TJ Ceylon Media

Website

TJ Ceylon Media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TJ Ceylon Media, Media/News Company, Batticaloa.

📝 TJ Ceylon Media | 21.06.2026•எதிர்வரும் 2026 ஆகஸ்ட் மாதம் 10 நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள உயர்தர பரீட்சை காலப்பகுதியை த...
21/06/2026

📝 TJ Ceylon Media | 21.06.2026
•எதிர்வரும் 2026 ஆகஸ்ட் மாதம் 10 நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள உயர்தர பரீட்சை காலப்பகுதியை திருத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என அமைச்சு தெரிவித்துள்ளது.

📝 TJ Ceylon Media |01.05.2026|•திவ்தா சூறாவளித் தாக்கத்தினால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட உள்நாட்டு நன்னீர் மீனவர்கள...
02/06/2026

📝 TJ Ceylon Media |01.05.2026|
•திவ்தா சூறாவளித் தாக்கத்தினால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட உள்நாட்டு நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளது.

📝 TJ Ceylon Media |31.05.2026|•மின்சாரம், நீர், சுகாதாரம் உட்பட 15 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி...
31/05/2026

📝 TJ Ceylon Media |31.05.2026|
•மின்சாரம், நீர், சுகாதாரம் உட்பட 15 சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதி வர்த்தமானி வெளியீடு.

இலங்கையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை எவ்விதத் தடங்கலுமின்றி முன்னெடுத்துச் செல்வதை உறுதிப்படுத்தும் நோக்கில், மின்சாரம், நீர், சுகாதாரம், எரிபொருள் விநியோகம் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட 15 முக்கிய சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் கட்டளைக்கமைய, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

இந்த வர்த்தமானி உத்தரவின் கீழ் மின்சார விநியோகம், எரிபொருள் மற்றும் காஸ் விநியோகம், வைத்தியசாலைகளின் பராமரிப்பு மற்றும் நோயாளிப் பராமரிப்புச் சேவைகள் அத்தியாவசியமாக்கப்பட்டுள்ளன. அத்துடன் பொதுப் போக்குவரத்து, துறைமுகங்கள், விமானச் சேவைகள், நீர் விநியோகம், தபால் சேவைகள், வங்கி மற்றும் காப்புறுதிச் சேவைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

மேலும், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் சேவைகள், உள்ளூராட்சி மன்றங்களின் கழிவகற்றல் மற்றும் பொதுச் சுகாதாரச் சேவைகளும் அத்தியாவசியப் பட்டியலுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த விசேட வர்த்தமானி பிரகடனத்தின் மூலம், குறிப்பிட்ட 15 துறைகளிலும் பணியாற்றும் ஊழியர்கள் சேவைகளுக்கு இடையூறு விளைவிப்பதோ அல்லது வேலைநிறுத்தங்களில் ஈடுபடுவதோ தடைசெய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

📝 TJ Ceylon Media |31.05.2026|•டீசல்: ரூ.15 அதிகரித்து ரூ.407சூப்பர் டீசல்: ரூ.20 அதிகரித்து ரூ.478பெட்ரோல் ஒக்டேன் 92: ...
31/05/2026

📝 TJ Ceylon Media |31.05.2026|
•டீசல்: ரூ.15 அதிகரித்து ரூ.407
சூப்பர் டீசல்: ரூ.20 அதிகரித்து ரூ.478
பெட்ரோல் ஒக்டேன் 92: ரூ.24 அதிகரித்து ரூ.434
ஒக்டேன் 95: ரூ.25 அதிகரித்து ரூ.495
மண்ணெண்ணெய்: ரூ.20 அதிகரித்து ரூ.285

எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், தற்போது பாடசாலை வேன் கட்டணங்களை உயர்த்தும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என அகில இலங்கை பாடசாலை மாணவர் போக்குவரத்து தொழில்முறை சங்கம் தெரிவித்துள்ளது.

டீசல் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பேருந்து கட்டணங்களில் எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விலை திருத்தத்துடன் இணைந்து டீசல் விலை உயர்த்தப்பட்டிருந்தாலும், தற்போதைய சூழலில் பேருந்து கட்டணங்களை உயர்த்த அனுமதி வழங்க முடியாது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

📝 TJ Ceylon Media  |26.05.2026|• உலகெங்கும் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.  ...
28/05/2026

📝 TJ Ceylon Media |26.05.2026|
• உலகெங்கும் உள்ள அனைத்து இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்.

