Agaram News

Agaram News விரைவும் விவேகமும்!

புதையுண்டு போன நீதிக்காக எங்கும் சாட்சியங்கள் #செம்மணி  #கிருஷாந்தி
25/06/2025

புதையுண்டு போன நீதிக்காக எங்கும் சாட்சியங்கள்
#செம்மணி #கிருஷாந்தி

22/06/2025
ஒவ்வொருத்தனிட்டயும் என்னென்ன ஆயுதங்கள் இருக்கென்பதைக் கண்டறிவதற்காக அவ்வப்போது தனகிப்பார்ப்பாங்கள் போல.ஈரானுக்குள் புகுந...
17/06/2025

ஒவ்வொருத்தனிட்டயும் என்னென்ன ஆயுதங்கள் இருக்கென்பதைக் கண்டறிவதற்காக அவ்வப்போது தனகிப்பார்ப்பாங்கள் போல.

ஈரானுக்குள் புகுந்து ஈரானின் இராணுவத்தளபதி, அணு ஆயுத விஞ்ஞானி என அடுத்தடுத்து அந்நாட்டின் படை வலுவை சீர்குலைக்கும் முகமாக இஸ்ரேல் நெடுந்தூர தானியங்கித் துப்பாக்கித்தாக்குதல்களை நடத்தும் வரையில் இஸ்ரேலிடம் இன்னென்ன சாமானுகள் இருக்கென்று யாருக்கும் தெரியாது.

ரஷ்யா - உக்ரைன் போர் நடக்கும் வரையில் இனி வரும் போர்களில் மனித வலுவே பெரியளவில் தேவையில்லை, ட்ரோன்கள் இருந்தால் போதும் என்பது தெரியாது. அது மட்டுமல்லாமல் படையவியல் சார்ந்த ட்ரோன்களை உருவாக்குவதில் துருக்கி பெரிய ஜாம்பவான் என்பதும், இரண்டாவது வல்லரசாக மார்தட்டிக்கொண்ட ரஷ்யாவிடமிருப்பது இரண்டாம் உலகப் போர்கால ராங்கிகள் மாத்திரமே என்பதும் தெரியவந்தது.

இந்திய - பாகிஸ்தான் மோதலில் இரண்டு நாடுகளிடமும் காலைக் கிளப்பியடிக்கும் சல்யூட்டையும், வாயையும் தவிர வேறொன்றும் இல்லை என்பது தெரியவந்தது.

இப்போது நடக்கும் இஸ்ரேல் - ஈரான் போரிலே, இஸ்ரேல் இதுவரை படம்காட்டி வந்த அயன்டோம் சிஸ்டம் வெறும் கூந்தல் என்பதை ஈரான் வெளிப்படுத்தியிருக்கிறது. நீ படிச்ச பள்ளிக்கூடத்தில நான் அதிபர்டா என்ற கணக்கில் இஸ்ரேலின் இராணுவப்பலத்தை திக்குமுக்காடச் செய்திருக்கிறது. எனவே ஈரானிடம் ஏதோ பெரிய சாமான் இருக்கு என்பதை உலகம் உணர்ந்திருக்கிறது.

எல்லாவற்றையும் விட வடகொரியா கிம் கூட அவ்வப்போது தன்னிடம் என்ன இருக்கிறது என்பதை காட்டிவிடுகிறார். ஆனால் இந்த சீனாக்காரன் கொரோனாவை விட (Bio Weapon) எதனையும் காட்டுறான் இல்ல. தாய்வான் விவகாரத்தில் வலிந்து இழுத்தாலும் இலங்கை மக்கள் பெற்றோலுக்கு லைனில் நிண்டமாதிரி கப்பலுகள கொணர்ந்து வரிசை கட்றானே தவிர ஒரு காக்காயை கூட சுட்டுக்காட்டிறானில்ல. ஆனால் உலகம் அவனிட்ட என்ன இருக்கென்றத அறிய படாதபாடு படுது. ஆனால் நடந்துகொண்டிருக்கிற இஸ்ரேலிய சம்ஹாரத்தில் ஈரான் பயன்படுத்தும் ஏவுகணைகள் சிலவற்றில் USA வாசமிருப்பதாக சொல்லப்படுது. அதுகூட சீனா அடிக்கிற ஐபோன் மாதிரியும் இருக்கலாம் தானே.

