28/08/2026
எமது பூனாகலை மக்களுக்காக "நவோதயாபுரம்" வீடமைப்புத் திட்டம் இன்று திறப்பு!
கடந்த 2023 மார்ச் 19 அன்று எமது பூனாகலை, கபரகலை பகுதியில் ஏற்பட்ட பேரழிவு நிலச்சரிவில் வீடுகளையும் உடைமைகளையும் இழந்து தவித்த எமது சொந்தங்களுக்கு இன்று ஒரு புதிய விடியல் பிறந்துள்ளது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக கட்டப்பட்ட "நவோதயாபுரம்" கிராமத்தின் புதிய வீடுகள், இன்று கௌரவ ஜனாதிபதி அவர்களால் உத்தியோகபூர்வமாக பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டு கையளிக்கப்பட்டன.
எமது பூனாகலை உறவுகளுக்கு மீண்டும் ஒரு பாதுகாப்பான, நிரந்தர முகவரி கிடைத்துள்ளது மனதிற்கு அளவற்ற மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் தருகிறது. பாதிக்கப்பட்ட எமது குடும்பங்கள் அனைத்தும் இந்த புதிய வீடுகளில் அனைத்து நலன்களும் பெற்று பாதுகாப்பாக வாழ என் மனமார்ந்த வாழ்த்துகள்!