04/09/2025
தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 என்பது, அனைத்து இந்திய குடிமக்களும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் நிறுவனங்களின் ஆவணங்கள், பதிவேடுகள் மற்றும் பிற தகவல்களைப் பெறும் உரிமையை வழங்குகிறது. இந்தச் சட்டத்தின் மூலம், குடிமக்கள் தகவல்களைக் கோரலாம், மேலும் தகவலளிக்கும் கடமை அரசு அலுவலகங்களுக்கு உண்டு.
அரசு அலுவலகங்களில் பொது தகவல் அதிகாரி (Public Information Officer) நியமிக்கப்பட்டுள்ளார். குடிமக்கள் கேட்கும் தகவல்களை நகல்களை உரிய காலத்திற்குள் (பொதுவாக 30 நாட்களுக்குள்) அவர் மனு தாரருக்கு வழங்க வேண்டும் என்பது விதி.
ஆனால் அதிராம்பட்டினத்தில் விடப்படும் 2023 ஆண்டு அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற பணிகளின் டெண்டர்கள் குறித்த தகவல்கள் நகல்களை, தர வேண்டும் என RTI ஆர்வலர் கோரியிருந்தார்
ஆனால் நகராட்சி நிர்வாகமோ தகவல் அறியும் உரிமை சட்டத்தை மதிக்காமல் நேரில் வந்து பார்த்து செல்லும் படி அவருக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளது, இது சட்டத்தை மதிக்காத செயலாக உள்ளன என RTI மனுதாரர் கூறுகிறார்.
மேலும் இது தொடர்பாக அலுவல் ரீதியாக எவ்வளவு செலவாகும் என்பதையும் அதிகாரிகள் விளக்கினால் பணம்.செலுத்தி நகலை பெற தயாராக உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
Chief Minister of Tamil Nadu District Collector, Thanjavur