'இருக்க வேண்டியவர்கள்' இந்த ஆயுத யுகத்தில் இருந்திருக்க வேண்டும்...! உலகம் தென்னாசியாவை வேடிக்கை பார்த்திருக்கும்..!

படம்: ஈரான் கண்டுபிடித்திருக்கும் தரைக்கீழ் பதுங்குகுழிகளை அழிக்கும் ட்ரோன்கள்

வேட்டையின் நுட்பம் அதன் இலக்கில் இல்லை. அதற்கான காத்திருத்தலில்தான் இருக்கிறது.
13/06/2025

வேட்டையின் நுட்பம் அதன் இலக்கில் இல்லை. அதற்கான காத்திருத்தலில்தான் இருக்கிறது.

06/06/2025

மாவை சேனாதிராஜாவை படுகொலை செய்ய முயன்றவரே டக்ளஸ் தேவானந்தா: பாராளுமன்றில் சிறீதரன் எம்.பி தெரிவிப்பு!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் இயங்குதளத்தையும் மக்கள் அபிமானத்தையும் சிதையாமற் காத்த மாவை.சோ.சேனாதிராஜா அவர்களை படுகொலை செய்ய முயன்ற ஒட்டுக்குழுத் தலைவரே டக்ளஸ் தேவானந்தா என நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில், தமிழரசின் மேனாள் தலைவர் மாவை.சேனாதிராஜா அவர்களின் மறைவையொட்டி கொண்டுவரப்பட்ட அனுதாபப் பிரேரணை மீது உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

ஊர்காவற்றுறை மக்களைச் சந்திப்பதற்காகச் சென்ற மாவை.சேனாதிராஜா, நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் கனகலிங்கம் சிவாஜிலிங்கம், மேனாள் கிராம அலுவலர் சிவராசா உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது, தமிழினப் படுகொலைகளைப் புரிந்த இலங்கை அரசின் பங்காளியான டக்ளஸ் தேவானந்தாவும், அவரது ஆயுதக்குழுவும் 2001.11.28 ஆம் திகதி நாரந்தனை – தம்பாட்டிப்பகுதியில் வைத்து தாக்குதல் மேற்கொண்டதுடன், ஏரம்பு பேரம்பலம், யோகசிங்கம் கமல்ஸ்ரோங் ஆகிய இருவர் அந்த இடத்தில் படுகொலை செய்யப்பட்டதுடன் 28 பேர் படுகாயமடைந்ததையும், மாவை.சேனாதிராஜா அவர்கள் கொட்டன் பொல்லுககளாலும், துப்பாக்கிகளாலும், வாள்களாலும் சுட்டும், வெட்டியும், அடித்தும் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்டு நினைவிழக்குமளவு காயமுற்றிருந்த கறைபடிந்த சம்பவத்தையும் மீள நினைவூட்டி, அவரது நினைவுகளைப் பதிவுசெய்கிறேன்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் வடக்கு மாவிட்டபுரத்தில் பிறந்து, யாழ்.வீமன்காமம் வித்தியாலயத்திலும், யாழ்.நடேஸ்வராக் கல்லூரியிலும் தனது பாடசாலைக் கல்வியை நிறைவுசெய்து, இலங்கைப் பல்கலைக்கழகத்தின் வெளிவாரி மாணவனாக இளங்கலைமாணி பட்டப்படிப்பையும் மேற்கொண்ட திரு.மாவை.சோ.சேனாதிராஜா அவர்கள், ஈழத்தமிழினத்தின் மீதான அடக்குமுறைகளின் எதிர்க்குரல்களுள் ஒருவராக பதின்மங்களிலேயே தன்னையும் இணைத்துக் கொண்டவர்.

ஈழத்தமிழர்களின் தன்னாட்சிக் கோரிக்கை என்ற அரசியல் கருத்தியலின் அடிப்படையில் உருவாக்கம் பெற்ற இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் தனது 19வது வயதிலேயே இணைந்து கொண்ட மாவை அண்ணரின் அரசியற்பிரவேசத்துக்கான காலவெளி அப்போதுதான் மெல்லக் கருக்கொள்ளத் தொடங்கியது.

