18/12/2025
தமிழ் தேசிய மக்கள் முன்னணி எனப் பெயரை மாற்றி பரப்புரை செய்தாலும், தேர்தல்களில் பதிவு செய்யப்பட்ட கட்சியாக இன்னமும் #அகில #இலங்கை #தமிழ்க் #காங்கிரஸ் கட்சியே #சைக்கிள் சின்னத்தில் உள்ளது.¹
கீழே எனது படத்தை தனது முகநூலில் பதிவாகப் போட்டிருக்கும் விஎஸ் தவபாலன் ஒரு உறுப்பினராக அங்கம் வகிக்கும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் கட்சின் ஸ்தாபகர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் பட்டனார் ஜி.ஜி. பொன்னம்பலம் என்பவரே ஆவார்.²
ஜி.ஜி. #பொன்னம்பலம் 1948 இல் இருந்து 1953 ஆண்டு வரை சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கத்தை அமைத்த “சிங்கள கட்சியான” ஐக்கிய தேசியக் கட்சி அரசில் டி.எஸ். சேனநாயக்க மற்றும் டட்லி சேனநாயக்க என்கின்ற இரு “சிங்களப்”பிரதமர்களின் தலைமையிலான ஆட்சியில் தொழில்துறை, தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மீன்பிடித் துறை #அமைச்சராக (Cabinet Minister of Industries, Industrial Research and Fisheries) பதவி வகித்தவராவார்.³
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தனது தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கும் @விஎஸ் தவபாலனின் கட்சியின் ஸ்தாபகரான ஜி.ஜி. பொன்னம்பலத்தின் தந்தையான கணபதிப்பிள்ளை காங்கேசர், யாழ்ப்பாணம் அல்வாய் என்னுமிடத்தைச் சேர்ந்த ஒரு post master ஆவார். அதாவது தபால்துறை சார்ந்த ஒரு அரச ஊழியராவார்.⁴
ஜி.ஜி. பொன்னம்பலத்திற்குப் பின், அவரது மகனும் #கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தந்தையுமான குமார் பொன்னம்பலம் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தலைவராக இருந்தார்.⁴
நாங்கள் சிறுபருவத்தில் முத்திரை சேகரிப்பதை எமது பொழுதுபோக்காக வைத்திருந்தபோது, அகில இலங்கைத் தமிழ் காங்கிரசின் தலைவர் குமார் பொன்னம்பலம் பென்ஸ் கார்கள் சேகரிப்பதைத் தனது பொழுதுபோக்காக வைத்திருந்தார்.⁴
குமார் பொன்னம்பலத்தின் மனைவியும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தாயாருமான திருமதி யோகலட்சுமி, யாழ்ப்பாணத்தின் முன்னாள் மேலதிக அரச அதிபராக கடமையாற்றிய திரு. T. முருகேசப்பிள்ளை என்கின்ற அரச ஊழியரின் மகளாவார்.⁴
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தந்தையும் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் தலைவருமான குமார் பொன்னம்பலம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் தாயாரான திருமதி சிறிமா பண்டாரநாயக்க தலைமையிலான DPA – Democratic People’s Alliance - ஜனநாயக மக்கள் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்ததுடன், பிரச்சார வேலைகளிலும் 1988-89 காலப்பகுதில் கடுமையாக உழைத்தவர் ஆவார்.⁵
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸின் தலைவரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தந்தையுமான திரு. குமார் பொன்னம்பலம், 2000 ஆம் ஆண்டு ஜனவரி 5 அன்று கொழும்பு வெள்ளவத்தை ராமகிருஷ்ணா வீதியில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.⁶
இந்தப் படுகொலை குறித்து அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு முழு விபரமும் தெரிந்திருந்தது என, இலங்கையின் புலனாய்வு பத்திரிகைத்துறையில் பெயர் பெற்றவர்களும் பிரபலமானவர்களுமான Sunday Leader பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவும், “ராவய” என்னும் சிங்களப் பத்திரிகையின் ஆசிரியர் விக்டர் ஐவனும் தொடர்ச்சியான புலனாய்வு செய்தி அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர்.⁷⁸
விக்டர் ஐவன், “சவுற ரஜினி” (The Bandit Queen) எனும் பெயரில், சந்திரிக்கா குமாரதுங்கவின் அரச அதிகாரத் துஷ்பிரயோகங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்வு குறித்த தகவல்கள் அடங்கிய புத்தகமொன்றை எழுதி வெளியிட்டிருந்தார்.⁹ அந்தப் புத்தகத்தில் குமார் பொன்னம்பலத்தின் கொலை தொடர்பிலும் அந்தக் கொலையில் கருவியாகப் பயன்படுத்தப்பட்ட “சீதா” என்கின்ற விலைமாது தொடர்பிலும், அந்த சீதா தன்னுடன் தொடர்பு கொண்டு தனக்களித்த தகவல்கள் தொடர்பிலும் குறிப்பிட்டுள்ளார்.
