Thanumithan Nithyanandadeva

Thanumithan Nithyanandadeva Thanumithan Nithyanandadeva

14/03/2022

President Gotabaya Rajapaksa will address the nation on Wednesday, 16 March, President’s office announced.

ஊரடங்கு தொடருமா?நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதிக்குப் பின்னர் நீ...
29/09/2021

ஊரடங்கு தொடருமா?

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதிக்குப் பின்னர் நீடிப்பதா இல்லையா என்பது குறித்தான இறுதித் தீர்மானம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பிய பின்னர் எடுக்கப்படவுள்ளது.

இதன்படி ,அமெரிக்காவிலிருந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாளை நாடு திரும்பவுள்ளார். அதன் பின்னர் கொவிட் தடுப்பு செயலணியின் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.

நாடு திறக்கப்படுமாயின் புதிய சுகாதார வழிகாட்டல்களை அறிமுகப்படுத்த அரசு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய அரச அலுவலர்கள் கடமைகளுக்கு சமூகமளிக்கும் நேரம் காலை 9 மணியாகவும் ,தனியார்துறை ஊழியர்கள் சமூகமளிக்கும் நேரம் காலை 10 மணியாகவும் மாற்றுவதற்கு அரசு உத்தேசித்துள்ளது.

போக்குவரத்து செயற்பாடுகள் இடம்பெறவுள்ளன.அரச சேவையாளர்களுக்கான விசேட சுற்றறிக்கையொன்றினை பொதுநிர்வாக அமைச்சு நாளை வெளியிடவுள்ளது.

மேலும் நாடு திறக்கப்பட்டாலும் பொதுநிகழ்வுகள் மற்றும் திருமண நிகழ்வுகள் நடத்தப்பட உடனடி அனுமதி வழங்கப்படாது.பாடசாலைகளை திறப்பதற்கான ஏற்பாடுகளை உடனடியாக செய்வதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது .

மட்டக்களப்பில் 13 வயது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள அரசடி பகுத...
28/09/2021

மட்டக்களப்பில் 13 வயது சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள அரசடி பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் நேற்று திங்கட்கிழமை (27) இரவு இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு அரசடி தெய்வ களக வீதியைச் சோந்த 13 வயதுடைய கவிஷாலினி என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த வீட்டில் தாயார் தந்தையார் சம்பவதினமான நேற்று இரவு 7 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்த நிலையில், சகோதரியுடன் இருந்த சிறுமி Zoom வகுப்பில் அறையில் கல்விகற்றுக் கொண்டிருந்ததாகவும், அந்த நேரம் சகோதரி குளிக்க சென்று திரும்பி வந்தபோது சிறுமி அறையின் மின்விசிறி பொருத்தும் கம்பியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த நிலையில் கண்டதாக, பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, நீதவான் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு, சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டதையடுத்து, சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது .

இது தொடர்பாக, மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மற்றும் மாவட்ட பெண்கள் சிறுவர் பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

14/07/2021

ஒரு பெண் தனது கணவரின் கணினியை சட்டவிரோதமாக அணுகுவதற்கும் தகவல்களைப் பதிவிறக்குவதற்கும் மற்றும் அவரது அட்டவணையின் கீழ் ஒரு கண்காணிப்பு சாதனத்தை சரிசெய்ததற்கும் ஒரு என்ஜினிங் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கணவர் மவுண்ட் லவ்னியா மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார், அவர் வீட்டில் இல்லாதபோது தனது மனைவி தனது தனிப்பட்ட கணினியை சட்டவிரோதமாகவும் தவறாகவும் அணுகியதாகவும், பல்வேறு தகவல்களை பதிவிறக்கம் செய்து தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்ததாகவும், விவாகரத்து செய்யும் போது தனது அறையில் ஆடியோ கண்காணிப்பு சாதனத்தை நிறுவியதாகவும் இருவருக்கும் இடையிலான வழக்கு ஒரே நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அவர் கொழும்பில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் மருத்துவராக இருந்தபோது, ​​மனைவி வடக்கு மாகாணத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் ஆலோசகராக இணைக்கப்பட்டதாக கணவர் கூறியுள்ளார்.

