Agaramuthali Thamizh Avaiyam

Agaramuthali Thamizh Avaiyam Theme "Achieving Sustainable Development Goals beyond Covid 19 - Corona pandemic" Agaramuthali தமிழ்

சிறப்பு மிக்க தைப்பொங்கல் வரலாறுAgaramuthali Thamizh பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிற...
14/01/2025

சிறப்பு மிக்க தைப்பொங்கல் வரலாறு
Agaramuthali Thamizh

பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
வரலாறுசங்க காலத்தில் அறுவடை காலத்தில் நல்ல மழை பெய்யவும், நாடு செழிக்கவும் பெண்கள் விரதத்தைக் கடைப்பிடித்தார்கள். தை முதல் நாளில் இந்த விரதத்தை முடிப்பார்கள். உழவர்கள் மழையின் உதவியால் ஆடி மாதம் முதல் உழைத்துச் சேர்த்த நெல்லை மார்கழியில் வீட்டிற்குக் கொண்டு வந்து தமது உழைப்பின் பயனை நுகரத் தொடங்கும் நாளே தைப்பொங்கல்.

உழைக்கும் தமிழ் மக்கள் தாமே கண்டுணர்ந்து, தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டனர். தைப்பொங்கல் பண்டிகை இப்படித்தான் மலர்ந்தது. பல ஆயிரம் ஆண்டுகளை கடந்துள்ள பொங்கல் இன்று உலகத் தமிழர்களின் உணர்வோடு கலந்த ஒரு பண்டிகையாக மாறியுள்ளது.
பொங்கல் விழா சில இடங்களில் நான்கு நாள் கொண்டாட்டமாக கொண்டாடப்படுகிறது.

தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப் படுகிறது. பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் ‘பழையன கழித்து, புதியன புகவிடும்‘ நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது.
போகியன்று, வீட்டின் கூரையில் பூலாப்பூ செருகப்படும். அன்றைய தினம், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

போகி பண்டிகைக்கும் இந்திர தேவன் (மேகம் மற்றும் மழையின் கடவுள்) மற்றும் கிருஷ்ணா பகவானுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
முன்னதாக, தெய்வங்களின் அரசனாக விளங்கும் இந்திர தேவனை மக்கள் வணங்கி வந்தனர். இந்திரனுக்கு கொடுக்கப்பட்டு வந்த இந்த மரியாதை அவருக்குள் கர்வத்தையும், ஆணவத்தையும் அதிகரிக்க செய்தது. மற்றவர்களை காட்டிலும் தான் தான் மிகவும் சக்தி வாய்ந்தவராக அவர் கருதினார். குழந்தை கிருஷ்ணருக்கு இது தெரிய வந்தவுடன், இந்திர தேவனுக்கு நல்லதொரு பாடம் கற்பிக்க விரும்பினார்.

கிருஷ்ணன் தன்னுடைய ஆடு மேய்க்கும் நண்பர்களை கோவர்தன மலையை வணங்க தூண்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த இந்திர தேவன் இடைவிடாத இடி, மின்னல், பலமான மழை மற்றும் வெள்ளத்தை உருவாக்க மேகங்களை அனுப்பினார்.
அந்த புராணத்தின் படி, ஆடு மேய்ப்பவர்களையும், ஆடுகளையும் பாதுகாக்க, மிகப்பெரிய கோவர்தன மலையை தன் சிறிய கைகளில் தூக்கினார். இந்திர தேவன் உருவாக்கிய புயலில் இருந்து அனைவரையும் காக்க அந்த மலையை தூக்கி சுமந்தபடியே நின்றார் கிருஷ்ணர். 3 நாட்களுக்கு நீடித்தது அந்த மழை. அதன் பின் தன் தவறையும் கிருஷ்ணரின் தெய்வீக சக்தியையும் உணர்ந்து கொண்டார் இந்திர தேவன்.

பணிவுடன் இருப்பதாக வாக்களித்த இந்திர தேவன், கிருஷ்ணரின் மன்னிப்பை கோரினார். அன்று முதல், இந்திரனை கௌரவிக்கும் வகையில் போகி பண்டிகையை கொண்டாட கிருஷ்ணர் அனுமதித்தார்.
இதுவே பொங்கல் கொண்டாட்டத்திற்கு விதையாக அமைந்தது. இந்த பண்டிகை இந்திரனின் மற்றொரு பெயரை பெற்று புராணக்கதையாக மாறியுள்ளது. இதையட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும்.

பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் “போக்கி’ என்றனர். அந்தச் சொல் நாளடைவில் மருவி “போகி’ என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு.
போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் உள்ளது. அங்ஙனம் அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளை புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்.
தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

தைப் பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்னரே கொண்டாட்ட உற்சாகம் மனம் முழுக்க தொடங்கி விடும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை ஆயத்தப்படுத்திக் கொள்வர். புதுப்பானை பலர் வாங்குவர். புத்தாடை வாங்குவர்.
பொங்கலன்று அதிகாலை எழுந்து குளித்து முடித்து புத்தாடை அணிவார்கள். வீட்டு முற்றத்தில் கோலம் இட்டு அதன் நடுவில் பானை வைப்பர். புதுப்பானையில் புது அரிசியிட்டு முற்றத்தில் பொங்க வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளைக் காப்பாக அணிவர்.
புதிய மஞ்சள் கொத்தையும் புதிய கரும்பையும் புதிய காய்கறிகளையும் அன்று பயன்படுத்துவர். முற்றத்திற் கோலமிட்டு தலை வாழையிலையில் நிறைகுடம் வைத்து விளக்கேற்றி சூரியனை வணங்கி பொங்கலிடத் தொடங்குவர்.

சாணத்தில் பிள்ளையார் பிடித்தும் வைப்பார்கள். பொங்கல் பொங்கி வரும் வேளையில் குடும்பத் தலைவன், மனைவி மக்களுடன் கூடி நின்று “பொங்கலோ பொங்கல்! பொங்கலோ பொங்கல்!” என்று உரக்கக் கூவி குலவையிடுவார்கள். பிறகு பொங்கலை சூரியனுக்கு படைத்து வழிபடுவார்கள். பின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் கொடுத்த பின்பே தான் நுகர்வான். இது தமிழரின் பண்பாடாக தொன்று தொட்டு உள்ளது என்பர்.
மாட்டுப் பொங்கல் என்பது தைப்பொங்கல் நாளின் மறுநாள் தமிழர்களால் கொண்டாடப் படும் பண்டிகை ஆகும். இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படு கிறது. மக்களின் வாழ்வில் ஒன்றிய பசுவுக்கு நன்றி தெரிவிப்பதற்காகவும், பசுக்களில் எல்லாத் தேவர்களும் இருப்பதாலும் பசுக்களை வணங்கி வழிபடும் நாளாகக் கொண்டாடுகின்றனர்.

மாட்டுப் பொங்கல் பண்டிகையுடன் தொடர்புடைய புராணக்கதை ஒன்று உள்ளது. அது சிவபெருமான் சம்பந்தப்பட்டது. பொங்கலுக்கு மூன்றாவது நாளான மாட்டுப்பொங்கல் என்பது, சிவபெருமானும் அவருடைய வாகனமான நந்தியும் சம்பந்தப்பட்டதாகும்.
புராண கதையின் படி, ஒரு முறை நந்தியிடம் பூமிக்கு செல்லுமாறு சிவபெருமான் கேட்டுள்ளார். தவறாக சொல்லிய நந்தி தினமும் எண்ணெய் மசாஜ் செய்த பிறகு குளித்து, மாதம் ஒரு முறை மட்டும் உண்ணுமாறு அங்கே இருக்கும் மக்களிடம் தான் கூறச் சொன்னதாக நந்தியை கூற சொன்னார்.

ஆனால் நந்தியோ மாதமுறை எண்ணெய் மசாஜ் செய்து குளித்து, தினமும் உண்ணுமாறு தவறாக கூறி விட்டது. இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் நந்தியை சபித்தார். அது செய்த தவறினால் இனி பூமியில் நெற்பயிர்களுக்கு பஞ்சம் ஏற்படும் என கூறினார். இனி அது என்றுமே பூமியில் வாழ்ந்து, மக்களுக்கு அவர்களின் நிலத்தை உழுது கொடுக்க வேண்டும் என அவர் சாபமளித்தார். அதனால் தான் மாட்டுப் பொங்கலுடன் மாடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

அன்று மாடுகள் கட்டும் தொழுவத்தினைச் சுத்தம் செய்து கொள்வார்கள். கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்வார்கள். மாடுகளின் கொம்புகள் சீவப்பட்டு பளபளக்கும் வகையில் வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கை கட்டிவிடுவார்கள். கழுத்துக்கு தோலிலான வார் பட்டையில் ஜல், ஜல் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். திருநீறு பூசி குங்குமப் பொட்டிட்டும் புதிய மூக்கணாங் கயிறு, தாம்புக் கயிறு அணிவித்தும் தயார் செய்வார்கள்.

உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள். தொழுவத்திலேயே பொங்கல் பொங்கி கற்பூர தீபாராதனை காட்டப்படும். இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள்.

இப்போதும் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் காளை பிடிக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு இந்நாளில் நடைபெறும்.
உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும் நாளே இந்நாளாகும். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. ‘பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக’ என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர்.

காணும் பொங்கல் என்பது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காவது நாள் இடம்பெறும் விழா ஆகும். காணும் பொங்கலை கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். உற்றார், உறவினர், நண்பர்களை காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டி மன்றம், உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் என்று வீர சாகசப் போட்டிகளிலிருந்து சகலமும் இடம் பெறும்.
இது பெண்களுக்கு முக்கியமான பண்டிகை ஆகும். பொங்கல் பானை வைக்கும்போது அதில் புது மஞ்சள்கொத் தினை கட்டி அதனை எடுத்து முதிய தீர்க்க சுமங்கலிகள் ஐவர் கையில் கொடுத்து ஆசி பெற்று அதனை கல்லில் இழைத்து பாதத்தில் முகத்தில் பூசிக்கொள்வார்கள்

12/02/2024

Agaramuthali Thamizh Official Sri Lanka | YouTube

தமிழ் எழுத்துருக்கூர்ப்பு:

'அ' கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 19ஆம் நூற்றாண்டு வரையிலான வளர்ச்சி

Agaramuthali Thamizh Official Sri Lanka | YouTubeதமிழ் எழுத்துருக்கூர்ப்பு: 'அ' கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 19ஆம...
12/02/2024

Agaramuthali Thamizh Official Sri Lanka | YouTube

தமிழ் எழுத்துருக்கூர்ப்பு:

'அ' கி.மு. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 19ஆம் நூற்றாண்டு வரையிலான வளர்ச்சி

Agaramuthali Thamizh | மொழி சிறப்புகள் |தமிழ்த் துணையெழுத்துகளின் பெயர்கள்தமிழ்த் துணையெழுத்துகளின் பெயர்கள் தெரியுமா ? ...
11/02/2024

Agaramuthali Thamizh | மொழி சிறப்புகள் |தமிழ்த் துணையெழுத்துகளின் பெயர்கள்

தமிழ்த் துணையெழுத்துகளின் பெயர்கள் தெரியுமா ?

கவிஞர் மகுடேசுவரன் எழுதும் சொல்லேர் உழவு பகுதி 35

எழுத்துகளைப் பற்றிய அறிவினை முழுமையாய்ப் பெற்றிருப்பதாக நாம் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

அ என்பது ஓர் எழுத்து. அதனை எப்படி எழுதுகிறோம் ? முதலில் சிறிதாய்ச் சுழிக்கிறோம். அந்தச் சுழியிலிருந்தே கீழே இழுத்து வந்து முக்கால் சுழியளவுக்கு நிறுத்துகிறோம். அந்த நிறுத்தத்திலிருந்து படுகிடையாய் ஒரு கோட்டினை இழுத்து முடிவில் மேல்கீழ்க் கோடு வரைகிறோம். இத்தனை வினைகளைக்கொண்டே அ என்ற எழுத்து எழுதப்படுகிறது.

கா என்னும் நெடிலை எப்படி எழுதுவது ? குறில் க என்ற எழுத்தை எழுதி அதன் அருகில் துணைக்கால் போட வேண்டும். இப்படித்தான் நாம் எழுதிக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு தனியெழுத்தினையும் எழுதும் முறை ஒன்றிருக்க அதன் உடன் வரும் துணையெழுத்துகளைப் பற்றி நாம் முழுமையாக அறிந்திருக்கிறோமா ?

என்னிடம் ஐயப்பாடுகளை வினவும் தங்கையொருவர் கை, சை, தை போன்ற ஐகார உயிர்மெய் எழுத்துகளில் வரும் துணையெழுத்துக்கு என்ன பெயர் என்று கேட்டார்.

கா, சா, ஞா போன்ற நெடில்களுக்குப் பயன்படும் துணையெழுத்தின் பெயர் துணைக்கால் என்று தெரியும். ஐகார நெடிலுக்குப் பயன்படுத்தும் அந்தத் துணையெழுத்தின் பெயர் தெரிவதில்லை.

கை, சை, நை, பை போன்ற ஐகார உயிர்மெய் நெடிலில் பயன்படுத்தப்படும் துணையெழுத்துக்கு இணைக்கொம்பு அல்லது சங்கிலிக்கொம்பு என்று பெயர். ஒரு கொம்போடு நில்லாமல் இன்னொரு கொம்பையும் சேர்த்து எழுதுவதால் அப்பெயர் வந்தது. சங்கிலியைப்போல் சுருண்டு கிடப்பதால் அதனைச் சங்கிலிக்கொம்பு என்றும் கூறுவர்.

நல்ல தமிழாசிரியர் வாய்க்கப் பெற்றவர்கள் துணையெழுத்துகளின் பெயர்களை நன்கு அறிந்திருப்பார்கள். தமிழாசிரியர்களின் தனிப்பட்ட ஆர்வம்தான் அவ்வெழுத்துகளை எழுதும் வகையை விரிவாய்க் கற்பித்து நம்மை அறிவுடையவர்களாக ஆக்குகிறது. தமிழ் எழுத்து வடிவங்களில் பயன்படுத்தப்படும் எல்லாத் துணையெழுத்துகளைப் பற்றியும் நாம் அறிந்திருக்க வேண்டும்.

எல்லாவகை எழுத்துகளுக்கும் அதன் அகரக் குறில் வடிவமே தலைமை வடிவம் என்பதனை நினைவில் கொள்ள வேண்டும். அவ்வாறே உயிரெழுத்துகளுக்கு அ என்ற வடிவமே தலையாயது.

அ என்ற அந்த எழுத்தினை எழுதுவதற்கு இடுகின்ற முதற்சுழியை நாம் பன்னிரண்டு உயிர்மெய் எழுத்துகளிலும் மாற்றிக்கொள்வதில்லை. அந்த முதற்சுழியை இட்டு வெவ்வேறு வடிவங்களில் பிற எழுத்துகளை எழுதிச் செல்கிறோம். பன்னிரண்டு எழுத்துகளிலும் அ என்ற எழுத்தில் முதலில் இடப்படும் முதற்சுழி மாறாதிருப்பதைப் பாருங்கள். அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ. இவற்றில் ஈ என்ற எழுத்துக்குத்தான் தனி வடிவம் வந்தது. முற்காலத்தில் இ என்ற எழுத்தின் முடிவிலேயே ஒரு சுழியைச் சேர்த்து ஈ என்ற எழுத்தாக எழுதினர். அதனைப் போலவே ககர வரிசை எழுத்துகளுக்குக் க என்ற எழுத்தே தலைமை வடிவம். க என்ற எழுத்தினை அடிப்படையாக வைத்துக்கொண்டு அதில் சேர்க்கப்படும் ஒட்டுகளும் துணைவடிவங்களுமே ககர வரிசையில் வரும் பிற எழுத்துகளைக் குறிக்கும். இதனை மறவாமல் நினைவில் கொள்ள வேண்டும்.


துணையெழுத்துகள் கால்கள், கொம்புகள், சுழிகள், விலங்குகள், பிறைகள், கீற்றுகள் என்று பல வடிவங்களில் எழுதப்படுகின்றன. நமக்குக் கால்கள் கொம்புகள் சுழிகள் பற்றி ஓரளவுக்குத் தெரியுமே தவிர, அவற்றின் பெயர்கள் தெரிவதில்லை. பழக்கவழக்கத்தின்படி அவ்வெழுத்துகளை எழுதிச் செல்கிறோம்

கொ என்ற ஒற்றை எழுத்தினைக் குறிக்கும் வகையில் மூன்று எழுத்துகள் எழுதப்படுகின்றன. முதலில் ஓர் ஒற்றைக் கொம்பினை இட்டு அடுத்து க என்னும் உயிர்மெய்யெழுத்தை எழுதி அதன் பின்னர் ஒரு துணைக்கால் வைக்கிறோம். இம்மூன்று தனித்தனி எழுத்துருக்களை எழுதினால்தான் கொ என்ற ஓர் உயிர்மெய் எழுத்து எழுதப்படுவதாகும். அவ்வுருக்களில் க என்ற உயிர்மெய்யினை நன்கு அறிந்துள்ள நமக்குக் கொம்பு பற்றியும் கால் பற்றியும் தெரிந்திருக்க வேண்டும்.

கால்கள் – கால்கள் எனப்படும் துணியெழுத்து வகைகளை நாம் எழுதுகையில் மிகுதியாகப் பயன்படுத்துகிறோம். அவை துணைக்கால், கொம்புக்கால், மடக்கு ஏறுகால் என்று மூவகைப்படும்.


கா, ஙா, சா, ஞா ஆகியவற்றில் ஓர் எழுத்தினை அடுத்து அதற்குத் துணையாக வருவதால் துணைக்கால் என்கிறோம். கா என்ற நெடிலை எழுதுவதற்குக் குறில் க எழுத்தை எழுதி அடுத்தொரு துணைக்கால் இட வேண்டும்.


ஊ, ஔ, கௌ ஆகிய எழுத்துகளில் ள என்ற எழுத்து வடிவில் ஒரு துணையெழுத்து இருப்பதைப் பாருங்கள். அதனை நம் எப்போதும் ள என்று சொல்லக்கூடாது. ஒரு கொம்பினை இட்டு அதனோடு துணைக்கால் சேர்த்து எழுதப்படுகிறது. ஆகவே அதற்குக் கொம்புக்கால் என்று பெயர். ஊ என்ற நெடிலிலும் ஔகார உயிர்மெய்களிலும் ள வடிவில் பயில்வது ‘கொம்புக்கால்’ ஆகும்.


ணூ, தூ, நூ, நூ, ஞூ ஆகிய எழுத்துகளைப் பாருங்கள். அவ்வெழுத்தின் குறில் வடிவை எழுதி அதன் கீழாக வந்து மடக்கி மீண்டும் எழுத்தின் அருகில் ஒரு துணைக்கால் இடுகிறோம். அதற்கு ‘மடக்கு ஏறுகீற்றுக் கால்’ என்று பெயர்.