📝 TJ Ceylon Media |27.05.2026|•இலங்கை அரசு தொடர்ச்சியாக வெளிநாட்டுக் கடன் தவணைகளையும் வட்டிப் பணத்தையும் செலுத்தி வருகின...
27/05/2026

📝 TJ Ceylon Media |27.05.2026|
•இலங்கை அரசு தொடர்ச்சியாக வெளிநாட்டுக் கடன் தவணைகளையும் வட்டிப் பணத்தையும் செலுத்தி வருகின்ற போதிலும், நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற உயர் மட்டத்தில் ஸ்திரமாக உள்ளதாக இலங்கை மத்திய வங்கி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

​இன்று நடைபெற்ற நாணயக் கொள்கை வாரியக் கூட்டத்தின் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு மற்றும் மத்திய கிழக்கு மோதல்களால் நாட்டின் பொருளாதாரத்திற்கு அழுத்தம் ஏற்பட்ட போதிலும், புலம்பெயர் தொழிலாளர்களின் பண அனுப்புதல்கள் மற்றும் உள்நாட்டு பொருளாதார பலம் காரணமாக 2026 ஏப்ரல் இறுதி வரை வெளிநாட்டு கையிருப்பு இந்தளவு வலுவாகப் பேணப்பட்டுள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

📝 TJ Ceylon Media |26.05.2026|•எம்பிக்கள் கட்சி மாறினால் அவர்களின் பதவியை பறிக்கும் சட்டத்தை கொண்டு வர அரசாங்கம் முடிவு....
27/05/2026

📝 TJ Ceylon Media |26.05.2026|
•எம்பிக்கள் கட்சி மாறினால் அவர்களின் பதவியை பறிக்கும் சட்டத்தை கொண்டு வர அரசாங்கம் முடிவு.

📝 TJ Ceylon Media |26.05.2026|•அரச ஓய்வூதியம் இல்லாதவர்களும் ஓய்வூதியம் பெறுவதற்கான வழிமுறை18 முதல் 59 வயதிற்கு இடைப்பட்...
26/05/2026

📝 TJ Ceylon Media |26.05.2026|
•அரச ஓய்வூதியம் இல்லாதவர்களும் ஓய்வூதியம் பெறுவதற்கான வழிமுறை

18 முதல் 59 வயதிற்கு இடைப்பட்ட, அரச ஓய்வூதிய உரிமையைப் பெறாத நபர்களுக்காக 'சுரக்கும' ஓய்வூதியத் திட்டம் தொடர்ந்து திறந்தே இருக்கும் என்று இலங்கை சமூக பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அச்சபை, உறுப்பினர்களின் தேவை மற்றும் பங்களிப்புப் பணத்தைச் செலுத்தும் திறனின் அடிப்படையில், தங்களுக்கு விருப்பமான ஓய்வூதியத் தொகையைத் தாங்களே தீர்மானித்துக் கொள்ள முடியும் என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் பல்வேறு விசேட சலுகைகள் கிடைக்கப் பெறவுள்ளன.

அதன்படி, 60 வயது பூர்த்தியடைந்தது முதல் ஆயுட்காலம் வரை ஒப்புக்கொள்ளப்பட்ட 50,000 ரூபா மாதாந்த ஓய்வூதியம் வழங்கப்படும் என்று இலங்கை சமூக பாதுகாப்பு சபை தெரிவிக்கிறது.

தவணைக்கட்டணங்களைச் செலுத்தத் தவறினாலும், கணக்கின் மீதமுள்ள தொகைக்கு ஏற்ப சரிசெய்யப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும்.

ஓய்வூதியம் பெறுபவர் மரணமடைந்தால், அவரது துணைவருக்கு/சார்புடையவருக்கு அந்த உறுப்பினரின் 80 வயது வரையிலான காலப்பகுதிக்கு ஓய்வூதியம் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் பெறுவதற்கு முன்னர் மரணம் சம்பவித்தால், இறுதிச்சடங்கு செலவுகளுக்காக 100,000 ரூபாவுடன், அவரது துணைவருக்கு ஓய்வூதிய உரிமை அல்லது செலுத்தப்பட்ட தொகையை முதலீட்டு வருவாயுடன் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உள்ளது.