வாதி அல்லது மின்னணு தகவல்தொடர்புகளில் ஈடுபட்ட மூன்றாம் தரப்பினரின் அனுமதியோ அனுமதியோ இல்லாமல் வாதியின் மின்னணு தகவல்தொடர்புகள் வேண்டுமென்றே இடைமறிக்கப்பட்டன, மற்றும் / அல்லது பிரதிவாதியால் பயன்படுத்தப்பட்டன என்று வாதி கூறுகிறது. வாதியின் அனுமதியோ அனுமதியோ இன்றி வாட்ஸ்அப் சேவையில் வாதியின் மின்னணு தகவல்தொடர்புகளை அணுக வாதியின் கணினியைப் பயன்படுத்த முயற்சித்ததாக வாதி குற்றம் சாட்டுகிறார்.

அது மூடப்பட்டிருக்கும் போது அறைக்குள் நுழைவதன் மூலமும், முடக்கப்பட்ட கணினியை அணுகுவதன் மூலமும், தனியுரிமை குறித்த வாதியின் நியாயமான எதிர்பார்ப்பு மீறப்பட்டதாகவும், நம்பிக்கை மீறல் இருப்பதாகவும் வாதி மேலும் குற்றம் சாட்டியுள்ளார். தனக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கில் தனது பிரிந்த மனைவி அப்படி நடந்து கொண்டார் என்று வாதி கூறியுள்ளார்.

சட்டவிரோதமாகவும், எந்தவொரு அங்கீகாரமும் இல்லாமல், தகவல்களைச் சேகரிப்பதில் மனைவியின் நடத்தை, அத்துடன் ஒரு மின்னணு கண்காணிப்பு சாதனத்தை ஒட்டுவது ஆகியவை கணினி குற்றச் சட்டம் எண் 3 மற்றும் 4 ன் பிரிவுகளின் கீழ் குற்றங்கள் என்று வாதி மேலும் குற்றம் சாட்டினார். .

வாதியின் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட வாக்குமூலம் மற்றும் பிரமாணப் பத்திரங்களை பரிசீலித்த பின்னர், மவுண்ட் லவ்னியா கூடுதல் மாவட்ட நீதிபதி திருமதி டி.எம். கொடித்துவக்கு 2021 ஜூலை 6 ஆம் தேதி பிரதிவாதி தரவு மற்றும் / அல்லது ஆவணங்கள் மற்றும் / அல்லது குறுஞ்செய்திகள் மற்றும் குறுஞ்செய்திகளை சேகரிப்பதைத் தடுக்கும் ஒரு உத்தரவு பிறப்பித்தார். / அல்லது வாதியின் கணினியில் சேமிக்கப்பட்டுள்ள வேறு எந்த தகவலும் மற்றும் / அல்லது வேறு எந்த கண்காணிப்பு சாதனங்களின் மூலமும்.

தரவு மற்றும் / அல்லது ஆவணங்கள் மற்றும் / அல்லது உரைச் செய்திகளைப் பயன்படுத்துவதிலிருந்தும், ஆடியோ, வீடியோ மற்றும் / அல்லது வேறு ஏதேனும் தகவல்களைப் பயன்படுத்துவதிலிருந்தும் / அல்லது அவர் உட்பட வேறு எந்த மூன்றாம் தரப்பினரிடமும் அந்த தகவலைப் பரப்புவதும் / அல்லது பகிர்வதும் பிரதிவாதி மேலும் தடுக்கப்பட்டது. சொந்த வக்கீல்கள் மற்றும் / அல்லது வாதி தொடர்பு கொண்ட எந்த மூன்றாம் தரப்பினருடனும் தொடர்புகொள்வது.

