Media24

Media24 "MEDIA24" அனைத்து விதமான செய்திகளையும் வெளியிடுகின்ற தமிழ் இணையத்தளமாகும்

01/08/2022

மட்டக்களப்பிள் தொடங்கியது மழை

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழாவுக்கான கொடிச் சீலை எடுத்து வரும் நிகழ்வு இன்று காலை...
01/08/2022

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பெருந்திருவிழாவுக்கான கொடிச் சீலை எடுத்து வரும் நிகழ்வு இன்று காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.

ஆலய மரபின் படி நல்லூர் கிழக்கு சட்ட நாதர் ஆலயத்தை அண்மித்து அமைந்துள்ள வேல் மடம் முருகன் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட அபிடேக ஆராதனைகளைத் தொடர்ந்து, கொடிச் சீலை தயாரிக்கும் மரபினையுடைய குடும்பத்தினர் சிறிய தேர் ஒன்றில் கொடிச் சீலையை எடுத்து வந்து நல்லூர்க் கந்தசுவாமி ஆலயப் பிரதம குருக்களிடம் கையளித்தனர்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந் திருவிழா நாளை 02 ஆம் திகதி காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாள்கள் இடம்பெறவுள்ளது.

https://youtu.be/xSoW2PkrD4E
01/08/2022

https://youtu.be/xSoW2PkrD4E

சமகால அரசியல் தொடர்பாக MP சாணக்கியனின் கருத்து

மீண்டும் எரிபொருள் விலை குறைப்பு?எரிபொருளின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைவடைவதற்கான சாத்தியம் காணப்படுவதாக பெற்றோலிய க...
01/08/2022

மீண்டும் எரிபொருள் விலை குறைப்பு?

எரிபொருளின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைவடைவதற்கான சாத்தியம் காணப்படுவதாக பெற்றோலிய கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி 50 ரூபா முதல் 100 ரூபா வரை குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்துள்ள நிலையில், இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

01/08/2022 | இன்றைய ராசி பலன்!    |   |
01/08/2022

01/08/2022 | இன்றைய ராசி பலன்!

| |

நமது செயல்கலே நமது சந்ததிகளில் பிரதிபலிக்கும்......
31/07/2022

நமது செயல்கலே நமது சந்ததிகளில் பிரதிபலிக்கும்......

நாளை முதல் எதிர்வரும் தினங்களில் மழை அதிகரிக்கக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்
31/07/2022

நாளை முதல் எதிர்வரும் தினங்களில் மழை அதிகரிக்கக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்

ரணிலின் அதிரடிகள்! எரிபொருட்களின் விலைகள் மீண்டும் குறைப்பு!எரிபொருளின் விலை 50 முதல் 100 ரூபா வரை குறைக்கப்படும் என பெற...
31/07/2022

ரணிலின் அதிரடிகள்! எரிபொருட்களின் விலைகள் மீண்டும் குறைப்பு!

எரிபொருளின் விலை 50 முதல் 100 ரூபா வரை குறைக்கப்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விலை குறைப்பு இன்று (1) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.

உலக சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியுடன் ஒப்பிடும் போது இலங்கையில் எண்ணெய் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்க பதில் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் எரிபொருளின் விலையை பத்து முதல் இருபது ரூபா வரை குறைக்க நடவடிக்கை எடுத்தார்.

 #ஒரு_முதியோரின்_டைரியில்  #எழுதி_இருந்த_ஓர்_உண்மைக்_கதை.திருமணமாகி 35 வருடங்கள் அவருக்கு 61 வயது. கடந்த மாதம் ஓய்வுபெற்...
31/07/2022

#ஒரு_முதியோரின்_டைரியில்
#எழுதி_இருந்த_ஓர்_உண்மைக்_கதை.

திருமணமாகி 35 வருடங்கள் அவருக்கு 61 வயது. கடந்த மாதம் ஓய்வுபெற்று வீட்டில் மனைவியோடு சாகவாசமாக இருக்கிறார்.
வேலை நாட்களில் காலை மற்றும் இரவு தான் மனைவியை பார்ப்பதே... ஒரு சில வார்த்தைகள் பேசுவதோடு சரி. ஞாயிற்று கிழமையில் கூட அங்க இங்க என சென்றுவிடுவது..

