Today Ceylon

Today Ceylon வாய்மைக்கும் நேர்மைக்குமான பிரதிபலிப்பு
(1)

சேனைக்குடியிருப்பு பகுதியில் அனுமதிபத்திரமின்றி மதுபான விற்பனையில் ஈடுபட்ட   சந்தேக நபர் கைது.அனுமதிப்பத்திரமின்றி சட்டவ...
23/11/2025

சேனைக்குடியிருப்பு பகுதியில் அனுமதிபத்திரமின்றி மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது.

அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக அரச மதுபானங்களை விற்பனை செய்த சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்று (23) மாலை கல்முனை தலைமையக ஊழல் தடுப்புப் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய சோதனை நடவடிக்கை ஒன்றினை கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது சட்டவிரோதமாக அனுமதிப்பத்திரமின்றி சூட்சுமமாக மதுபானங்களை விற்பனை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சந்தேக நபரும் மீட்கப்பட்ட மதுபான வகைகளும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

66 வயதுடைய பெண் சந்தேக நபரை இதன் போது கைது செய்த பொலிஸார் ஒரு தொகை பணம் மற்றும் பல்வேறு மதுபான வகைகளை பறிமுதல் செய்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இச்சோதனை நடவடிக்கையானது கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில் அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் பணிப்புரைககமைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி நெறிப்படுத்தலில் கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அஸாரின் வழிகாட்டுதலின் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த களுவாராய்ச்சி தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என எமது செய்தியாளர் பாறுக் ஷிஹான் தெரிவித்தார்.

மேலும் அண்மைக்காலமாக சட்டவிரோதமாக மதுபான விற்பனை அதிகரித்துள்ளதுடன் அவ்விடயம் தொடர்பில் பொலிஸாரும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

🛑யாழில் போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது.!! யாழ்ப்பாணத்தில் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் 4 பேர் நேற்று (22) கைது செய்யப்...
23/11/2025

🛑யாழில் போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது.!!

யாழ்ப்பாணத்தில் ஒரு தொகை போதை மாத்திரைகளுடன் 4 பேர் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய யாழ்ப்பாணம் பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினர் நடத்திய சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.

கைதானவர்கள் யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 22, 24 வயதுகளையுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைதானவர்கள் இன்று (23) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

நிந்ததவூர் தவிசாளர் தெரிவில் சதி; உப தவிசாளர் இர்பானுக்கு விளக்கம் கோரிய கடிதம்!நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவி...
23/11/2025

நிந்ததவூர் தவிசாளர் தெரிவில் சதி; உப தவிசாளர் இர்பானுக்கு விளக்கம் கோரிய கடிதம்!

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் தெரிவினை மேற்கொள்ளும் அமர்வுக்கு முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியுடன் (NPP) இணைந்து பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நிந்தவூர் பிரதேச சபையின் உப தவிசாளர் இர்பானுக்கு விளக்கம் கோரி கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலின் போது, நிந்தவூர் பிரதேச சபையில் 06 ஆசனங்களை பெற்றுக்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு தவிசாளர் பதவியும், 01 உறுப்பினரைக் கொண்ட ஐக்கிய மக்கள் சக்திக்கு உப தவிசாளர் பதவியும் என்ற அடிப்படையில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டை மீறி ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் (SJB) உறுப்பினர் இர்பான் நடந்துகொண்ட விதம் தொடர்பிலும், இம்முறைய தவிசாளர் தெரிவின்போது முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுடன் இணைந்து அமர்வுக்கு கலந்துகொள்ளாமை தொடர்பிலும் விளக்கம் கோரியே, ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் கடிதமொன்றை இர்பானுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

கடந்தமுறை இடம்பெற்ற உப தவிசாளர் தெரிவின்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டு உப தவிசாளர் பதவியை பெற்றுகொண்ட இர்பான், மக்கள் காங்கிரஸின் உறுப்பினரை தவிசாளராக்கும் நடவடிக்கைக்கு, கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக செயற்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

கடந்த முறை அதிக ஆசனங்களைக்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவரை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தன்னகப்படுத்தி அவரை தவிசாளராக்கிக் கொண்ட சதிக்கு பின்னால் இர்பான் செயற்பட்டதாகவும் தெரியவருகின்றது.

இவ்வாறன தொடர் சதி முயற்சிக்கும் விளக்கம் கோரியே அவருக்கு கடிதம் அனுப்பட்டுள்ளதாகவும் அக்கட்சியின் முக்கியஸ்தர் தெரிவித்துள்ளார்.

நிந்தவூரின், கல்விமான் மூத்த சட்டத்தரணி ரியாஸ் ஆதமுக்கு தவிசாளர் பதவியை வழங்குவதற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முடிவெடுத்திருந்த போதிலும், றியாஸ் ஆதமுக்கு தவிசாளர் பதவி கிடைக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் செயற்பட்டுவரும் முஸ்லிம் காங்கிரஸின் தொடர் சதியில் இர்பானும் இணைந்து செயற்பட்டு வருவதாக தெரியவருகின்றது.

மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி அதிகமான ஆசனங்களைப்பெற்ற பொத்துவில் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் ஆட்சிக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி முழுமையாக ஆதரவுகளை வழங்கியிருந்த நிலையில் ஓட்டமாவடி மற்றும் நிந்தவூர் பிரதேச சபைகளில் அதிக ஆசனங்களைப்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பதற்கு எதிராக தொடர்ந்தும் முஸ்லிம் காங்கிரஸ் பின்வழி முயற்சியில் ஈடுபட்டுவருவதுடன், இதற்கு உடந்தையாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஒரே ஒரு உறுப்பினர்களும் செயற்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.

22/11/2025

சம்பவம் செய்த முதலை 😮 கடைசியில் மிரளவைத்த Jaguar 💥

22/11/2025

ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த விமானம் உள்ளூர் நேரப்படி பிற்பகல் 2:10 மணியளவில் பார்வையாளர்கள் முன்னிலையில் வான் நிகழ்ச்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்கு உள்ளானதாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலை உறுதி செய்துள்ள இந்திய விமானப் படை, இந்த விபத்தில் விமானி உயிரிழந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

அதோடு, விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய விமானப் படை கூறியுள்ளது.

22/11/2025

Home sinhala news නායගිය තැනින් කොළඹ-නුවර පාර සම්පූර්ණයෙන් වැසෙයි නායගිය තැනින් කොළඹ-නුවර පාර සම්පූර්ණයෙන් වැසෙයි Author - TODAYCEYLON N...

 #சவளக்கடையில் வீதி விபத்து: சம்மாந்துறையைச் சேர்ந்த 16 வயது இளைஞன் பரிதாபமாக மரணம்✍️மஜீட். ARM​சவளக்கடைப் பகுதியில் நேற...
22/11/2025

#சவளக்கடையில் வீதி விபத்து: சம்மாந்துறையைச் சேர்ந்த 16 வயது இளைஞன் பரிதாபமாக மரணம்

✍️மஜீட். ARM

​சவளக்கடைப் பகுதியில் நேற்று 8.30 மணியளவில் இடம்பெற்ற கோரமான வீதி விபத்து ஒன்றில், சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் சவளக்கடைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

21/11/2025

⭕👉 இறக்காமம் பிரதேச சபையின் #பிரதித்_தவிசாளர் NM.ஆஷிக் இராஜினமா.!

ஊடக அடையாள அட்டைகள் வழங்குதல் இடைநிறுத்தம்அமைச்சர்களின் ஊடக செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு ஊடக அடை...
21/11/2025

ஊடக அடையாள அட்டைகள் வழங்குதல் இடைநிறுத்தம்

அமைச்சர்களின் ஊடக செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு ஊடக அடையாள அட்டைகளை வழங்குவதை இடைநிறுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் ஏராளமான ஊடக அடையாள அட்டைகள் வழங்கப்பட்டதாகவும், சில ஊடக நிறுவனங்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் விண்ணப்பித்ததாகவும் இருப்பினும், இந்த ஆண்டு விண்ணப்பங்கள் குறைந்துள்ளதாகவும், முன்னர் அட்டைகளைப் பெற்ற அதிகாரிகளுக்கு இந்த முறை புதிய அட்டைகள் வழங்கப்படவில்லையெனவும் இலங்கை அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் வழங்கப்பட்ட மொத்த ஊடக அடையாள அட்டைகளின் எண்ணிக்கை 4,800 ஆகக் குறைந்துள்ளதுடன் இது 2024 இல் வழங்கப்பட்ட 8,100 அட்டைகளில் பாதிக்கு குறைவானது. இந்த நடவடிக்கை ஊடக அடக்குமுறை அல்ல என்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஹர்ஷ பண்டார வலியுறுத்தினார்.

திருகோணமலையில் என்பிபி உறுப்பினரொருவர் சடலமாக மீட்பு திருகோணமலை, கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளர் பிரகாத் தர்மசேன இன்ற...
21/11/2025

திருகோணமலையில் என்பிபி உறுப்பினரொருவர் சடலமாக மீட்பு

திருகோணமலை, கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளர் பிரகாத் தர்மசேன இன்று( 21) காலை அவரது வயலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவரது மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.​

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

நேற்று மாலை (20) தனது வயலுக்கு காவல் காப்பதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்ற தவிசாளர் பிரகாத் தர்மசேன, நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

இதனால், அவரது குடும்பத்தினர் மற்றும் அயலவர்கள் இன்று (21) காலை வயலுக்குச் சென்று தேடியபோது, அவர் உயிரிழந்த நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.​

சடலமாக மீட்கப்பட்ட பிரகாத் தர்மசேன, அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியில் போட்டியிட்டு கோமரங்கடவல பிரதேச சபையின் தவிசாளராக அதிக வாக்குகளைப் பெற்றுத் தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.​

​சம்பவம் குறித்த தகவல் கிடைத்தவுடன், கோமரங்கடவல பொலிஸார் உடனடியாக ஸ்தலத்திற்கு விரைந்துள்ளனர்.

