24/05/2024
கதிர்காம கந்தன் ஆலய 2024 ஆண்டுக்கான கன்னிக்கால் / முகூர்த்தக்கால் ஊன்றல் சடங்கு மே 24 ஆம் திகதி இன்று வெள்ளிக்கிழமை இனிதே நிறைவடைந்தது.
இதற்கமைய வரலாற்று சிறப்பு மிக்க புனித கதிர்காம கந்தன் ஆலய 2024 ஆம் ஆண்டிற்கான ஆடிவேல் உற்சவம், 2024 ஆம் ஆண்டு ஜீலை மாதம் 06 ஆம் திகதி சனிக்கிழமை முதலாம்நாள் திருவிழாவுடன் ஆரம்பமாகி, 2024 ஆம் ஆண்டு ஜீலை 22 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைய இறையருள் கூடியுள்ளது.
உற்சவகால முக்கிய நிகழ்வுகளாவன,
2024 ஜீலை 06 சனிக்கிழமை - முதலாம் நாள் திருவிழா
2024 ஜீலை 11 வியாழக்கிழமை - கொத்துப்பந்தலிடல்
2024 ஜீலை 13 சனிக்கிழமை - அன்னக்கொடியேற்றம்
2024 ஜீலை 18 வியாழக்கிழமை - தீ மிதிப்பு
2024 ஜீலை 21 ஞாயிற்றுக்கிழமை - அம்மன் தரிசனம் மற்றும் இறுதி நாள் திருவிழா
2024 ஜீலை 22 திங்கட்கிழமை - தீர்த்தேற்சவம்
கதிர்காம கந்தன் ஆலய முக்கிய நிகழ்வுகள் தொடர்பாக காணொளிகளை கண்டுகொள்ள எமது Youtube chennel ஐ subcribe செய்து Religional and Cultural எனும் playlist ஐ பின்தொடரவும்
Religional and Cultural Events