கடுமையா உழைத்து குடும்பத்தைப் பார்த்தார்...
இப்போது தான் ஆற அமர பொறுமையாக உட்கார்ந்து மனைவியுடன் பேச முடிகிறது..

வீட்டில் எது எங்க இருக்கு என அறியமுடிகிறது...
வீட்டு வராந்தாவில் உட்காந்திருந்தவர் மனைவியைக் கூப்பிட்டார்... மனைவி இவரை விட 8 வயது இளமையானவள்.. அதனால் 52 வயதிலும் சுறுசுறுப்பாக இருந்தாள்..

வந்து பக்கத்தில் நின்றவள் கூப்பிட்டீங்களா என பார்த்தாள்..
"ஆமா... ஆமா.. வா உட்காரு உன்கூட மனசு விட்டுப் பேசி எவ்வளவு காலமாச்சு..."
அவளும் உட்கார அவள் கையை பற்றி... ஏதோ பேச வந்தவர்... அவள் கை சொர சொரப்பாக இருக்க அவளின் உள்ளங்கையை திருப்பி பார்த்தார்.. முகங்கள் சுருங்கியது... கண்கள் கலங்கியது.. கை பூரா வெட்டுக்காயமா இருக்கே... நகம் கூட வெடிச்சிருக்கே.. ஒரே தழும்பா இருக்கு என்னது.. நீ என்னய திருமணம் செய்து வரும்போது பட்டு மாதரி இருந்தாயே.. உன் கை பளபளப்பா வழுவழுப்பா இருந்ததே என நிமிர்ந்தார்...

அவள் மெல்லிய சிரிப்புடன்
நான் எதை என்னவென்று சொல்ல.. 35 வருசத்தில சமையல்ல எண்ணெய் தெறிச்சதா இருக்கலாம்.. காய்கறி நறுக்கும்போது அருவாள் கத்தி கீறியிருக்கலாம்... அடுப்பில் இருந்து பாத்திரம் இறக்கும்போது சூடு பட்டிருக்கலாம்... இப்படி ஏதேதோ நடந்திருக்கும்... என்றாள்...

மெல்லிய கோடாய் அவளின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் வடிந்தது...

என்ன சொல்றாய் அது என்ன கையில் மேல அவ்வளவு பெரிய தீக்காயம் மாதிரி என்று அதிர்ந்தார்...
நீங்க என்னை வண்டியில உள்ள கவர எடுத்துவா என 4 வருசத்திற்கு முன்னாடி ஒரு நாள் கூறினீங்க... நானும் எடுத்துவர போனேன். கவர் கீழ விழ நான் எடுக்கும்போது உங்க வண்டி சைலன்சர் சுட்டுடுச்சு.. அப்பதானே வந்தீங்க... அதான் சூடா இருந்தது என்றாள்...
இது என்ன குழந்தையாட்டம் நீ என்கிட்ட சொல்லவே இல்லயே..

நான் சொல்லலதாங்க... எந்த காயத்தையும் நா சொல்லலங்க... அப்ப நான் சொன்னா கூட நீங்க என்னை தானே திட்டுவீங்க பொறுப்பிள்ளையா ... பார்த்து நடக்கமாட்டியா... என.. என்றாள்.

என் கண்களில் கூட படலியே இதெல்லாம்... என்றார் வலி நிறைந்த குரலில்..
என்னை நீங்க அருகில சந்திக்கிறதே சில நிமிடம்தான்.
அப்ப எப்படிங்க என் உடல் காயங்கள் உங்களுக்கு தெரியும் என்றாள்...

அப்படி நினைக்காதே.. நமக்காக தானே நான் இப்படி ஓடாய் உழைத்தேன். பசங்கள படிக்க வச்சு வெளிநாட்டுக்கு அனுப்பினேன்.. உன்னையும் ஒரு குறையும் இல்லாம பார்த்தேன்... என்றார்..

உடல்காயங்களே உங்க கண்ணுக்கு இப்பதான் தெரியுது. என் மனக்காயங்கள் உங்களுக்கு எப்பவுமே தெரியாதுங்க...
என்னை மன்னிச்சிடு . பணம் சேர்க்கும் பரபரப்பில் இயந்திரமாக இருந்துவிட்டேன்..
என்று அவளின் கையை மெதுவாக அழுத்தினார்...
எனக்கொரு ஆசைங்க... அத இப்பவாவது கேட்கமுடியுமா ... என்றாள் குரல் சுருதி குறைவாக...

