I Media

I Media இஸ்லாத்தில் மிக சிறந்தது சமாதானத்தை பரப்புவதும் ஏழைகளுக்கு உணவளிப்பதுமாகும்

இஸ்லாம் வாழ்வின் சகல துறைகளுக்கும் வழிகாட்டியுள்ளது. இஸ்லாமிய வழிகாட்டலில் பிறந்த தினம் கொண்டாடுதல் என்றொரு அம்சம் பற்றி...
23/07/2026

இஸ்லாம் வாழ்வின் சகல துறைகளுக்கும் வழிகாட்டியுள்ளது.

இஸ்லாமிய வழிகாட்டலில் பிறந்த தினம் கொண்டாடுதல் என்றொரு அம்சம் பற்றி எங்குமே பேசப்பட்டதில்லை. நபி(ஸல்) அவர்கள் தனக்காகவோ, தனது குடும்பத்தினர், தனக்கு முன் வாழ்ந்த நபிமார்களுக்காகவோ பிறந்த தினம் கொண்டாடியதில்லை.

சத்திய வழிநடந்த நான்கு கலீபாக்கள் கூட நபி (ஸல்) அவர்களுக்காகப் பிறந்த தினம் கொண்டாடியதில்லை. நபித்தோழர்களும் கொண்டாடியதில்லை.

அப்படியென்றால், சுவனம் செல்லும் ஸுன்னத் வல் ஜமாஅத் - நபிவழியிலும் நபித்தோழர்கள் மரபிலும் இல்லாத இந்த மீலாது, மவ்லிது என்பது சுன்னத் வல்ஜமாஅத்தின் வழிகாட்டலுக்கு மாற்றமான நடைமுறை என்பது உறுதியாகின்றது.

ஷீஆக்களான பாத்திமிய்யாக்களில் ஒரு பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டதே இந்த மீலாது, மவ்லிது விழாக்களாகும். இதை அறியாத சுன்னத் வல் ஜமாஅத் மக்களும் ஷீஆக்களின் இந்த வழிமுறையைப் பின்பற்றி வருகின்றனர்.

“மவ்லூத்" என்றால் குழந்தை என்பது அர்த்தமாகும். “மவ்லித்" என்றால் பிறந்த இடம், பிறந்த நாள், காலம் என்று அர்த்தப்படும். நபியவர்களதும் வலிமார்களினதும் பிறந்த தினத்தை முன்னிட்டு அரபியில் இயற்றப்பட்ட பாடல்களை மக்கள் பாடி வருகின்றனர். அந்தப் பாடல்கள் ஷிர்க்கான அம்சங்களை உள்ளடக்கியுள்ளன. வலிமார்கள் பெயரில் உருவாக்கப்பட்ட பாடல் சொல்லும் அற்புத “கிஸ்ஸா" - கதைகள் - அவர்களை அல்லாஹ்வைப் போன்ற ஆற்றல்கள் உள்ளவர்களாக உருவகிக்கின்றன.

எனவே, ஷிர்க்கான அர்த்தங்களை உடைய மவ்லிதுகளைப் பற்றி மக்களுக்கு எச்சரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

ஒரு வேளை அந்தப் பாடல்கள் சரியாக இருந்தால்கூட, மார்க்கத்தில் இல்லாத ஒரு வணக்கத்தை உருவாக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. அப்படி உருவாக்கப்பட்ட அனைத்தும் நிராகரிக்கப்பட வேண்டிய பித்அத்துக்களாகும்.

இச்சிறிய நூல் இந்த உண்மையை உறுதியாகவும், தெளிவாகவும், சுருக்கமாகவும் தொட்டுக் காட்டுகின்றது. அத்துடன் அண்ணல் நபி மீது நாம் கொண்ட அன்பையும் நேசத்தையும் நாம் எப்படி வெளிப்படுத்தலாம் என்ற தெளிவை “உத்தம நபியை உரிய முறையில் நேசிப்போம்" என்ற இறுதிப் பகுதி தெளிவுபடுத்துகின்றது. இவ்வகையில் தமிழ் பேசும் மக்களுக்கு ஒரு கொள்கைத் தெளிவை வழங்கும் முகமாக இந்நூலை வெளியிடுவதில் தாருஸ் ஸுன்னா மகிழ்வடைகின்றது.

