18/06/2026
விடைபெறும் நான்
என்றும் உங்கள் அன்பின்
அன்சார் முஜீபுர் ரஹ்மான்
எனது பாடசாலை காலம் தொட்டு
இன்றுவரை கலை மீது நான் கொண்ட தீராத காதல் என்னுள்ளே இலை மறை காயாக இருந்த பல திறமையான ஆற்றல்களை வெளிக்கொண்டு வர ஒரு சிறந்த மேடையாக எனது பாடசாலைக் காலம் பொற்காலமாய் இருந்து.
பாடசாலை மட்டம் முதல்
அகில இலங்கை ரீதியிலும்
முதலாம், இரண்டாம் மூன்றாம் இடங்களை
பெற்றதும் ஒரு சான்றே எனக்கு.
அல்ஹம்துலில்லாஹ்
எனது தொடர்ச்சியான விடாமுயற்சியினாலே
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரிதம்
Tv சமூக வலைதளம் மூலமாக
எனது முதல் பிரவேசம் ஆரம்பமானது.
பின்னர் ஒவ்வொரு நிகழ்சிகளையும்
திறன்பட நிகழ்த்துவதற்கு
என்னை முழுமையாக தயார்படுத்தியும்
எனக்கான வாய்ப்பையும்
உருவாக்கித் தந்தார்.
ரிதம் Tvஇன் பணிப்பாளர்
ஏ.ஆர்.ஏ.மஜீட் சேர் அவர்கள் ன.
இவைகளை நான் ஒரு போதும் மறந்துவிடமாட்டேன்.
இதன் பின்னரே இன்னும் பல நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் திறமையும் உற்சாகமும் என்னுள்ளே வெளிக்கொணர ஒரு வாய்ப்பாகவும் அமைந்தது.
என்னதான் சவால்கள் வந்தாலும்
எனது விடாமுயற்சியை நான் ஒரு போதும் கைவிடவில்லை...
காரணம் மக்களாகிய நீங்கள் தந்த உற்சாகமும் எனக்கு உத்வேகம் தந்த உள்ளங்களும் நேயர்களாகிய நீங்களே.
உங்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றிகள்.
எனது பயணத்தை முடிந்தால்
மீண்டும் தொடர்வேன்
இன்ஷா அல்லாஹ்.
ஆனால் எனக்கும் ஒரு சில வேலைநிமித்தம் காரணமாக ரிதம் Tvயிலிருந்து விடைபெறுகிறேன்.
மீண்டும் உங்களை சந்திக்கும் வரை விடைபெறும் நான்
என்றும் உங்கள் அன்பின்
அன்சார் முஜீபுர் ரஹ்மான்
18.06.026