23/10/2025
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரஹாதுஹு
(இஸ்லாமிய மார்க்கத்தில் டெணிம் )
டெணிம் என்பது என்னைப் பொறுத்து அது ஆண்கள் அணிகின்ற ஆண்களுக்காகவே குறிப்பாக்கப்பட்ட ஒரு ஆடை என்பது அன்று தொட்டு நாம் அறிந்த உண்மை அதில் யாருக்கும் இரு வேறு கருத்து உண்டா???
அது மட்டுமல்லாமல் பெண் என்பவள் தன்னை முழுமையாக மறைக்கப்பட வேண்டியவள் அவளது அழகு மெருகூட்டப்படுவதெல்லாம் அவள் தன்னை மறைத்து அவ்ரத்தினைப் பேணி ஒழுக்கத்துடன் வாழுகின்ற போது தான் என்பதில் கருத்து வேறுபாடுகள் இருக்கிறதா???
ஆள் பாதி ஆடை பாதி என்பார்கள் ஆண்களாக இருக்களாம் பெண்களாக இருக்களாம் அவர்கள் அவர்கள் உடுத்துகின்ற ஆடையை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை ஒரளவு நிர்ணயிக்கலாமில்லையா???
நாம் யார் நமக்கென ஒரு வரம்பு வரையரை வழி காட்டி இருக்கிறது நம் இஷ்டம் போல் வாழ முடியுமா?? நகம் வெட்டுவது முதல் நாட்டை ஆள்வது வரை நம் கண்மணி நபிகளார் சொல்லாமலா இருக்கிறார்கள்???
சுவணத்தில் பெண்களின் தலைவியாய் திகழக்கூடிய அண்ணை பாத்திமதுஸ் ஸஹ்ரா பதூல் நாயகி இது போன்ற ஆடைகளை உடுத்துவதை விரும்புவார்களா???
ஒட்டு மொத்தத்தில் இந்த டெணிம் இனை ஆரம்பத்தில் பெண்களுக்குள் அணிந்தவர்கள் யார்?? மாற்று மதத்துப் பெண்கள் இல்லை யா???
மாற்று மதத்துக் கலாச்சாரம் நம் மத்தியில் ஊடுறுவுவது பற்றி நமது மார்க்கம் நமக்கு சொல்ல மறந்து போனதா???
யார் அண்ணிய கலாச்சாரத்தை ஒப்பிட்டு நடக்கிறார்களோ அவர்களுடனே நாளை எழுப்பப்படுவார்கள் என்றல்லவா நமக்கு நமது மார்க்கம் சொல்லுகிறது???
இந்த டெணிம் ஆரம்பத்தில் எமது மார்க்கத்தினரில் பெரியவர்கள் அணியவில்லை சின்னஞ் சிறு பிள்ளைகளுக்குத் தானே என்று தானே உடுத்தி அழகு பார்த்தார்கள் மறந்து விட்டீர்களா?? அதை அணிவித்த பெற்றோர்கள் யோசிக்கத் தவறியதன் விளைவாகக் கூட இது இன்று இளம் குமரிப் பிள்ளைகளின் தேசிய உடை போல மாறிக்கொண்டு செல்வதர்க்கு காரணமாக இருக்குமோ என நினைக்கின்ற போது நெஞ்சம் கணக்குதில்லையா???
ஒரு காலம் டெணிம் உடுத்தி முழங்காலுக்கு கீழால் வரை நீண்ட சல்வார் போட்டார்கள்...நினைவிருக்கிறதா??? அந்த நாட்கள்??
நாளடைவில் அது சற்று மாற்றமாகி சல்வார் இடுப்பு வரை ஓபன் பன்னப்பட்டு முழங்கால்வரை உயர்த்தப்பட்டு சின்னதாய் முகம் துடைக்கும் டவல் போல ஒரு முந்தாணையோடு எமது இஸ்லாமிய குமரிப் பிள்ளைகள் வலம் வந்த நினைவுகள் கண்முன்னாள் நிழலாடுகிறது...
இப்போது அது எப்படி மாறியிருக்கிறது தெரிகிறதா???? டெணிம் துணியாலான ஒரு வகை டவ்ஸர் சல்வார் எல்லாம் பழைய காலம் அது ஓல்ட் பெசன்...அப்படியெனில் இப்போது ஆண்கள் அணிகின்ற சேர்ட் அளவிலான வடிவில் உடுத்த ஆரம்பித்து விட்டார்கள் தெரிகிறதா???
இவைகள் எங்கிருந்து வந்த கலாச்சாரம்??? நம் முன்னோர்கள் காட்டித் தந்தவைகளா??? அருள் மறையும் அண்ணலாரும் ஆதரித்தவைகளா???
இது எங்கே நாம் விட்ட தவறு என்று தெரிகிறதா???? எமது குழந்தைகளுக்கு உடுத்தாட்டி அழகு பார்த்ததன் விளைவில்லையா???
நம் பிள்ளைகளை தீனோடு வளர்க் ஆசைப்பட்ட நிலமை கூட மாறிக்கொண்டு வருகிறது துன்யாவை அடைய வேண்டும் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்பது போன்ற சிந்தணைகள் தான் இன்றையவர்களிடம் மேலோங்கி விட்டதோ என சிந்திக்க வைப்பதோடு கவலையும் நெஞ்சை அடைக்கிறது...
வள்ள நாயன் அல்லாஹ் நம்மையும் நம் பிள்ளைகளையும் தீனோடு வாழ வைப்பானாக....
இது யாரையும் புன் படுத்த எழுதியவையுமல்ல இதனை வாசிப்பது கொண்டு ஓரிருவர் சிந்தித்து தங்களை மாற்றிக்கொள்ள மாட்டார்களா என்ற ஓர் பேராசை தான்....
கல்புகளை மாற்ற வல்லமை பெற்றவனே கல்புகளை மாற்றி உனது மார்க்கத்தில் நிலைத்திருக்கும் பாக்கியத்தை அனைத்து சகோதரிகளுக்கும் நல்குவாயாக ஆமீன்
✍️ எழுதியவர் அல் ஆலிமா பாத்திமா முஸ்பிகா முஅஸ்கரிய்யா✍️
அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிவானாக நபிகள் நாயகம்ﷺ அவர்களின் பொருத்தத்தை கொடுப்பானாக ஆமீன் ஆமீன் 🤲💗
Mohammed Rifkas Qadiri நபிகள் நாயகத்தின் நேசன்