03/08/2026
சவுதி அரேபியாவில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அனோஜன் குறித்து அவரது தம்பி Hamsithan Harish வெளியிட்டுள்ள தகவல் இது
அனைவருக்கும் எனது பணிவான வணக்கம், நான் அனோஜனின் தம்பி.
தற்போது எனது அண்ணா சவுதி அரேபியாவில் சிறைச்சாலையில் உள்ளார் என்பது சகலரும் அறிந்த ஒரு விடையம். இந்த நிலைமையை அறிந்து சில நண்பர்கள் அனுதாபம் தெரிவித்து வரும் நிலையில், இன்னும் சில சகோதரர்கள் உறுதிப்படுத்தப்படாத உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிட்டு வருவது எனக்கும் எனது குடும்பத்திற்கும் மேலும் மன வேதனையையும் மன உளைச்சலையும் கொடுக்கிறது.
வதந்தியான செய்திகளை சமூக வலைத்தளங்களில் பகிர்வதனால்தேவையற்ற பிரச்சினைகள் உருவாகி, இரு சமூகங்களுக்கிடையேயும் மனக்கசப்பு மற்றும் இன ஒற்றுமையை குலைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
எனவே, அன்பிற்குரிய சகோதரங்களே தயவுசெய்து உறுதிப்படுத்தப்படாத எந்தவொரு செய்தியையும் பகிர்ந்து, இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயல்பட வேண்டாம் என பணிவாக கேட்டுக்கொள்கிறேன்.🙏🏻
எனது அண்ணாவுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனை விவரங்கள்:
• 5 வருட சிறைத்தண்டனை
• 3,000,000 சவுதி ரியால் அபராதம்
• தொலைபேசி பறிமுதல்
• பயன்படுத்திய Facebook ID தடை
• Gulf country permanent ban.
மேலும் தண்டனை வழங்கப்பட்ட அலுவலக அறிக்கையின் நகலினை (copy ) யினை இதனுடன் இணைத்துள்ளேன்.
இந்த கடினமான சூழ்நிலையில், எங்களது குடும்பத்தின் வேதனையை புரிந்துகொண்டு, பிரச்சினையை மேலும் பெரிதாக்க நினைக்காமல், எனது சகோதரணை சட்டரீதியாகவும் பாதுகாப்பாகவும் வெளியில் கொண்டு வர உங்களால் முடிந்த உதவிகளை செய்யுமாறு பணிவாக கேட்டுக்கொள்கிறேன்.🙏🏻
இன ,மதம் தாண்டி பலர் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துகொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பதில் சமூக ஊடகவாதிகளான நீங்கள்
தயவுசெய்து மனிதநேயத்துடன் அணுகி, எங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என பணிவாக கேட்டுக்கொள்கிறேன்.
உதவி செய்யாவிடினும் உபத்திரம் பண்ணாமல் இருப்பது மேன்மை என நினைக்கிறன். மேலும் உங்கள் பிரார்த்தனைகளும் உதவிகளும் எங்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக இருக்கும். 🙏🏻
நன்றி .