சடலம் மீட்கப்பட்ட இடத்தைப் பார்வையிட்ட பொலிஸார், மரணத்திற்கான காரணம் குறித்து கண்டறியும் நோக்கில் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.​

மரணத்தின் பின்னணி மற்றும் அது கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்த முழுமையான தகவல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரகாத் தர்மசேனவின் திடீர் மரணம், அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

⭕👉    4 –  Genius College of Health Sciences TVEC பதிவு எண்: P18/0121👉  #நடைபெற்று_வருகிறது!Genius Hospital & Genius Aes...
20/11/2025

⭕👉 4 –
Genius College of Health Sciences TVEC பதிவு எண்: P18/0121

👉 #நடைபெற்று_வருகிறது!

Genius Hospital & Genius Aesthetics இணைந்த பயிற்சி
உங்கள் கனவு ஒரு மருத்துவமனையில் வேலை செய்து மக்களை சேவையாற்றுவது என்றால், இது உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய சிறந்த வாய்ப்பு!
உலகளாவிய தரத்தில் பயிற்சி வழங்கும் Genius College of Health Sciences இப்போது புதிய பயிற்சி தொகுதியை தொடங்கி உள்ளது.

மேலதிக இலவச சான்றிதழ்களையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
✅ Patient Safety
✅ Healthcare Responsiveness
✅ IT & AI in Healthcare
✅ Aesthetic Nursing Assistant

⭕👉 ஏன் Genius College?

✅ அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள்
✅ நவீன உபகரணங்களுடன் பயிற்சி
✅ உண்மையான மருத்துவ சூழலில் அனுபவம்
✅ வேலை வாய்ப்பு பெறுவதற்கான வலுவான பாதை
✅ தொழில்முறை மற்றும் பாதுகாப்பான கற்றல் சூழல்
✅ நவீன சூழலுக்கேற்ற மேலதிக சான்றிதல்கள்.

#பதிவுகளுக்கு...

📍 Genius College of Health Sciences, No. 53, AVV Road, Akkaraipattu-2
📞 067 2277322 | 075 2277322

உங்கள் எதிர்காலத்தை உடன் தொடங்குங்கள்!

இந்த வாய்ப்பை பயன்படுத்தும் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

⭕👉 #குழந்தைகளுக்கு  #தடுப்பூசிகள்_வழங்குவதில்_உள்ள_ஐயப்பாடு_சம்பந்தமான_விழிப்புணர்வு_கருத்தரங்கு🇱🇰        🗓️ 11/17/2025✅...
17/11/2025

⭕👉 #குழந்தைகளுக்கு #தடுப்பூசிகள்_வழங்குவதில்_உள்ள_ஐயப்பாடு_சம்பந்தமான_விழிப்புணர்வு_கருத்தரங்கு

🇱🇰
🗓️ 11/17/2025

✅ கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பனிப்பாளர் சகிலா இஸ்ச தீன் அவர்களது வழிகாட்டலின் பெயரில் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்குவதில் உள்ள ஐயப்பாடு சம்பந்தமான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று இன்றைய தினம் இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலத்தில் இடம் பெற்றது.

✅ குறித்த நிகழ்வானது இறக்காமல் சுகாதார வைத்திய அதிகாரி #இமாசி_பாக்யா அவர்களுடைய தலைமையில் இடப்பட்டது

✅இதன் போது குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற தடுப்பூசிகளால் பொதுமக்கள் மத்தியில் ஏற்படுகின்ற ஐயப்பாட்டினால் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்ற தடுப்பூசியின் வீதம் குறைந்து காணப்படுகின்றது இதனை நிவந்தி செய்யும் நோக்கில் இறக்காமம் பிரதேச பள்ளிவாயல் தலைவர்கள்,செயலாளர்கள், மெளலவி மார்கள் இடத்தில் தெளிவு படுத்து கருத்தரங்கு சிறப்பாக இடம் பெற்றது.

✅ இதன் போது குறித்த நிகழ்ச்சி திட்டத்தில் வளவாளர்களாக கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் தொற்று நோயியல் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் 𝐌. 𝐈.றிஷ்னி அவர்களும் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி ரமேஷ் அவர்களும் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி முனாஃபர் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
...…............................................................

📲 விசேட செய்திகளை விரைவாக பெற்றுக்கொள்ள எமது செய்தி குழுவில் இணையுங்கள் ⬇️

https://chat.whatsapp.com/LcEkSWeja3wDBF8dxxu8b8

⭕இதுவரை எமது செய்தி குழுவில் இணையாதவர்கள் மாத்திரம் இக்குழுவில் இணைந்து கொள்ளவும்!

🤝ஏனையவர்களும் பயன்பெற அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

Address

294/A Ampara Road Irakkamam
Ampara
32450

Alerts

Be the first to know and let us send you an email when Today Ceylon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Today Ceylon:

Share