எமது சகோதரர்கள் இந்நூலை வாங்கி வாசிப்பதுடன் பிற சகோதரர்களுக்கும் அன்பளிப்புச் செய்து அவர்களும் சத்தியத்தை உணர உதவ வேண்டும் என்று அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் எமது பணிகளை அங்கீகரிப்பானாக!

இவண்
பணிப்பாளர்,
தாருஸ் ஸுன்னா பதிப்பகம்,
பறகஹதெனிய.

ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூதர் ரலி அவர்களை சந்தித்தார்கள்அமல் செய்வதற்கு மிக எளிதானதும் நன்மைகளை எ...
04/06/2026

ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அபூதர் ரலி அவர்களை சந்தித்தார்கள்

அமல் செய்வதற்கு மிக எளிதானதும் நன்மைகளை எடை போடும் தராசை மற்ற செயல்களை விட மிக பாரமாக ஆக்கக் கூடிய இது பழக்கங்களை அபூதரே உமக்கு நான் அறிவிக்கட்டுமா? என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்

அல்லாஹ்வின் தூதரே அவசியம் அறிவியுங்கள் என அபூதர் அலி கேட்டார்கள்

நற் குணத்தையும் அதிகமாக மௌனமாக இருப்பதையும் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீதாணை

எல்லா படைப்புகளின் செயல்களிலும் இவ்விரண்டு செயல்களைப் போன்ற நற்செயல் வேறில்லை என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பாளர் அனஸ் ரலி
நூல் பைஹகி

1- அமர்ந்து கொண்டு கைகுலுக்காதீர்கள்; எழுந்து நிற்பது என்பது மரியாதை. எழுந்து நிற்க மறந்தவனுக்கு கம்பீரம் ஒருபோதும் பரிச...
14/04/2026

1- அமர்ந்து கொண்டு கைகுலுக்காதீர்கள்; எழுந்து நிற்பது என்பது மரியாதை. எழுந்து நிற்க மறந்தவனுக்கு கம்பீரம் ஒருபோதும் பரிசாகக் கிடைக்காது..!

2- நீங்கள் சமைக்காத உணவை ஒருபோதும் குறைகூறாதீர்கள், குறிப்பாக நீங்கள் ஒரு விருந்தினராக இருக்கும்போது; உங்களுக்குச் சொந்தமில்லாத ஒரு கவளம் உணவை அவமதிக்கும் உரிமை உங்களுக்கு இல்லை..!

3- நீங்கள் வாங்காத உணவின் கடைசித் துண்டுக்கு கை நீட்டாதீர்கள்; சில நேரங்களில் கண்ணியம் என்பது நீங்கள் எதை எடுத்தீர்கள் என்பதில் இல்லை, மற்றவர்களுக்காக எதை விட்டுக்கொடுத்தீர்கள் என்பதில்தான் அளவிடப்படுகிறது..!

4- உங்களுக்குப் பின்னால் இருப்பவருக்கு முதுகாகவும், உங்கள் பக்கத்தில் இருப்பவருக்குத் துணையாகவும் இருங்கள்; ஆண்மை என்பது பேச்சில் இல்லை, இக்கட்டான சூழலில் எடுக்கும் முடிவுகளில்தான் உள்ளது..!

5- பேச்சுவார்த்தை நடக்கும் இடத்தில் முதலில் பேசுபவராக நீங்கள் இருக்காதீர்கள்; தொடக்கத்தில் நிலவும் நிதானம், இறுதியில் உங்களுக்கு வலிமையைத் தரும்..!

6- நீங்கள் ஏற்றி வைக்காத விளக்கின் ஒளியைத் திருடாதீர்கள்; பெருமையை இரவல் வாங்க முடியாது, சாதனையைப் போலியாக உருவாக்க முடியாது..!

7- எப்போதும் நேர்த்தியான உடை அணியுங்கள்; தோற்றம் என்பது மற்றவர்களுக்காக அல்ல, அது உங்கள் மீதே உங்களுக்கு இருக்கும் மரியாதையின் கண்ணாடி..!

8- உண்மையாகப் பேசுங்கள்; உங்கள் சொற்கள் இதயத்தில் உள்ளதைச் சொல்லட்டும். உங்கள் உண்மைத் தன்மையை அடகு வைத்து எவரையும் முகஸ்துதி செய்யாதீர்கள்.

