Kannan Sineka vlog

Kannan Sineka vlog எண்ணம் போல் வாழ்க்கை..!!

எமதர்மன் , சித்ரகுப்தனிடம் , " இனிமேல் சாகின்றவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக்கொண்டு வந்துவிடு !" என்று சொன்னான்...
12/08/2025

எமதர்மன் , சித்ரகுப்தனிடம் , " இனிமேல் சாகின்றவர்களின் நாக்கை மட்டும் தனியாக அறுத்துக்கொண்டு வந்துவிடு !" என்று சொன்னான் . அதுபோல் சித்ரகுப்தனும் நாக்குகளை மட்டும் அறுத்துக்கொண்டு வந்தான் .
அறுத்த பின்னாலும் ,சில நாக்குகள் துடித்துக்கொண்டு கிடந்தன. சில மரத்துப் போயும் ,சில இருகூறாகப் பிளந்து போயும் இருந்தன . "இவையெல்லாம் யாருடையவை?" என்று எமன் கேட்டான் .
"பிரபு ! இரட்டையாகக் கிடக்கும் நாக்குகள் எல்லாம் ஆளும் கட்சிக்காரர்களுடையது; துடித்துக்கொண்டிருக்கும் நாக்குகள் எல்லாம் எதிர்க்கட்சிக்காரர்களுடயது" என்றான் சித்ரகுப்தன் .
"ஒரு உணர்ச்சியும் இல்லாத மற்ற நாக்குகள் .....?" என்று எமன் கேட்க ,.
"அவர்களுக்கு வோட்டுப் போட்ட மக்களுடையது !" என்று அமைதியாகச் சொன்னான் சித்ரகுப்தன் .
- கவியரசு கண்ணதாசனின் குட்டிக்கதைகளிலிருந்து

12/08/2025
சிரியாவிலுள்ள ஒரு பள்ளியில் நடந்த உண்மைச் சம்பவம். அற்புதமான ஒரு நிகழ்வு இது. ஓர் ஆசிரியை பாடவேளையின் இறுதியில் மாணவிகளை...
12/08/2025

சிரியாவிலுள்ள ஒரு பள்ளியில் நடந்த உண்மைச் சம்பவம்.
அற்புதமான ஒரு நிகழ்வு இது.
ஓர் ஆசிரியை பாடவேளையின் இறுதியில் மாணவிகளை ஊக்குவிக்க சிறிய தேர்வை நடத்தினார்.
அதில் வெற்றி பெறும் மாணவிக்கு புதியதொரு ஜோடி காலணி வழங்கப்படும் என்றும் கூறினார்.
அனைத்து மாணவிகளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதினர்.
இறுதியில் அவர்களது விடைகளை பரிசீலித்துப் பார்த்த பொழுது அவர்கள் அனைவரும் சரியான விடைகளை எழுதி இருந்தனர்.
ஆசிரியை யாருக்குப்பரிசினை வழங்குவது என்று சிந்தித்து விட்டு ஒரு பெட்டியில் அனைவரும் அவரவர் பெயர்களை ஒரு தாளில் எழுதி சுருட்டிப்போடுமாறு சொன்னார்.
அனைவரும் எழுதிப் போடவே ஆசிரியை அப்பெட்டியைக்குலுக்கி அதில் ஒரு தாளை எடுத்தார்.
அதில் "வஃபா" என்ற மாணவியின் பெயர் காணப்படவே அம்மாணவிக்கு பரிசு வழங்கப்பட்டது.
அம்மாணவி தான் அவ்வகுப்பில் மிகவும் ஏழ்மையான மாணவி. பல காலமாகவே தேய்ந்து போயிருந்த காலணிகளை அணிந்து வந்த அம்மாணவிக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி.
பின்னர் அவ்வாசிரியை மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்து நடந்த நிகழ்வைப்பற்றி கணவரிடம் கண்ணீருடன் கூறினார். கணவனும் மகிழ்ச்சி அடைந்தார்.
எனினும் அவ்வாசிரியை வழக்கத்துக்கு மாறாக தொடர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்.
கணவர் மீண்டும் காரணம் கேட்க " நான் வீட்டுக்கு வந்து பெயர்கள் இடப்பட்ட அப்பெட்டியில் இருந்த தாள்களைப்பிரித்து பார்த்தேன். அதில் அனைத்து மாணவிகளும் தங்களது பெயர்களை எழுதாமல் வகுப்பில் ஏழை மாணவியாக இருந்த "வஃபா" வின் பெயரையே எழுதியிருந்தனர்". என்று
கண்ணீருடன் பதிலளித்தார்.
"தன்னை விட அதிகம் தேவையில் உள்ள பிறர் மீது அக்கறை கொண்டு அவர்களை முன்னிலைப்படுத்தும் பிள்ளைகளாக நமது பிள்ளைகளை வளர்ப்பது நமது கடமையாகும்""🙏🏻

படித்ததில் பிடித்தது

சுந்தரம் குருக்களுக்கு 58 வயது. காஞ்சீபுரம் அருகில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் அர்ச்சகர்.சுந்தரி மாமிக்கு வய...
12/08/2025

சுந்தரம் குருக்களுக்கு 58 வயது. காஞ்சீபுரம் அருகில் உள்ள ஒரு பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் அர்ச்சகர்.
சுந்தரி மாமிக்கு வயது 51.

அவர்களின் ஒரே மகன் பரத்வாஜ். கம்ப்யூட்டர் இன்ஜினியர் டெக்ஸாசில் வேலை பார்க்கிறான்.
லட்சக் கணக்கில் சம்பாதிக்கிறான்.