வாதியின் வீட்டில் எந்தவொரு மின்னணு கண்காணிப்பு உபகரணங்கள் அல்லது மென்பொருள் அல்லது சாதனங்கள் மற்றும் / அல்லது வாதியின் வேறு எந்த அசையாத அல்லது அசையும் சொத்துகளையும் பிரதிவாதியைத் தடுக்கும் மேலும் உத்தரவு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டது.

திஸ்யா வெராகோடா, புலஸ்தி ரூபசின்ஹா ​​மற்றும் சஞ்சய மராம்பே வக்கீல்கள் ஆகியோருடன் வாதிட்டார்.

08/05/2021

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஆய்வு கூடத்திற்கு பீ.சி.ஆர் பரிசோதனைகளை பரிசோதிப்பதற்கான உபகரணங்கள் வழங்கிவைப்பு!
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் ஆய்வு கூடத்திற்கு பீ.சி.ஆர் பரிசோதனைகளை பரிசோதிப்பதற்கான உபகரணங்களை மட்டக்களப்பு அருவி பெண்கள் வலயமைப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஸ்ரீகாந்த் தனது சொந்த நிதியிலுமாக ஒரு தொகுதி உபகரணங்களை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் முன்னிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி.க.கலாரஞ்சினி, நுண்ணுயிரியல் வைத்திய நிபுணர் பி.தேவகாந்தன் ஆகியோரிடம் ஒப்படைப்பதை படத்தில் காணலாம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழைகாரணமாக விவசாய நிலங்கள் பாதிப்புமட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்...
15/01/2021

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழைகாரணமாக விவசாய நிலங்கள் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கடுமையான அடை மழை காரணமாக விவசாய விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அறுவடை காலம் ஆரம்பித்துள்ளமையினால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இவ் அடை மழை காரணமாக 4944 விவசாயிகளின் 13568.75 ஏக்கர் வயல் நிலங்கள் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் கே. ஜெகநாத் தெரிவித்தார்.

இதனடிப்படையில் களுவாஞ்சிக்குடி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 158 விவசாயிகளின் 308 ஏக்கர் வயல் நிலங்களும், கொக்கட்டிச்சோலை கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 443 விவசாயிகளின் 1400.5 ஏக்கர் வயல் நிலங்களும், வெல்லாவெளி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 6 விவசாயிகளின் 15 ஏக்கர் வயல் நிலங்களும், பழுகாமம் கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 94 விவசாயிகளின் 238.25 ஏக்கர் வயல் நிலங்களும், ஆரையம்பதி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 61 விவசாயிகளின் 149.5 ஏக்கர் வயல் நிலங்களும், கல்லடி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 137 விவசாயிகளின் 510.5 ஏக்கர் வயல் நிலங்களும், மண்டபத்தடி கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 1094 விவசாயிகளின் 3615.5 ஏக்கர் வயல் நிலங்களும் நீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளன.

மேலும் ஆயித்தியமலை கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 112 விவசாயிகளின் 310.75 ஏக்கர் வயல் நிலங்களும், கரடியனாறு கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 386 விவசாயிகளின் 1462 ஏக்கர் வயல் நிலங்களும், ஏறாவூர் கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 181 விவசாயிகளின் 513 ஏக்கர் வயல் நிலங்களும், வந்தாறுமூலை கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 35 விவசாயிகளின் 121.25 ஏக்கர் வயல் நிலங்களும், கிரான் கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 1152 விவசாயிகளின் 2437 ஏக்கர் வயல் நிலங்களும், தாந்தாமலை கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 8 விவசாயிகளின் 35 ஏக்கர் வயல் நிலங்களும், வாகரை கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 750 விவசாயிகளின் 1362.75 ஏக்கர் வயல் நிலங்களும், வாழைச்சேனை கமநல கேந்திர நிலையத்திற்குட்பட்ட 327 விவசாயிகளின் 1089.75 ஏக்கர் வயல் நிலங்களும் பாதிப்படைந்துள்ளன.

கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் மேலும் கருத்து தெரிவிக்கையில் தற்போது கிடைத்துள்ள தகவல்கள் பூரணமான தகவல்கள் அல்ல எனவும் பெய்து வரும் அடைமழை காரணமாகவும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பூரணமான தகவல்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இதற்காக ஆய்வுக்குழு தமது பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

15.01.2021

 #இன்று_மாலையில்_இலங்கையை_கடக்கவுள்ள_பலத்த_சூறாவளி-  #பொதுமக்களுக்கு_எச்சரிக்கை..!!வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதி...
02/12/2020

#இன்று_மாலையில்_இலங்கையை_கடக்கவுள்ள_பலத்த_சூறாவளி- #பொதுமக்களுக்கு_எச்சரிக்கை..!!

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் நிலவிய தாழமுக்கமானது சூறாவளியாக மாற்றமடைந்து திருகோணமலை கரையில் இருந்து தென்கிழக்காக 330 கிலோமீற்றர் தூரத்தில் நிலைகொண்டுள்ளது.

இந்த சூறாவளிக்கு மாலைதீவு நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட (BUREVI) புரேவி எனும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இது அடுத்து வரும் 12 மணித்தியாலத்தில் மேலும் வலுவடைந்து, மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை அல்லது இரவு வேளையில் மட்டக்களப்பிற்கும் பருத்திதுறைக்கும் இடையில் ஊடறுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்காரணமாக வடக்கு, கிழக்கு, வடமத்திய வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகவுள்ளது.

குறிப்பாக அதன் சில பகுதிகளில் 200 மில்லிமீற்றர் அளவில் மழைப் பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் 100 மில்லிமீற்றர் அளவில் மழைப்பெய்யக்கூடும்.

இதன்போது மணித்தியாலத்திற்கு 75 முதல் 85 கிலோமீற்றர் வேகத்தில் பலத்து காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

நாட்டை சூழவுள்ள கடல்பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலங்களுக்கு 80 முதல் 100 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மறுஅறிவித்தல் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது,

தற்போது கடலில் உள்ளவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு கோரப்பட்டுள்ளது

அத்துடன் கடல் அலையானது ஒரு மீற்றர் அளவுக்கு உயரக்கூடுமெனவும் சுட்டிக்காட்டிப்பட்டுள்ளது.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் அசாதாரணக் காலநிலை காரணமாக ஏற்படக் கூடிய சுகாதார சேவைகளுக்காக விசேட இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அழகையா லதாகரன் இதனை எமது செய்தி பிரிவுக்கு குறிப்பிட்டார்.

இதற்கமைய சூறாவளியின் போது அல்லது அதற்கு பின்னர் கிழக்கு மாகாணத்தில் சுகாதார தேவைகளுக்காக 070 222 222 7 அல்லது 076 1616 133 என்ற இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்த முடியும்.

அத்துடன் திருகோணமலை மாவட்டத்தில் 026 3135 888 என்ற இலக்கத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 070 6000 631 என்ற இலக்கத்திற்கு அழைப்பு ஏற்படுத்த முடியுமென கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்; தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தின் சகல பாடசாலைகளும் இன்று முதல் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வரை மூடப்படவுள்ளன.

கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹாம்பத் இதனை அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் நிலவக்கூடிய அசாதாரண காலநிலையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 #மட்டக்களப்பு மாவட்டத்தை  #சூறாவளி தாக்கும் என எதிர்வு கூறப்படுவதால்  #மட்டக்களப்பு மாவட்ட மக்களையும் அதிகாரிகளையும் வி...
01/12/2020

#மட்டக்களப்பு மாவட்டத்தை #சூறாவளி தாக்கும் என எதிர்வு கூறப்படுவதால் #மட்டக்களப்பு மாவட்ட மக்களையும் அதிகாரிகளையும் விழிப்பூட்டும் முகமாக #மட்டக்களப்பு #மாவட்ட செயலகம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

மட்டக்களப்பு ஆயித்தியமலை அரச அரசி ஆலையினை உடனடியாக செயற்படவைக்க  அரசாங்க அதிபர் கருணாகரன் நடவடிக்கைமட்டக்களப்பு ஆயித்திய...
01/12/2020

மட்டக்களப்பு ஆயித்தியமலை அரச அரசி ஆலையினை உடனடியாக செயற்படவைக்க அரசாங்க அதிபர் கருணாகரன் நடவடிக்கை

மட்டக்களப்பு ஆயித்தியமலையில் அரசினால் அமைக்கப்பட்டுள்ள அரிச ஆலையினை இம்முறை அறுவடைசெய்யப்படும் பெரும்போக நெல்லினைக் கொண்டு செயற்பட வைக்க மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

உன்னிச்சைக் குளத்தின் நீர்ப்பாசனத்தை நம்பி நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளின் அறுவடைகளுக்கு சந்தை வாய்ப்பினயும், அப்பகுதி மக்களின் தொழி வாய்ப்பினைப் பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் வவுனதீவு பிரதேச செயலாளர் பிரிவின் ஆயித்திய மலைப்பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள அரச அரிசி ஆலையினை பார்வையிடும் அரசாங்க அதிபரின் களவிஜயம் இன்று (01) இடம் பெற்றது.

இம்முறை செய்கை பண்ணப்படும் பெரும்போக நெல் அறுவடையினைக் கொண்டு இவ்வரிசி ஆலையினை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அரசாங்க அதிபர் கருணாகரன் சம்மந்மப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

இக்களவிஜயத்தின்போது மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வீ. நவனீதன், மாவட்ட செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதீஸ்குமார், மண்முனை மேற்கு வவுனதீவு உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன், மண்முனை மேற்கு பிரதேச பிரதி திட்டமிடல் பணிப்பாளர் எஸ். சபேஸ். மாவட்ட தகவல் அதிகாரி வீ. ஜீவானந்தன ஆகியோர் பிரசன்னமாயிருந்தனர்.

சுமார் 65 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட் இவ்வரிசி ஆலையானது அமைக்கப்பட்ட நோக்கத்திற்கமைவாக கூட்டுறவு அமைப்பினூடாக செயற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
01.12.2020

மட்டக்களப்பில் உறுகாமம், கித்துள் குளங்களின் இணைப்பினூடா 90எம்.சீ.எம். நீர் கொள்ளவினைப் பெற்றுக்கொள்ள சாத்திய வளங்கள் ஆர...
27/11/2020

மட்டக்களப்பில் உறுகாமம், கித்துள் குளங்களின் இணைப்பினூடா 90எம்.சீ.எம். நீர் கொள்ளவினைப் பெற்றுக்கொள்ள சாத்திய வளங்கள் ஆராய்வு

முந்தனை ஆறு ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் மட்டக்கப்பு மாவட்டத்திலுள்ள உறுகாமம் மற்றும் கித்துள் குளங்களினை இணைத்து உருவாக்கப்படவுள்ள நீர்த்தேக்கத்தினை 90 எம்.சீ.எம். ஆக உயர்த்துவதற்கான சாத்திய வளங்களை ஆராயம் விசேட கூட்டம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தனின் பங்குபற்றுதலுடன், அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் இன்று (27) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

பிரான்ஸ் நாட்டு அபிவிருத்தி நிறுவனம், ஐரோப்பிய ஒன்றியம் மாற்றம் இலங்கை அரசின் நிதிப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவிருக்கும் முந்தனை ஆறு ஆற்றுப்படுக்கை அபிவிருத்தித் திட்டத்தில் உறுகாமம், கித்துள் குளங்கள் இணைத்த நீர்த்தேக்கத்திட்டம் 58 எம்.சீ.எம். ஆக உயர்த்துவதற்கான முன்மொழிவுகள் வைக்கப்பட்டு திட்டமிடப்பட்டிருந்தது.

