Kalkudah 1st News

Kalkudah 1st News கல்குடா மக்களின் தனித்துவ குரல்

19/03/2025
09/03/2025

கேள்விக்குறியாகி வரும் மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பு

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) ஓட்டமாவடி.

இலங்கையின் உயர் சபையான பாராளுமன்றத்தின் கௌரவ உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போதைய அரசாங்கம் பாதுகாப்பை அகற்றியிருக்கும் நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தல்களை எதிர்நோக்கிய சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றது.

மக்கள் பணிக்காக மக்கள் மத்தியில் பாதுகாப்பற்ற நிலையில் செல்லும் போது பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட அல்லது அரசியல் காரணங்களுக்காக எதிர்ப்புகளையும், தாக்குதல்களையும் எதிர்கொள்கிறார்கள்.

தேர்தல்கால குரோதங்கள், உள்ளக முரண்பாடுகள், அரசியல் நோக்கங்கள், பாராளுமன்றத்தில் நிகழ்த்தும் உரைகள், தனிப்பட்ட காரணங்கள் என்பவற்றால் இவ்வாறான அச்சுறுத்தல்களை மக்கள் பிரதிநிதிகள் எதிர்நோக்குவார்களாக இருந்தால், அவர்கள் பாராளுமன்றத்தில் பிரச்சினைகளை சுதந்திரமாக பேசவோ, மக்கள் சந்திப்புகளுக்காக நேரடியாகச் செல்வதற்கோ தயங்கும் சூழ்நிலை ஏற்படுமாக இருந்தால் பாராளுமன்றத்திற்கு தங்களின் பிரதிநிதியாக அனுப்பியவர்களின் நோக்கங்கள் தடைப்படும்.

குறிப்பாக, ஆளும், எதிர்க்கட்சிகள் என்ற பாகுபாடின்றி அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் கவனஞ்செலுத்தப்பட வேண்டும்.

அண்மையில் ஆளுங்கட்சியைச்சேர்ந்த இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் அச்சுறுத்தல்களுக்குள்ளான சம்பவங்கள் நடந்திருந்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக அக்கறைகாட்டாததன் விளைவாக நேற்று முன் தினம் (08) மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.எஸ்.நளீம் தனது சொந்த ஊரில் வைத்து அதிகாலையில் தாக்கப்பட்டிருக்கிறார்.

எனவே, உடனடியாக இவ்விவகாரங்களில் கவனஞ்செலுத்தி, எதிர்காலங்களில் எவ்வித அச்சுறுத்தல்களுமின்றி தங்களின் மக்கள் பணியை சுதந்திரமாகவும் சிறப்பாகவும் முன்னெடுத்துச் செல்வதற்கு ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்துவது அவசியமாகும்.

09/03/2025

சிலாவத்துறை கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பூர்வீகக் காணிகளை உரிமையாளர்களிடம் மீள ஒப்படைத்துவிடுங்கள்

ஜனாதிபதியிடம் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் வேண்டுகோள்

மன்னார்,சிலாவத்துறை கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பிரதேசத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வந்த பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளையும்,அவர்களது உடைமைகளையும் அவற்றின் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைத்து விடுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ,பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் ,வியாழக்கிழமை(20),பாராளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் அவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் .அதுபற்றி கவனம் செலுத்துவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

பிரஸ்தாப,பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்குழு கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் ஜனாதிபதி திசாநாயக்க முன்னிலையில்
மேலும் தெரிவித்துள்ளதாவது ,

இந்த சிலாவத்துறை கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ள பாரிய நிலப்பிரதேசம் யுத்தம் நிகழ்ந்து வந்த1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அங்கிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து பழைய சிலாவத்துறை கிராமம் பெரும்பாலும் அரசாங்கத்தினால் கடற்படைக்கு கையகப்படுத்தப்பட்டு ,இன்னும் தொடர்ந்து பல்லாண்டுகளாக நாங்கள் விடுத்து வருகின்ற வேண்டுகோள்களை முற்றாகப் புறக்கணித்து அரசாங்கத்தினால் கடற்படை முகாமாக பயன்படுத்தப்பட்டு வருவதனால், அவற்றின் உண்மையான உரிமையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.அவர்களது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த,பாரம்பரிய கலாசாரப் பின்னணியைக் கொண்ட இந்தப் பாரிய நிலப்பரப்பு எதிர்கால சந்ததிகளுக்கு இல்லாமல் போகக்கூடிய அபாயம் நிலவுகிறது.

