
12/05/2025
பாலமுனையில் முஸ்லிம் காங்கிரஸை அகற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
முஸ்லிம் காங்கிரஸின் வரலாற்றில் பாலமுனை பிரதேசத்தில் பெரும் தோல்வியை சந்தித்த தேர்தலாக அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தல் அமைந்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் உருவாக்கத்திலிருந்தே அதன் வளர்ச்சிக்காக நூறு வீதம் பங்களிப்பு செய்த மண் பாலமுனை.
அப்படிப்பட்ட பாலமுனை பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸ் படு தோல்வியை சந்தித்தது இதன் மூலம் முகாவின் தலைமை மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் இல்லாமல் போய்விட்டது.
புதிதாக களத்தில் புகுந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஒட்டுமொத்த மக்களின் மனங்களை வென்றதென்பது இலகுவான காரியமல்ல.
இலங்கை முஸ்லிம்களின் தலைமையாக ரிஷாத் பதியுதீன் வர வேண்டும் என்பதே நாடு பூராகவும் உள்ள முஸ்லிம்களின் நிலைப்பாடாக மாறியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் இதயமாக கருதப்படும் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு சபையைக் கூட தனித்து ஆட்சி அமைக்கக் கூடிய தகுதியை அம் மக்கள் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது