Radio MBC

Radio MBC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Radio MBC, Radio Station, Badulla.

22/09/2021

RADIO MBC.NEWS of badulla.
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 40 சுகாதார தொழிற்சங்கங்களால் நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இன்று நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

COVID விசேட கொடுப்பனவு இடைநிறுத்தப்பட்டமை, சுகாதார ஊழியர்களுக்கு தேவையான போதியளவு உபகரணங்களை வழங்காமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி இந்த எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக அகில இலங்கை சுகாதார சேவை சங்கத்தின் செயலாளர் மஹிந்த குருகே தெரிவித்தார்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவிடம் வினவிய போது, தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி தீர்வு காண எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
https://radiombc1.blogspot.com/2021/04/radiombclive.html

https://chat.whatsapp.com/EMIOML45AOl2Bf67OYVSpL

https://www.facebook.com/MBC-Media-Network-101780631812482

https://www.facebook.com/profile.php?id=100072603477042

22/09/2021
21/09/2021

RADIO MBC.NEWS of badulla.
76 ஆவது ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தொடர் இன்று (21) ஆரம்பமாகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையில் இந்த கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது.

நாளைய (22) கூட்டத்தொடரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உரையாற்றவுள்ளார்.

கொவிட் 19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கு நம்பிக்கையுடன் எதிர்த்து செயற்படுவதற்கான சூழலை கட்டியெழுப்புதல், நிலையான நிலமையை மீண்டும் உருவாக்கல், உலகின் தேவைகளுக்கு பதிலளித்தல், மனித உரிமைகளை பாதுகாத்தல் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பை மீள புத்துயிர் பெறச்செய்தல் எனும் தொனிப்பொருளில் இம்முறை மாநாடு நடைபெறுகின்றது.

எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவுள்ள உணவு கட்டமைப்பு மாநாடு மற்றும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ள வலுசக்தி தொடர்பான உயர் மட்ட கலந்துரையாடல் என்பனவற்றில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது கருத்துக்களை வௌியிடவுள்ளார்.

வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, வௌிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே ஆகியோர் இந்த விஜயத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.

https://radiombc1.blogspot.com/2021/04/radiombclive.html

https://chat.whatsapp.com/EMIOML45AOl2Bf67OYVSpL

https://www.facebook.com/MBC-Media-Network-101780631812482

https://www.facebook.com/profile.php?id=100072603477042

21/09/2021

RADIO MBC.NEWS of badulla.
நாட்டு மக்களுக்கான மூன்றாவது தடுப்பூசியை வழங்குவதற்காக தடுப்பூசிகள் முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதற்காக தேவைப்படும் 14 மில்லியன் பைசர் (Pfizer) தடுப்பூசிகளை முற்பதிவு செய்துள்ளதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில், மூன்றாவது தடுப்பூசியானது எதிர்வரும் ஒக்டோபர் நடுப்பகுதியில் அல்லது நவம்பர் மாத ஆரம்பத்திலிருந்து நாட்டு மக்களுக்கு வழங்கப்படும் என அவர் கூறினார்.

https://radiombc1.blogspot.com/2021/04/radiombclive.html

https://chat.whatsapp.com/EMIOML45AOl2Bf67OYVSpL

https://www.facebook.com/MBC-Media-Network-101780631812482

https://www.facebook.com/profile.php?id=100072603477042

21/09/2021

RADIO MBC.NEWS of badulla.
தென் ஆபிரிக்க தலைநகர் Cape நகரை அண்மித்து, தேனிகள் கொட்டியதில் அருகி வரும் பென்குயின்கள் உயிரிழந்துள்ள அரிய வகை சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இந்த சம்பத்தில் 63 பென்குயின்கள் உயிரிழந்துள்ளதாக தென் ஆபிரிக்க பறவை இன பாதுகாவலர்கள் தெரிவித்துள்ளனர்.

சிம்சன்ஸ்டவுன் (Simonstown) பிரதேசத்திலுள்ள கடற்கரையில் தேனிகள் கொட்டிய காயங்களுடன் உயிரிழந்த நிலையில் இந்த பென்குயின்களின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்திருந்த பென்குயின்களின் கண்களை சுற்றி தேனிகள் கொட்டியுள்ளமை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இது மிகவும் அரிதான விடயம் என விலங்குகள் நல வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த பென்குயின்களின் உடல்கள் காணப்பட்ட அதே இடத்திலேயே உயிரிழந்த சில தேனிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வைத்தியர் டேவிட் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://radiombc1.blogspot.com/2021/04/radiombclive.html

https://chat.whatsapp.com/EMIOML45AOl2Bf67OYVSpL

https://www.facebook.com/MBC-Media-Network-101780631812482

https://www.facebook.com/profile.php?id=100072603477042

20/09/2021

RADIO MBC.NEWS of badulla.
நாட்டில் 93 கொவிட் மரணங்கள் நேற்று (19) உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று (20) அறிவித்தார்.
https://radiombc1.blogspot.com/2021/04/radiombclive.html

https://chat.whatsapp.com/EMIOML45AOl2Bf67OYVSpL

https://www.facebook.com/MBC-Media-Network-101780631812482

https://www.facebook.com/MBC-Media-Network-101780631812482

20/09/2021

RADIO MBC.NEWS of badulla.
இனங்களுக்கிடையே ஒற்றுமையை பலப்படுத்தி முன்னோக்கிச் செல்ல ஐக்கிய நாடுகள் சபையின் பூரண ஒத்துழைப்பை இலங்கைக்கு வழங்க தயாராகவுள்ளதாக ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா சபையின் தலைமையகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐ.நா தலைமையகத்திற்குச் சென்ற ஜனாதிபதியை ஐநா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் வரவேற்றுள்ளார்.

30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக மிகவும் இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிட்டாலும் இந்து சமுத்திர வலயத்தில் இலங்கையின் பாரிய சமூக மற்றும் பொருளாதார விவகாரங்களை முன்னெடுத்துச் செல்லும் இலங்கையினால் அதனை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல முடியும் என தாம் எதிர்பார்ப்பதாக ஐ.நா செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சிறு பொருளாதாரத்தை கொண்ட இலங்கை, கொவிட் தொற்றுக்கு மத்தியில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் இதன்போது ஐநா செயலாளர் நாயகத்திடம் தௌிவுபடுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொவிட் தொற்றுக்கு மத்தியில் இலங்கையில் கல்வி மற்றும் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள அதிக அழுத்தங்கள் தொடர்பிலும் இதன்போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.

நாட்டின் மொத்த சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி, நவம்பர் மாத இறுதிக்கு முன்னர் 15 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசிகளை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையில் இலங்கை எட்டியுள்ள முன்னேற்றத்தை ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பாராட்டியுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பதவியேற்ற தாம், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற கொவிட் தொற்று பாரிய இடையூறாக அமைந்துள்ளதாக ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு வழங்கல், காணிகளை மீள கையளித்தல் மற்றும் 2009 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஸவின் வழிநடத்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட பாரிய அபிவிருத்திகள் மற்றும் வட மாகாண சபைக்காக ஜனநாயக ரீதியிலான பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தமை என்பன தொடர்பில் ஜனாதிபதி, ஐ.நா செயலாளர் நாயகத்திற்கு தௌிவுபடுத்தியுள்ளார்.

காணாமல் போனவர்கள் தொடர்பில் அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகளை விரைவில் முன்னெடுப்பதாக ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சந்தேகத்தில் கைது செய்யப்பட்டிருந்த பெருமளவான இளைஞர்களை தாம் ஆட்சிக்கு வந்த பின்னர் விடுவித்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதலை செய்யப்பட முடியாத ஏனையவர்கள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதாகவும் நீண்ட காலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், நீண்ட காலமாக அவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமையை கவனத்திற்கொண்டு ஜனாதிபதி மன்னிப்பை வழங்க தாம்
தயங்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் ஜனநாயகத்தை வலுவான நிலைக்கு கொண்டுசெல்வதே தமது இலக்கு எனவும் போராட்டங்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகள், தமது அரசாங்கத்தின் கீழ் முன்னெடுக்கப்படாதென ஜனாதிபதி கூறியுள்ளார்.

இலங்கையின் பிரச்சினைகள் உள்ளக பொறிமுறையூடாக தீர்க்கப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கான பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ளுமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையுடன் அனைத்து சந்தர்ப்பங்களிலும் மிகவும் நெருங்கி செயற்பட தயாரெனவும் இலங்கையில் மீண்டும் ஒருமுறை பிரிவினைவாதம் ஏற்படாதென தம்மால் உறுதி வழங்க முடியும் எனவும் மத ரீதியிலான தீவிரவாதம் தொடர்பில் அரசாங்கம் என்ற ரீதியில் இலங்கையும் ஏனைய அனைத்து நாடுகளும் விழிப்புடன் இருக்க வேண்டுமெனவும் ஐ.நா செயலாளர் நாயகத்துடனான சந்திப்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

https://radiombc1.blogspot.com/2021/04/radiombclive.html

https://chat.whatsapp.com/EMIOML45AOl2Bf67OYVSpL

https://www.facebook.com/MBC-Media-Network-101780631812482

https://www.facebook.com/MBC-Media-Network-101780631812482

RADIO MBC live.
20/09/2021

RADIO MBC live.

RADIO MBC.NEWS of badulla. ஹட்டன் – நோட்டன் பிரிட்ஜ் லொனக் பகுதியில் நீரில் மூழ்கி காணாமற்போன இருவரும் சடலமாக மீட்கப்பட்...
20/09/2021

RADIO MBC.NEWS of badulla.
ஹட்டன் – நோட்டன் பிரிட்ஜ் லொனக் பகுதியில் நீரில் மூழ்கி காணாமற்போன இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இன்று (20) காலை 7 மணியளவில் சடலங்கள் மீட்கப்பட்டதாக RADIO MBC செய்தியாளர் தெரிவித்தார்.

லக்‌ஷபான இராணுவ முகாம் மீட்பு குழுவினரால் சடலங்களை தேடும் பணிகள் இன்று அதிகாலை முதல் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

லொனக் பண்ணைக்கு நீரை வழங்கும் குளத்திற்கு நேற்று (19) மாலை நீராடச் சென்ற நால்வரில் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம் பகுதியை சேர்ந்த 24 வயதான ஒருவரும் லொனக் பகுதியை சேர்ந்த 35 வயதான ஒருவருமே இவ்வாறு காணாமல் போன நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக mbc செய்தியாளர் குறிப்பிட்டார்.

பிரேத பரிசோதனைகளுக்காக சடலங்கள் நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளன.

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://radiombc1.blogspot.com/2021/04/radiombclive.html

https://chat.whatsapp.com/EMIOML45AOl2Bf67OYVSpL

https://www.facebook.com/MBC-Media-Network-101780631812482

https://www.facebook.com/profile.php?id=100072603477042

Address

Badulla

Alerts

Be the first to know and let us send you an email when Radio MBC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Radio MBC:

Share

Category