30/09/2025
ஜனாஸா அறிவித்தல்
මරණ දැන්වීමයි
Janaza Announcement
தல்கஸ்பிடிய பம்மேகடை தக்கியா பகுதியை சேர்ந்த M.L.M ஹனீபா (அஷ்ரப் மாமா) அவர்கள் காலமானார்.
இன்னா லில்லாஹி வாஇன்னா இலைஹி றாஜிஊன்.
அன்னார் உதுமா லெப்பை ராபியா உம்மா தம்பதிகளின் புதல்வரும். மரியம் பீபி அவர்களின் அன்புக் கணவரும். சிஹானா, சிபானா (SECDA பாடசாலை ஆசிரியை), முஹம்மத் அஸாzம் ஆகியோர்களது அன்புத் தந்தையும். ஹலால்தீன், நவாஸ் ஆசிரியர் (மடுல்போவ மு.ம.வி) ஷெரீன் ஆகியோரின் மாமனாரும். மர்ஹூம்களான ஷஹீத், ரவுப், ஜமீலா மற்றும் ஐனுல் மர்லியா, கதீஜா உம்மா, கைருன்னிஸா ஆகியோரின் சகோதரரும். மர்ஹூம்களான ஜமீல் அல்ஹாஜ் தாஹா J.P, ஜுவாரியத்தும்மா மற்றும் பதுர்தீன், அமீர்தீன் ஆகியோரின் மைத்துனருமாவார். அத்தோடு திப்பிடிய ஸ்டோர்ஸ் அல்ஹாஜ் தாஹிர், அல்ஹாஜ் ஜவ்பர், அல்ஹாஜ் புஹாரி ஆகியோரின் சாச்சாவும். முன்னால் பிரதேச சபை உறுப்பினர் ரிபாய் அவர்களின் தாய் மாமாவும் ஆவார்.
வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்காரியங்களை ஏற்று ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தை வழங்குவானாக.
அன்னாரின் இழப்பை தாங்கும் மன வலிமையை அன்னாரின் குடும்பத்தினருக்கு வழங்க இறைவனிடம் பிரார்த்திப்போமாக.
ஜனாஸா தற்பொழுது தல்கஸ்பிடிய பம்மே கடை தக்கியாவுக்கு பக்கத்தில் உள்ள அவர்களது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் 2025.10.01 புதன்கிழமை லுஹர் தொழுகையை தொடர்ந்து தல்கஸ்பிடிய ஜும்மா மஸ்ஜித் மையவாடியில் இடம்பெறும்.