இலங்கைத்தீவின் இன முரண்பாடுகளை உச்சம் பெறச்செய்த தனிச்சிங்களச் சட்டம் 1956 இல் அறிமுகம் செய்யப்பட்டு கிடப்பிலிருந்த நிலையில், 1961 ஆம் ஆண்டு அதனை வடக்கு – கிழக்கிலும் நடைமுறைப்படுத்த முனைந்தமைக்கு எதிராக, 1961 ஜனவரி 21 இல் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 7வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கமைய, 1961 பெப்ரவரி 20 இல் ஆரம்பிக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் மாவை. சேனாதிராஜா அவர்களின் போராட்ட வாழ்வு ஆரம்பித்தது எனலாம்.

பின்னர், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி உறுப்பினராக, ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராக காலப்பெறுமதி மிக்க அரசியற் பணியாற்றிய இவர், 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு, மகசின், வெலிக்கடை உள்ளிட்ட எட்டு சிறைச்சாலைகளில் ஏழு ஆண்டுகள் தடுத்துவைக்கப்பட்டார்.

1989ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், தமிழரசின் மூத்த தலைவரும் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் மறைவின் பின்னர், தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகி, ஈழத்தமிழர்களின் உரிமைக்குரலாக நாடாளுமன்றத்தின் உள்ளும், வெளியும் ஒலிக்கத் தொடங்கினார்.

ஈழவிடுதலைப் போராட்ட எழுச்சியின் போதும், அதன் வீழ்ச்சியின் பின்னான தமிழ்த்தேசிய அரசியல் தளத்திலும் மாவை.சேனாதிராஜா அவர்களது பணிகளின் கனதி மிகப்பெரியது. ஒடுக்குமுறைக்கும், இன அழிப்புக்கும் உள்ளாக்கப்பட்ட ஒரு இனத்தின் அரசியற்குரலாக இருந்து, பன்னாட்டு அரசியல் ஒழுங்கிலும், ஜெனீவா அரங்கிலும் தன்னாட்சி உரிமை கோரும் ஈழத்தமிழரின் அரசியற்பயணத்திற்கு அங்கீகாரம் தேடும் வரலாற்றுப் பணியையே அவர் தன் வாழ்வாக்கிக் கொண்டவர்.

மென்வலுப் போக்கில் நம்பிக்கை கொண்ட செயற்பாட்டு அரசியல்வாதியாக இருந்து, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி என்ற தமிழ்த்தேசிய அரசியல் பேரியக்கத்தின் ஒரு தசாப்பத கால தலைவராக, கட்சியின் இயங்குதளத்தையும் மக்கள் அபிமானத்தையும் சிதையாமற் காத்த அவர்தான், இன்று தமிழ்த்தேசிய அரசியற் தளத்திலிருக்கும் என்போன்ற பலருக்கும் அரசியல் வழிகாட்டி.

உள்நாட்டு மற்றும் பன்னாட்டு அரசியற் தளம்பல் மிகுந்திருந்த 2014 செப்டம்பரில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்டது முதல், தன் அந்திமத்தின் போதான இறுதிக் கணம் வரை எமது கட்சியின் தலைவராக, தெளிவார்ந்த அரசியற் செயற்பாடுகளே அவரது தெரிவுகளாயிருந்தன.
வட்டுக்கோட்டைத் தீர்மானம் தொடக்கம் இன்றைய நாள் வரையும் தமிழ் மக்கள் அவாவி நிற்கும் தீர்க்கம்மிகு அரசியற் தீர்வை, எமக்குக் கிடைத்த ஜனநாயக சந்தர்ப்பங்களில் எல்லாம் எமது இனம் ஒருமித்து வெளிப்படுத்தியே வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக 2009ம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையின் பிற்பாடு, பன்னாட்டு சமூகத்துடன் இணைந்து தமிழ்மக்களுக்கு அவர்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை நிறைவுசெய்யக் கூடிய அர்த்தமுள்ள அரசியல் தீர்வு நோக்கிய பயணத்தில் உலகத்தின் எதிர்பார்ப்பை அங்கீகரித்து, இலங்கை அரசாங்கத்தின் போருக்குப் பிந்திய நிலைப்பாட்டாலும், சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையினாலும் பின்னடைவுகளை எதிர்கொள்ள நேரிட்ட போதும் அமரர்.மாவை சேனாதிராஜா அவர்கள் எல்லாவகை சமாதான முன் முயற்சிகளுக்காகவும்; மிகக்கடுமையாக உழைத்திருந்தார்.

