
03/06/2025
🚨அவசர விழிப்புணர்வுக்காக!
சிக்கன் குன்யா தொற்று என கூறியதால் கம்பஹா வைத்தியசாலையில் தனக்கு வழங்கப்பட்ட மருந்து ஒவ்வாமை (Allergic) காரணமாக தான் பட்ட அவல நிலைமையை திருமதி செபாலி டயஸ் விளக்குகிறார்…
"இப்படி ஓர் விபரீதம் உலகத்தில் வேறு யாருக்கும் வந்துவிடக் கூடாது என்பதற்காக பதிவு செய்ய நினைத்தேன்...
2025/02/22 அன்று சிக்கன் குன்யா நோயினால் பாதிக்கப்பட்ட பின்னர் எனக்கு ஏற்பட்ட மூட்டு வலி காரணமாக கம்பஹா வைத்தியசாலை வைத்தியர் ஹிமந்த அத்துகோரலவின் கீழ் உள்ள ருமடோயிட் கிளினிக்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டேன்.
அங்கு ஒரு மாதத்திற்கு தேவையான 4 வகை மருந்துகள் வழங்கப்பட்டது.
2025/04/29 அன்று அதிகாலை மீண்டும் மட்டும் கிளினிக்கில் கொடுக்கப்பட்ட SULFASALAZINE எனும் மருந்தை 11 நாட்கள் தொடராக குடித்ததனால் STEVEN JOHNSON SYNDROOME என்று பெயரிடப்பட்ட ஓர் அபாயகரமான ஒவ்வாமை திடீரென ஏற்பட்டு 2025/05/10 அன்று களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன்,
ஏற்பட்ட ஒவ்வாமையின் புகைப்படங்களை இணைத்துள்ளேன்!
சுமார் 16 நாட்கள் உடம்பு முழுதும் (வெளியேயும் உள்ளேயும்) dermaid, சிகிச்சை அளிக்கப்பட்டது. மிகவும் கடுமையான வேதனை மற்றும் வலியுடன், மருத்துவர்களின் இடைவிடாத முயற்சியின் காரணமாக ஓரளவு ஆரோக்கியமடைந்துள்ளேன்.
அப்போது என் கண்கள் கூட குருடாய் போய் விடக்கூடிய நிலைமை ஏற்பட்டது, இருந்தாலும் பெரும் முயற்சி செய்து எளிதில் குணமாகிவிட்டது.
ஆனால் இப்போது நான் முன்பு இருந்த தோற்றம் இல்லை. 2025/05/26 அன்று நான் மருத்துவமனையிலிருந்து வெளியேறினேன், ஆனால் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. மருந்ததுகளால் மறுபடியும் ஒவ்வாமை வந்தால் என் உயிருக்கு ஆபத்து என்று மருத்துவர்கள் கூறினர்.
ஆக......
இதை பார்த்த பிறகு நீங்கள் அனைவரும் மருந்துகளை சாப்பிடும் போது கொஞ்சமேனும் சிந்தித்து ஆராய்ந்து சாப்பிடுங்கள். கண்டது கிடைத்தது எல்லாம் மருந்தாக எடுத்து உட்கொண்டு தலையெழுத்து வீணாகப் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்....!!!.
வீட்டில் இருக்கும் பெண்கள், குழந்தைகள், வயோதிபர்கள், கர்ப்பிணித்தாய்மாருக்காக கொடுக்கப்படும் மருந்துகளில் மிகவும் கவனமாக இருங்கள்!!!
நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்!
நலம் பெறுக !
வாழ்க வளமுடன்!
செபாலி டயாஸ்
சிங்களத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது!!