சிறு வயதிலேயே மிக சூட்டிகையானவன் பரத்வாஜ். குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பது தெரிந்து, தான் நன்றாக படித்தால்தான் குடும்பம் முன்னேற முடியும் என்பதை உணர்ந்து, எப்போதும் பாடப் புத்தகமும் கையுமாக அலைவான். வகுப்பில் எப்போதும், அவன்தான் முதல் மாணவன்.

பிளஸ் 2-வில் பள்ளி மாணவர்களில் முதல் மதிப்பெண்ணும், மாவட்ட அளவில் மூன்றாவது இடத்திலும் வந்தான்.

இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்து விட்டாலும், அந்த நான்கு ஆண்டுகள் படிப்பு முடிவதற்குள், சுந்தரம் குருக்கள் மிகவும் திண்டாடித்தான் போய்விட்டார்.

பேங்க் லோன் கிடைத்திருந்தாலும், கல்லூரி கட்டணம் போக மீதி செலவுகளான புத்தகம், உணவு, விடுதி கட்டணம் என மற்றவற்றுக்கெல்லாம் ...
பல இடங்களில் கடன் வாங்கியும், இருந்த ஒரே ஒரு ஓட்டு வீட்டையும் விற்றும் சமாளித்தார்.

எப்படியோ ஒரு வழியாக நல்ல மதிப்பெண்ணுடன் பரத்வாஜ் இன்ஜினியரிங் முடித்தான்.

அதற்குப் பின், சென்னையில் உள்ள, ஒரு பன்னாட்டு நிறுவனத்தில், "அப்ரென்டிஸ்' ஆகச் சேர்ந்தான்.

இரண்டு வருட பயிற்சிக்குப்பின், பணி நிரந்தரம் செய்யப்பட்டு, நிறுவனத்தின் டெக்ஸாஸ் கிளைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டான்.

படிக்கும் காலத்தில், பரத்வாஜுக்கு பெரும்பாலும் ரசம் சாதம், தயிர்சாதம் தான். பல நேரங்களில குருக்களும், அவர் மனைவியும், தாங்கள் சாப்பிடாமல் கூட இருந்து விடுவர் ஆனால், மகனுக்கு எப்படியாவது, எதையாவது மூன்று வேளையும் சாப்பிடக் கொடுத்து விடுவர்.

கண்காணாத இடத்திற்கு போய், மகன் சாப்பாட்டிற்கு கஷ்டப்படக் கூடாது ...

சுந்தரம் குருக்களுக்கும், சுந்தரி மாமிக்கும் ஒரே எண்ணம்தான் ...
ஒரு ஏழைக் குடும்பத்துப் பெண்ணைத்தான் மணம் முடிக்க வேண்டும் என்று.

மருமகள் பவித்ரா ஏழை குடும்பத்தை சேர்ந்தவள்.
அவள் அப்பா ஒரு ஓட்டலில் சமையல்காரர், பிளஸ் 2 முடித்து இருந்தாள் ...

வரதட்சணை, நகை, சீர் எதுவும் கேட்காமல், இவர்களே திருமண செலவுகளை செய்து, திருமணத்தை முடித்தனர்.

திருமணமான ஒரே வாரத்தில், பரத்வாஜ், மனைவி பவித்ராவுடன் டெக்ஸாஸ் சென்று விட்டான்.

போன புதிதில், அவ்வப்போது போன் செய்து பேசிக் கொண்டிருந்த மகனும், மருமகளும் ...
அதன் பின், மாதம் ஒரு முறை ... இரண்டு மாதத்திற்கு ஒரு முறை என்று பேசலாயினர்.

திருமணத்திற்குப் பின் டெக்ஸாஸ் சென்ற பரத்வாஜ் ஒரு முறை கூட பணம் அனுப்பவில்லை.

அதற்குப் பின், பரத்வாஜிடமிருந்து பணம் பற்றி எந்தப் பேச்சும் கூட வந்தது கிடையாது.

சுந்தரம் குருக்களுக்கும், சுந்தரி மாமிக்கும், மகன் பணம் அனுப்பவில்லையே என்ற கவலையெல்லாம் இல்லை. அவன் நன்றாக இருந்தால், அதுவே போதும்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின், மகன் இதோ இப்போதுதான் சொந்த ஊர் வருவதாக போன் செய்திருந்தான்.

அதற்குதான் சுந்தரி மாமி தடபுடலாக பட்சணங்கள் எல்லாம் செய்து அமர்க்களப்படுத்தி கொண்டிருக்கிறாள்.

சுந்தரி மாமியிடம் மகன் போனில் பேசும் போதெல்லாம், "அம்மா இங்க சொர்க்கம் மாதிரி இருக்கும்மா.
பெரிய வீடு, தோட்டம் எல்லாம் இருக்கு.
வீடு பெருக்க, பாத்திரம் தேய்க்க, துணி துவைக்க எல்லாவற்றிருக்கும் மிஷின் இருக்கு.

நீங்க ரெண்டு பேரும் இங்கேயே வந்து, எங்க கூடவே தங்கிடுங்கம்மா...
அங்கே என்ன இருக்கு?' என்று அடிக்கடி கூப்பிடுவான்.

"அப்பா கோவிலை விட்டுட்டு வருவார்ன்னு தோணலைப்பா, நீ இங்கு வரும்போது, அது பற்றி பார்க்கலாம்...' என்று கூறி வந்தாள் சுந்தரி மாமி.

மகன் சொல்லிச் சொல்லியே சுந்தரி மாமிக்கு, அந்த ஆசை அடி மனதில் தங்கி விட்டது.

எப்போதும் சுந்தரம் குருக்களிடம் வாய் ஓயாமல் கூறத் தொடங்கி விட்டாள் ...
ஒரு மாதமாவது டெக்ஸாஸ் போய் மகனுடன் அக்கடாவென்று இருந்து விட்டு வர வேண்டுமென்று.