இருப்பினும் தற்பொழுது இந்நீர்த்தேக்கத்தினை 90 எம்.சீ.எம். ஆக உயர்த்துவதன் மூலம் இப்பகுதியில் தற்போதுள்ள 11 ஆயிரம் நீர்ப்பாசனக் காணிகளுக்கு மேலதிகமாக 14 ஆயிரத்தி 230 ஏக்கர் விவசாய காணிகளுக்கு இருபோகத்திற்கான நீர்ப் பாசனம் வழங்கமுடிவதுடன், 25 ஆயிரம் குடும்பங்களுக்கு குடிநீர் வசதிகளையும் வழங்க முடியுமாகவுள்ளது.
இந்நீர்த் தேக்கத்தினை 90 எம்.சீ.எம். ஆக உயர்துவதற்கான சாத்தியவள அறிக்கை சம்மந்தப்பட்ட திணைக்களங்களினாலும், நிபுனர் குழுவினாலும் ஆராயப்பட்டு வருகின்றதுடன் இதுவரை அவ்அறிக்கை நிறைவு பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இதுதவிர இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதனூடாக சித்தாண்டி, வந்தாறுமூலை, கிரான், முறக்கட்டான்சேனை பிரதேசங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கு குறைவடைதல், விவசாய நிலங்களின் உற்பத்தி அதிகரித்தல், உப உணவுப் பளிர்ச் செய்கை அதிகரித்தல், நன்னீர் மீன்பிடி வசதி அதிகரித்தல், கால்நடைக்கிசைவான பயிர் செய்கை ஊக்குpத்தல், மேச்சல்தறை வசதிகளைப் பெற்றுக் கொள்ளல் போன்ற நேரடி நன்மைகள் பெற்றுக் கொள்ளக்கூடியதாக எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விசேட கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்த், கிழக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் சமன் வீரசிங்க, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திருமதி. சசிகலா புண்ணியமூர்த்தி, சம்மந்தப்பட்ட திணைக்கள உயர் அதிகாரிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.
27.11.2020

 #அக்கரப்பற்றில்  #இதுவரை 31  #பேர்  #இனங்காணப்பட்டுள்ளனர்கல்முனை பிராந்தியத்தில் தற்போது வரை 32 கொரோனா தொற்றாளர்கள் இனங...
26/11/2020

#அக்கரப்பற்றில் #இதுவரை 31 #பேர் #இனங்காணப்பட்டுள்ளனர்

கல்முனை பிராந்தியத்தில் தற்போது வரை 32 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் சகல பொதுச்சந்தைகள் மற்றும் பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.

இன்று(26) மாலை கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அக்கரைப்பற்று சந்தையுள்ள கடை உரிமையாளர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குறித்த பிசிஆர் பரிசோதனை நேற்று எழுமாறாக மேற்கொள்ளப்பட்டீரந்தது. இதில் 31 பேர் அக்கரைப்பற்று பகுதியிலும் ஒருவர் சாய்ந்தமருதிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் அக்கரைப்பற்று சுகாதார பிரிவிலுள்ள பிரதேசங்கள் இன்றில் இருந்து (26) மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது அம்பாறை மாவட்டத்தில் வேகமாக கொரனா தொற்றுபரவியுள்ளதால் எதுவித பாகுபாடுமின்றி சட்டநடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பணித்துள்ளேன்.

