11/07/2023
*மைத்திரியின் பிச்சைப் படலம் தொடருமா..? 15 மில்லியன் ரூபா நட்டஈடு செலுத்திய மைத்ரி*
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் காரணமாக அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டமைக்காக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 15 மில்லியன் ரூபாவை செலுத்தியுள்ளார்.
100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் பிரகாரம், இந்த தொகை (15 மில்லியன் ரூபா) நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் ஓய்வூதியமாக 97,500/- ரூபாவையும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் கொடுப்பனவுகள் நீங்கலாக 54,285 ரூபாவையும் வருமானமாகப் பெறுவதாக மைத்திரிபால தனது சட்டத்தரணிகள் ஊடாக உச்ச நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த ஜூன் 28ஆம் திகதி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட 100 மில்லியன் ரூபாவில், தலா 10 மில்லியன் ரூபா மற்றும் 5 மில்லியன் ரூபா வீதம், 15 மில்லியன் ரூபா ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், எஞ்சிய 85 இலட்சம் ரூபா இழப்பீட்டுத் தொகையை அடுத்த வருடம் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் 10 தவணைகளாக வழங்குவதற்கு அனுமதி வழங்குமாறும் முன்னாள் ஜனாதிபதி கோரியுள்ளார்.
பலரும் பலன் பெற தகவல்களை Forward செய்து..... தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்..
இது போன்ற செய்திகளை அறிய எமது முகநூல் பக்கத்துடன் இணைந்திருங்கள்
https://www.facebook.com/profile.php?id=100094459785390&mibextid=ZbWKwL
இந்த பக்கத்தில் பாடல் நிகழ்ச்சிகள் , அறிவு சார்ந்த நிகழ்ச்சிகள் , செய்திகள் , நகைச்சுவைகள் இடம்பெரும்