விபத்து அல்லது நோய் காரணமாக முழுமையான ஊனமுறும் உறுப்பினர்களுக்கு 500,000 ரூபா பணிக்கொடையுடன், ஊனம் ஏற்பட்ட நாள் முதல் ஆயுட்காலம் வரை ஒப்புக்கொள்ளப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும். அத்தகைய சூழ்நிலையில், உறுப்பினர் எதிர்கால தவணைக்கட்டணங்களைச் செலுத்துவதில் இருந்து முற்றிலும் விடுவிக்கப்படுவார்.

அதேபோல், நிரந்தர பகுதி ஊனத்தின் போது 100,000 ரூபா பணிக்கொடை வழங்கப்படும் என்றும் இலங்கை சமூக பாதுகாப்பு சபை அறிவித்துள்ளது. அத்துடன், பயனாளியின் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் அல்லது ஏதேனும் தேவைகளுக்கான நிதி உதவியையும் பெற்றுக்கொள்ள முடியும்.

இதற்கமைய, 18 வயது முதல் 29 வயதுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மாதாந்தம், வருடாந்தம் அல்லது ஒரே தடவையில் செலுத்தும் தொகையாகத் தேவைக்கு ஏற்ப இச்சலுகைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

'சுரக்கும' ஓய்வூதியத் திட்டத்திற்கான பணத்தைச் செலுத்தும் பணிகளை 20 வயது முதல் 45 வயதுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மேற்கொள்ள முடியும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தவணைக்கட்டணச் செலுத்துகை வாய்ப்புகளுக்கு மேலதிகமாக காலாண்டு, வருடாந்தம் மற்றும் இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் வரையிலான குறுகிய காலப்பகுதிகளுக்குள் நெகிழ்வுத்தன்மையுடன் தவணைக்கட்டண முறைகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பும் உள்ளது என்று இலங்கை சமூக பாதுகாப்பு சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை 011 2 88 60 88 என்ற தொலைபேசி இலக்கம் மூலமும், 077 1 44 30 44 என்ற வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கம் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும்.

📝 TJ Ceylon Media |25.05.2026|•இந்திய அரசாங்கத்தினால் இலங்கை பொலிஸிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134  கெப் ரக வாகனங்கள் உ...
25/05/2026

📝 TJ Ceylon Media |25.05.2026|
•இந்திய அரசாங்கத்தினால் இலங்கை பொலிஸிற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134 கெப் ரக வாகனங்கள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதியிடம் கையளிப்பு

இலங்கை பொலிஸின் பயன்பாட்டிற்காக, இந்திய - இலங்கை நட்புறவுத் திட்டத்தின் கீழ் இந்திய அரசாங்கத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட 134 கெப் (Single Cabs) ரக வாகனங்கள் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் இன்று (25) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.

இதற்காக இந்திய அரசாங்கம் 300 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளதுடன், இந்த கெப் ரக வாகனங்கள் வட மாகாணத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு வழங்கப்படவுள்ளன.

எதிர்காலத்திலும் இலங்கைக்கு இவ்வாறான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இதன்போது குறிப்பிட்டார்.

இந்திய அரசாங்கம் மேற்கொண்ட இந்த அன்பளிப்பைப் பாராட்டி, பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கு நினைவுப் பரிசொன்று வழங்கி வைக்கப்பட்டது.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர் சுனில் வடகல, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, டிமோ நிறுவனத்தின் பொது முகாமையாளர் ரஜீவ் பண்டிதகே ஆகியோரும், இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகளும், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

📝 TJ Ceylon Media |25.05.2026|•வித்யா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி பூபாலசிங்கம் ஜெயக்குமார் இன்று யாழ் சி...
25/05/2026

📝 TJ Ceylon Media |25.05.2026|
•வித்யா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி பூபாலசிங்கம் ஜெயக்குமார் இன்று யாழ் சிறைச்சாலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு.

Address

Batticaloa
30000

Alerts

Be the first to know and let us send you an email when TJ Ceylon Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share