சமுக இடைவெளி பேனாமை, முக்க்கவசம் அணியாமை, பலர்ஒன்றுகூடுதல் போன்ற நடவடிக்கைகள் மிக உன்னிப்பாக கண்காணிக்கப்படவுள்ளன.இதேவேளை அக்கரைப்பற்று சுகாதாரப்பிரிவு தனிமைப்படுத்தல் பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.இதே வேளை ஆளுநரின் ஆலோசனைக்கு இணங்க கல்முனை சம்மாந்துறை அக்கரைப்பற்று திருக்கோவில் கல்வி வலயத்துக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளையும் ஒரு வாரத்துக்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.ஆகவே தாங்களும் தங்களது உறவுகளும் பாதுகாப்பாக இருக்க கொரோனா தொடர்பான முன்னெச்சரிக்கையினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். மேலும் அக்கரைப்பற்று நகர் பகுதிக்கு செல்வதை முற்றாக தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்படுகின்றீர்கள்.

இன்றும் அக்கரைப்பற்று பிரதேசத்தில் 50பேருக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்களுக்குட்பட்ட பிரிவுகளில் இன்று மாலை 6 மணி தொடக்கம் மறு அறிவித்தல்வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தனது கருத்தில் தெரிவித்தார்.

தகுதியான வேலைக்கு நேரடியாக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் இத்திட்டம் நடைபெறுக...
26/11/2020

தகுதியான வேலைக்கு நேரடியாக விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் இத்திட்டம் நடைபெறுகின்றது.

விண்ணப்பங்களை download செய்து பூர்த்தி செய்து மின்னஞ்சல் அனுப்பலாம்.

https://1drv.ms/u/s!AhURCgaWsvCSaE6531D7AKpRcl8?e=i41oAF

சுயதொழில் முயற்சியாளர்களுக்கு அல்லது தனியார் துறையில் தொழிலொன்றை எதிர்பார்ப்பவர்களுக்கு ...

தொலைபேசி இல - 0112 186 171
மின்னஞ்சல் - [email protected]

நன்றி
அட்மின்

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வழிபாடுகளில் சந்திரகாந்தன்தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன...
26/11/2020

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வழிபாடுகளில் சந்திரகாந்தன்
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்றையதினம் கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலயத்திற்குச்சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன் பிரதேச மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் காரணமாக 5 வருடங்களுக்கு மேலாக சிறை வைக்கப்பட்டிருந்ததுடன் கடந்த 24 ம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மட்டு அரசியல் திருமலை அரசியலுடன் இணைந்ததுபின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருள...
26/11/2020

மட்டு அரசியல் திருமலை அரசியலுடன் இணைந்தது

பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்ச்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கௌரவ ச. வியாழேந்திரன் அவர்களின் திருகோணமலை வருகையின் போது.

அம்பாறை அக்கரைப்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதன்...
26/11/2020

அம்பாறை அக்கரைப்பற்று பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 10 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதன் காரணமாக அக்கரைப்பற்று சுகாதார பிரிவிலுள்ள பிரதேசங்கள் இன்றில் (26) இருந்து மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதரா
சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

குறித்த பிரதேசத்திலுள்ள மீன் சந்தையில் வியாபாரத்தில் ஈடுபட்ட 20 பேருக்கு நேற்று புதன்கிழமை (25) எழுந்தமானமாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பிரிசோதனையில் 10 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது

இதனையடுத்து அவர்களை உடனடியாக கொரோனா தொற்றுக்காக சிகிச்யைளிக்கப்படும் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதுடன் அந்த சுகாதார பிரிவிலுள்ள பிரதேசங்கள் இன்றில் இருந்து மறு அறிவித்தல் வரும்வரை உரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார் .

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றதடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி இன்று காலை காலிமுகத்திடலில் உடற்பயிற்சியில் ஈடுபட்...
26/11/2020

கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் குற்றதடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி இன்று காலை காலிமுகத்திடலில் உடற்பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது
மாரடைப்பினால் திடீரென உயிரிழந்துள்ளார்.

Address

428/1 Trinco Road Batticaloa
Batticaloa
30000

Telephone

+94756876820

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thanumithan Nithyanandadeva posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thanumithan Nithyanandadeva:

Share