கேளு என்றார்.நாம் திருமணமான புதிதில சில நாட்கள் நான் உங்க மடியிலயும் நீங்க என் மடியிலயும் தலை வைத்து படுத்திருக்கோம்... அப்புறம் 35 வருசமா தலையணைலதான் நாம தலை வைத்து படுத்திருக்கோம்... இப்ப உங்க மடியில கொஞ்சம் தலை வைத்து படுத்துக்கவா... என கேட்க அவருக்கும் கண்கள் கலங்கியே விட்டது... அவளை அணைத்து தன் மடியில் படுக்க வைத்தவர் குழந்தையைப்போல் அவளை பார்த்தார்.
மனசு நிறைய பாசம் அன்பு இருந்தாலும் அதை ஆண்களுக்கு வெளிப்படுத்த தெரிவதில்லை அதற்கான நேரம் வரும்வரை....
இதே போல்தான் பெரும்பாலும் எல்லா பெண்களின் வாழ்வும்.. திருமணமாகும் போது இருந்த மென்மையை அவர்களின் கை மட்டுமல்ல உடலும் மனமும் கூட இழந்து மரத்துப்போகிறது...

எத்தனை கணவன்மார் மனைவிக்கென நேரம் ஒதுக்கி அவளின் மனக்குறைகளை கேட்கிறார்கள்.. மனம் விட்டு பேசுகிறார்கள்...

ஆண்களே, உங்கள் மனைவியின் கையை பிடித்து பாருங்கள் எத்தனை கீறல்கள், காயங்கள் இருக்கும் என... இவை ஏன் வந்தது என கேளுங்கள்...
அவளின் மனக்காயம் வெளிவரும்.

படித்ததில் வலித்தது..
உண்மையும் கூட..
😌😌😌😌😌

சவூதி அரேபியா மிரர் லைன் எனப்படும் கட்டமைப்பை நிர்மாணிப்பதற்கான திட்டத்தை வெளியிட்டது. இது 488 மீட்டர் (1,600 அடி) உயரம்...
31/07/2022

சவூதி அரேபியா மிரர் லைன் எனப்படும் கட்டமைப்பை நிர்மாணிப்பதற்கான திட்டத்தை வெளியிட்டது.

இது 488 மீட்டர் (1,600 அடி) உயரம் கொண்ட இரண்டு கண்ணாடி பிரதிபலிப்பு கட்டிடங்களைக் கொண்டிருக்கும், கடலோர, மலை மற்றும் பாலைவன நிலப்பரப்பு முழுவதும் 120 கிலோமீட்டர் (75 மைல்) வரை இணையாக இயங்கும்.

இரண்டு கட்டிடங்களும் நடைபாதைகள் வழியாக இணைக்கப்பட்டு, அவற்றின் அடியில் அதிவேக ரயில் இயக்கப்படும். கட்டுமானம் முடிவடைந்தவுடன் $1 டிரில்லியன் செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,

மேலும் 20 நிமிட இடைவெளியில் இறுதி முதல் இறுதி வரை பயணிக்கக்கூடிய ஐந்து மில்லியன் மக்கள் தங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

#கட்டிடம்

முகக்கவசம் அணியாவிட்டால் எரிபொருள் இல்லை..!முகக்கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வருகை தருபவர்களுக்கு எ...
31/07/2022

முகக்கவசம் அணியாவிட்டால் எரிபொருள் இல்லை..!

முகக்கவசம் அணியாமல் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு வருகை தருபவர்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படமாட்டாது என எரிபொருள் விநியோகிப்பவர்களின் சங்கம் அறிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகிப்பவர்களின் சங்கத்தின் இணை செயலாளர் நாவொட்டுன்ன இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த நடைமுறை நாளை முதல் அமுலுக்கு வரவுள்ளதோடு, வரிசைகளில் காத்திருக்கும் அனைவரும் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

முகக்ககவசம் அணியாது பஸ்களில் பயணிப்பவர்கள், பொது இடங்களில் நடமாடுபவர்கள், வரிசைகளில் காத்திருப்பவர்கள் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அந்த சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Address

Chenkalady
Batticaloa
30000

Telephone

+94710565156

Website

Alerts

Be the first to know and let us send you an email when Media24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Media24:

Share