போருக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தை மையப்படுத்தி கட்டமைக்கப்பட்டிருந்த தமிழரசு என்ற அரசியல் ஆலமரம், கிளிநொச்சி மண்ணிலும் விழுதெறிந்து வளர்ந்ததில் மாவை அண்ணனின் பங்கே விரவியிருக்கிறது. தமிழ்த்தேசியத்தின் இருப்பையும் இனத்துவ உரித்தையும் அவாவி நிற்கும் ஓர் அரசியற் கட்சியின் பயணம் தடம் மாறாததாக இருக்கவேண்டுமெனில், அது முழுக்க முழுக்க மக்கள் மயப்பட்டதாக, மக்களின் மன உணர்வுகளுக்கு நெருக்கமானதாக இருக்க வேண்டுமென்பதை தனது அரசியல் அனுபவத்தால் உற்றுணர்ந்த மாவை அண்ணன், ஈழத்தமிழ் சமூகத்தின் இருபெரும் சக்திகளாகிய இளைஞர்களையும், மகளிரையும் சமதளத்தில் இணைத்துப் பயணிக்கும் எல்லாவகைப் பிரயத்தனங்களிலும் ஈடுபட்டிருந்தார். அத்தகைய முதிர்ச்சி மிக்க அவரது செற்பாடுகளின் பயன்விளைவினால் தான், தமிழ்த் தேசியம்; அதன் கொள்கை இறுக்கமும், கொதிநிலையும் தாழாது அடுத்த சந்ததியிடத்தே இன்று கையளிக்கப்பட்டிருக்கிறது.

ஈழத்தமிழர்களின் தன்னாட்சி உரிமைக்காகவும், நீடித்த செழுமைமிகு இருப்புக்காகவும், தொலைநோக்கான வழிகாட்டலை வழங்குகின்ற பொறுப்பை ஏற்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியையும், மக்களையும் கொள்கைப் பற்றுறுதியோடு தீர்க்கமான வழிமுறைகளில் முன்னேற்றிச் சென்ற ஒரு பெருந்தலைவராகவே அவரது மறைவின் பின்னும் மாவை அண்ணருக்கான அடையாளம் மக்கள் மனங்களில் நிலைபெற்றிருக்கிறது.

நாங்கள் ஒரு சுதந்திர அரசியல் இயக்கமாக – மக்கள் திரட்சி நிறைந்த தேசமாக எம்மை உருவாக்கிக் கொள்ளாதவரை, பலவீனமான அரசியல் கோரிக்கையாளர்களாகவே இருக்க வேண்டி ஏற்படும் என்பதை உணர்ந்தவராக, தமிழரசுக்கட்சியை மக்கள் பேரியக்கமாக வழிநடாத்திச் செல்ல வேண்டுமென்ற நேர்த்திமிகு சிந்தனையில் பின்வாங்காத பெருந்தலைவராக இருந்த, எனது அரசியல் வழிகாட்டியும், எமது கட்சியின் மறைந்த பெருந்தலைவருமாகிய அண்ணன் மாவை.சேனாதிராஜா அவர்களின் தடங்களை இறுகப்பற்றியபடி, சரிந்துபோயிருக்கக் கூடிய தமிழரசின் செயலூக்கத்தினை மீள நிலைநிறுத்துவதற்காக தமிழ்த்தேசிய ஆர்வலர்களோடும், தொண்டர்களோடும் இணைந்து ஒழுகி எமது அரசியல் இயக்கத்தை நிலைநிறுத்துவதன் வழி, ஈழத்தமிழினத்தின் விடுதலை நோக்கிய பயணத்தை இதயசுத்தியோடு முன்கொண்டுசெல்ல உழைப்பதுவே அன்னாருக்கான உயரிய அஞ்சலி என்பதை உணர்ந்த ஒருவனாக, அத்தகையதோர் மன உறுதியோடு அவரது மறைவுக்கான எனது அஞ்சலிகளையும், அனுதாபங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். – என்றார்.

