08/07/2026
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஜூலை 6 அன்று ஏற்பட்ட வன்முறை மோதலில் சிறை விசேட தந்திரோபாய பிரிவைச் சேர்ந்த ஏழு அதிகாரிகள் உயிரிழந்தனர். இன்று (08) அவர்களின் உடல்கள் வெலிக்கடை சிறைச்சாலைக்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு இறுதி மரியாதை செலுத்தப்பட்ட பின்னர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, நிலைமையை கட்டுப்படுத்த சென்ற சிறை அதிகாரிகள் மீது கைதிகள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மொத்தம் 27 பேர் உயிரிழந்ததுடன், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.