Batti 1st news

  • Home
  • Batti 1st news

Batti 1st  news Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Batti 1st news, Media/News Company, .

12/07/2025
மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் எண்பதாவது (80) ஆண்டு நிறைவை முன்னிட்...
10/07/2025

மட்டக்களப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் எண்பதாவது (80) ஆண்டு நிறைவை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபவனி கடந்த சனிக்கிழமை (05) இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக பாடசாலைக் கொடியேற்றம்,பாடசாலைக் கீதம் இசைத்தல்,அமுதவிழா கவி இசைத்தல்,மத குருமார் ஆசியுரை ஆகியன நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து நடைபவனி பாடசாலை முன்றலிலிருந்து ஆரம்பமாகி, தன்னாமுனை புனித ஜோசப் கல்லூரியியைச் சென்றடைந்து அங்கிருந்து ஆறுமுகத்தான் குடியிருப்பு கலைமகள் வித்தியாலயம் வரை சென்று மீண்டும் பாடசாலையை வந்தடைந்தது.

இதில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்,பாடசாலை மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மரணமடைந்த மாணவர்கள் மற்றும் கற்பித்த ஆசிரியர்களை நினைவுகூரல்,அமுதவிழா கேக் வெட்டுதல்,வலயக் கல்விப் பணிப்பாளர்,அதிபர்,முன்னாள் அதிபர் கௌரவிப்பு,க.பொ.த (சாதாரணதரம்) மற்றும் க.பொ.த (உயர்தரத்தில்),தேசிய மட்டப் போட்டிகளில் சாதனை படைத்த, மாணவர்கள் கௌரவிப்பு ஆகிய நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது.

மகாஜன கல்லூரிமாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி-2025!!மாபெரும் கிரிக்கெட் சுற்றுபோட்டி( 28) காலை 8 மணியளவில் மட்டக்களப்ப...
29/06/2025

மகாஜன கல்லூரி
மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி-2025!!

மாபெரும் கிரிக்கெட் சுற்றுபோட்டி
( 28) காலை 8 மணியளவில்
மட்டக்களப்பு வெப்பர் மைதானத்தில் இடம்பெற்றது.

மகாஜன கல்லூரியின் 150வது ஆண்டினை சிறப்பிக்கும் முகமாக பாடசாலையில் பழைய மாணவர் ஒன்றியத்தினால் தேசிய மகளிர் பாடசாலைகளுக்கு இடையிலான முக்கோண கிரிக்கெட் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் புனித சிசிலியாஸ் மகளிர் தேசிய பாடசாலை, வின்சென்ட் தேசிய மகளிர் பாடசாலை, மகாஜன கல்லூரி பழைய மாணவிகள் மோதியிருந்தனர்.

பத்து ஓவர் கொண்ட இச் சுற்றுப் போட்டியில் முதலாம் இடத்தை வின்சென்ட் தேசிய மகளிர் பழைய மாணவிகளின் அணியினர் பெற்றுக் கொண்டதோடு, இரண்டாம் இடத்தை புனித சிசிலியாஸ் மகளிர் தேசிய பாடசாலையின் பழைய மாணவிகளின் அணியும் மூன்றாவது இடத்தினை மகாஜன கல்லூரி பழைய மாணவிகளின் அணியும் பெற்றுக்கொண்டமை குறிபிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து கல்லடி விபுலானந்தா வித்யாலயம் மற்றும் மகாஜன கல்லூரி மாணவிகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டி ஒன்றும் இடம் பெற்றது அதில் 01/00 என்ற அடிப்படையில் மகாஜன கல்லூரி மாணவிகள் வெற்றி பெற்றனர்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, கௌரவ விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. முரளிதரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக மட்டு மாநகர சபையின் ஆணையாளர் என். தனஞ்செயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாடசாலைகளின் பழைய மாணவர்கள் , பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

(ஆர்.நிரோசன்)

புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாளின் தீ மிதிப்பு வைபவம்!!!கிழக்கில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு, புன்னைச்சோலை ஸ்ரீ பத...
27/06/2025

புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாளின் தீ மிதிப்பு வைபவம்!!!

கிழக்கில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு, புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாளின் வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதி நாளான இன்று (27) வெள்ளிக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் ஆரம்பமான தீ மிதிப்பு வைபவத்தில் சுமார் ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது

(ஆர்.நிரோசன்)

மட்டக்களப்பு மாநகர சபை கவனத்திற்கு!!!மற்றும் போக்குவரத்து போலீஸ்  மட்டக்களப்பு உத்தியோகஸ்தர்களின் கவனத்திற்குபிரதான வீதி...
24/06/2025

மட்டக்களப்பு மாநகர சபை கவனத்திற்கு!!!

மற்றும் போக்குவரத்து போலீஸ் மட்டக்களப்பு உத்தியோகஸ்தர்களின் கவனத்திற்கு

பிரதான வீதியில் மரக்கறி வியாபாரம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படவில்லை
இருப்பினும் வியாபாரம் நடக்கின்றது ...

