04/08/2025
சவுதி அரேபியாவில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது செய்திகள் குறிப்பிடுகின்றன.
கஞ்சா கடத்திய குற்றத்துக்காக, நாட்டின் தெற்கு பகுதியான நஜ்ரானில் 4 சோமாலியர்கள் மற்றும் 3 எத்தியோப்பியர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
அத்துடன் ஒரு சவுதி குடிமகனுக்கு, தனது தாயைக் கொலை செய்த குற்றத்துக்காக மரணதண்டனை நிறைவேற்றப்பட்டாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து சவுதி அரேபியாவில் 230 பேருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதில் 154 பேர் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர்.
சவுதியில் 2022 ஆம் ஆண்டில் 19 பேரும், 2023 ஆம் ஆண்டில் 2 பேரும், 2024 ஆம் ஆண்டில் 117 பேரும், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர்.
கடந்த 2024ஆம் ஆண்டு 338 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன என செய்திகள் குறிப்பிடுகின்றன.