Alert Hot News

Alert Hot News Hi guys...
Welcome to our
*�Alert Hot NEWS�*
�This is our country's alert hot news�

ஜனாஸா அறிவித்தல்!2025-04-24அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் அட்டாளையைச் சேர்ந்த குடும்பத்தினர் பயணித்த கார் ஒன்ற...
24/04/2025

ஜனாஸா அறிவித்தல்!
2025-04-24

அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியில் அட்டாளையைச் சேர்ந்த குடும்பத்தினர் பயணித்த கார் ஒன்று தாண்டியடியில் வைத்து நேற்றுமாலை மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் காரில் தாய் தந்தையுடன் பயணித்த 9 மாத குழந்தை பரிதாபகரமாக உயிரிழப்பு.

அட்டாளைச்சேனை 5 ம் பிரிவைச் சேர்ந்த முஜாகித் ஷைஹா மனால் (9 மாத குழந்தை) இறைவன் அழைப்பை ஏற்றுக் கொண்டார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் 🤲.

21/03/2025

இந்த சிறு குழந்தைகள் என்ன பாவம் செய்தது..🥺💔

21/03/2025

விமானப்படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று விபத்து….

வாரியபொல,மினுவங்கெட் டே அருகே இலங்கை விமானப்படையின் k8 பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

 #பாலமுனை முள்ளிமலை பகுதியில் தூக்கில் தொங்கி நிலையில் சடலம்! #சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்  #அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவ...
06/03/2025

#பாலமுனை முள்ளிமலை பகுதியில் தூக்கில் தொங்கி நிலையில் சடலம்!

#சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்

#அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமுனை முள்ளிமலையடி பிரதேசத்தில் உள்ள காட்டு பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று (05) புதன்கிழமை தெரியவந்துள்ளது.

பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சடலம் குறித்து அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதேவேளை, இன்று (06) வியாழக்கிழமை அம்பாறை தடவியல் பொலிஸ் அதிகாரிகள் பாலமுனை முள்ளிமலை காட்டு பிரதேசத்திற்கு வருகை தந்து தடவியல் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அக்கரைப்பற்று அலிக்கம்பை பகுதியில் ஏரப்பன் ராமன் (69 வயது) என்பவர் காணாமல் போயுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸில் முறைப்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டை செய்தவர் இன்று (06) தூக்கில் தொங்கிய நிலையில் மரணமடைந்துள்ளவர் தங்கள் உறவினர் என அடையாளங்கண்டுள்ளனர்.

இம்மரணம் குறித்து அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

20/02/2025

ரோட்டோரத்தில் நிற்கும் முஸ்லிம் பெண்மணியிடம் வம்பிழுக்கும் பொறுக்கிகள் அதை தைரியமாக தட்டிக்கேட்டு அவர்களை விரட்டி விடும் தொப்புள்கொடி இந்து மத சகோதரர் இந்த மனிதாபிமான செயல் உள்ள வரை பாசிச சங்கிகளின் பிரித்தாலும் சூழ்ச்சி நமதுநாட்டில் எடுபடாது.

வாழ்த்துக்கள் சகோதரா..💝.

துப்பாக்கிச் சூட்டில் கனேமுல்ல சஞ்சீவ பலி...புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் கனேமுல்ல சஞ்...
19/02/2025

துப்பாக்கிச் சூட்டில் கனேமுல்ல சஞ்சீவ பலி...

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் கனேமுல்ல சஞ்சீவ உயிரிழந்துள்ளார்.

கனேமுல்ல சஞ்சீவவை விசாரணை நடவடிக்கைகளுக்காக பூஸா சிறைச்சாலையிலிருந்து புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட சந்தர்ப்பத்திலேயே குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் சட்டத்தரணியின் தோற்றத்தில் வருகைதந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி தற்போது நீதிமன்ற வளாகத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அக்கரைப்பற்று கிளை ரமழான் இஜ்திமாவொன்றை அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிவாசலில் பெப்ரவரி 21 ஆம் ...
19/02/2025

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி அக்கரைப்பற்று கிளை ரமழான் இஜ்திமாவொன்றை அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிவாசலில் பெப்ரவரி 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அஸர் முதல் இஷா வரை ஏற்பாடு செய்துள்ளனர். இன்ஷா அல்லாஹ்.

பொதுவாக ரமழான் வந்துவிட்டால் ஊர் முழுவதும் ஆன்மிக சூழலொன்று இயல்பாகவே உருவாகிவிடும்.

ரமழானுக்குப் பின்னர் அச்சூழல் தானாகவே மறைந்துவிடும்..

ரமழான் ஊடாக தக்வாவை அடைந்து சுவனத்தைப் பெறுவதுதான் எம் ஒவ்வொருவரினதும் இலக்காகும்

தனிப்பட்ட ரீதியில்... குடும்ப ரீதியாக... பள்ளிவாசல் ரீதியாக...

ஊர் ரீதியாக...

என ரமழான் திட்டமிட்டு பயன்படுத்தப்பட வேண்டும்.

ALERT HOT NEWS குடும்பத்தார்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்
15/01/2024

ALERT HOT NEWS குடும்பத்தார்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

*அக்கரைப்பற்று, ஒலுவில், நிந்தவூர், காரைதீவு , மாவடிப்பள்ளி ஆகிய பிரதேசங்களில் நீரின் மட்டம் தற்போது அதிகரித்து வருகின்ற...
12/01/2024

*அக்கரைப்பற்று, ஒலுவில், நிந்தவூர், காரைதீவு , மாவடிப்பள்ளி ஆகிய பிரதேசங்களில் நீரின் மட்டம் தற்போது அதிகரித்து வருகின்றன.*

👉 பாதிக்கப்பட்டவர்கள் அருகிலுள்ள பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்...

மேலும் மக்கள் இது குறித்து மிக அவதானமாகவும் அனர்த்த முன் ஆயத்தங்களை முற் கூட்டியே மேற்கொண்டு எச்சரிக்கையோடும் இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

மேலும் முடியுமானவர்கள் மற்றும் பிரதேச இளைஞர்கள் பாதுகாப்பாக தங்களால் இயன்ற அளவு உதவிகளையும் அப்பிரதேசத்திலுள்ள நிவரண குழுக்களை தொடர்பு கொண்டு தங்களது பங்களிப்பினை செலுத்தி உதவ முன் வாருங்கள்..

://chat.whatsapp.com/Ja8xTESQb5LHTi2J0Cb1Yn

Address

Addalachenai
32350

Alerts

Be the first to know and let us send you an email when Alert Hot News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alert Hot News:

Share