11/11/2024
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அவர்களே வணக்கம்!!!!
138/039/903210 வரிவிதிப்பு எண்ணிற்கான வணிகக் கட்டிடத்தின் மொத்த பரப்பு 600.00 (ச.அ)அதன் மேல்புரம் வரிவிதிப்பு எண் 138/039/903209 குடியிருப்பு கட்டிடத்தின் மொத்த பரப்பு-1200 (ச.அ),அதன் கீழ் பகுதி வரிவிதிப்பு எண் 138/039/903211 வணிகக்கட்டிடத்தின் மொத்தபரப்பு -1000 (ச.அ)... என்ன முரண்பாடு???!!!!!!! அப்பாவி பாமர மக்களின் வீடுகளுக்கு வரிவிதிப்பு செய்ய அளவிடும் போது வெளிப்புறம்× வெளிப்புறம் அளவீடு செய்து துல்லியமாக கணக்கிடும் அதிகாரிகள் வசதி படைத்த பணக்காரர்களின் கட்டிடங்களை அளவீடு செய்யும் போது மட்டும் தூங்கி விடுவது ஏனோ????????
மேற்படி 1 வது வரிவிதிப்பிற்கு எவ்வாறு அளவீடு செய்து 600 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.மேற்படி வணிகக்கட்டிடத்தின் மீது ஏற்கனவே அளித்த புகாரின் மீது நேரடி ஆய்வு செய்த அப்போதைய கிழக்கு மண்டல உதவி ஆணையர் என்ன நடவடிக்கை எடுத்தார் என்பது இதுவரை எனக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை..
உடனடியாக மேற்படி கட்டிடத்தை ஆய்வு செய்து அளவிட்டு வாகன நிறுத்துமிடம் இன்றி செயல்படும் அக்கட்டித்தின் மீது உரிய நடவடிக்கை மேற்க்கொள்வதுடன் புதிய கட்டிடத்தை பழைய கட்டிடம் என குறிப்பிடும் மாநகராட்சி அதிகாரிகள் அவை பழைய கட்டிடம் என்பதை உறுதி செய்யும் வகையில் அறிக்கை எனக்கு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் அவர்களின் சான்றொப்பமிட்டு அறிக்கை வழங்கிடுவதுடன், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் செயல்பட்ட அனைவரின் மீதும் ஆணையர் அவர்கள் உடனடி நடவடிக்கை மேற்க்கொள்வதோடு,வருவாய் இழப்பை வசூல் செய்து மேற்படி எனது புகாருக்கான ஒப்புகைசீட்டு மற்றும் நடவடிக்கை தொடர்பான விவரங்களை எழுத்துப்பூர்வமாக 30 நாட்களுக்குள் வழங்கிடுமாறு பணிவோடு கேட்டுக் கொள்கிறேன்....
சமூக நலனில்
அ.செல்வகுமார்
சமூக ஆர்வலர்
மாவட்ட செயலாளர்
தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம்
தூத்துக்குடி.