21/08/2026
"மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலகமெங்கும்"
அனைவருக்கும் அன்பான வணக்கங்கள்!
காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில், எமது மரபுகள், பண்பாடுகள் மற்றும் கலாசார விழுமியங்களைப் பேணும் வகையில், சிறப்பான “மன்டூர் பதி திருத்தல பாத யாத்திரை” நடைபெறவுள்ளது.
இந்த ஆன்மீகப் பாத யாத்திரை எதிர்வரும் 2026 ஆகஸ்ட் 22ஆம் திகதி, சனிக்கிழமை அதாவது நாளை ,அதிகாலை 4.00 மணிக்கு, காரைதீவு மாவடி ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்திலிருந்து ஆரம்பமாகவுள்ளது.
அன்றைய நிகழ்வுகளில், மாலை 4.00 மணிக்கு வேலுக்கான பூசை வழிபாடுகள், இடம்பெற்று தொடர்ந்து 5.00 மணிக்கு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தை அடைதல், **5.10 மணிக்கு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் பக்தர்களை ஒன்றுபடுத்தி **, அதனைத் தொடர்ந்து **5.20 மணிக்கு பாதயாத்திரை ஆரம்பமாகம்....
பாத யாத்திரையானது காரைதீவு, கல்முனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, சவளக்கடை, நாவிதன்வெளி, அன்னமலை, 7ஆம் கிராமம், வேம்பையடி, தம்பலவத்தை, பாலமுனை ஆகிய பகுதிகளின் ஊடாகச் சென்று மண்டூர் பதி முருகன் ஆலயத்தை சென்றடையும்.
எனவே, மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வாழும் அனைத்து பக்த அடியார்களும் பொதுமக்களும் தங்களது பகுதிகளில் பாத யாத்திரையை வரவேற்று, ஆன்மீக உணர்வுடன் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
“இந்து சமயத்தை நாம் வளர்ப்போம் என முன்வருவோர் வேண்டும் மாபெரும் தியாகிகள் வேண்டும்” என்ற சுவாமி விவேகானந்தரின் சிந்தனையை முன்னிறுத்தி, எமது சமயம், மரபு மற்றும் பண்பாட்டைப் பாதுகாப்போம்.
ஏற்பாடு – காரைதீவு இந்து சமய விருத்திச் சங்கம்
அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு இவ்வான்மீகப் பயணத்தை சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.