20/09/2025
*💊 பரசிடமோல் (Paracetamol)*
* பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை சிறு வலி என்றாலும், காய்ச்சல் என்றாலும் நாம் பாவிக்கின்ற பரசிட்டமோல் பற்றி இன்று பார்க்கலாம்.
* எல்லா மருந்துகளும் வழக்கமாக Pharmacy களிலேயே விற்கப்பட வேண்டும். ஆனால் இதனை நீங்கள் சாதாரண கடைகளிலும் பெற முடியும்.
* வைத்திய ஆலோசனை இன்றியே நீங்கள் வழக்கமாக எடுக்கக் கூடிய மருந்துகளுள் இதுவும் ஒன்று.
*❓ என்ன மருந்து இது?*
* காய்ச்சல் (Fever) மற்றும் பல்வேறு பட்ட வலிகளைக் (Pain) குறைக்கப் பயன்படுத்தப்படும் பொதுவான பாதுகாப்பான மருந்து.
* இதிலுள்ள இரசாயனப் பொருள் “Acetaminophen” என்று அழைக்கப்படுகிறது.
*✅ எப்போது இதனைப் பாவிக்கலாம்?*
* 🌡️ காய்ச்சல் ஏற்படுகிற போது, காய்ச்சலைக் குறைக்க
* 🤕 தலைவலி, உடல்வலி, பல் வலி, மூட்டு வலி, தசைவலி, வயிற்றுவலி என உடலில் ஏற்படும் பல்வேறு வலிகளின் போது அதனைக் குறைக்க
* 👶 குழந்தைகளுக்கும் அளவோடு பாதுகாப்பாக பயன்படுத்தலாம்
*💊 பரிந்துரைக்கப்பட்ட மருந்தின் அளவு (Dosage) என்ன?*
*👨🦱 பெரியவர்கள் (50kg இற்கு மேற்பட்ட எடையுடையவர்கள்):*
* ஒரு வேளைக்கு: உயர்ந்த பட்சம் 1 g (1000 mg) - சாதாரணமாக இரண்டு குளிசைகள்
* ஒரு நாளில்: உயர்ந்தபட்சம் 4 g (4000 mg) - சாதாரணமாக ஒரு நாளைக்கு 4 வேளைகள் அதாவது 6 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை
*👶 குழந்தைகள் (50kg இற்கு குறைந்த எடையுடையவர்கள்):*
* குழந்தைகளைப் பொறுத்தவரை உடல் நிறைக்கேற்பவே பரசிட்டமோல் குளிசைகளை அல்லது மருந்தினைக் கொடுக்க வேண்டும்.
* குளிசையைப் பொறுத்தவரை, ஒரு வேளைக்கு: உயர்ந்த பட்சம், 1 kg நிறைக்கு 10–15 mg - உதாரணமாக 20 kg குழந்தையெனின் 200-300 mg
* ஒரு நாளில்: உயர்ந்தபட்சம் 60 mg/kg இனைத் தாண்டக் கூடாது. உதாரணமாக 20 kg குழந்தை எனின், ஒரு நாளைக்கு உயர்ந்த பட்சம் 1200 mg மாத்திரமே. சாதாரணமாக ஒரு நாளைக்கு 4 வேளைகள் அதாவது 6 மணித்தியாலங்களுக்கு ஒரு தடவை
* மருந்தினைப் பொறுத்தவரை, மருந்துப் பெட்டியில் எடை மற்றும் வயதிற்கேற்ப உள்ளெடுக்க வேண்டிய அளவு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனைப் பின்பற்றவும் அல்லது மருத்துவ ஆலோசனை பெறவும்.