அடுத்து கொம்பு வகைத் துணையெழுத்துகளைப் பார்ப்போம். கெ, செ, செ, தெ, கொ, தொ போன்ற எழுத்துகளில் முதலில் வரும் துணையெழுத்து ‘ஒற்றைக்கொம்பு’ எனப்படும். கே, சே, தே, கோ, போ, மோ போன்ற எழுத்துகளில் முதலில் வரும் துணையெழுத்து ‘இரட்டைக்கொம்பு’ எனப்படும். ஒற்றைக்கொம்பு, இரட்டைக்கொம்பு ஆகியவற்றை அனைவரும் நன்கு தெரிந்திருக்கிறோம். கை, சை, போன்றவற்றில் வருகின்ற ஐகாரக் கொம்புகளை ‘இணைக்கொம்பு, சங்கிலிக்கொம்பு’ என்றும் வழங்கலாம். ஐகாரக் கொம்பு என்றும் சிலர் கூறுவர். ஐகாரக் கொம்பினை இரட்டைக்கொம்பு என்றும் கே, கோ போன்ற நெடிலில் வழங்கும் கொம்பினை மேல்கொம்பு என்றும் சில தமிழாசிரியர்கள் கற்பிக்கின்றனர். வடிவத்தின் அடிப்படையில் அதனையும் தவறென்று கூறுவதற்கில்லை.

அடுத்துள்ளவை கீற்று வகைத் துணையெழுத்துகள். எ என்ற எழுத்தின் கீழ் முடிவில் ஒரு கீற்றினை இழுத்தால் அது ஏ என்று ஆகிவிடும். அதுதான் கீற்று. துணைக்கால் எழுத்தின் கீழே ஒரு கீற்றினை இழுத்தல் ர என்று ஆகிவிடும். இவற்றைச் சாய்நிலையில் ஒரு கீற்றாக இழுப்பதால் சாய்வுக்கீற்று என்று சொல்ல வேண்டும். ஙு, சு, பு போன்ற எழுத்துகளைப் பாருங்கள். குறில்வகை எழுத்தோடு ஒரு கீற்றினை இறங்கு நிலையில் அமைக்கிறோம். இதற்கு ‘இறங்கு கீற்று’ என்று பெயர். து, நு, ஞு, னு போன்ற எழுத்துகளில் அடிப்படை வடிவத்தில் மடக்கி ஏற்றி ஒரு மேல் கீற்று வரைகிறோம். இதற்கு ‘மடக்கு ஏறு கீற்று’ என்று பெயர். கூ என்ற எழுத்தின் முடிவும் ஒரு கீற்றுத்தான். க என்ற எழுத்தினை முதற்கண் எழுதி ஒரு வளைவை அமைத்துப் படுகிடையாகக் கீறுகிறோம். இதற்குப் பின்வளைகீற்று என்று பெயர். கீறல் வகைத் துணையெழுத்துகள் இம்முறைகளில் அமைகின்றன.


கி, தி, ரி போன்ற எழுத்துகளில் மேலிருந்து விழும் கோடுகள் துணையெழுத்து அமைப்பாகின்றன. இதற்கு மேல்விலங்கு என்று பெயர். ஓர் எழுத்தின் மேல் விளிம்பிலிருந்து கொடிபோல் தொங்குவது மேல்விலங்கு. ஓர் எழுத்தின் கீழ் விளிம்பிலிருந்து கொடிபோல் பற்றி ஏறுவது கீழ்விலங்கு. மு, கு, ரு போன்ற எழுத்துகளில் உள்ள முடிவுப் பகுதிகள் அந்தந்த எழுத்துகளின் கீழிருந்து ஏறுகின்றன. ஆதனால் அவற்றுக்குக் கீழ்விலங்கு என்று பெயர். பூ, வூ போன்ற எழுத்துகளில் முதலில் ஒரு இறங்கு கீற்றினைப் போட்டபின் ஒரு கீழ்விலங்கினைப் போட்டுச் சுழித்து முடிக்கிறோம். இதனைக் ‘இறங்குகீற்றுக் கீழ்விலங்குச் சுழி’ என்று கூற வேண்டும்.


கீ, தீ, ரீ ஆகிய எழுத்துகளில் மேல்விலங்கு போட்டுச் சுழிக்கிறோம். அவை மேல்விலங்குச் சுழிகள். மூ, ரூ போன்ற எழுத்துகளில் கீழ்விலங்கு போட்டுச் சுழிக்கிறோம். அவை கீழ்விலங்குச் சுழிகள். ஆ என்ற எழுத்திற்கு முதலில் அ என்ற எழுதிய பின்னர்க் கீழாக ஒரு சுழிப்பு வருகிறது. அதனைப் பிறைச்சுழி என்பர். வெறுமனே பிறை என்றும் கூறுவர்.

துணையெழுத்துகளின் வகைகளையும் எடுத்துக்காட்டுகளையும் கூறுகிறேன், இப்போது தெற்றென விளங்கும்.

துணைக்கால் – கா சா தா

கொம்புக்கால் – ஊ, கௌ, சௌ

மடக்கு ஏறுகீற்றுக் கால் – ணூ, தூ, நூ

ஒற்றைக்கொம்பு – கெ, நெ, செ

இரட்டைக்கொம்பு – கே, நே, சே

இணைக்கொம்பு/சங்கிலிக்கொம்பு – கை, சை, நை

சாய்வுக்கீற்று – ஏ

இறங்கு கீற்று – பு, சு, வு

மடக்கு ஏறு கீற்று – ணு, து, நு

பின்வளைகீற்று – கூ

மேல்விலங்கு – கி, தி, பி

கீழ்விலங்கு – மு, ரு, கு

இறங்குகீற்றுக் கீழ்விலங்குச் சுழி – சூ, பூ


மேல்விலங்குச் சுழி – கீ, தீ, ரீ

கீழ்விலங்குச் சுழி – மூ ரூ

பிறைச்சுழி – ஆ

இப்போது தமிழ்த் துணையெழுத்து வடிவங்களின் பெயர்கள் அனைத்தும் நமக்கு அத்துபடியாகிவிட்டன. திருவள்ளூர் என்ற ஊர்ப்பெயரின் ளூ என்ற எழுத்துக்குக் கீழ்விலங்குச் சுழியினை இடுவது சரியா, மடக்கு ஏறு கீற்றுக் கால் இடுவது சரியா என்று ஆராயலாம்.

நீங்கள் பார்த்து பிரமித்து போன நகை அலங்காரம் மற்றும் வடிவமைப்பு பற்றி சொல்ல முடியுமா?நான் பார்த்து பிரமித்த நகைகள்..1. இ...
10/02/2024

நீங்கள் பார்த்து பிரமித்து போன நகை அலங்காரம் மற்றும் வடிவமைப்பு பற்றி சொல்ல முடியுமா?

நான் பார்த்து பிரமித்த நகைகள்..

1. இராட்சச ஜிமிக்கி

இந்த ஜிமிக்கி 2 கிலோ எடைகொண்டது இன்றைய மதிப்பில் சுமார் 90 இலட்சம் ரூபாய். என்னுடைய நண்பர் செய்த அந்த ஜிமிக்கியை . தலை சிறந்த பொற்கொல்லரை கொண்டு 1 மாதம் இரவு பகல் பாராமல் உழைத்து தயாரித்த இந்த நகையை இப்போது நினைத்தாலும் மட்டில்லா மகிழ்ச்சி.