இப்போது மகன் வரும் தகவல் கிடைத்ததிலிருந்து அவளுக்கு கை, கால் ஓடவில்லை. எப்போது மகன் வந்து, தங்களை அவர்களுடன் கூட்டிப் போவான் என்றே மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

பரத்வாஜ் வரும் அன்று, மீனம்பாக்கம் விமானநிலையம் சென்று, அவர்களை கூட்டி வர வேண்டும் என்றுதான் சுந்தரி மாமிக்கு ஆசை.

ஆனால் பரத்வாஜ், " அம்மா நீங்க சிரமப்பட வேண்டாம். கஸ்டம்ஸ் கிளியரன்ஸ், மற்ற பார்மாலிட்டீஸ் எல்லாம் முடிய நேரமாகும். அதனாலே, நாங்களே வந்துடறோம்..." என்று கூறி விட்டதால், வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் குட்டி போட்ட பூனை மாதிரி நடந்து கொண்டிருந்தாள்.

காலையிலிருந்து சாப்பிடாமல் இருவரும் காத்திருக்க, ஒருவாறு மாலை மூன்று மணிக்கு வந்து சேர்ந்தனர் பரத்வாஜும், பவித்ராவும்.
ரெடியாக வைத்திருந்த ஆரத்தியை சுற்றி, வீட்டுக்குள் அழைத்தாள் சுந்தரி மாமி ...

சுந்தரம் குருக்கள், ""காலையில் இருந்து அம்மா சாப்பிடாம உங்களுக்காக தான் காத்திருக்காள். வாப்பா, ஒரு வாய் சாப்பிடலாம்.'' "இல்லைப்பா, நாங்க பவித்ரா வீட்டுலியே சாப்பிட்டுட்டோம். அம்மா, உன் கையாலே, ஒரு வாய் காபி குடும்மா. அது போதும்.''

அப்போதுதான், அவர்களுக்கு உறைத்தது, அவர்கள் இருவர் கையிலும் லக்கேஜ் எதுவும் இல்லாதது. மகனையும், மருமகளையும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பார்த்த ஆனந்தத்தில் எல்லாவற்றையும் மறந்து விட்டனர். பெத்த மனமல்லவா !

பவித்ரா தன் கையில் வைத்திருந்த துணி பையை மாமியாரிடம் கொடுத்தாள். அதில் சில சாக்லேட் வகைகளும், ஒரு புடவை ஜாக்கெட், வேட்டி துண்டும் இருந்தது.

சுந்தரி மாமிக்கு பசியில் மயக்கமே வரும் போலிருந்தது.

பார்த்து பார்த்து சமைத்து வைத்திருந்த அத்தனை உணவு வகைகளும் சீண்டுவாரற்று, அங்கே கிடந்தது.

காபி சாப்பிட்ட சிறிது நேரத்தில், ""சரிப்பா நாங்க கிளம்பறோம். அங்கே பவித்ரா வீட்டுல தங்கிக்கிறோம். நான் அடிக்கடி வந்து பார்த்துக்கறேன். ஒரு மாசம் லீவு இருக்கு இல்ல,'' கூறியவாறே கிளம்பி விட்டான் பரத்வாஜ்.

மறக்காமல், மாமியார் செய்து வைத்திருந்த பட்சணங்களை ஒன்று விடாமல் உரிமையுடன், "பேக்" செய்து கொண்டு கூடவே கிளம்பி விட்டாள் பவித்ரா. சாமர்த்தியகாரியாக மாறிவிட்டவள் அல்லவா !

இவர்கள் இருவரும், அதை ருசி கூட பார்த்திருக்கவில்லை.

இருவருக்கும் மிகவும் வருத்தமாக இருந்தாலும், சுந்தரம் குருக்கள் வெளியில் எதையும் காண்பித்துக் கொள்ளவில்லை.

சுந்தரி மாமி, அவர்கள் கிளம்பியவுடன் மனம் தாளாமல் புலம்பி தள்ளி விட்டாள்.
"ஒரே பையன்னு ஆசையா வளர்த்தோம். இப்ப அவன் யாரோ மாதிரி வந்து அரைமணி நேரத்துல ஓடறான். எனக்கு மனசு சங்கடமா இருக்குங்க.'' சுந்தரம் குருக்கள்தான் அவளை பலவாறு தேற்றி சாப்பிட வைத்தார்.

இரண்டு நாட்கள் கழித்து, மறுபடியும் வந்த பரத்வாஜ், அப்பாவிடம் மட்டும் பேசினான்.

"அப்பா, பவித்ராவுக்கு, அவ அம்மாவை டெக்ஸாசுக்கு கூட்டிக்கிட்டு போய், ஒரு மாசம், கூட தங்க வைச்சுக்க ஆசைப்பா.

அவ அம்மாவும் பாவம், சின்ன வயசிலிருந்து குடும்பம், குழந்தைகள்னு உழைச்சு ஓடாயிட்டா.

அதனால, அவங்களை நாங்க இப்ப கூட்டிக்கிட்டு போகப் போறோம்.

நீங்க எல்லாத்தையும் சரியா புரிஞ்சிப்பீங்க. அதனாலதான், உங்ககிட்ட சொல்றேன்.

அம்மாவுக்கு எப்படியாவது சொல்லி புரிய வைக்கறது உங்க பொறுப்புப்பா.

"அப்புறம்... பவித்ராவுக்கு தனியா இருக்கிறதுதான் பிடிச்சிருக்குப்பா.

அம்மாவுக்கும், பவித்ராவுக்கும் ஒத்துப் போகாதுப்பா.

அதனால, நீங்க போன் கூட செய்யாதீங்க. நானே, அப்பப்ப சமயம் கிடைக்கும் போது, உங்களுக்கு போன் செய்றேன்.''

