News Tamil

News Tamil breaking news only Only true news

17/12/2023
14/12/2023

'இஃப்தார்' நோன்பு - யுனெஸ்கோ அங்கீகாரம்
| | |

தொழிநுட்ப கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவி...
09/12/2023

தொழிநுட்ப கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர் கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து மிதக்கத் தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்...
26/11/2023

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து மிதக்கத் தொடங்கியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
அண்டார்டிகாவைச் சேர்ந்த இந்த மிகப்பெரிய பனிப்பாறை A23a என விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது 1,540 சதுர மைல் அளவு கொண்டது. பனிப்பாறையின் தடிமன் 1,312 அடி.

பணயக்கைதிகள் விடுதலை மற்றும் காஸாவில் போர்நிறுத்தம் தொடர்பான இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்பந்தம் விரைவில் அறிவிக்கப்படலாம்.இரண்டு கட...
21/11/2023

பணயக்கைதிகள் விடுதலை மற்றும் காஸாவில் போர்நிறுத்தம் தொடர்பான இஸ்ரேல்-ஹமாஸ் ஒப்பந்தம் விரைவில் அறிவிக்கப்படலாம்.

இரண்டு கட்ட ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில், ஹமாஸ் காசாவில் உள்ள 50 இஸ்ரேலிய பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் இஸ்ரேல் சுமார் 150 பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, பெரும்பாலும் பெண்கள் மற்றும் சிறார்களை.

இரண்டாம் கட்டமாக, ஹமாஸ் இன்னும் 50 இஸ்ரேலிய பணயக்கைதிகளை - பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள்.

போர் நிறுத்தத்தை இன்னும் பல நாட்களுக்கு நீட்டிக்க முடியும்.

விடுவிக்கப்பட்ட பணயக்கைதிகளின் எண்ணிக்கையின் அதே 3:1 விகிதத்தில் பாலஸ்தீனிய கைதிகளையும் இஸ்ரேல் விடுவிக்கும்.

21.11.2023

பிலிப்பைன்ஸ்ல் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லை...
21/11/2023

பிலிப்பைன்ஸ்ல் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி. அகிலத்திருநாயகி (75) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளதோடு ஒரு வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

🥇🥇🥉
1500m ஓட்டம் , 5000m விரைவு நடை போட்டியில் தங்கப் பதக்கம்
800m ஓட்டத்தில் வெங்கலப் பதக்கம்
5000m ஓட்டத்தில் நான்காம் இடம்

Shocking Breaking Newsஇஸ்ரேலுக்கு சொந்தமான   எனும் கப்பல் ஒன்று மாலுமிகள் உட்பட சுமார் 52 பேருடன்  #யெமன் போராளிகளால்  #...
19/11/2023

Shocking Breaking News

இஸ்ரேலுக்கு சொந்தமான எனும் கப்பல் ஒன்று மாலுமிகள் உட்பட சுமார் 52 பேருடன் #யெமன் போராளிகளால் #செங்கடல் பகுதியில் வைத்து கடத்தப்பட்டுள்ளதாக தற்போது கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேலின் Ray Shipping Ltd, Tel-Aviv நிறுவனத்திற்கு சொந்தமான கலக்ஸி லீடர் எனும் கப்பலே கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தமது (செங்கடல்) கடற்பரப்பில் ஊடறுத்து செல்லும் இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல்கள் அல்லது இஸ்ரேலிய கொடியுடன் பயணிக்கும் கப்பல்கள் மற்றும் இஸ்ரேலிய கம்பனிகளால் நிர்வகிக்கப்படும் கப்பல்கள் யாவும் தாக்கப்படுமென நேற்றைய தினம் யெமன் #ஹூதிஸ் போராளிகள் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

19.11.2023

மொ பகினிகஹவெல முஸ்லிம் ஆரம்ப பாடசாலை தரம் V பரீட்சையில் ஆறு மாணவர்கள் சித்தி========================================தரம்...
17/11/2023

மொ பகினிகஹவெல முஸ்லிம் ஆரம்ப பாடசாலை தரம் V பரீட்சையில் ஆறு மாணவர்கள் சித்தி
========================================

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஒக்டோபர் 15ம் திகதி நபைபெற்றது, அதனடிப்படையில் பரீட்சை முடிவுகள் 2023.11.17 ம் திகதி பரீட்சை திணைக்களத்தினால் முடிவுகளின் பிரகாரம் மொ பகினிகஹவெல ஆரம்ப பாடசாலை மாணவர்களான
அப்துல்லாஹ் 169
சன்ஹா 154
சாரா ஸைனப் 153
மிஸ்கா 152
மஸீன் 149
ஸம்லா சரீகத் 148 தலா புள்ளிகளைப் பெற்றுக்கெண்டனர்

