VM News LK

VM News LK Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from VM News LK, Media/News Company, Batticaloa, Batticaloa.

29/01/2026

புதிய கல்வி மறுசீரமைப்பின் கீழ், தரம் 06 இற்கான மறுசீரமைப்பு 2027ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படும் - பிரதமர்

29/01/2026

இன்று (29) முதல் அமுலாகும் புதிய கல்வி சீர்திருத்தம் - கல்வி அமைச்சு அறிவிப்பு

29/01/2026

மட்டு செங்கலடி புலையவெளி பகுதியில் காட்டுயானை வேலியின் மின்சாரம் தாக்கியதில் இருவர் உயிரிழப்பு.

மட்டக்களப்பில் அதிகரிக்கும் தற்கொலைகள்மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில் அதனை தடுக்கும் முகமா...
23/01/2026

மட்டக்களப்பில் அதிகரிக்கும் தற்கொலைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலைகள் அதிகரித்துவரும் நிலையில் அதனை தடுக்கும் முகமாக அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்களை தெளிவுபடுத்தும் செயலமர்வொன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் தலைமையில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின் ஒன்றுகூடல் மண்டத்தில் இச் செயலமர்வானது இடம்பெற்றது.

குறித்த செயலமர்வில் மட்டக்களப்பில் சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்கள் தற்கொலைகளை தடுப்பதற்கான செயற்திட்டங்களைய சுகாதாரத் துறையுடன் ஒன்றினைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாக தெளிவூட்டப்பட்டதுடன், குறித்த விடையம் தொடர்பாக ஏற்கனவே தொண்டு நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்ட மையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த செயலமர்வில் சுகாதார துறைசார்ந்த பணியாளர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

23/01/2026

உலக சந்தையில் தங்கத்தின் விலை 4,900 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது - சர்வதேச ஊடகங்கள்

17/01/2026

மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்கா முழுவதும் இடம்பெறும் மோதல்களால் வான்வௌியைப் பயன்படுத்தும் போது எச்சரிக்கையுடன் செயற்படுத்துமாறு அமெரிக்க விமானப் போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

07/11/2025

இன்று ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2026 வரவு செலவு திட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி.

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் மழை பெய்யும் சாத்தியம்கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன...
11/10/2025

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் பிற்பகல் மழை பெய்யும் சாத்தியம்

கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும், பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணத்தின் சில இடங்களில் 50 மி.மீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் மேல் மற்றும் தெற்கு மாகாணங்களில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

முட்டை விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானம்அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டை ஒன்றின...
11/10/2025

முட்டை விலையை 10 ரூபாவால் குறைக்க தீர்மானம்

அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் முட்டை ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் விலை 18 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் விலை 20 ரூபாவாகவும் விற்பனை செய்ய தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் நவோத் சம்பத் பண்டார தெரிவித்தார்.

50,000 இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் தேசிய வேலை திட்டம்50,000 இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் தே...
15/07/2025

50,000 இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் தேசிய வேலை திட்டம்

50,000 இளைஞர் யுவதிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் தேசிய வேலைத் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இதற்கான திட்டத்தை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவின் ஆலோசனைக்கு அமைய, கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு நாடளாவிய ரீதியில் முன்னெடுத்துள்ளது.

இதன் மூலம் உள்நாட்டு வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை இலக்காகக் கொண்டு 18 வயதுக்கு 35 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு தேவையான துறைகளில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.

இதற்கான நேர்முகப் பரீட்சைகள் இம்மாதம் 15 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலகங்கள் தோறும் இடம்பெறவுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாது உடனடியாக www.nextsrilanka.lk என்ற இணையதளத்தின் மூலம் பிரவேசித்து இன்றே பதிவினை மேற்கொள்ளுங்கள்.

இத்திட்டத்தின் கீழ் நாடாக ரீதியில் வருமானம் குறைந்த 2 மில்லியன் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் மேம்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தை தவறவிடாது க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கு தோற்றி விட்டு தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்து இருக்கின்ற சகல இளைஞர் யுவதிகளும் இதற்காக தம்மை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

Address

Batticaloa
Batticaloa

Alerts

Be the first to know and let us send you an email when VM News LK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share