அத்தோடு டெக்ஸாசுக்கு கிளம்பும் அன்றுதான் இருவரும் வந்து ஐந்து நிமிடம் இருந்து, விடை பெற்றுக் கிளம்பினர்.

அன்று இரவு, "என்னங்க நான் உங்களுக்கு வாழ்க்கைப்பட்டு வந்ததிலிருந்து, எதுக்கும் ஆசைப்பட்டதில்லை.

ஆனால், நம்ம பையன் வெளிநாட்டுக்கு போனதுக்கு அப்புறம், ஒரு மாசமாவது அங்கே போய் இருக்கணும்ன்னு ஆசைப்பட்டேன்.

அது நிராசையாயிடுச்சு சரி, வாங்க தூங்கலாம். நீங்க நாலு மணிக்கு எழுந்து குளிச்சு கோவிலுக்கு போகணும்.''

ஆறு மாதங்கள் உருண்டோடிய பின், டெக்ஸாசில் ஒரு நாள்...

என்னங்க, நான் கர்ப்பமாக உள்ளேன் என்று டாக்டர் சொல்லி விட்டார் ...
பேசாம உங்க அம்மாவை வரவழைச்சா என்னங்க ? பிரசவம் முடியற வரை, இங்கேயே இருந்து, எனக்கு வேண்டியதை சமைச்சு போடட்டுமே.'' என்று பவித்ரா தன் கணவன் பரத்வாஜிடம் கூறுகிறாள்.

"நீ தானே நமக்கு பிரைவசி தேவை, அவங்க... இங்கே வந்தா சரிப்படாதுன்னு சொன்னே. இப்பக் கூப்பிட்டா எப்படி வருவாங்க?'' என்று பரத்வாஜ் கூறுகிறான்.

சரி, எனக்கு மனசு சரியில்லை ...
இங்கு புதுசா கட்டப்பட்ட அம்மன் கோவிலுக்கு போன வாரம் கும்பாபிஷேகம் நடந்தது இல்ல ...
அங்கு சென்று வரலாம்

இவர்கள் போன போது அந்த கோவிலில் சற்றுக் கூட்டமாக இருந்தது. அப்போதுதான் அம்மனுக்கு அலங்காரம் முடித்து, திரை விலகி தீபாராதனை காட்டப்பட்டது.

கண்களை மூடி கை குவித்து இறைவனை வணங்கி, கண்களை திறந்தால், தீபாராதனை தட்டுடன் அருகில் வந்த குருக்களைப் பார்த்து அதிர்ந்தான் பரத்வாஜ்.

அங்கே நிற்பது யார் ? அப்பாவா ?
கண்களை கசக்கி விட்டுக் கொண்டு மீண்டும் பார்த்தான்.

"அப்பா..." அவனை அறியாமல் வாய் முணுமுணுத்தது.

"கொஞ்சம் இருப்பா. இதோ வரேன்.''
அங்கிருந்த வேறொரு குருக்களிடம் ஏதோ சொல்லி விட்டு வந்த அப்பா, "அதோ, அது தான் நம்ம குவார்ட்டர்ஸ் வாங்க, போகலாம்,'' சுந்தரம் குருக்கள் முன்னே வந்து நடக்க, பேச்சற்று பின் தொடர்ந்தனர் பரத்வாஜும், பவித்ராவும்.
போனவுடன் வீட்டை பார்த்து அசந்து போய் விட்டான்.
2 பெட் ரூம் ஹால் பிளாட்.

வீட்டில் இவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்ற சுந்தரி மாமி, "சென்னையில் அப்பா வேலை பார்த்த கோவில் தர்மகர்த்தாவின் பொண்ணும், மாப்பிள்ளையும் இங்கேதான் இருக்காங்க.

அவர்கள் கட்டிய கோவிலுக்கு, பூஜை விதிமுறைகள் தெரிஞ்ச தலைமை குருக்கள் வேணும்ன்னு, அப்பா கிட்ட கேட்டுகிட்டாங்க.

தர்மகர்த்தாவும், நீங்க டெக்ஸாசுக்கு கிளம்புங்க.
நான், இங்கே வேறு ஆளை பார்த்துக்கறேன்"னு சொல்லிட்டார்.

"அப்பாவும் சென்னையில நமக்கு யாரிருக்கா ... தெய்வ கைங்கரியத்தை எங்கேயிருந்து செய்தா என்னன்னு புறப்பட சொல்லிட்டார்.

இங்கே அப்பாவுக்கு மாத சம்பளம், ஐந்து லட்சம் ரூபாய்,'' கட கடவென கூறி முடித்தாள் சுந்தரி மாமி.

"அம்மா, இப்ப உங்க மருமகள் தாய்மை அடைஞ்சிருக்கா ... அவளுக்கு வாய்க்கு ருசியா சாப்பிடணும்ன்னு தோணுதாம்; அவ அம்மா, இப்ப வர முடியாத சூழ்நிலை. நீங்க ரெண்டு பேரும் எங்க கூட பிரசவம் வரை இருந்தா நல்லாயிருக்கும்மா" பரத்வாஜ் கூறுகிறான்.

"அது சாத்தியப்படாதுப்பா, அப்பா பூஜை முடிச்ச மீதி நேரத்துல, இங்கே இருக்கிற வேத பாடசாலையில் வேதம் சொல்லிக் கொடுக்கிறார். அதுக்கு இங்கே இருக்கிறதுதான் சவுகரியம்.''

"அம்மா ... அப்பா வரமுடியலைன்னா பரவாயில்லை. நீ மட்டுமாவது வாம்மா.''

இல்லைப்பா அப்பாவுக்கும் வயசாகிறது. அவரை பார்த்துக்கறதுதான் என் முதல் கடமை.