கடந்த காலத்தில் இவ்விடத்தில் ஒரு மரணம் நிகழ்ந்த சம்பவம் இன்னும் மறக்கவில்லை ...
https://www.facebook.com/share/v/16UsFrK67u/

கார் விபத்தில்  15 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழப்பு பெண் ஒருவர் படுகாயம்!ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இ...
23/06/2025

கார் விபத்தில் 15 வயது சிறுமி உட்பட இருவர் உயிரிழப்பு பெண் ஒருவர் படுகாயம்!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலையில் இருந்து களுவங்கேணி நோக்கி பிரயாணித்த கார் வேககட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி பனைமரத்துடன் மோதிய விபத்தில் காரை செலுத்தி சென்றவர் மற்றும் 15 வயது சிறுமி உயிரிழந்ததுடன் டிபண் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனமதிக்கப்பட்ட சம்பவம் இன்று திங்கட்கிழமை (23)அதிகாலை 5.00 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

ஜெந்திரகுமார் சஞ்சய் , கருவப்பங்கேணி நாவலர் வீதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியான பிரதீபன் தவஸ்வாணி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்

இதில் உயிரிழந்தவர்களின் சடலம் மட்டுபொதனா வைத்தியசாலை பிரேத அறையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் போக்குவர்து பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

21/06/2025

கிழக்கு மாகாண ஜூடோ போட்டி 2025!!

கிழக்கு  மாகாண ஜூடோ  போட்டி 2025!! திருகோணாமலை மெக்கசா  உள்ளரங்கு விளையாட்டு  மைதானத்தில் நேற்று  (21) சனிக்கிழமை 10 மணி...
21/06/2025

கிழக்கு மாகாண ஜூடோ போட்டி 2025!!

திருகோணாமலை மெக்கசா உள்ளரங்கு விளையாட்டு மைதானத்தில் நேற்று (21) சனிக்கிழமை 10 மணியளவில் ஆண், பெண் இருபாலாருக்கு ஜூடோ போட்டி இடம் பெற்றது.

மாவட்ட மட்டத்தில் தெரிவாகி இருந்த அணிகள் மாகாண மட்ட போட்டிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அவ்வகையில் முதலாம் இடத்தை 09 தங்கப்பதக்கங்கள் பெற்று திருகோணமலை வீரர்களும் இரண்டாவது இடத்தையும் 05 தங்கப் பதக்கங்களை பெற்று மட்டக்களப்பு வீரர்களும் மற்றும் மூன்றாவது இடத்தை
03 தங்க பதக்கங்களை பெற்று அம்பாறை வீரர்கள்
பெற்றுக்கொண்டனர்

ஆண்கள்,பெண்கள் பிரிவில் முதலாம்,இரண்டாம் இடத்தினை பெற்ற வீரர்கள்
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தேசிய மட்ட போட்டியில் பங்குபற்ற உள்ளனர்.

திருகோணமலை விளையாட்டு திணைக்கள உத்தியோகஸ்தர்
கே.விமலசேன
தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தேசிய அங்கத்துவம் உடைய யூடோ
நடுவர்கள் மத்தியஸ்தம் வகித்தனர்.

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்!!!
18/06/2025

களுதாவளை சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய வருடாந்த உற்சவம்!!!

கிழக்கு  மாகாண  தைகொண்டோ போட்டி 2025!! திருகோணாமலை நெக்கசா  உள்ளரங்கு விளையாட்டு  மைதானத்தில் நேற்று  (15) ஞாயிற்றுக்கிழ...
16/06/2025

கிழக்கு மாகாண தைகொண்டோ போட்டி 2025!!

திருகோணாமலை நெக்கசா உள்ளரங்கு விளையாட்டு மைதானத்தில் நேற்று (15) ஞாயிற்றுக்கிழமை 10 மணியளவில் ஆண், பெண் இருபாலாருக்குமான தைகொண்டோ போட்டி இடம் பெற்றது.

மாவட்ட மட்டத்தில் தெரிவாகி இருந்த அணிகள் மாகாண மட்ட போட்டிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

அவ்வகையில் முதலாம் இடத்தை 9 தங்கப்பதக்கங்கள் பெற்று மட்டக்களப்பு வீரர்களும் இரண்டாவது இடத்தையும் 05 தங்கப் பதக்கங்களை பெற்று திருகோணமலை வீரர்களும் மற்றும் மூன்றாவது இடத்தை
03 தங்க பதக்கங்களை பெற்று அம்பாறை வீரர்கள்
பெற்றுக்கொண்டனர்

ஆண்கள்,பெண்கள் பிரிவில் முதலாம்,இரண்டாம் இடத்தினை பெற்ற வீரர்கள்
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் தேசிய மட்ட போட்டியில் பங்குபற்ற உள்ளனர்.

திருகோணமலை விளையாட்டு திணைக்கள உத்தியோகஸ்தர்
கே. விமல்சனை
தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் தேசிய அங்கத்துவம் உடைய தைகொண்டோ
நடுவர்கள் மத்தியஸ்தம் வகித்தனர்.

13/06/2025

49 ஆவது தேசிய விளையாட்டு பெருவிழாவின் மாவட்ட மட்ட கராத்தே போட்டிகள் 2025!

Address


Telephone

+94756290269

Website

Alerts

Be the first to know and let us send you an email when Batti 1st news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Batti 1st news:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share