உங்கள் சந்தேக கேள்வி புரிகிறது இவ்வுளவு பெரிய ஜிமிக்கியை காதுல போட்டா என்னங்க ஆகுறது என்று மன்னிக்கவும் இது மனிதர் உணர்ந்து கொள்ள மனிதருக்கான ஜிமிக்க அல்ல.. அல்ல.. அதையும் தாண்டி ஒரு நகை கண்காட்சியில் காட்சிபடுத்துவதற்காகவே மட்டும் தயாரிக்கப்பெற்ற ஜிமிக்கி.

2. தண்டட்டி

நமது தமிழ் பொற்கொல்லரின் மிகச்சிறந்த கலை சார்ந்த ஒரு படைப்பு என்றால் மதுரை பகுதியில் இன்றளவும் வயதான பெண்கள் உபயோகபடுத்தும் இந்த தண்டட்டி தான்.

எத்தனையோ நவீன இயந்தரங்களின் துணைகொண்டும் காப்பி அடிக்க முடியாத ஒரு அரியவகை நகை தண்டட்டி ஆகும். இன்றைக்கு விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இதை செய்பவர்கள் இருக்கிறார்கள்.

3. தங்க குங்குமச்சிமிழ்

முற்றிலும் தங்கத்தாலும் கைகளால் செய்யப்பெற்ற இந்த குங்கும்ச்சிமிழின் எடை 40gm அதாவது ஐந்து சவரன் ஆகும். நகாஸ் வேலை தெரிந்த எங்களது பாராம்பரிய பொற்க்கொல்லரால் உருவாக்கபட்டவையாகும்.

4. நவஇரத்தின நெக்லஸ்

இந்த நெக்லஸ் முழுவதும் உயர்தர நவரத்தின ஜாதி கற்களை கொண்டு செய்யபட்டவை. இதனுடைய வேலைப்பாடு சுமார் 50 ஆண்டுகளுக்கு முந்தைய முறையாகும் மேலும் இதிலுள்ள கற்கள் அனைத்தும் மிக பழமையான கற்கள் ஆகும் இதை ஆர்டர் கொடுத்த வாடிக்கையாளர் என்னிடம் கேட்ட கேள்வி எனக்கு சாதாரண கற்கள் வேண்டாம் நல்ல தரமான கற்கள் வேண்டும் என்றார் அதற்கு அவரிடம் 3 மாத அவகாசம் கேட்டு தமிழ்நாடு முழுவதும் எனக்கு தெரிந்த சில பழையகற்கள் வியாபாரம் செய்யும் வயதான வியாபாரிகளிடம் சொல்லிவைத்து வாங்கி செய்து கொடுத்த நகை இது அவருக்கும் மிகப்பெரிய திருப்தி அந்த வகையில் என் வாடிக்கையாளருக்காக நான் மிக அதிக உழைப்பு போட்டு செய்து கொடுத்த இந்த நெக்லஸ் என் மனேதாடு உறவாடும் ஒன்றாகும்.

இதுவரை பழமையை பார்த்தோம்..இனி புதுமையை பார்ப்போம்..

5. இராதே கிருஷ்ணா ஆரம்

புதுமையும் பழமையும் சேர்ந்து வடிவமைக்கபட்ட Fusion என்ற வகை சேர்ந்த இந்த ஆரத்தின் எடை 240 Gm அதாவது 30 சவரன். இந்த நகையில் இரண்டு சிறப்பம்சங்கள் உள்ளது முதலாவது அந்த சிலைகளுக்கு வர்ணம் தீட்டிய நேர்த்தியும், இரண்டாவது பழுப்பு கலரில் இருக்கும் அந்த கல்லின் பெயர் பலட்சை என்ற வைரம் சார்ந்த ஒருவகையாகும். Raw Diamond எனப்படும் கல்லில்லிருந்து உயர்தர வைரத்தை பிரித்து வெட்டியபிறகு மீதமாகும் கல் பல வடிவங்களிலும் அல்லது Shapeless ஆக இருக்கும் கல் பலட்சை என்று அழைக்கபடுகிறது. நல்ல தரமான இதன் 1 கேரட் விலை 5000 ரூபாயில் இருந்து ஆரம்பமாகிறது பெரும்பாலும் இது மிகுந்த வேலைப்பாடு கொண்ட நகைகளில் மட்டுமே சேர்த்து செய்வார்கள்.

6. தங்க கூடை

ஒரு மூங்கில் கூடை போன்று மெல்லிய தங்க கம்பியால் சுற்றி பின்னப்பட்ட இந்த 1 கூடையின் எடை 8 கிராம் பார்ப்பதற்கு கூடைய போல் இருந்தாலும் இதற்கு மேல் சில வேலைகள் செய்து ஜிமிக்கியாக உருமாற்றம் பெறும்.

அந்த கம்பி எவ்வளவு மெலிதானது என்று பார்த்தால் 8 கிராம் தங்க கம்பியை சுமார் 20 அடி நீளத்திற்கு மிக சன்னமாக இழுத்து பின்னர் பின்னப்படுவதாகும்.

இவை அனைத்தும் நான் பார்த்து என் கைகளால் தொட்டு பிரமித்த நகை அலங்காரம் மற்றும் வடிவமைப்பு ஆகும்.

நன்றி

S.மணிகண்டன்

நான் அழாமலேயே... | கவிதைக்களம் | Agaramuthali Thamizh♻️ வரிகள் : நிவ்யஸ்ரீ ( லுணுகல, பதுளை)நான் அழாமலேயே எனக்கு கண்ணீர் ...
10/02/2024

நான் அழாமலேயே... | கவிதைக்களம் | Agaramuthali Thamizh

♻️ வரிகள் : நிவ்யஸ்ரீ ( லுணுகல, பதுளை)

நான்
அழாமலேயே
எனக்கு
கண்ணீர் வரம்
தந்த
தேவதையே
உனக்கு நன்றி!

அந்த
துளிகளால் தான்
என்
கவிதைப் புத்தகம்
நிறைகிறது.