அது மட்டுமில்லாம, தினமும் கோவில் பிரசாதங்களை செய்கிற வேலையும் எனக்கு கொடுத்திருக்காங்க ...

வேதம் கத்துக்கறவங்களுக்கும், கடவுளை தரிசிக்க வர்றவங்களுக்கும், மதிய உணவு செய்யும் பொறுப்பும் எனக்கு இருக்கு.

இதுக்காக எனக்கு

இரண்டு லட்சம் ரூபாய கிடைக்கிறது.

பரத்வாஜ், இவ்வளவு நாள் உனக்காகவே நாங்க ரெண்டு பேரும் வாழ்ந்தோம் ...
பசியும் பட்டினியுமா இருந்து உன்னை ஆளாக்கி, நல்ல நிலைமைக்கு கொண்டு வந்தோம் ...
இது உனக்கு நன்கு தெரியும். ஆனால், கல்யாணம் ஆனவுடன் உனக்கு நாங்க தேவையற்று போயிட்டோம் ...

கலங்கி நின்ன எங்களுக்கு தொப்புள் கொடி உறவு போனா என்ன, வேற புதிய உறவுகளை ஏற்படுத்தி தர்ரேன்னு, கடவுள் புதிய பந்தங்களை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்.
இனிமேல், அந்த பந்தங்களை எங்களால விட முடியாது. மேலும் பூஜை பண்டிகை என்று நாங்கள் இருவரும் அடிக்கடி நியூஜெர்சி, கலிஃபோர்னியா செல்வோம்.
அங்கு உள்ளவர்கள் இவரை அழைப்பார்கள்.
இதில் எங்களுக்கு நல்ல வருமானம்.
எங்கள் சேமிப்பு போக மீதம் உள்ளதை சென்னையில் உள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்திற்கு அனுப்புகிறோம். பணத்திற்கு இப்போது எங்களுக்கு பஞ்சம் இல்லை. சென்னையில் வளசரவாக்கத்தில் ஒரு வீடு வாங்கி உள்ளோம்.
ஒரு காலத்தில் உன் அன்புக்காக ஏங்கி கொண்டு இருந்தோம்.
மூன்று வேளை உனக்கு சாப்பாடு போட்டு விட்டு நாங்கள் பட்டினி கிடப்போம். ஆனால் இப்போது உன்னை பற்றி நினைக்க எங்களுக்கு நேரம் இல்லை.

உனக்கு உதவ முடியாது.

இப்ப மதிய உணவு நேரம் நெருங்கிடுச்சு ...
நான் போய் பரிமாறணும் என்று கூறி அரக்க பறக்க கிளம்பினாள் சுந்தரி மாமி ...

போகும்போது பவித்ராவிடம், "எங்களுக்கு பல பணக்கார பெண்களின் ஜாதகம் வந்தது. ஆனால் நீ எழை குடும்பத்தில் பிறந்தவள் , எங்களை எல்லாம் கை விட மாட்டாய் என்று நினைத்து ஏமாந்து போய் விட்டோம். என் மகனை இப்படி மாற்றி விட்டாய். அவனை உனக்கு அடிமையாக்கி விட்டாய். நாளைக்கு உனக்கும் ஒரு மகன் பிறப்பான், பிற்காலத்தில் உங்களையும் இப்படி நடத்துவான்.
கடவுள் உனக்கு தக்க தண்டனை கொடுப்பார்" ... மாமியாரின் அனல் பறக்கும் பேச்சு அவளை ஈட்டியால் குத்துவது போன்று இருந்தது.

மகனிடம் "போகும் போது அப்பாவிடம் எதுவும் பேசாதே, அவர் எரிமலை போல் வெடித்து விடுவார். எதுவும் பேசாமல் கிளம்பு ...
அப்புறம் நீ அடிக்கடி இங்கு வருவது அவருக்கு பிடிக்கவில்லை.
என்னை பார்ப்பது என்றால் மதிய உணவு வேளையில் கோவிலில் பார்.
சாப்பாடு போட்டு அனுப்புகிறேன்" ...

மாமி பொரிந்து தள்ளி விட்டு கிளம்பி விட்டாள்.

மாமியிடம் குருக்கள் ...
"ராம்ஜியை 5 மணிக்கு கார் எடுத்து கொண்டு வர சொல் ... புரொஃபசர் பாலுவை ஒரு பூஜை விஷயமாக பார்க்க வேண்டும் " ...

பெற்றவர்களின் அன்பை உணர முடியாமல், மனைவியின் சுயநல போக்கிற்கு அடிமையாகி, அவர்களை உதாசீனப்படுத்தி இப்போது, அதே அன்பிற்கு ஏங்கிய பரத்வாஜ், சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்த அப்பாவின் முகத்தை ஏறெடுத்தும் பார்க்கக் கூசி, அங்கிருந்து தன் மனைவியுடன், தளர்ந்த நடையுடன் வெளியேறினான் ...
பரத்வாஜுக்கும், பவித்ராவுக்கும் தலை சுற்றுகிறது.
பவித்ராவுக்கு மயக்கம் வரும் போல் இருந்தது.
அம்மாவின் பேச்சு அவர்கள் இருவருக்கும் சாட்டையால் அடிப்பது போல் இருந்தது ...

வைராக்கியம் உள்ள அப்பா அவர்களை பார்க்காமல், கண்டு கொள்ளாமல் பேப்பர் படித்துக்கொண்டு இருந்தார் ... !

படித்ததில் ரசித்து சுட்டப் பதிவு

நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும். நமக்குநமது முன்னோர்...
12/08/2025

நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை. அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும். நமக்கு
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.
அந்த காலத்தில் எப்படி எந்த
டெக்னாலஜியும் இல்லாம
கிணறு வெட்டுனாங்க??? . . .

