11/02/2025
400 ஆண்டு வரலாறு தெப்பக்குளம் மதுரை அருள்மிகு ஶ்ரீ மீனாட்சிசொக்கநாதர் கோயில் தைப்பூச தெப்பஉற்சவம்
மதுரை அருள்மிகு ஶ்ரீ மீனாட்சிசொக்கநாதர் தெப்ப உற்சவம் இன்று அதிகாலையில் மீனாட்சி அம்மன் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணிக்கு வெள்ளி அவுதா தொட்டில், வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சி, பிரியா விடையுடன் சுந்தரேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளினர். பின்னர் கோவிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சன்னதி, விளக்குத்தூண்
கீழவாசல், காமராஜர் சாலை வழியாக மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்துக்கு சென்றடைந்தனர். அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் காலை 10.40 மணியளவில் சுவாமி-அம்பாள் எழுந்தருளினர். தொடர்ந்து பக்தர்கள் தெப்பக்குளத்தின் வெளிப்புறமாக நின்று வடம் பிடித்து தெப்பத்தை இழுத்தனர். இதில் திரளான பக்தர்கள்கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.