👉 YouTube link
https://youtube.com/shorts/PKZ5obnmtj8?si7=FdvWsA0IaKtWkj7u

♻️ அகரமுதலி தமிழ்
தாய்மொழி தமிழுக்கான சேவை

♻️ Facebook
https://www.facebook.com/Agaramuthalithamizh?mibextid=ZbWKwL

♻️ Blogger
https://agaramuthalithamizh.blogspot.com/?m=1

♻️ WhatsApp Group
https://chat.whatsapp.com/IrKy5t8BqPd0NWHzCF3RuK

♻️ WhatsApp Channel
https://whatsapp.com/channel/0029Va6CH090wajpi0y7KL2G

Agaramuthali Thamizh Official கவிதைக்களம்Title நான் அழாமலேயே... Naan Alzhamalaye... | Tamil kaathal kavithal|

முகநூல் புதிய ஆச்சரியம்,நீங்க போய்  னு கமெண்ட்ல முதல்ல எழுதினா ஹைலைட் டெக்ஸ்ட் ப்ளூ வந்தா உங்க ஐடி ஸ்ட்ராங்கா இருக்குனு ...
07/02/2024

முகநூல் புதிய ஆச்சரியம்,

நீங்க போய் னு கமெண்ட்ல முதல்ல எழுதினா ஹைலைட் டெக்ஸ்ட் ப்ளூ வந்தா உங்க ஐடி ஸ்ட்ராங்கா இருக்குனு தெரியும் யாரும் ஈஸியா ஹேக் பண்ண முடியாது.
உரை நீல நிறமாக இல்லை என்றால் சுயவிவர பாதுகாப்பு குறிப்புகளுக்கு பக்கத்தை பின்தொடரவும் 👍🏻
@பின்தொடர்பவர்கள்

03/02/2024

🛑 மாணவர்களின் இடைவிலகலுக்கான
காரணம் என்ன?

Agaramuthali Thamizh | Education
Agaramuthali Thamizh Avaiyam
admin

👉 ஹட்டன் கல்வி வலய தமிழ் மொழிமூல பாடசாலைகளில் 2015 - 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 2406 மாணவர்களும் 2022 இல் 783 மாணவர்களும் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகியுள்ளனர்.

👉 பாடசாலைகள் பரீட்சைகளில் 90 வீத பெறுபேற்றை கொண்டிருக்காவிட்டால் அதிபருக்கு வழங்கப்படும் வருடாந்த சம்பள உயர்வு நிறுத்தப்படுமென மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீப காலங்களில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் மற்றும் இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. பெருந்தோட்ட பாடசாலைகள் உள்ளிட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளில் பாடசாலை இடைவிலகல் என்பது தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிகழ்வாகவே பார்க்க வேண்டியுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெருந்தோட்டங்களில் தற்போது இந்நிலையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை தடுப்பதற்கான எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. மாணவர்களின் இடைவிலகல் என்பது இன்று தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

தற்போதைய பொருளாதார நிலையால் மாணவர்களின் இடைவிலகல் அதிகரிக்கப்படுமே தவிர குறையாது எனவும் தற்போது அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு காரணமாக பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள பல மாணவர்கள் பாடசாலை கல்வியிலிருந்து விலகியுள்ளதாகவும் மத்திய மாகாணத்தில் மாத்திரம் கடந்த வருடத்தில் 1986 மாணவர்கள் இடைவிலகியுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் தகவல்களின் அடிப்படையில், ஹட்டன், நுவரெலியா, கொத்மலை மற்றும் கம்பளை கல்வி வலயங்களில் அதிகளவு மாணவர்கள் இடை விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேசிய ரீதியில் பாடசாலையிலிருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2012 இல் 39,899 ஆக இருந்த பாடசாலையை விட்டு விலகும் மாணவர்களின் எண்ணிக்கை 2021 இல் 19,924 ஆக குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 2012 - 39,899; மாணவர்களும் 2013 - 37,687; மாணவர்களும் 2014 - 34,358; மாணவர்களும் 2015 - 30,055; மாணவர்களும் 2016 - 31,539; மாணவர்களும் 2017 - 28,225; மாணவர்களும் 2018 - 26,077 மாணவர்களும் 2019 - 27,590; மாணவர்களும் 2020 – 22,765 மாணவர்களும் 2021 – 19,924 மாணவர்களும் இடைவிலகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதியில் காணப்பட்ட நெருக்கடி நிலைமைகளை விடவும் 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கொவிட் தொற்று, அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பாடசாலைக் கல்வி கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டது. இதனால் அதிகமான மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் நிலையும் உருவானது. மாறாக பல பாடசாலைகள் தங்களுடைய பாடசாலை பரீட்சை பெறுபேறுகளை உயர் வீதத்தில் காட்டுவதற்காக திட்டமிட்டு மாணவர்களை புறக்கணித்தமையும் இடைவிலகல்களை தூண்டியது.

இவ்விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் வேலு இந்திரசெல்வன் கருத்து தெரிவிக்கையில், “நுவரெலியா மாவட்டத்திலுள்ள கல்வி வலயங்களிலுள்ள பல பாடசாலைகளில் மாணவர்களின் பாடசாலை இடைவிலகல் அதிகரித்துள்ளது. மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் தகவல்களின்படி, கடந்த வருடத்தில் 1986 மாணவர்கள் இடைவிலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்களை குறிப்பிட முடியும். இவற்றில் பொருளாதார நெருக்கடி நிலை பிரதானமாகும். பாடசாலையின் நாளாந்த செயற்பாடுகளை ஈடுசெய்வதற்கு பெற்றோர் மீது அதிக சுமையை கல்வி அமைச்சு சுமத்தி வருகின்றது. பாடசாலை மாணவர்களின் சத்துணவு கேள்விக்குரியாகியுள்ளது. கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை, பாதணிகள் என்பன விலை அதிகரிப்புக்கு உட்பட்டுள்ளது. இந்நிலையில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பெருந்தோட்டப் பிள்ளைகள் இவற்றைப் பெற்றுக் கொள்வதில் சிரமம் மற்றும் போக்குவரத்துக்கான செலவீனம் போன்ற காரணங்களால் இடைவிலகும் நிலை

அவர் மேலும் தெரிவிக்கையில், “இவ்வாறு தொடர்ச்சியாக பாடசாலை இடைவிலகல் அதிகரிக்குமாயின் சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் பாரிய பின்னடைவு ஏற்படும். தற்போது பெருந்தோட்ட மாணவர்கள் கல்வியில் முன்னோக்கிச் செல்லும் ஒரு நிலை காணப்படுகையில் இது பாரிய தாக்கத்தை செலுத்தும். அரசாங்கம் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. பரீட்சை பெறுபேறுகளை 100 வீதமாக தக்கவைத்துக் கொள்வதற்கும் மாணவர்களை திட்டமிட்டு வெளியேற்றும் நிலை காணப்படுகிறது. பெற்றோரும் பிள்ளைகளின் கல்வி தொடர்பில் அக்கறையின்மையுடன் செயற்படுகின்றனர். மாணவர்கள் இடைவிலகுவதை அவதானிப்பதற்காக பொலிஸ் அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், கல்வி பணிப்பாளர், பாடசாலை அதிபர் உள்ளடங்கிய குழுக்கள் காணப்படும் நிலையிலும் அவற்றின் செயற்பாடுகளில் முன்னேற்றம் இல்லை. எனவே மாணவர்களின் இடைவிலகலை தடுப்பதற்கான பொருத்தமான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.” எனவும் தெரிவித்தார்.