9- கேளுங்கள், மீண்டும் மீண்டும் கேளுங்கள்; அறியாமை என்பது அவமானமல்ல, ஆனால் அனைத்தும் தெரிந்தவரைப் போல பாசாங்கு செய்வதுதான் அவமானம்..!

10- இழிவான பேச்சுகளிலிருந்து உங்கள் நாவைக் காத்துக் கொள்ளுங்கள்; சொற்கள் உங்கள் அறிவின் கண்ணாடி. தரம் தாழ்ந்த பேச்சு அறிவாளிகளுக்கு அழகல்ல..!

11- உணவு மேசையில் உங்கள் மொபைல் போனை மூன்றாவது நபராக அனுமதிக்காதீர்கள்; நேரத்தை மதிப்பது என்பது அந்தத் தருணத்தை மதிப்பதிலிருந்து தொடங்குகிறது..!

12- செவிமடுங்கள்... புன்னகையுங்கள்... கண்களைப் பார்த்துப் பேசுங்கள்; ஏனெனில் மௌனத்திலும் கண்களிலும் தான் உண்மையான கதைகள் சொல்லப்படுகின்றன..!

13- உங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றால், அங்கே செல்ல அடம் பிடிக்காதீர்கள்; கௌரவம் என்பது யாசிப்பதல்ல, அது காக்கப்பட வேண்டியது..!

14- உங்கள் வேர்களை (பின்னணியை) எண்ணி வெட்கப்படாதீர்கள்; ஒரு மரம் தனது அடிமரத்தைப் பெருமையாகக் கருதினால் மட்டுமே உயர்ந்து வளர முடியும்..!

15- இலக்கை அடைய ஏமாற்றாதீர்கள்; பொய்யின் மீது கட்டப்படும் உறவுகள், முதல் உண்மையிலேயே சரிந்து விழுந்துவிடும்..!

-தமிழ் வடிவம்: கலாநிதி ஏ. பீ. எம். அப்பாஸ்-

உங்களுக்கு நிச்சயமாக நாம் ஒரு வேத நூலை இறக்கி (அருளி)யிருக்கின்றோம்; அதில் உங்களுடைய ‘திக்ர்’ இருக்கிறது. நீங்கள் அறிந்த...
10/04/2026

உங்களுக்கு நிச்சயமாக நாம் ஒரு வேத நூலை இறக்கி (அருளி)யிருக்கின்றோம்; அதில் உங்களுடைய ‘திக்ர்’ இருக்கிறது. நீங்கள் அறிந்து (புரிந்து) கொள்ள மாட்டீர்களா? (21:10)

லைலத்துல் கத்ர் இரவில் ஓதவேண்டிய சிறப்பு துஆ...
13/03/2026

லைலத்துல் கத்ர் இரவில் ஓதவேண்டிய சிறப்பு துஆ...

அன்னை  ஆயிஷா ரலி அறிவிக்கிறார்கள் ரமலானின் கடைசி பத்து நாட்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிகமாக அமல் செய்வ...
11/03/2026

அன்னை ஆயிஷா ரலி அறிவிக்கிறார்கள் ரமலானின் கடைசி பத்து நாட்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிகமாக அமல் செய்வார்கள்

இரவு முழுவதும் விழித்திருந்து வணக்கம் செய்வார்கள்

தங்களுடைய குடும்பத்தையும் எழுப்பி விடுவார்கள்

நூல் புகாரி

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணிக்கும் வரை ரமலானின் கடைசிப்  பத்து நாட்களில் இஹ்திகாப்  இருந்தார்கள்
09/03/2026

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணிக்கும் வரை ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் இஹ்திகாப் இருந்தார்கள்

ரமலான் காலத்தில் உடலை பேணுவோம்ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்பது மட்டுமல்ல உடலை ஆரோக்கியமாக பராமரிக்க பழகும் காலம...
08/03/2026

ரமலான் காலத்தில் உடலை பேணுவோம்

ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்பது மட்டுமல்ல உடலை ஆரோக்கியமாக பராமரிக்க பழகும் காலமாகும்

06/03/2026

உணர்வுபூர்வமாக துஆக்களை ஓதுவோம்

அஷ்ஷெய்க் யூசுஃப் ஹனிபா

05/03/2026

நபிகள் நாயகத்தின் உணவு முறை
Dr.சனூஸ் காரியப்பர்

Address

Akkaraipattu
32400

Website

Alerts

Be the first to know and let us send you an email when I Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share