MBC Media Network

MBC Media Network தேயிலை தேசத்தின் குரல்.. FROM-
(BADULLA NEWS.) FM-MBC RADIO City-MBC.

Permanently closed.
28/05/2026

வேகம் ஆபத்து.

(காட்சி சமுகவலைதளம்)

மாணவர் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் விழா சிறப்பாக நடைபெற்றதுபசறை கல்வி வலயத்திற்குட்பட்ட ஆக்கரத்தன்னை தமிழ் வித்தியாலய...
27/05/2026

மாணவர் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் விழா சிறப்பாக நடைபெற்றது

பசறை கல்வி வலயத்திற்குட்பட்ட ஆக்கரத்தன்னை தமிழ் வித்தியாலயத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான மாணவர் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு வித்தியாலயத்தின் அதிபர் பவனிதரன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக பசறை வலய உதவி கல்வி பணிப்பாளர் திருமதி கவிதாஞ்சலி கலந்து கொண்டு மாணவர் தலைவர்களுக்கு சின்னங்களை அணிவித்து பாராட்டினார். மேலும், பதுளை பாரதி தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆசிரியர் மேஜர் ஜெயானந்தன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டும் உரையாற்றி நிகழ்வை சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பலரும் கலந்து கொண்டு மாணவர் தலைவர்களின் பொறுப்புணர்வையும் தலைமைத்துவ திறன்களையும் மேம்படுத்தும் இந்நிகழ்வை பாராட்டினர்.

நடராஜா மலர்வேந்தன்

27/05/2026

“அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 6 ஆவது சிரார்த்த தின நிகழ்வில் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாமும் பங்கேற்றுக்கொள்கின்றோம். இது அரசியலுக்கு அப்பால்பட்ட மனிதாபிமான செயல்பாடாகும்.” – நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ்.

R.T.பசறை

மலையக கவிஞரும் பசறை மடுல்சீமை தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆசிரியருமான மடுல்சீமை அருள் அவர்களின் எழுத்துக்களால் உருவான "கா...
27/05/2026

மலையக கவிஞரும் பசறை மடுல்சீமை தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆசிரியருமான மடுல்சீமை அருள் அவர்களின் எழுத்துக்களால் உருவான "காலாதீதமும் சாம்பல் குவியலும்"என்ற கவிதை நூல் வெளியீட்டு விழா நாளை மடுல்சீமை தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் இடம்பெற காத்திருக்கிறது.

க.பொ.த.சா/த
க.பொ.த உ/தரம் வரை மடுல்சீமை தமிழ் மகா வித்தியாலயத்திலே கல்வி கற்று பட்டதாரி ஆசிரியர் நியமனத்தோடு 2012 ம் ஆண்டு இதே பாடசாலையில் ஆசிரியராகப் நியமனம் பெற்ற ஆசிரியர் இவர் ஆவார்.

பாடசாலை காலத்திலே பத்திரிகை வானொலி துறைகளில் பதுளை அருள் என்ற பெயரில் பல கவிதைகளை எழுதிய இவர் சமூக வலைத்தளங்களில் பல வாசகர்களை கொண்ட கவிஞராக வலம் வருகிறார்.

ஆகவே நாளை இடம்பெறும் இந்த நிகழ்வில் இலக்கிய அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கிறோம்.

செய்தி -ஊவா சுரேன்

பண்டாரவளையில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து – ஒருவர் காயம்.பண்டாரவளை, தந்திரிய ஹீல்ஓயா வீதியில் நேற்று மதி...
27/05/2026

பண்டாரவளையில் பேருந்தும் மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து – ஒருவர் காயம்.

பண்டாரவளை, தந்திரிய ஹீல்ஓயா வீதியில் நேற்று மதியம் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றை கடந்து சென்ற பேருந்துடன், எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் உடனடியாக மீட்கப்பட்டு, பண்டாரவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரவளை பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்.

Liru

பல்சுவை90% மக்கள் ஏன் வலது கை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள்?May 26, 2026 - 06:28 PM 90% மக்கள் ஏன் வலது கை பழக்கம் ...
26/05/2026

பல்சுவை
90% மக்கள் ஏன் வலது கை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள்?
May 26, 2026 - 06:28 PM

90% மக்கள் ஏன் வலது கை பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள்?
உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் எழுத, சாப்பிட, பந்தை எறிய போன்ற அன்றாட வேலைகளுக்கு வலது கையைப் பயன்படுத்துகிறார்கள். விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, உலக மக்கள்தொகையில் சுமார் 90 சதவீதம் பேர் வலது கைப்பழக்கம் உடையவர்கள். ஏன் இத்தனை பேர் வலது கையைப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் நீண்ட காலமாக முயற்சி செய்து வந்துள்ளனர். சமீபத்திய ஒரு ஆய்வில், இதற்கான ஒரு முக்கிய காரணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ரீடிங் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின்படி, மனிதர்களிடம் காணப்படும் வலது கைப்பழக்கம், மூளை வளர்ச்சி மற்றும் இரண்டு கால்களில் நேராக நடப்பதுடன் தொடர்புடையதாக இருக்கலாம். PLOS Biology என்ற இதழில் வெளியான இந்த ஆய்வு, மனிதர்களின் பழக்கங்கள் வெறும் நடத்தை காரணமாக மட்டும் அல்ல, நீண்ட பரிணாம வளர்ச்சி செயல்முறையினாலும் உருவானவை எனக் கூறுகிறது.