*⚠️ அதிக அளவில் எடுத்தால் (Overdose) என்ன நடைபெறும்?*
* 🚫 கல்லீரல் சேதமடையும் (Liver failure)
* 🚫 வயிற்றுவலி, வாந்தி, மஞ்சள் காமாலை, மரண அபாயம் கூட ஏற்படலாம்
*🚫 எப்போது இதனைப் பயன்படுத்தக்கூடாது?*
* ❌ கல்லீரல் நோய் / Hepatitis / Cirrhosis உள்ளவர்கள்
* ❌ Alcohol/சாராயம் அதிகம் குடிப்பவர்கள் - ஏற்கனவே ஈரல் பாதிப்படையும் அபாயம் உண்டு
* ❌ Paracetamol இற்கு ஒவ்வாமை/allergy உள்ளவர்கள் (அரிதாக சிலருக்கு இவ் ஒவ்வாமை காணப்படும்)
*💊 எத்தனை நாட்களுக்கு மருத்துவ ஆலோசனை இன்றி இதனை உபயோகிக்கலாம்?*
* ✅ பெரியவர்கள் - 3 நாட்கள் வரை
* ✅ குழந்தைகள் (Children) - 2 நாட்களுக்கு
*🚨 பரசிடமோல் குளிசைகளை எடுத்தாலும், உடன் வைத்தியரை அணுக வேண்டிய நிலைகள் எவை?*
* குளிசை எடுத்த பின்னர் ஒவ்வாமை ஏற்பட்டால் (தோலில் கடி, சிவத்தல், சூடு)
* 🌡️ காய்ச்சல் (Fever) - 104°F (40°C) க்கு மேல் காய்ச்சல்
* 🧒 3 மாதத்திற்கு குறைவான குழந்தைக்கு - 100.4°F இற்கு மேல் காய்ச்சல்
* 🩸 காய்ச்சலுடன் → தோலில் புள்ளிகள் (rash) இருத்தல் / இரத்தம் வெளியேறல்
* 😰 காய்ச்சலுடன் மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, வலிப்பு, சுயநினைவற்ற தன்மை
* 🌍 வெளிநாட்டுப் பயணத்திலிருந்து வந்த பிறகு காய்ச்சல்
* ⚡ திடீரென ஏற்படும் மிகக் கடுமையான தலைவலி
* ❤️ நெஞ்சுவலி
* 🩸 வயிற்று வலியுடன் இரத்த வாந்தி அல்லது கறுப்பு நிற மலம்
* 🦵 கால்/கையில் வலியுடன் திடீர் வீக்கம்
* 🧒 குழந்தையில் கடுமையான காது வலி / வயிற்று வலி
* 🌡️ காய்ச்சல் 3 நாட்களுக்கு மேல் நீடித்தால்
* 🤕 வலி 5 நாட்களுக்கு மேல் நீடித்தால்
* 🤢 வாந்தி, வயிற்றுவலி, மஞ்சள் காமாலை (மஞ்சள் நிற கண்கள்/ தோல்)
* 🩸 அசாதாரண இரத்தப்பெருக்கு / தோலில் இரத்தம் கண்டித்தல் தெரிந்தால்
* 🧒 குழந்தைக்கு 2 நாட்களுக்கும் மேலாக தேவையாக இருந்தால்
* 👩⚕️ கர்ப்பிணி / கல்லீரல் நோய் உள்ளவர்கள் வைத்திய ஆலோசனை இன்றித் தொடரக்கூடாது
*⚠️ வைத்திய ஆலோசனையையும் தாண்டி நீண்டகாலம் (Long-term use) இதனை எடுத்தால் என்ன நடைபெறும்?*
* 🧪 Chronic liver damage (Hepatotoxicity)/ நீண்ட கால கல்லீரல் சேதம்
* ⚠️ Kidney damage/ சிறுநீரகம் பாதிப்பு (analgesic nephropathy)
* 🩸 அரிதாக குருதி சார்ந்த சில நோய்கள் (thrombocytopenia, anemia)
* ⚠️ Gastritis / stomach upset/ இரைப்பைப் புண்கள்
*👉 சுருக்கம்:*
* Paracetamol = Safe friend in pain & fever
* ஆனால் “அளவுக்கு அதிகமாக” அல்லது “நீண்டகாலம்” எடுத்தால் → Silent poison (Liver + Kidney) ⚠️