக்களின் நலன் கருதியும் பல்லேறு திருட்டுகளை தடுக்கும் விதமாக இருந்துவரும் பேருந்துநிலைய உயர்கோபுர மின் விளக்கை சம்மந்தபட்ட அதிகாரிகள் கருத்தில்கொண்டு விரைந்து நடவடிக்கைள் மேற்க்கொண்டு சீரமைக்க வேண்டுமென தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கையாக இருந்துவருகிறது.

பொன்னமராவதியில் உள்ள 1500 பள்ளி மாணவர்களுக்கு புதுச்சேரி சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தினர் நோய் எதிர்ப்பு சக்தியை அத...
13/07/2022

பொன்னமராவதியில் உள்ள 1500 பள்ளி மாணவர்களுக்கு புதுச்சேரி சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தினர் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அமுக்கரா மாத்திரைகள் வழங்கினர்

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளி மற்றும் அமல அன்னை மெட்ரிக் பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சித்த மருத்துவத்தை இந்திய அளவில் பிரபலப்படுத்தும் நோக்கில் 2000 ஆண்டுகள் பயன்பாட்டில் உள்ள அமுக்கரா மாத்திரைகளை புதுச்சேரி மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அலுவலர் மருத்துவர் லாவண்யா வழங்கினார் இதில் வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப்பள்ளி நடந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார் அப் பள்ளியின் முன்னாள் மாணவரும் புதுச்சேரி சித்த மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் அலுவலர் மருத்துவர் லாவண்யா அமுக்கரா மாத்திரைகளின் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்க உரையாற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார் 30 மாத்திரைகளை கொண்ட ஒரு தொகுப்பு எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் விளக்கி சுமார் 700 மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது நிகழ்வில் பள்ளியில் ஆசிரியர் பொன்ராஜ் கணேசன் ஆகியோர் உடன் இருந்தனர் அதேபோல் அமலா அன்னை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் மரிய புஷ்பம் வரவேற்றார் சித்த மருத்துவர் லாவண்யா தலைமையில் 800 மாணவர்களுக்கு இலவசமாக அமுக்கரா மாத்திரைகள் வழங்கப்பட்டது நிறைவாக பள்ளியில் துணை முதல்வர் பிரின்ஸ் நன்றி கூறினார்.

19/06/2022
பொன்னமராவதி வார சந்தையில்ரசாயனம் தடவிய பச்சை பட்டானி 30 கிலோ பறிமுதல், பேரூராட்சி  கவுன்சிலர் சுதா ரவி  திடீர் ஆய்வில் ச...
11/06/2022

பொன்னமராவதி வார சந்தையில்
ரசாயனம் தடவிய பச்சை பட்டானி 30 கிலோ பறிமுதல்,

பேரூராட்சி கவுன்சிலர் சுதா ரவி திடீர் ஆய்வில் சிக்கியது, விற்பனையாளர் தப்பி ஓட்டம் பறிமுதல் செய்த பட்டாணியை குழிதோண்டி புதைத்த பேரூராட்சி
நிர்வாகம்.

மலேசியாவில் சலூன் வேலைக்கு ஆட்கள் தேவை.விசா, உணவு, தங்குமிடம் இலவசம்.தொடர்புக்கு9790597137
29/05/2022

மலேசியாவில் சலூன் வேலைக்கு ஆட்கள் தேவை.
விசா, உணவு, தங்குமிடம் இலவசம்.
தொடர்புக்கு
9790597137

பொன்னமராவதி அருகே கூலித்தொழிலாளி வீடு கட்ட குழி  தோண்டியபோது மண்பானையில்  தங்க காசுகள் கண்டெடுக்கப்பட்டன.புதுக்கோட்டை மா...
27/04/2022

பொன்னமராவதி அருகே கூலித்தொழிலாளி வீடு கட்ட குழி தோண்டியபோது மண்பானையில் தங்க காசுகள் கண்டெடுக்கப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஏனாதி கிரமத்தை சேர்ந்த ஜெயலட்சுமி நாகராஜன் என்பவருக்கு சொந்தமான வீட்டிற்கு செப்டிக் டேங்க் தோண்டும்போது கிடைத்த புதையல். மண்பானையில் 16 தங்க நாணயங்கள் கிடைத்துள்ளது. இது முகலாயர் காலத்தை சேர்ந்தது என தகவல். கூலித்தொழிலாளி நேர்மை தவறாமல் வருவாய்த் துறையிடம் ஒப்படைத்ததால் அவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

23/04/2022

Address


Telephone

+919443459349

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ponnamaravathi News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share