
11/06/2024
அன்பார்ந்த ABL தொழிலாளர் நண்பர்களே! வணக்கம்! பேச்சுவார்த்தை வாய்தா செல்வது சம்பந்தமாக 322 செயலர் கிறிஸ்துவேசன் தான் வாய்தா வாங்குவதாகவும் இதனால் முடிவுக்கு வரும் பேச்சு வார்த்தை காலதாமதம் ஆகுவதாகவும் மாற்று சங்கங்கள் பேசிக் கொண்டிருக்கின்றன. இந்த மத்தியஸ்தர் பேச்சுவார்த்தைக்கு நிர்வாகம் சம்மதித்ததே 322 சங்கத்தின் நிர்பந்தமும் வழக்குகளும் தான் காரணம் என்பதை தொழிலாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்! நமது கௌரவத் தலைவரும் சங்கத்தின் தலைமை வழக்கறிஞரும் ஆன திரு பிரகாஷ் அவர்கள் கலந்து கொள்ள முடியாத நிலைமையில் இருக்கும்போது பேச்சுவார்த்தை நடைபெற்று எந்த தீர்வும் ஏற்படாது! நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நமது சங்கத்தை குறை சொல்லும் LPF,CITU நிர்வாகிகள் சென்று நாங்கள் பேசுகிறோம் என்று மத்தியஸ்தரிடம் பேச வேண்டியதுதானே? 322 சங்கத்தில் உள்ள 310 உறுப்பினர்கள் மற்றும் இறந்து போன74 தொழிலாளர்களின் 1.வட்டியுடன் கூடிய நிலுவை சம்பளம் ( நாம் வென்ற நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி) 2. சட்டவிரோத கதவடைப்பின் போது கொடுக்க வேண்டிய சம்பளம் ( நாம் வென்றெடுத்தநீதிமன்ற தீர்ப்பின்படி )3. இடை நீக்க செயல்பாட்டு சம்பளம் ( நாம் வென்றெடுத்த நீதிமன்றம் உத்தரவுபடி 4. போனஸ் மற்றும் உரிமை தொகை 5. ஒவ்வொரு தொழிலாளிக்கும் கொடுக்கப்பட வேண்டிய பணிக்கொடை இவை அனைத்தும் கணக்கிடப்பட்டு நமது தலைமை வழக்கறிஞர் மூலமாக மத்தியஸ்தரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது ஆகவே தொழிலாளர்கள் வரும் காலங்களில் ஒருவரை ஒருவர் குறை கூறாமல் ஒற்றுமையுடன் செயல்படுவது நல்லது! நன்றி வாட்ச் ரவி