2002 பெப்ரவரி 16, குமார் பொன்னம்பலத்தின் கொலை நடந்து இரண்டு வருடங்களுக்குப் பின்னர், Sunday Leader பத்திரிகையில், இந்தக் கொலைக்கான சூத்திரதாரியாக செயல்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் சுகத் ரணசிங்க (Sugath alias Shantha Ranasinghe) மற்றும் CDB (Criminal Detective Bureau) OIC நுவான் வெட்டசிங்க் (Nuwan Wedasinghe) ஆகியோரின் தொலைபேசி உரையாடல் transcript ஒவ்வொரு சொல்லாக பிரசுரிக்கப்பட்டது.¹⁰
அந்தப் பிரசுரத்தின் பிரகாரம், குமார் பொன்னம்பலத்தை நெருங்க “சீதா- Seetha” என்னும் உயர்மட்ட விலைமாதுவை உபயோகப்படுத்தியதாக பொலிஸ் கான்ஸ்டபிள் சுகத் ரணசிங்க தெரிவித்துள்ளார்.¹⁰
சன்டே லீடரின் பிரசுரத்தின்படி அந்த விலைமாதுவின் ஊடாகவே குமார் பொன்னம்பலத்தை தான் நெருங்கியதாக கொலையின் சூத்திரதாரி தனது மேலதிகாரிக்குத் தெரிவித்துள்ளார்.
அத்தோடு ஆசாத் (Azad) என்னும் நபருக்கு யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இடங்களில் இருந்து பெண்களைத் தருவித்து குமார் பொன்னம்பலம் வழங்கியதாகவும், அந்நபர் பாலியல் உறவு கொள்வதை திரு. குமார் பொன்னம்பலம் பார்த்து ரசித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.¹⁰
ஆகவே, @விஎஸ் தவபாலன் அவர்களே முதலில் பரம்பரை பரம்பரையாக சிங்கள அரசுகளுக்கு அடிமைச் சேவகம் செய்ததன் ஊடாக இன்று மிகப்பெரும் செல்வந்தராக வாழும் உங்கள் கட்சித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சி என்னும் பெயரில் ஒரு குடும்ப private limited companyயையே நடத்தி வருகின்றார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.¹¹
தனது தந்தையின் கொலைக்கு இதுவரை உமது கட்சித் தலைவரால் நீதி பெற்றுக் கொள்ள முடியவில்லை. உமது கட்சித் தலைவரின் தந்தையான குமார் பொன்னம்பலத்தின் கொலைக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரே காரணம் எனச் சாரப்படும் பல ஆதாரங்களை, பத்திரிகை ஆசிரியர்களான லசந்த விக்கிரமதுங்கவும் விக்டர் ஐவனும் வெளியிட்டுள்ளனர்.¹²
CDB எனப்பட்ட criminal detective bureau வின் தலைவராக இருந்த SSP Bandula Wickramasinghe திரு.பந்துல விக்ரமசிங்க என்பவர் திரு.குமார் பொன்னம்பலத்தின் கொலை தொடர்பாக மேற்கொண்ட விசாரனை தொடர்பாக அப்போதய ஜனாதிபதி சர்திரிக்கா குமாரதுங்கவிற்கு சமர்ப்பித்த அறிக்கை கூட சன்டே லீடர் பத்திரிகையில் பிரசுரமாகியிருந்தது.
இந்தக் கொலை குறித்து மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு குமார் பொன்னம்பலத்தின் குடும்பத்தினர் பெரிய முயற்சிகளை எடுக்கவில்லை என்றும் பத்திரிகைகள் சுட்டிக்காட்டியிருந்தன.
முதலில் இவ்வாறான அசிங்கம் பிடித்த அரசியல் தலைமையும், அசிங்கம் பிடித்த அரசியல் கட்சியிலும் அங்கம் வகிக்கும் உமக்கு, தேசிய நல்லிணக்கத்துக்காகப் பணியாற்றும் அருண் சித்தார்த் எனும் என்னைப் பற்றி பேசுவதற்கு ஒரு சொட்டு தார்மீக அறமும் கிடையாது என்பதை உமக்கு நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, பரம்பரை பரம்பரையாக சிங்கள அரசுகளுக்கு அரச ஊழியர்களாகவும், அமைச்சர்களாகவும், தேர்தல் பரப்புரை வியூக வடிவமைப்பாளர்களாகவும், பிரச்சார பீரங்கிகளாகவும் சேவையாற்றிய பரம்பரையில் பாலியல் துர்நடத்தையுள்ள ஓர் மனிதருக்கு, புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் “மாமனிதர்” எனும் பட்டம் வழங்கியதை, சிந்திக்கத் தெரிந்த தமிழ் மக்கள் எவ்வாறு எடுத்துக் கொள்ளப் போகின்றீர்கள் என நான் கேள்வி கேட்கின்றேன்.