இந்த ஆய்வில், 41 வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த 2,000 இற்கும் மேற்பட்ட குரங்குகள், சிம்பன்சிகள் ஆகியவற்றின் நடத்தையை விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர். ஒரு கையை மட்டும் அதிகமாகப் பயன்படுத்தும் பழக்கத்திற்கு பின்னால் உள்ள உயிரியல் மற்றும் பரிணாமக் காரணிகளை அவர்கள் அறிய முயன்றனர்.

இந்த ஆய்வின் முடிவில், பெரும்பாலான குரங்குகள் மற்றும் சிம்பன்சிகள் ஒரு கையை மட்டும் நம்பாமல், இரண்டு கைகளையும் ஏறக்குறைய சமமாகப் பயன்படுத்துகின்றன என்பது தெரியவந்தது. ஆனால் மனிதர்கள் மட்டும் மற்ற உயிரினங்களை விட அதிகமாக வலது கையைப் பயன்படுத்துகிறார்கள். இதை அளவிட விஞ்ஞானிகள் ஒரு “கைப்பழக்கக் குறியீடு” முறையைப் பயன்படுத்தினர்.

இந்தக் குறியீட்டில் மனிதர்கள் 0.76 புள்ளிகள் பெற்றனர், குரங்குகளும் சிம்பன்சிகளும் பூஜ்ஜியத்திற்கு அருகிலான மதிப்பைப் பெற்றன. இதனால், மனிதர்களிடம் வலது கைப்பழக்கம் மிகவும் வலுவாக இருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டது.

விஞ்ஞானிகள் கூறுவதன்படி, பழம்பெரும் மனிதர்கள் நான்கு கால்களில் இருந்து இரண்டு கால்களில் நேராக நடக்கத் தொடங்கிய போது பெரிய மாற்றம் ஏற்பட்டது. இரண்டு கால்களில் நடப்பதால், கைகளுக்கு உடலின் எடையைத் தாங்க வேண்டிய அவசியம் குறைந்தது. இதனால் கைகள் கருவிகள் செய்ய, பிடிக்க, மற்றும் பிற சிக்கலான வேலைகளை செய்ய பயன்படுத்தப்படத் தொடங்கின.

இவ்வாறு தொடர்ந்து பயிற்சி கிடைத்ததால், கைகள் மீது கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு அதிகரித்தது. மூளை வளர்ச்சியுடன் கை அசைவுகள் மேலும் கட்டுப்படுத்தப்பட்டன. படிப்படியாக வலது கையின் ஆதிக்கம் அதிகமானது.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, மனித மூளையின் இடது பகுதி உடலின் வலது பக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. எழுதுதல், மொழிகளை கற்றல், புதிய விஷயங்களைப் புரிந்துகொள்ளுதல் போன்ற வேலைகளில் மூளையின் இடது பகுதி அதிகமாகச் செயல்படுகிறது. அதனால் அது அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது.

இதன் விளைவாக, உலக மக்கள்தொகையில் பெரும்பாலானவர்கள் வலது கைப்பழக்கத்தை நோக்கி நகர்கிறார்கள் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். இருப்பினும், சுமார் 10 சதவீதம் பேர் இன்னும் இடது கைப்பழக்கத்தைப் பயன்படுத்துகிறார்கள். இது ஏன் நடக்கிறது என்பதை விஞ்ஞானிகள் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ள முயற்சி செய்து வருகின்றனர்

இரண்டு வேறுபட்ட கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில்...
26/05/2026

இரண்டு வேறுபட்ட கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மூன்று வருடங்களுக்கும் மேலாகத் தேடப்பட்டு வந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை (24) மதுகம - வெலிகந்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர், ஞாயிற்றுக்கிழமை (25) லிந்துலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.



அதன்பின்னர் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, அவர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதான மகேஷ் அசலங்க டி சொய்சா என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி, தலவாக்கலை - கிரேட் வெஸ்டன் மலையின் உச்சியில் பெண்ணொருவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலும், தலங்கம பொலிஸ் பிரிவில் 57 வயதான பெண்ணொருவர் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலுமே இவர் தேடப்பட்டு வந்த முதன்மைச் சந்தேகநபராவார்.

