
29/11/2024
கட்டுமானத்துறையில் நமது பல்வேறு பணிகள், பயன்பாடு, தேவைகளுக்கான தொழில்நுட்பங்கள், கருவிகள் சாதனங்கள் நாளுக்கு நாள் புதிது புதிதாக வந்து கொண்டு இருக்கின்றன. .
அதில் 2024 ஆம் ஆண்டு காங்கிரீட் ப்ளோர் கிரைண்டர் பணிக்கான ஒரு கருவி இந்த ஆண்டில் , ஜெர்மன், மூனீச் நகரில், சர்வதேச அளவில் நடைபெற்ற கட்டுமான இயந்திரங்கள் கண்காட்சியில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது .
ஜெர்மனைச் சேர்ந்த பிரபல கட்டுமான இயந்திரங்கள் தயாரிப்பு நிறுவனமான அஸ்க்வர்னா (Husqvarna) என்கிற நிறுவனம் இந்த பெரிய கான்கிரீட் கிரைண்டரை அறிமுகப்படுத்தி இருக்கிறது . இதன் பெயர் மாடல் பிஜி 8 லார்ஜ் கிரைண்டர் (Husqvarna PG 8 D) என்பதாகும் .
பொதுவாக, கான்கிரீட் தரைதளத்தினை 'ஸ்மூத்னஸ்' ஆக்குவதற்காக அல்லது வேறு பயன்பாட்டிற்காக கான்கிரீட்டினால் ஆன, ஒட்டுமொத்த தரை பரப்பையும் கிரைண்டிங் செய்து, அல்லது பாலிஷிங் செய்வர்.
அப்போதுதான் கட்டுமானப் பணிகளின் போது, தரைப்பரப்பில் உண்டாகி இருக்கிற சமச்சீரற்ற பரப்பு, அதிக சொரசொரப்பு, பெயிண்ட் மார்க்குகள், மற்ற கெமிக்கல் கோட்டிங்குகள், கறைகள், சிதறி உலர்ந்து கிடக்கும் சிமெண்ட் காரைகள், எளிதில் அகல மறுக்கின்ற ரசாயன கலவைகள் ஆகியவற்றையெல்லாம் சுத்தமாக அகற்ற முடியும் . அதற்கு இத்தகு கான்கிரீட் ப்ளோர் கிரைண்டர் மிகவும் அவசியமானதாகும்.
800, அல்லது ஆயிரம் சதுர அடி கட்டுப்படும் சிறிய வீட்டிற்கு இவை பெரிதும் தேவைப்படாது. மேலும் அது போன்ற வீடுகளுக்கு தரை பரப்பில் நாம் டைல்களை மேலே பொருத்தி விடுவோம் .
ஆனால், பத்தாயிரம், 20 ஆயிரம் சதுர அடியில் ,ஏன் ஒரு லட்சத்திற்கும் மேல் உடைய சதுர அடி பரப்புடைய மிகப்பெரிய கட்டிடங்களின் தரைகளுக்கு காங்கிரீட் பாலிஷிங்க் முறை தான் சரியானது அல்லது சிக்கனமானது.
மேலும் படிக்க..,
----------------------------------
இதுபோன்ற செய்திகள் மற்றும் கட்டுமானத்துறை குறித்த தகவல்களை அறிந்துகொள்ள..
பில்டர்ஸ் லைன் மாத இதழ் படியுங்கள்..
ஓர் ஆண்டு சந்தா ரூ. 550 மட்டுமே / -
தொடர்புக்கு: 88255 77291
Gpay Number : 8248307939
Online Pay :
http://www.buildersline.in/subscription.php?reg=
www.buildersline.in
-----------------------------------------------