04/10/2025
பாடல்: மறைந்திருந்து பார்க்கும்...
படம்: தில்லானா மோகனாம்பாள் ( 1968.07.27)
வரிகள்: கண்ணதாஸன்
இசை: KV.மகாதேவன், பாடியவர்: P.சுசீலா,
டைரக்ஷன்: AP.நாகராஜன்
பாடிக்கொண்டிருப்பவர்: யோகஸ்ரீ
இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி, நம்பியார், பாலாஜி, பாலையா, தங்கவேலு, நாகேஷ், சி. கே. சரஸ்வதி, மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர். தில்லானா மோகனாம்பாள் 'கலைமணி' என்ற புனைப்பெயரில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய நாவலாகும். இது தமிழ் வார இதழான ஆனந்த விகடனில் 1957-58 ஆம் ஆண்டில் தொடராக வெளிவந்தது. புகழ்பெற்ற நடனக் கலைஞரான மோகனாம்பாளுக்கும், நாதசுவரம் இசைக்கலைஞரான சண்முகசுந்தரத்துக்கும் இடையிலான உறவை இந்தக் கதை சித்தரிக்கிறது. நாவலுக்கான விளக்கப்படங்களை ஓவியக் கலைஞர் மற்றும் கேலிச்சித்திர ஓவியர் கோபுலு வரைந்தார்.