04/07/2025
ஜூலை 4, 2025
தமிழக வெற்றிக் கழக மாநிலச் செயற்குழு கூட்டம் - முக்கிய தீர்மானங்கள்:
*விஜய் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிப்பு:
தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு ஒருமனதாக விஜயை 2026 தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தது. கூட்டணி தொடர்பாக அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு அதிகாரம் வழங்குவது என தீர்மானம்
*DMK மற்றும் BJP-க்கு எதிரான நிலைப்பாடு:
கொள்கை எதிரிகள் மற்றும் பிளவுவாத சக்திகளுடன் என்றைக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ கூட்டணி இல்லை. BJP மத அடிப்படையில் மக்களை பிரிக்கிறது, DMK தனிப்பட்ட அரசியல் லாபங்களுக்காக கூட்டணியை ஊக்குவிக்கிறது என்று கண்டிக்கப்பட்டது.
*தேர்தல் ஆணையத்தின் திருத்த நடவடிக்கைகளுக்கு கண்டனம்:
இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் திருத்த செயல்முறையை கண்டித்து, சிறுபான்மையினரின் வாக்குகளை குறைக்கவும், BJP ஆதரவு வாக்குகளை அதிகரிக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சியை நிறுத்த வேண்டும் என தீர்மானம்
*ஆங்கில மொழி குறித்த அமித் ஷாவின் கருத்துக்கு கண்டனம்:
அமித் ஷாவின் ஆங்கில மொழி குறித்த கருத்துக்களை கண்டித்து , இருமொழிக் கொள்கையே இனிவரும் நூற்றாண்டுகளிலும் தொடரும் என தீர்மானம்
*இந்தி மற்றும் சமஸ்கிருத மொழி திணிப்பு எதிர்ப்பு:
தமிழ்நாட்டில் இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை திணிக்கும் முயற்சிகளை ஏற்க மாட்டோம் என தீர்மானம்.
*பரந்தூர் விமான நிலைய திட்ட எதிர்ப்பு:
பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டத்திற்கு எதிராக, விவசாயிகளின் நலனையும் உரிமைகளையும் பாதுகாக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் தொடர்ந்து துணை நிற்கும் என தீர்மானம்.