21/03/2025
உள்ளூராட்சித் தேர்தல் முறையின் கீழ் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்து நியமிப்பது எவ்வாறு ?
For Example :
அளிக்கபட்ட மொத்த வாக்குகள் =40,000
மொத்த உறுப்பினர்கள் = 20
வட்டார மட்டத்தில் - 60% (12 உறுப்பினர்கள்)
விகிதாசார அடிப்படையில் - 40%(8 உறுப்பினர்கள்)
1)வட்டார மட்டத்தில் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்
- வட்டார அடிப்படையில் ஆகக்கூடிய வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் அரசியற் கட்சி அல்லது சுயேச்சைக் குழு சார்பாக தேர்தலில் போட்டியிட்ட அபேட்சகர் அல்லது அபேட்சகர்கள் உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுவர்.
For example
கட்சிகள் மற்றும் பெற்ற வாக்குகள் மற்றும் வட்டார ரீதியாக பெறப்பட்ட உறுப்பினர்கள் :
A கட்சி : 15,300 (7 உறுப்பினர்கள்)
B கட்சி : 12,900 ( 4 உறுப்பினர்கள்)
C கட்சி : 4,400 ( 1 உறுப்பினர் )
D கட்சி : 2,600
E கட்சி : 1,600
F கட்சி : 1,350
G கட்சி : 950
H கட்சி : 600
L கட்சி : 300
2) விகிதாசார அடிப்படையில் உறுப்பினர் எண்ணிக்கையைத் தீர்மானித்தல்
For Example
அளிக்கபட்ட மொத்த வாக்குகள் =40,000
மொத்த உறுப்பினர்கள் =20
உறுப்பினர் ஒருவருக்காக வாக்குகள்=
மொத்த வாக்குகள் / மொத்த உறுப்பினர்கள்
40000 ÷ 20 = 2,000
உறுப்பினர் ஒருவருக்காக வாக்குகள்= 2000
கட்சிகள் மற்றும் பெற்ற வாக்குகள் மற்றும் :
A: 15,300
B: 12,900
C: 4,400
D: 2,600
E: 1,600
F: 1,350
G: 950
H: 600
L: 300
—————————————-
கட்சிகள் மற்றும் பெற்ற வாக்குகள் மற்றும் மொத்தமாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள்:
A கட்சி : 15,300
உறுப்பினர்கள் = மொத்த வாக்குகள் ÷ ஒரு உறுப்பினர் க்கான வாக்குகள்
= 15300 ÷ 2000
= 7 உறுப்பினர்கள் மற்றும் மீதமுள்ள வாக்குகள் 1300
A கட்சி : 15,300 (7உறுப்பினர்கள்+ 1300)
B கட்சி : 12,900 (6 உறுப்பினர்கள்+900 வாக்குகள்)
C கட்சி : 4,400 ( 2 உறுப்பினர்கள் + 400 வாக்குகள்)
D கட்சி : 2,600 (1 உறுப்பினர் +600 )
E கட்சி : 1,600
F கட்சி : 1,350
G கட்சி : 950
H கட்சி : 600
L கட்சி : 300
—————————————
மீதமுள்ள உறுப்பினர்கள் = மொத்த உறுப்பினர்கள் - தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள்
= 20 - { 7(A கட்சி) +6 ( B கட்சி ) + 2 (C கட்சி ) +1(D கட்சி ) }
= 20 -16
=4
மீதமுள்ள உறுப்பினர்கள் = 4
• ஆகவே மீதமுள்ள உறுப்பினர்கள் ( 4 உறுப்பினர்கள்)மீதமுள்ள வாக்குகளில் ஆகக்கூடிய வாக்குகள் காணப்படுகின்ற அரசியற் கட்சிகளுக்கு அல்லது சுயேட்சை குழுக்களுக்கு பகிரப்படும்.
கட்சிகள் மற்றும் மீதமுள்ள வாக்குகள்
A கட்சி : 1300 வாக்குகள்
B கட்சி : 900 வாக்குகள்
C கட்சி : 400 வாக்குகள்
D கட்சி : 600 வாக்குகள்
E கட்சி : 1,600 வாக்குகள்
F கட்சி : 1,350 வாக்குகள்
G கட்சி : 950 வாக்குகள்
H கட்சி : 600 வாக்குகள்
L கட்சி : 300 வாக்குகள்
ஆகவே மீதமுள்ள உறுப்பினர்கள் ( 4 உறுப்பினர்கள்)மீதமுள்ள வாக்குகளில் ஆகக்கூடிய வாக்குகள் காணப்படுகின்ற E கட்சி (1600), F கட்சி (1350), A கட்சி(1300), G கட்சி (950) ஒவ்வொரு ஆசனமாக பகிரப்படும்.
—————————————
கட்சிகள் மற்றும் பெற்ற வாக்குகள் மற்றும் மொத்தமாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் எண்ணிக்கை
A கட்சி : 15,300 ( 8 உறுப்பினர்கள் )
B கட்சி : 12,900 (6 உறுப்பினர்கள்)
C கட்சி : 4,400 ( 2 உறுப்பினர்கள் )
D கட்சி : 2,600 (1 உறுப்பினர் )
E கட்சி : 1,600 (1 உறுப்பினர் )
F கட்சி : 1,350 (1 உறுப்பினர் )
G கட்சி : 950 (1 உறுப்பினர் )
H கட்சி : 600
L கட்சி : 300
—————————————
கட்சிகள் மற்றும் பெற்ற வாக்குகள் மற்றும் வட்டார ரீதியாக , பட்டியல் ரீதியாக பெறப்பட்ட உறுப்பினர்கள் :
பட்டியல் ஆசனம் = மொத்த பெறப்படும் ஆசனம் - வட்டார ரீதியாக பெறப்பட்ட ஆசனம்
A கட்சி : 15,300 ( 7 வட்டாரம் + 1 பட்டியல் )
B: 12,900 ( 4 வட்டாரம் + 2 பட்டியல்)
C: 4,400 ( 1 வட்டாரம் + 1 பட்டியல்)
D: 2,600 ( 1 பட்டியல்)
E: 1,600 ( 1 பட்டியல்)
F: 1,350 ( 1 பட்டியல்)
G: 950 ( 1 பட்டியல்)
H: 600
L: 300