GREEN Tv Media Channel

GREEN Tv Media Channel தனித்துவமான சுதந்திரமான ஊடகம் - Like & share our GREEN Tv page GREEN TV MEDIA CHANNEL Official page | Follow | Share | Like

27/08/2026
23/08/2026

அஸ்ஸலாமு அலைக்கும்
வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
🕌 பள்ளிவாசல் நிர்மாணப் பணிக்கு
உங்கள் பங்களிப்பை வழங்குங்கள்
அக்கரைப்பற்று காதிரியா ஜும்ஆ
பள்ளிவாயலின் இரண்டாம் கட்ட கட்டிட
நிர்மாணப் பணிகள் தற்போது
ஆரம்பமாகியுள்ளன.

அல்ஹம்துலில்லாஹ் 🤲
அல்லாஹ்வின் இல்லத்தை
நிர்மாணிக்கும் இப்புனிதப் பணியில்,
உங்கள் நன்கொடையையும்
பங்களிப்பையும் வழங்குமாறு
அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

“யார் அல்லாஹ்வுக்காக ஒரு
பள்ளிவாயலைக் கட்டுகிறாரோ,
அவருக்காக அல்லாஹ் சுவர்க்கத்தில்
அதைப் போன்ற ஒரு இல்லத்தை
அமைத்துக் கொடுப்பான்.”

(ஸஹீஹ் அல்-புகாரி | ஸஹீஹ் முஸ்லிம்)
💵 வங்கி விபரங்கள்
கணக்கின் பெயர்: Kathiriya Jummah Mosque
கணக்கு இலக்கம்: 063100190000831
வங்கி: People’s Bank, Akkaraipattu

20/08/2026

இஸ்லாமிய காதல்

🎉 சிறப்புத் தேர்ச்சி பெற்று வரலாற்றுச் சாதனை! 🏅தேசியக் கல்வி நிறுவகம் (NIE) நடாத்திய வழிகாட்டல் மற்றும் ஆலோசனை டிப்ளோமா ...
05/08/2026

🎉 சிறப்புத் தேர்ச்சி பெற்று வரலாற்றுச் சாதனை! 🏅

தேசியக் கல்வி நிறுவகம் (NIE) நடாத்திய வழிகாட்டல் மற்றும் ஆலோசனை டிப்ளோமா (Guidance & Counselling Diploma – 2022–2024) பாடநெறியில், அக்கரைப்பற்றைச் சேர்ந்த அஷ்ஷெய்க் M.P.M. சித்தீக் அவர்கள் 'Merit Pass' பெற்றுச் சிறப்பான சாதனை படைத்துள்ளார்.

இப்பாடநெறியில் தமிழ்மொழி மூலம் கற்றவர்களில் ஒரே ஒருவராக 'Merit Pass' பெற்றுள்ளமை, அவரது கல்வித் திறன், விடாமுயற்சி, அர்ப்பணிப்பு மற்றும் கல்விப் பணிக்கான அரிய ஈடுபாட்டை வெளிப்படுத்துகின்றது.

அக்/ பாயிஸா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியுமான இவர், தற்போது *அக்/ அட்டாளைச்சேனை மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை)*யில் சிரேஷ்ட ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் ஏற்கனவே தனது க.பொ.த. (உயர்தரம்) மற்றும்
பட்டப்பின் கல்வி டிப்ளோமா ஆகியவற்றிலும்
'Merit Pass'
பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

முகையதீன்பிச்சை – சுலைஹா உம்மா தம்பதியினரின் இளைய புதல்வரான அஷ்ஷெய்க் M.P.M. சித்தீக் அவர்கள், கல்வி மற்றும் சமூகப் பணிகளில் மேலும் பல உயரங்களை எட்டி, சமுதாயத்திற்கு சிறந்த சேவைகளை வழங்க அல்லாஹ் அருள் புரிவானாக.

அவரது இச்சிறப்பான வெற்றிகளுக்காக எங்களது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்!

✍️ GREEN TV MEDIA CHANNEL

Address

MJC Road
Akkaraipattu
32400

Alerts

Be the first to know and let us send you an email when GREEN Tv Media Channel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category