1.2 Billion $ நஷ்டத்த வச்சிட்டு 1500 அடி தாழ்வா பறக்குறதும், ப்ளைட்டுக்குள்ள யாகம் நடத்துறதும். பலே ஆளுயா நீ Srilankan A...
04/06/2025

1.2 Billion $ நஷ்டத்த வச்சிட்டு 1500 அடி தாழ்வா பறக்குறதும், ப்ளைட்டுக்குள்ள யாகம் நடத்துறதும்.

பலே ஆளுயா நீ Srilankan Airlines.

19/05/2025
ஆர்ஜென்டினாவின் தலைநகர் புவனேஸ் எயரில் அமைந்துள்ள நினைவு தூபியான Parque de la Memoria வில் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்கள்: ...
19/05/2025

ஆர்ஜென்டினாவின் தலைநகர் புவனேஸ் எயரில் அமைந்துள்ள நினைவு தூபியான Parque de la Memoria வில் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்கள்:

'இந்த நினைவுத் தூபி காயங்களை ஆற்றும் என நாம் கருதவில்லை. அல்லது உண்மைக்கும் நீதிக்கும் மாற்றீடாக அமையும் எனவும் கருதவில்லை. இந்த நினைவுத் தூபி நாம் நினைவில் கொள்வதற்கும், அஞ்சலி செய்வதற்கும், சிந்திப்பதற்குமானது. இதன் நோக்கம் தற்போதைய மற்றும் எதிர்கால தலைமுறைகள் அரசின் கோரத்தை மறந்து விடாமல் இருப்பதும், அக்கோரமானது மீள நிகழாதிருப்பதை தடுப்பதுமாகும்'

Parque de la Memoria (Buenos Aires, Argentina):

‘This place of memory does not pretend to heal wounds or replace truth and justice, but rather to become a place of remembrance, homage, testimony and reflection. Its objective is for current and future generations that visit the site to become aware of the horror perpetrated by the State and the need to ensure that similar acts will NEVER AGAIN occur’

நினைவில் கொள்வோம், நினைவை கடத்துவோம், அஞ்சலிப்போம்.

தேசம் காத்த தேவதைகள்❤️🥹
18/05/2025

தேசம் காத்த தேவதைகள்❤️🥹

Definition of Unity and reconciliation at south's dictionary Building victory momentums in wounded peoples areas will pr...
16/05/2025

Definition of Unity and reconciliation at south's dictionary

Building victory momentums in wounded peoples areas will promote unity and reconciliation😅

but building momentum for commemorate peoples who were killed in the war Will disturb the ongoing reconciliation process 😅

04/05/2025

ஆணித்தரமான பேச்சு

Address

Mamangam Pillaiyar Kovil Road
Batticaloa

Website

Alerts

Be the first to know and let us send you an email when Agaram News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

எம்மை பற்றி

தமிழ் ஊடக பரப்பிலே சமீப காலமாக அதிக பயன்பாட்டில் இருக்கும் இணைய ஊடகங்கள் வரிசையில் ஒன்று தான் Quick News Tamil. உலகமயமாதலினால் மாறிப்போகும் தொழிநுட்ப பரிமாங்களுக்கேற்ப, இலகுவாக வாசகர்களை அடைய இணையத்தளம், சமூக வலைத்தளங்களினூடே தனது செயற்பாட்டினைக் கொண்டிருக்கிறது. ஈழத்திருநாட்டில் வசிக்கும் அடக்குமுறைக்குள்ளான எமது சமூகத்தின் சமூக, பொருளாதார, அரசியல், கலை, கலாசார, விழுமியங்களை பிரதிபலித்து, எமக்கான தேசிய, சுயநிர்ணய பிரக்ஞையோடு உலகம் தழுவிய எமது கிளைகளையும் சேர்த்து எமது உரிமைகளுக்கான குரலாய் இருப்போம். ஊடக விழுமியங்களை அதி உச்சமாக பின்பற்றி, நடுநிலையான, உண்மைமிகுந்த விரைவும் விவேகமுமாய் செயலாற்றுகின்றோம்.