இதேவேளை மத்திய மாகாணத்தில் மாணவர்களின் பாடசாலை இடைவிலகல் தொடர்பான தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கல்வி வலயங்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு முயற்சித்த போதும் பெரும்பாலான வலயக் கல்வி அலுவலகங்கள் தகவல்களை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளமையை அவதானிக்க முடிந்தது. மேலும் குறித்த தகவல்களை வழங்குமாறு தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழு உத்தரவிட்டுள்ள போதும் அவற்றை புறக்கணிக்கும் நிலையே காணப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களின் இடைவிலகலில் வலய கல்வி அலுவலகங்களுக்கும் அதிக பங்கிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. எனினும் சில வலயக் கல்வி அலுவலகங்கள் வழங்கிய தகவல்கள் பின்வருமாறு அமைந்துள்ளது.

🛑 ஹங்குராங்கெத்த கல்வி வலயம்

ஹங்குராங்கெத்த கல்வி வலயத்தின் தமிழ்மொழிமூல பாடசாலைகளில் 2015 - 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 217 மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப பொருளாதார நிலை, தமது பிள்ளை தொடர்பில் பெற்றோரின் அக்கறையின்மை, பெற்றோரின் கல்வி நிலை, பாடசாலைக்கும் வீட்டுக்கும் உள்ள தூரம் மற்றும் பெற்றோர் பிள்ளைகளுடன் வசிக்காமை போன்றவை இடைவிலகலுக்கான காரணங்களாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2023 இல் ஹங்குராங்கெத்த கல்வி வலயத்தில் 79 மாணவர்கள் இடைவிலகியுள்ளனர்.

🛑 நுவரெலியா கல்வி வலயம்

நுவரெலியா கல்வி வலயத்தின் தமிழ்மொழிமூல பாடசாலைகளில் வருடாந்தம் 200 மாணவர்கள் மாத்திரமே பாடசாலை கல்வியை இடைநிறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார பிரச்சினை மற்றும் பெற்றோர் இடப்பெயர்வு காரணமாக இந்த இடைவிலகல் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மத்திய மாகாண கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நுவரெலியா கல்வி வலயத்தில் 570 மாணவர்கள் இடைவிலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா கல்வி வலயத்தில் அதிகமாக தமிழ்மொழிமூல பாடசாலைகளே காணப்படும் நிலையில் வலயக் கல்வி அலுவலகம் வழங்கியுள்ள தகவல்களில் நம்பிக்கை கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.

🛑 வலப்பனை கல்வி வலயம்

வலப்பனை கல்வி வலய தமிழ்மொழி மூல பாடசாலைகளில் 2019 - 2020 ஆம் ஆண்டுகளில் 65 மாணவர்கள் இடைவிலகியுள்ளதாகவும் 2015 - 2018 வரையான காலப்பகுதியில் இடைவிலகிய மாணவர்கள் தொடர்பான உரிய தகவல்களை பாடசாலைகள் வழங்கவில்லையெனவும் தெரிவித்துள்ளது. பெற்றோரின் அறியாமை மற்றும் பெற்றோரின் பொருளாதார பிரச்சினைகள் என்பன இடைவிலகலுக்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2023 இல் 74 மாணவர்கள் இடைவிலகியுள்ளதாக மத்திய மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

🛑 ஹட்டன் கல்வி வலயம்

ஹட்டன் கல்வி வலய தமிழ் மொழிமூல பாடசாலைகளில் 2015 - 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 2406 மாணவர் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகியுள்ளனர். 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் கட்டாய கல்வியை பெற்றுக்கொள்ள வேண்டிய 5 - 16 வயதுக்குட்பட்ட மாணவர்களில் பல்வேறு காரணங்களால் பெருந்தொகையான மாணவர்கள் இடைவிலகியுள்ளனர். 2015 இல் 686 மாணவர்களும் 2016 இல் 543, 2017 இல் 471, 2018 இல் 428, 2019 இல் 278 மாணவர்களும் பாடசாலை கல்வியைவிட்டு இடைவிலகியுள்ளனர்.

ஹட்டன் கல்வி வலய பெருந்தோட்டப் பாடசாலைகளில் மாணவர் இடைவிலகலுக்கு பெற்றோரின் வறுமை நிலை மற்றும் வெளிநாடு சென்ற பெற்றோர், மாணவர்களின் போசணை குறைபாடும் மெல்ல கற்போரும் சுகயீனமுற்ற மாணவர்கள், வீட்டுச்சூழலும் சமூகச்சூழலும் பெற்றோர், பாதுகாவலரின் கவனயீனம், பாடசாலைகள் பல கவர்ச்சிகரமான சூழலை கொண்டிராமை போன்றன பிரதான காரணங்களாக இருக்கின்றன. மேற்படி காரணங்களால் ஆரம்ப பிரிவு வகுப்புகளில் இடைவிலகல் மிகவும் குறைவாகவும் தரம் 6 - 11 வகுப்புக்களில் இடைவிலகல் அதிகமாகவும் காணப்படுகின்றன.

தரம் 5 வரை ஆரம்ப பாடசாலைகளில் கல்வி கற்று தரம் 6க்கு புதிய பாடசாலைக்கு செல்கின்ற மாணவர்கள் சந்திக்கின்ற சவால்கள் சில மாணவர்களின் இடைவிலகளுக்கு காரணமாகின்றன. பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரம் போதுமானதாக இல்லாமை, தங்கள் பிள்ளைகளை சுகாதார ரீதியாக, கல்வி ரீதியாக முறையாக பராமரிக்க முடியாமை முக்கிய காரணியாகும். சில பாடசாலைகளில் காணப்படும் பொருத்தமற்ற கற்றல் சூழல், போதுமான வளங்கள் இல்லாமை குறிப்பாக விளையாட்டு மைதானம் போன்ற பிரதான வளங்கள் மாணவர்களின் இணைப்பாடவிதான செயற்பாடுகளை தொடர்ந்து செயற்படுத்த தடையாக இருக்கிறது.