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை . பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று.
ஒரு வேளை தோண்டிய கிணற்றில்
தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும்உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம்
எளிய இலகுவான தீர்வுகள் இதோ :

மனையின் குறிப்பிட்ட
ஏதாவது ஒரு பகுதியில்
அதிகளவு பச்சை பசேலென புற்கள்
வளர்ந்திருந்தால், அந்த இடத்தில்
கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர் .
சரி நீரூற்று இருக்கும.் ஆனால் நல்ல
நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட
வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த
நாள் கவனித்தால் எறும்புகள்
இவற்றை சேகரித்து ஒரே இடத்தில்
கொண்டுசென்று சேர்த்த
அடையாளங்கள் , அதாவது தடயங்கள்
இருக்குமாம் அந்த இடத்தில்
கிணறு வெட்டினால் தூய
சிறப்பான நன்னீர் கிடைக்கும்
என்கிறார்கள் .

சரி தூய நீரும்
கண்டு கொண்டாயிற்று. . . .கோடைகாலத்திலும்
வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில்
இருக்கிறது என்று அறிவது எப்படி ?
கிணறு வெட்ட இருக்கும் நிலப்
பகுதியை நான்கு பக்கமும்
அடைத்து விட்டு பால் சுரக்கும்
பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய
விட வேண்டும். பின்னர் அந்த
பசுக்களை கவனித்தால் மேய்ந்த
பின் குளிர்ச்சியான இடத்தில்
படுத்து அசை போடுகின்றனவாம் .

அப்படி அவை படுக்கும்
இடங்களை நான்கு , ஐந்து நாட்கள்
கவனித்தால் அவை ஒரே இடத்தில்
தொடர்ந்து படுக்குமாம் . அந்த
இடத்தில் தோண்டினால் வற்றாத
நீரூற்றுக் கிடைக்குமாம்.

இந்த 26 வார்த்தைகள்..! எவ்வளவு அழகு படியுங்கள் தெரியும்A - Appreciationமற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.B - Be...
12/08/2025

இந்த 26 வார்த்தைகள்..!
எவ்வளவு அழகு படியுங்கள் தெரியும்

A - Appreciation
மற்றவர்களின் நிறைகளை மனதாரப் பாராட்டுங்கள்.

B - Behaviour
புன்முறுவல் காட்டவும் சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும் கூட நேரம் இல்லாதது போல் நடந்து கொள்ளாதீர்கள்.

C - Compromise
அற்ப விஷயங்களைப் பெரிது படுத்தாதீர்கள். மனம் திறந்து பேசி சுமுகமாக தீர்த்துக்கொள்ளுங்கள்.

D - Depression
மற்றவர்கள் புரிந்துகொள்ளவில்லையே என்று சோர்வடையாதீர்கள்.

E - Ego
மற்றவர்களை விட உங்களை உயர்வாக நினைத்துக் கொண்டு கர்வப்படாதீர்கள்.

F - Forgive
கண்டிக்கக்கூடிய அதிகாரமும் நியாயமும் உங்கள் பக்கம் இருந்தாலும், எதிர்த் தரப்பினரை மன்னிக்க வழி இருக்கிறதா என்று பாருங்கள்.

G - Genuineness
எந்த விஷயத்தையும் நேர்மையாகக் கையாளுங்கள்.

H - Honesty
தவறு செய்தால் உடனே மன்னிப்பு கேட்பதைக் கெளரவமாகக் கருதுங்கள்.

I - Inferiority Complex
எவரையும் பார்த்து பிரமிக்காதீர்கள். நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்ற தாழ்வு மனப்பான்மையை விடுங்கள்.

J - Jealousy
பொறாமை வேண்டவே வேண்டாம். அது கொண்டவனையே கொல்லும்.

K - Kindness
இனிய இதமான சொற்களை மட்டுமே பயன்படுத்துங்கள்.

L - Loose Talk
சம்பந்தமில்லாமலும் அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேச வேண்டாம்.

M - Misunderstanding
மற்றவர்களைத் தவறாகப் புரிந்துகொள்ளாதீர்கள்.

N - Neutral
எப்போதும் எந்த விஷயத்தையும், முடிவு எடுத்துவிட்டுப் பேச வேண்டாம். பேசிவிட்டு முடிவு எடுங்கள். நடுநிலை தவறாதீர்கள்.

O - Over Expectation
அளவுக்கு அதிகமாக எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தேவைக்கு அதிகமாக ஆசைப்படாதீர்கள்.

P - Patience
சில சங்கடங்களை சகித்துத்தான் ஆகவேண்டும் என உணருங்கள்.

Q - Quietness
தெரிந்ததை மாத்திரமே பேசுங்கள். அநேகப் பிரச்னைகளுக்குக் காரணம், தெரியாததைப் பேசுவதுதான். கூடுமானவரை பேசாமலே இருந்துவிடுங்கள்.

R - Roughness
பண்பில்லாத வார்த்தைகளையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டாதீர்கள்.

S - Stubbornness
சொன்னதே சரி, செய்ததே சரி என பிடிவாதம் பிடிக்காதீர்கள்.

T - Twisting
இங்கே கேட்டதை அங்கேயும், அங்கே கேட்டதை இங்கேயும் சொல்வதை விடுங்கள்.

U - Underestimate
மற்றவர்களுக்கும் மரியாதை உண்டு என்பதை மறவாதீர்கள்.

V - Voluntary
அடுத்தவர் இறங்கி வரவேண்டும் என்று காத்திராமல் நீங்களே பேச்சை முதலில் தொடங்குங்கள். பிரச்னை வரும்போது எதிர்த்தரப்பில் உள்ளவரின் கருத்துக்களுக்கும் காது கொடுங்கள்.