குமார் பொன்னம்பலத்தையும் பிரபாகரனையும் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளவர்களிடமும் நான் இக்கேள்வியை முன்வைக்கின்றேன்.
இதனுடன், 80-களில் புலிகளை எதிர்த்ததுடன், மிகக் கடுமையாக விமர்சித்தவர் குமார் பொன்னம்பலம் என்பதையும் இங்கு குறிப்பிடுகின்றேன்.
பாலியல் துர்நடத்தையுள்ள மனிதருக்கு வழங்கப்பட்ட “மாமனிதர்” பட்டத்தின் தரமும், புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் தரத்தையும் இதில் இருந்தாவது தெரிந்து கொள்கின்றீர்களா என, சிந்திக்கத் தெரிந்த தமிழ் மக்களிடம் நான் கேட்கின்றேன்.
“யோகியை சந்திக்கும் வரை நான் ஒரு pl***oy ஆக இருந்தேன்; பின்னரே நான் நடத்தையில் ஒரு சீர்திருத்தப்பட்ட நபராக மாறினேன்” என குமார் பொன்னம்பலம் தனக்குக் கூறியதாக Roshan Peiris, The Sunday Times, 9 January 2000 கட்டுரையில் குறிப்பிடுகின்றார்.¹³
ஆனால் திருமணத்தின் பின்னரும் கூட பாலியல் ரீதியில் சீர்திருத்தம் அடையாத dark sexual fantasies எனப்படும் வக்கிரமான பாலியல் சார்ந்த துர்நடத்தையுள்ள மனிதராக, அவர் தனது 61 வயதிலும் இருந்திருக்கின்றார் என்பதை, லசந்த விக்கிரமதுங்க மற்றும் விக்டர் ஐவனின் எழுத்துக்களும், அவர்கள் வெளியிட்ட சாட்சியங்களும் சுட்டிக் காட்டுகின்றன.¹²
ஆகவே விஎஸ் தவபாலன் அவர்களே மேலே நான் எழுதியுள்ள விடயங்கள் குறித்து ஒரு பகிரங்க விவாதம் புரிய ஏதேனும் ஒரு ஊடகத்துக்கு வருமாறு உமக்கு நான் சவால் விடுக்கின்றேன். இன்னும் நிறைய documental evidence எனப்படும் ஆவணப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் சமர்ப்பித்து குமார் பொன்னம்பலம் குறித்தும் உங்களுடைய அசிங்கம் பிடித்த கட்சியின் அரசியல் குறித்தும் விவாதிக்க முடியும்.
அதே போன்று மாபெரும் சட்டத்தரணி ஜாம்பவான்களைக் கொண்டிருப்பதாக தமிழ் மக்களுக்கு ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கும் இந்தக்கட்சியின் சட்டத்தரணிகளுக்க முடிந்தால் சட்ட நடவடிக்கை எடுத்து மேலே உங்கள் தற்போதய கட்சித் தலைவரின் தந்தையார் குமார் பொன்னம்பலம் குறித்து விக்டர் ஐவனும் லசந்த விக்ரமதுங்கவும் எழுதியவை தவறான தகவல்கள் என்பதை நீருபிக்குமாறு சவால் விடுக்கிறேன்.
முக்கிய குறிப்பு -IBC ஊடக வலையமைப்பின் உரிமையாளர் திரு. கந்தையா பாஸ்கரன், ரீச்சா எனப்படும் தனது பண்ணையில் மறைந்த ஊடகவியலாளர்களுக்கு அண்மையில் சிலைகள் வைத்துள்ளார். அந்தச் சிலைகளில் ஒன்றாக, Sunday Leader பத்திரிகையின் ஆசிரியரும், குமார் பொன்னம்பலத்தின் படுகொலை தொடர்பாக பல ஆதாரங்களை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தியவருமான அமரர் லசந்த விக்கிரமதுங்க அவர்களின் சிலையும் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.¹²
இறுதியாக அருண் சித்தார்த் ஆகிய நான்,
அரச குலத்தோரையும், ஆள்வோரையும் குப்பைக் கூளமாக மதிக்கிறேன்.
தங்கத்தையும், வைரத்தையும், வைர வைடூரியங்களையும் வெறும் தகரமாகவும், கூழாங்கற்களாகவும் காண்கிறேன்.
பட்டுப் பீதாம்பரங்களை கிழிந்து போன சாக்குத் துணியாக நினைக்கிறேன்.
உலகப் பேராசான்களின் போதனைகளை மந்திரவாதிகளின் செப்படி வித்தைகளாகப் போஷிக்கிறேன்.