மேலும் பாடசாலை அபிவிருத்தி வளங்கள் நிதி ரீதியாக வளமாயில்லாமை காரணமாக அதிபர்கள் பாடசாலை கற்றல் சூழலை மாணவர்களுக்கு கவர்ச்சிகரமாக்க சந்தர்ப்பமில்லாமல் போயுள்ளதாகவும் எவ்வாறாயினும் மாணவர்களின் தொடர்ச்சியான வரவை அதிகரிக்க பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் கட்டாயக் கல்விக்குழு உயிர்ப்பிக்கப்பட்டுள்ளமை, ஆரம்பகல்வி மாணவர்களுக்கு போசாக்குணவு வழங்கப்படுகின்றமை, மாணவர் விடுமுறை அட்டை அறிமுகம், அதிபர், ஆசிரியர்களின் வகைக்கூறலை செயலாற்றுகை மதிப்பீட்டில் சரியாக கணிப்பிட்டு ஆலோசனை வழிகாட்டல் வழங்கப்படுகின்றமை, வலய மட்டத்தில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் பாசறைகளை நடத்துதல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் கல்விப் பணிமனை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள நான்கு கோட்டங்களிலும் 2022 ஆம் ஆண்டு மாத்திரம் 783 மாணவர்கள் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட்டம் 1 இல் 42 பாடசாலைகளைச் சேர்ந்த 229 மாணவர்களும் கோட்டம் 2 இல் 36 பாடசாலைகளைச் சேர்ந்த 265 மாணவர்களும் கோட்டம் 3 இல் 35 பாடசாலைகளைச் சேர்ந்த 271 மாணவர்களும் சிங்கள மொழி மூல பாடசாலைகளை கொண்டுள்ள கோட்டம் 4 இல் 37 பாடசாலைகளைச் சேர்ந்த 18 மாணவர்களும் இவ்வாறு இடைவிலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

🛑 ஹட்டன் ஹைலண்ட்ஸ் தேசிய கல்லூரி

ஹட்டன் ஹைலண்ட்ஸ் தேசிய கல்லூரியில் உயர்தரத்தில் பல்வேறு பிரிவுகளில் கல்வி கற்கும் மாணவர்களில் பலர் இடை நடுவே கல்வியை கைவிடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு இடைவிலகியமைக்கான காரணத்தை அடையாளம் கண்டு மீண்டும் மாணவர்களை உள்ளீர்ப்பதற்கு எந்த நடவடிக்கையையும் குறித்த பாடசாலை மேற்கொள்ளவில்லை. 2015 - 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உயர்தரத்திலுள்ள ஆறு பிரிவுகளில் இருந்து 74 மாணவர்கள் கல்வியை இடைநிறுத்தியுள்ளனர். (அட்டவணை 01)

இதில் உயிரியல் பிரிவிலிருந்து 11 மாணவர்களும் இயற்பியல் விஞ்ஞான பிரிவிலிருந்து 38 மாணவர்களும் வர்த்தகப் பிரிவிலிருந்து 12 மாணவர்களும் கலை பிரிவிலிருந்து 5 மாணவர்களும் நுண்கலை பிரிவிலிருந்து 3 மாணவர்களும் தொழில்நுட்ப பிரிவிலிருந்து 5 மாணவர்களும் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ளனர். இவ்வாறு கல்வியை இடைநிறுத்துவது பெற்றோரின் விருப்பத்துக்கு உட்பட்டே இடம்பெறுவதாகவும் ஹட்டன் ஹைலண்ட்ஸ் தேசிய கல்லூரி தெரிவித்துள்ளது.

🛑 இடைவிலகலை குறைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன?

மாணவர்களின் பாடசாலை இடைவிலகல் தொடர்பில் ஹட்டன் பிரதேச பாடசாலை அதிபரொருவரிடம் வினவிய போது, (பாதுகாப்பு கருதி பெயர் குறிப்பிடப்படவில்லை) “பெரும்பாலான பிள்ளைகளின் பெற்றோர் வெளிநாட்டில் இருப்பது முக்கிய காரணமாக இருக்கிறது. எனது பாடசாலையிலுள்ள மூன்றில் ஒரு பங்கு மாணவர்களின் பெற்றோர் பிள்ளைகளுடன் இல்லை. திட்டமிட்ட போதைப்பொருள் பாவனை, கைத்தொலைபேசி பாவனை, ஆபாசப்படங்களின் நுகர்வு என்பனவும் மாணவர்களின் கல்வி நடவடிக்கையை பாதிப்பதாகவும் குறிப்பிட்டார். பெரும்பாலான பாடசாலைகளில் பரீட்சை பெறுபேறுகளை உயர் மட்டத்தில் தக்கவைத்துக் கொள்வதற்காக தரம் 9 - 11 வரையான வகுப்புகளில் திட்டமிட்டு மாணவர்கள் இடைவிலக்கப்படுகின்றனர். 8 ஆம் தரத்திலேயே மூன்றில் இரண்டு மாணவர்கள் திட்டமிட்டு வெளியேற்றப்படுகின்றனர். அத்துடன் பாடசாலைகள் பரீட்சைகளில் 90 வீத பெறுபேற்றை கொண்டிருக்காவிட்டால் அதிபருக்கு வழங்கப்படும் வருடாந்த சம்பள உயர்வு நிறுத்தப்படுமென மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில அதிபர்கள் திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.” எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே பாடசாலைகளில் மாணவர்கள் இடைவிலகுவதற்கு அதிபர்களுக்கு வழங்கப்படும் அழுத்தங்களும் காரணமாக இருக்கின்றது. மத்திய மாகாண கல்வி அமைச்சு தமிழ் கல்வியை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதா? இவ்வாறு திட்டமிட்டு இடம்பெறும் செயற்பாடுகளுக்கு கல்வியியலாளர்கள், அரசியல்வாதிகள் எவ்வாறான தீர்வுகளை முன்வைக்கப் போகின்றனர். உயர்தரத்தில் கணித, விஞ்ஞான பிரிவுகளில் கல்வி கற்கும் மாணவரொருவர் மாதாந்தம் 40 - 50 ஆயிரம் ரூபாவை கல்விக்காக செலவிட வேண்டிய நிலை காணப்படுகின்றது. இது பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி என்ற நிலையை உருவாக்குகிறது. மலையகத்தில் கணித, விஞ்ஞான பிரிவுகளில் மாணவர்களின் பங்குபற்றுகை குறைவு என குதிக்கும் தலைவர்கள் இவ்வாறான விடயங்கள் தொடர்பிலும் சிந்திக்க வேண்டும்.

தொடரும்…

Ministry of Education Department of Education - Central Province zonel education office

Address

Badulla

Alerts

Be the first to know and let us send you an email when Agaramuthali Thamizh Avaiyam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Agaramuthali Thamizh Avaiyam:

Share