இவர்களை அப்வான் ஆசிரியர் மற்றும் அஸாமா ஆசிரியை வழிநடாத்திவர்களாவர்

இம்மாணவர்கள் , பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர் குழாமிற்கு எமது வாழ்த்தகள்

தகவல்
_சிஹார் மொனறாகலை_

  ஹமாஸ் போராளிகளின் பெருமளவான ஆயுத கிடங்கு அல்-ஷிபா ஹொஸ்பிடலின் அடித்தளத்தில் அமைந்துள்ளதாக அண்மையில் இஸ்ரேலிய தரப்பு பி...
15/11/2023


ஹமாஸ் போராளிகளின் பெருமளவான ஆயுத கிடங்கு அல்-ஷிபா ஹொஸ்பிடலின் அடித்தளத்தில் அமைந்துள்ளதாக அண்மையில் இஸ்ரேலிய தரப்பு பிரச்சாரம் செய்து வந்த நிலையில் இன்று அதிகாலை குறித்த மருத்துவமனைக்குள் நுழைந்து தாறுமாறாக துப்பாக்கி பிரயோகம் செய்து தேடுதல் நடத்தி வருகிறது.

எனினும் இதுவரைக்கும் எந்தவொரு ஆயுதமோ, கிடங்கோ அங்கு கண்டுபிடிக்கப்பட வில்லையென மருத்துவமைனை பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

#அல்ஷிபா மருத்துவமனை தற்போது இஸ்ரேலிய படையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது.



15.11.2023

60 இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களை ஒன்று சேர்த்த பலஸ்தீன் மாநாடுதற்கால உலக வரலாற்றில் அதிக மனித படுகொலைகளும், மனித குலத்திற...
11/11/2023

60 இஸ்லாமிய நாடுகளின் தலைவர்களை ஒன்று சேர்த்த பலஸ்தீன் மாநாடு

தற்கால உலக வரலாற்றில் அதிக மனித படுகொலைகளும், மனித குலத்திற்கு எதிரான போராட்டமாகவும் வர்ணிக்கப்படுகின்ற காசா பிரச்சனை ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சவுதி அரேபியா இப் பிரச்சனையை ராஜதந்திர ரீதியாக முடிவுக்கு கொண்டு வந்து பிராந்திய நாடுகள் மற்றும் ஏனைய முஸ்லிம் நாடுகளுக்கு ஆபத்து இல்லாத வகையில் நிரந்தர சமாதானத்தை பலஸ்தீனிலே உருவாக்குவதற்காக பல பிரயத்தனங்களை மேற்கொண்டு வந்தது பல சர்வதேச மாநாடுகளை இது தொடர்பில் நடத்தியதோடு இதற்கு ஆதரவாக செயல்படக்கூடிய ஒவ்வொரு நாடுகளையும் அழைத்து மிகப்பெரும் ஒரு மாநாட்டை இன்றைய தினம் அதன் தலைநகரான ரியாத் நகரில் நடத்துகின்றது.

60 இஸ்லாமிய நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இமாநாட்டினை சவுதி அரேபியாவின் மன்னரும் இரு புனித ஸ்தலங்களின் சேவகருமான மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் மற்றும் பட்டத்து இளவரசர் முகம்மது பின் ஸல்மான் ஆகியோர் ஜாமிஉத் துவல் அல் அரபிய்யாவில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்கும் முனழ்ழமதுத் துவல் அல் இஸ்லாமிய்யாவில் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய நாடுகளுக்கும் விடுத்த அழைப்பிற்கு இணங்க இம்மாநாடு நடத்தப்படுகின்றது.

இம்மாநாட்டினை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் பாலஸ்தீன பிரச்சனைக்கான நீதியானதும் பலஸ்தீன மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுகின்ற அடிப்படையிலான நிரந்தர தீர்வு அடையப்பட வேண்டும் என்றும் சுதந்திர பலஸ்தீன் நாட்டை உருவாக்குவதே இதற்கான தீர்வாக அமையும் என்பதை வலியுறுத்தியதோடு இந்த மாநாட்டின் தீர்மானங்களில் முக்கியமான ஒன்றாக இது இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு இருந்தமை முக்கியமான விடையமாகும்.

- கலாநிதி எம்.பி.எம்.இஸ்மாயில் மதனி

Address


Alerts

Be the first to know and let us send you an email when News Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share