15/08/2025
மாண்புமிகு
முன்னாள் முதலமைச்சரும்
அதிமுக பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான #எடப்பாடி_பழனிச்சாமி அவர்களை #வந்தவாசி தொகுதி மக்கள் சார்பில் வரவேற்கிறோம்.
நீங்கள் ஆட்சியில் இருந்த போதும் வந்தவாசி தொகுதிக்கு வளர்ச்சி திட்டங்கள் எதுவும் வரவில்லை ஒரே ஒரு திட்டத்தை தவிர போளூர் செய்யூர் தொழிற் வழித்தடம் அதில் வந்தவாசி நகருக்கு புறவழிச் சாலை அது ஒன்று மட்டுமே அதற்கு உங்களுக்கு தொகுதி மக்கள் சார்பில் நன்றி.
மாண்புமிகு முதலமைச்சர் M. K. Stalin அவர்கள் எதிர் கட்சி தலைவராக இருந்தபோது ஆரணியில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் எனும் நிகழ்ச்சியில் வந்தவாசி தொகுதியின் அவல நிலையை அவர் எடுத்துக் கூறி ஆட்சி அமைந்த உடன் வந்தவாசி தனியாக சிறப்பு அதிகாரி நியமித்து சிறப்பாக கவனிக்கப்படும் என்று கூறினார்.
அது ஆட்சி முடிய சில மாதங்களே உள்ள நிலையில் இதுவரை எந்த வளர்ச்சி திட்டங்களும் இல்லை அது கேட்க காதுகளுக்கு மட்டுமே இனிமையாக இருந்தது
அதேபோல் திமுகவின் தேர்தல் வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை வந்தவாசி தொகுதி மக்களுக்கு தேர்தல் வாக்குறுதிகள் கேட்க மட்டுமே இனிமையாக இருக்கும் செயல் முறையில் நடைமுறையில் வராது
அதேபோல் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் தாங்கள் இன்று வந்தவாசி தொகுதி மக்களுக்கு இனிமையான வாக்குறுதிகளை மட்டும் சொல்லிவிட்டு சென்று விடுவீர்களா இல்லை அந்த இனிமையான வார்த்தைகளும் வந்தவாசி தொகுதி மக்கள் அனுபவிக்க கூடாது என்று வெறுமனே அரசியல் மட்டும் பேசி விட்டு சென்று விடுவீர்களா பொறுத்திருந்து பார்ப்போம்.
ஆனால் மாற்றம் மட்டும் வந்தவாசி தொகுதியில் வராது என்ற ஏக்கத்தில் தொகுதி மக்கள் .
AIADMK's IT Wing All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) Edappadi K. Palaniswami