மானுடகுலத்தை விடுவிக்க வந்த மிக உயர்ந்த கோட்பாடுகளை, உண்மையாக மின்னும் தங்க ஜரிகைகளாக நான் தீர்மானம் செய்கிறேன்.
இந்த ஞானத்தை (wisdom) பெற, பயமின்றிய (fearlessness) நிலைக்கும், enlightenment எனப்படும் உயரிய விழிப்பு நிலைக்கும், here & now எனப்படும் இந்தக் கணத்தில் வாழ்தல் நிலையையும் தேடியுமே நான் பெளத்தம் நோக்கிச் செல்கின்றேனே தவிர, விஎஸ் தவபாலன் போன்றவர்கள் செய்யும் பொன்னம்பலம் குடும்பத்துக்கான கொத்தடிமை அரசியல் போன்றது அல்ல எனது பெளத்தம் தொடர்பான ஆய்வு எனத் தெரிவிக்கின்றேன்.
மற்றது முக்கியமான இன்னொரு விடயம் Bipolar disease எனப்படும் நோயுள்ள, identity crisis எனப்படும் அடையாளச் சிக்கல் மற்றும் தன்னை சமூகத்தில் ஒரு உயர்ந்த நபராக அல்லது அறியப்படும் நபராக காட்டிக் கொள்ளப் பகீரதப் பிரயத்தனம் செய்யும் பொய்களை நாளாந்தம் ஆதாரம் இல்லாமல் பாராளுமன்றில் கக்கிக்கொண்டிருக்கும் நபருடன், விஎஸ் தவபாலன் என்னை ஒப்பிட்டிருப்பதையும் வன்மையாக கண்டிக்கின்றேன்.
நன்றி 🙏
வணக்கம்
அருண் சித்தார்த்
யாழ்ப்பாணம்
18/12/2025
3:15pm
⸻
Footnotes – References (Full)
1. Election Commission of Sri Lanka, List of Registered Political Parties, https://www.elections.gov.lk/
2. Arun Siddharth, personal observation and photograph reference.
3. Ceylon Government Gazette, 1948–1953; Ministry of Industries, Industrial Research and Fisheries archives.
4. Dr. N. Kumaraguruparan, “Democratic People’s Alliance Campaign Work,” Sunday Times, 10 August 2008.
5. Ibid.
6. Lasantha Wickramatunga, Sunday Leader, various articles on political assassinations, 2000.
7. Victor Ivan, Ravaya newspaper, investigative reports on Kumar Ponnambalam assassination.
8. Ibid.
9. Victor Ivan, The Bandit Queen, Colombo: Ravaya Publications, 2001.
10. Police Criminal Detective Bureau (CDB) transcript of telephone conversation between Sugath Ranasinghe and OIC Nuwan Wedasinghe, 16 February 2002.
11. Ibid; public reporting of Kumar Ponnambalam private life activities.
12. Lasantha Wickramatunga and Victor Ivan, investigative reports and articles on political/personal history of Kumar Ponnambalam.
13. Roshan Peiris, The Sunday Times, 9 January 2000.
✍️ Election Commission of Sri Lanka, Register of Recognized Political Parties, “All Ceylon Tamil Congress (ACTC),” party symbol: Bicycle.
✍️ Parliament of Ceylon (Sri Lanka), Parliamentary Debates (Hansard), service record of G. G. Ponnambalam as Cabinet Minister of Industries, Industrial Research and Fisheries, 1948–1953.
✍️ K. M. de Silva, A History of Sri Lanka (Colombo: Vijitha Yapa Publications, 2005), references to G. G. Ponnambalam’s ministerial role under UNP governments.
✍️ N. Kumaraguruparan, “Kumar Ponnambalam: A Political Life,” Sunday Times (Sri Lanka), August 10, 2008.
✍️ Roshan Peiris, “Reflections on Kumar Ponnambalam,” Sunday Times (Sri Lanka), January 9, 2000.
✍️ Lasantha Wickrematunge, investigative reports on the assassination of Kumar Ponnambalam, The Sunday Leader (Sri Lanka), January–February 2002.
✍️ Lasantha Wickrematunge, “Transcript of Telephone Conversation Linked to the Kumar Ponnambalam Assassination,” The Sunday Leader (Sri Lanka), February 16, 2002.
✍️ Victor Ivan, investigative articles on the Kumar Ponnambalam assassination, Ravaya (Sri Lanka), 2000–2002.
✍️ Victor Ivan, The Bandit Queen: Chandrika Kumaratunga and the Abuse of State Power (Colombo: Ravaya Publications, n.d.).
(Sinhala original title: Savura Rajini / Soura Rajini)
✍️ International Broadcasting Corporation (IBC), media releases and public records on memorial statues at Reachaa Farm, including the statue of Lasantha Wickrematunge.
Arulanandam Arun