மத்திய மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ், சந்தேகநபரின் தொலைபேசி இலக்கத்தின் மூலம் பெறப்பட்ட தரவுகள் மற்றும் இரகசியத் தகவல்களின் அடிப்படையிலேயே இந்தத் திட்டமிட்ட கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, லிந்துலை பொலிஸாரினால் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வந்த சந்தேகநபர், இன்று (26) நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதன் பின்னரே அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

குறித்த இரு கொலைச் சம்பவங்கள் தொடர்பிலும் லிந்துலை பொலிஸாரும் தலங்கம பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய நிலக்கரி ஏற்றிய கப்பலொன்று கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடல் எல்லையில் நங்கூரமிட்ட...
26/05/2026

முற்றாக நிராகரிக்கப்பட வேண்டிய நிலக்கரி ஏற்றிய கப்பலொன்று கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடல் எல்லையில் நங்கூரமிட்டுள்ளதாக 'ஃப்ரீ லோயர்ஸ்' அமைப்பு தெரிவித்துள்ளது.

அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதி குறித்த நிலக்கரி கப்பலின் ஏற்றுமதி அறிக்கை பிரதிகள், குறித்த நிலக்கரி நிறுவனத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, குறித்த நிலக்கரி கப்பல் தென்னாப்பிரிக்காவின் 'ரிச்சர்ட்ஸ் பே கோல் டெர்மினல்' துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு வந்துள்ளதுடன், அதில் 59,766 மெட்ரிக் தொன் நிலக்கரி இருப்பு உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த நிலக்கரி இருப்பின் சாம்பல் சதவீதம் 16.8 அலகுகளாகக் காணப்படுவதால், லங்கா நிலக்கரி நிறுவனம் கோரியிருந்த ஒப்பந்தப் பெறுமதியான 16 அலகுகளை விட அது அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, அபராதக் கொடுப்பனவுக்கு உட்படுத்தியோ அல்லது வேறு எந்த வகையிலோ அந்த நிலக்கரி இருப்பைக் கொள்வனவு செய்ய நிலக்கரி நிறுவனத்திற்கு சட்டரீதியான அதிகாரம் இல்லை என 'ஃப்ரீ லோயர்ஸ்' அமைப்பு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக 'அத தெரண' ஊடகத்திற்கு கருத்துத் தெரிவித்துள்ள வலுசக்தி அமைச்சர் பேராசிரியர் அனுர கருணாதிலக, குறித்த நிலக்கரி இருப்பு தரத்தில் குறைவாக இருந்தபோதிலும், அதனை நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் மின் உற்பத்திக்காகப் பயன்படுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

ஒப்பந்த நடைமுறைகளின்படி, தரம் தொடர்பான இப்பிரச்சினை குறித்து ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், குறித்த கப்பல் விவகாரத்தில் பல்வேறு அமைப்புகள் தங்களது அரசியல் தேவைகளுக்காகப் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் அனுர கருணாதிலக மேலும் தெரிவித்துள்ளார்.

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச...
26/05/2026

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அமரர் ஆறுமுகன் தொண்டமானின் நினைவுகளைப் போற்றும் வகையில் இந்த நிகழ்வு பசறை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காரியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அன்னாரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த அஞ்சலி நிகழ்வு மாவட்ட பிரதிநிதி ஆறுமுகம் கோகிலா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அமைப்பாளர் வேலு ரவி, பசறை பிரதேச சபை உறுப்பினர் சுப்பையா சுதாகர், மாவட்ட தலைவர், மாவட்ட தலைவி உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அமரர் ஆறுமுகன் தொண்டமான் மலையக மக்களின் அரசியல், சமூக மற்றும் தொழிலாளர் உரிமைகளுக்காக ஆற்றிய சேவைகள் இந்நிகழ்வில் நினைவுகூரப்பட்டதுடன், அவரின் அரசியல் பணிகள் மற்றும் சமூகப் பங்களிப்புகள் குறித்து கலந்து கொண்டவர்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
அவரது சேவைகளை என்றும் நினைவில் கொண்டாடும் வகையில் இந்த நினைவு தினம் அமைதியான முறையில் அனுசரிக்கப்பட்டது. கலந்து கொண்டவர்கள் மலர் அஞ்சலி செலுத்தி அன்னாரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்.

R.T. பசறை

26/05/2026

இன்று பல பகுதிகளில் 100 மி.மீ. வரை பலத்த மழை
May 26, 2026 - 07:11 AM -

இன்று பல பகுதிகளில் 100 மி.மீ. வரை பலத்த மழை
நாட்டில் தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி மழை நிலைமை படிப்படியாகத் தாபிக்கப்பட்டு வருவதன் காரணமாக, நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், இப்பகுதிகளின் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீட்டர் அளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தெற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு சுமார் 30-40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Address

Badulla
Badulla

Website

Alerts

Be the first to know and let us send you an email when MBC Media Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share