W - Wound
எந்தப் பேச்சும் செயலும் யார் மனதையும் காயப்படுத்தாமல் இருக்கட்டும்.

X - Xerox
நம்மை மற்றவர்கள் எப்படி நடத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறோமோ, அப்படியே மற்றவர்களை நாம் நடத்துவோம்.

Y - Yield
முடிந்தவரை விட்டுக் கொடுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை.

Z - Zero
இவை அனைத்தையும் கடைப் பிடித்தால் பிரச்னை என்பது பூஜ்ஜியம் ஆகும்...

நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

காட்டின் அடர்ந்த பகுதியில், ஒரு நரி தன் இளமையான நாட்களை மகிழ்ச்சியாகக் கழித்து வந்தது. இந்த நரி, பெயர் வைரவன், தன் சாமர்...
12/08/2025

காட்டின் அடர்ந்த பகுதியில், ஒரு நரி தன் இளமையான நாட்களை மகிழ்ச்சியாகக் கழித்து வந்தது. இந்த நரி, பெயர் வைரவன், தன் சாமர்த்தியத்திற்கும் வேகத்திற்கும் பெயர் பெற்றவன். ஒரு நாள், சூரியன் மறையும் வேளையில், வைரவன் உணவு தேடி அலைந்து கொண்டிருந்தபோது, ஒரு ஓநாயின் கூர்மையான பற்களின் மின்னல் அவனைக் குறிவைத்தது. ஓநாயின் கண்களில் கொலைவெறி தெரிந்தது. உயிருக்கு அஞ்சிய வைரவன், காட்டின் ஒதுக்குப்புறமாக இருந்த ஒரு முனிவரின் ஆசிரமத்தை நோக்கி ஓடினான்.

ஆசிரமத்தின் மையத்தில், பழமையான ஆலமரத்தின் கீழ், முனிவர் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அவரது முகத்தில் அமைதியும், கைகளில் கமண்டலமும் இருந்தன. வைரவன் அவரது காலடியில் விழுந்து, நடுங்கிய குரலில் கெஞ்சினான்:

"முனிவரே, என்னைக் காப்பாற்றுங்கள்! ஒரு ஓநாய் என்னைக் கொல்ல வருகிறது. தயவு செய்து எனக்கு உதவுங்கள்!"

முனிவர் கண்களை மெல்லத் திறந்து, நரியின் அவலநிலையைக் கண்டு இரக்கப்பட்டார். "பயப்படாதே, வைரவா. உன்னைக் காப்பாற்றுவேன்," என்று கூறி, கமண்டலத்தில் இருந்த புனித தீர்த்தத்தை எடுத்து வைரவன் மீது தெளித்தார். ஒரு பிரகாசமான ஒளி வைரவனைச் சூழ்ந்தது, அவனது உடல் மாறி, ஒரு பலமிக்க ஓநாயாக உருமாறியது.

வைரவன், இப்போது ஒரு ஓநாயாக, தன்னைத் தாக்க வந்த ஓநாயை எதிர்கொண்டான். "இப்போது நீ யார் என்று பார்க்கிறேன்!" என்று கர்ஜித்தபடி, அவன் தன் புதிய பலத்துடன் முன்னேறினான். அவனது கூர்மையான நகங்களும் பற்களும் அந்த ஓநாயை விரட்டியடித்தன. பயந்து ஓடிய ஓநாய், "இவன் எப்படி இவ்வளவு பலசாலியானான்?" என்று யோசித்தபடி காட்டுக்குள் மறைந்தது.

வைரவனின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அவன் ஓநாயாக இருந்தபோது, ஒரு சிறுத்தை அவனை நோட்டமிட்டது. அதன் கண்கள் ஆபத்தை உமிழ்ந்தன. மீண்டும் உயிருக்கு அஞ்சிய வைரவன், முனிவரிடம் திரும்பினான்.

"முனிவரே, இப்போது ஒரு சிறுத்தை என்னைத் தாக்க வருகிறது! என்னை மீண்டும் காப்பாற்றுங்கள்!" என்று கெஞ்சினான்.

முனிவர் சிரித்தபடி, "என் தீர்த்தத்தின் சக்தி உன்னை மீண்டும் காக்கும்," என்று கூறி, மீண்டும் தீர்த்தத்தைத் தெளித்தார். வைரவன் ஒரு கம்பீரமான சிறுத்தையாக மாறினான். அவனைப் பார்த்த மற்றொரு சிறுத்தை, "இவன் நம்மவனாக இருக்கிறானே!" என்று குழம்பி, அவனைத் தாக்காமல் சென்றுவிட்டது.

ஆனால், ஆபத்துகள் நிற்கவில்லை. ஒரு பெரிய யானை, காட்டை உலுக்கியபடி, வைரவனைத் தாக்க வந்தது. முனிவரிடம் ஓடிய வைரவன், "இந்த யானையிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்!" என்று மன்றாடினான். முனிவர் மீண்டும் தீர்த்தம் தெளித்து, வைரவனை ஒரு மாபெரும் யானையாக மாற்றினார்.

யானையாக வைரவன் நிமிர்ந்து நின்றபோது, ஒரு புலி அவனைத் தாக்க வந்தது. மீண்டும் முனிவரின் உதவியுடன், வைரவன் புலியாக மாறினான். இப்படியே, ஒவ்வொரு ஆபத்தையும் எதிர்கொள்ள, அவன் சிங்கமாக உயர்ந்தான். இப்போது, காட்டின் ராஜாவாக, வைரவன் அச்சமற்றவனாக உணர்ந்தான்.

