15/10/2025
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் பனை விதைகள் நடும் திட்ட துவக்க விழா மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம், மற்றும் வனத்துறை ஊரகவளர்ச்சி, ஊராட்சித்துறை தன்னார்வலர்கள் அமைப்பு, இந்திய செஞ்சிலுவை சங்கம் ஆகியவை இணைந்து பனை விதைகளை நடும் திட்ட துவக்க விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கா.பொற்கொடி தலைமை வகித்து பனை விதைகள் நடும் பணியைத் துவக்கி வைத்தார். தொடர்ந்து பேசுகையில், இன்றைய கால கட்டத்தில் 70 சதவிகிதம் விவசாயமே பிரதானமாக இருக்கிறது. குறிப்பாக கண்மாய்கள், ஏரிகள் குளங்கள், போன்ற பகுதிகளில் பனை விதைகள் நடவு செய்வதால் நீர்நிலை ஆதரங்கள் பாதுகாக்கப்படுகிறது. நமது மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகள் நடும் பணியானது 12 வட்டாரங்கள் உள்பட 445 கிராம ஊராட்சிகளில் இன்றைய தினம் தொடங்கப்பட்டுள்ளது என்றார். இதில் திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கலைக்கல்லூரி, அழகப்பா கவ்வி குழுமம், பூலாங்குறிச்சி வி.எஸ்.எஸ்.அரசு கலைக்கல்லூரி, உமையாள்ராமநாதன் மகளிர் கலைக்கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விதை நடவு செய்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட இயக்குனர் ஜி.அரவிந்த், மாவட்ட வன அலுவலர் பொறுப்பு ரேவதிராமன், உதவி வனப் பாதுகாவலர் மலர்க்கண்ணன்,பசுமைத்தோழர் ஆனந்த்நாகராஜ், தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பின் சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரா.முத்துலட்சுமி,
செஞ்சிலுவைச்சங்கத் தலைவர் சுந்தரராமன், மற்றும் கல்லூரி முதல்வர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.