18/08/2024
மலைக்கோட்டை மாநகரில் இளைஞர்களின் எழுச்சி...!!!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி திருச்சி கிழக்கு மாவட்டத்தில் சமூகம் மற்றும் அரசியல் பணிகளால் கவரப்பட்டு சமஸ்பிரான் தெரு,காமராஜ் நகர்,காட்டூர் கிளையை சார்ந்த இளைஞர்கள் தன்னெழுச்சியாக மாவட்ட தலைவர் M.Aமுஹம்மது ராஜா தலைமையில்
மாநிலத் தலைவர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லா MLA, பொதுச் செயலாளர் ப.அப்துல் சமத் MLA மற்றும் மாநில பொருளாளர் பொறியாளர் சபியுல்லாகான் மற்றும் மாவட்ட செயலாளர் அஷ்ரப் அலி முன்னிலையில் இளைஞர்கள் தமுமுக,மமகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் மாநில து.பொதுச்செயலாளர் தஞ்சை பாதுஷா,மாநில அமைப்பு செயலாளர் புழல் ஷேக், மாவட்டத் துணைத் தலைவர் முஸ்தபா, மாவட்ட துணை செயலாளர் ரஹ்மத்துல்லாஹ்,மாவட்ட விளையாட்டு அணி செயலாளர் இப்ராஹிம், இளைஞர் அணி செயலாளர் முஜீப், மாவட்ட விழி அணி செயலாளர் ஜின்னா மற்றும் மாவட்ட துணை அணி பகுதி கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பதிவு நாள் : 18.08.24