ஆனால், சிங்கமாக மாறிய பிறகு, வைரவனின் மனதில் ஒரு இருண்ட எண்ணம் தோன்றியது. "நான் இப்போது சிங்கம், காட்டின் அரசன். ஆனால், இந்த முனிவர் என்னை மீண்டும் நரியாக மாற்றினால்? மீண்டும் பலவீனமாகி, காட்டில் உயிருக்கு ஓட வேண்டியிருக்கும். இவரை இப்போதே முடித்துவிடுவது நல்லது," என்று எண்ணினான்.

வைரவன், சிங்கமாக, முனிவரின் பின்னால் மெதுவாக நகர்ந்து, பாயத் தயாரானான். ஆனால், முனிவர் தன் தியானத்தின் மூலம் வைரவனின் எண்ணத்தை உணர்ந்தார். அவர் திரும்பி, கமண்டலத்திலிருந்து தீர்த்தத்தை எடுத்து, "போ, நரியே!" என்று கூறி தெளித்தார்.

ஒரு கணத்தில், வைரவனின் பெருமை மறைந்து, அவன் மீண்டும் ஒரு சாதாரண நரியாக மாறினான். அவனது கம்பீரமான உருவம் சுருங்கி, முன்பு இருந்த பயந்த நரியாக மாறியது. அவன் அழுதபடி, "என் தவறுக்கு மன்னிக்கவும், முனிவரே!" என்று கெஞ்சினான்.

முனிவரின் அறிவுரை

முனிவர் அமைதியாகப் புன்னகைத்தார். "வைரவா, பலம் உன்னைப் பெருமைக்கு இட்டுச் சென்றது, ஆனால் நன்றியை மறந்தாய். உன்னைக் காப்பாற்றியவனையே துரோகம் செய்ய நினைத்தாய். இந்தப் பாடத்தை மறவாதே. உன் இயல்பை ஏற்று, நேர்மையுடன் வாழ்."

வைரவன், தலை குனிந்து, ஆசிரமத்தை விட்டு வெளியேறினான். காட்டில் மீண்டும் தன் வாழ்க்கையைத் தொடர்ந்தான், ஆனால் இந்த முறை, பணிவுடனும், நன்றியுடனும்.

தேடுகிறேன் ..... அவளைப்  படைத்தவனை தேடுகிறேன்...34-28-34  ற்கு அவளை அளவெடுத்து  வடிவமைத்தது யார் தையல்காரனா?   தேடுகிறேன...
12/08/2025

தேடுகிறேன் ..... அவளைப் படைத்தவனை தேடுகிறேன்...
34-28-34 ற்கு அவளை அளவெடுத்து வடிவமைத்தது யார் தையல்காரனா? தேடுகிறேன்... அவளை வடிவமைத்தவனைத் தேடுகிறேன்...
நீளக் கூந்தல் தொடை தொட்ட ஊறுகாயாய் அவளை சமைத்தது யார் சமையல் காரனா?தேடுகிறேன்... அவளை சமைத்தவனைத் தேடுகிறேன்
மூக்கும் விழிகளும் அதரமும் எடுப்பு தான் அவளுக்கு எந்த தச்சனின் கை வண்ணமோ? தேடுகிறேன்... அவளை உருவாக்கியவனைத் தேடுகிறேன்...
குடத்தைச் செய்து குமரி அவளை உருவாக்கிய கண்ணாடியன் எவனோ? தேடுகிறேன்... அவளை உருமாற்றியவனைத் தேடுகிறேன்...
எப்போதும் அவளைச் சுற்றி ஏன் மொய்க்கிறது ஆடவர் கூட்டம்...?
தேடுகிறேன்
அந்த சவ்வு மிட்டாய் தயாரிப்பாளனைத் தேடுகிறேன்
கருக்காத எஃகாக பளபளக்கும் கன்னக்காரி கறிவேப்பிலை மனசுக்காரி அவள் தான் பார்த்தீர்களா?
தேடுகிறேன் அந்த எஃகுத் தொழிற்கூடத்தவனைத் தேடுகிறேன்
ஆம்... அங்கெங்கென்றேத் தேடித் தெளிந்தேன்...
அவள் சூடான ஒளிப்படம்
தொடாமலே சூடேற்றும் சூரியன்
இயற்கையின் படைப்பில் இயற்பியலான உயிர் வேதியியல் அவளெனக் கண்டு கொண்டேன்
இப்போது ...
தேடுவதை நிறுத்தி ... அவளை மட்டுமே முன்னிருத்தி ஆய்வுப் பாடம் படித்துக் கொண்டிருக்கிறேன்...
தமிழ்ப் படித்து கவி சமைத்த கவிக்கு கணக்கு தெரிய வேண்டும்...
கணிதம் கற்ற புனிதருக்கு புவி யீர்ப்பு புரிய வேண்டும்...
ஈர்ப்பு விசை யறிந்தவருக்கு உயிரியல் தெரிந்திருக்க வேண்டும்
உயிரை அறிந்தவருக்கு வேதியல் தெரிந்திருக்க வேண்டும் அப்போது தானே வரலாறு படைக்க முடியும் .
@மருத்துவர் தேவி

இன்றைய ராசிபலன் (12.08.2025) மேஷம் முதல் மீனம் வரை உங்கள் ராசிக்கான இன்றைய பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்!உங்கள் நாளை சிறப...
12/08/2025

இன்றைய ராசிபலன் (12.08.2025)

மேஷம் முதல் மீனம் வரை உங்கள் ராசிக்கான இன்றைய பலன்களை தெரிந்து கொள்ளுங்கள்!
உங்கள் நாளை சிறப்பாக திட்டமிடுங்கள். 🙏

வரும் நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை எங்களுடைய ராசி பலன் யூடியூப் சேனலில் பார்த்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்
https://www.youtube.com/

Address

Vedaranyam

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kannan Sineka vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kannan Sineka vlog:

Share


Other Vedaranyam media companies

Show All