இடம்பெயர்ந்தவர்களில் கணிசமானோர் பின்னர் மீளக் குடியேறியுள்ள போதிலும் ,அவர்கள் தங்களுக்குச் சொந்தமான காணிகளை செய்கை பண்ணவோ,அவற்றை உரிய முறையில் பயன்படுத்தவோ,அங்கு முன்னர் போன்று வழமையான வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடவோ முடியாதுள்ளனர்.வேலி கட்டியும்,அரண் அமைத்தும் மிகப் பெறுமதி வாய்ந்த இந்த நிலப்பரப்பை தொடர்ந்தும் அரசாங்கம் கடற் படை முகாமாக விஸ்தரித்திருப்பது அநீதியானது .

இந்தப் பாரதூரமான விஷயத்தைப் பற்றி நாங்கள் முறையிடுகின்ற நான்காவது ஜனாதிபதியாக நீங்கள் இருக்கிறீர்கள் . ஆகவே இதனால் பாதிக்க பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க

09/03/2025

ஓட்டமாவடி, மஜ்மா நகர் மையவாடிக்கு காணி கொடுத்தவர்களுக்காக நாடாளுமன்றில் குரல் கொடுத்த ரவூப் ஹக்கீம்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA)- ஓட்டமாவடி.

பாராளுமன்றத்தில் இன்று (27/02/2025) வாய்மூல கேள்விக்கான நேரத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சரிடம் கொவிட் உடலங்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட பிரதேசம், மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பில் பல கேள்விகளைக் கேட்டிருந்தார்.

மேலதிக கேள்வியாக ரவூப் ஹக்கீம் பின்வருமாறு கேள்வியைத்தொடுத்தார்.

கொவிட்டினால் மரணித்த 3000 க்கு மேற்பட்டவர்களின் உடல்கள் இந்த மயானத்தில் நல்லடக்கம் செய்ததாக குறிப்பிட்டார்.அவருக்கு தெரியும் நான் அவ்வப்போது சுகாதார அமைச்சரிடம் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கின்றேன், அறிவியல் சாராத முறையில் நிலக்கீழ் நீர் மிகவும் ஆழமாக இருக்கின்றதான பிரதேசங்களில் இந்த நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என்கின்ற கருத்தின் காரணமாக இவ்வாறான அழுத்தங்களுக்கு பெருமளவிலான மக்கள் முகம் கொடுத்தார்கள்.
அவர்களுடைய உறவினர்கள், நண்பர்களுக்கும் இறுதி மரியாதை செலுத்துவதற்கு கூட வாய்ப்பு இல்லாமல் தூரப்பிரவேசங்களுக்கு கொண்டு சென்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

நான் கேட்பது இந்த மஜ்மா நகர் என்கின்ற பிரதேசம் ஓட்டமாவடி பிரதேச செயலக ஆளுகை பிரதேசத்திற்குள் வரும் மிகவும் கஷ்டமான அதேபோல் ஏழ்மை நிலையில் இருக்கின்றதான சுமார் 300 குடும்பங்கள் வாழ்கின்ற பிரதேசம். அந்தப் பிரதேசத்தில் அவர்கள் பயிர்செய்கையில் ஈடுபட்டு வந்ததற்கான உரிமங்கள் உடைய காணிகளைக் கொண்டிருப்பவர்களுக்கு அநீதி ஏற்பட்டிருக்கின்றது.

இதை கையகப்படுத்திய காரணத்தினால் இதில் பத்து பேர் மேல் முறையீடு செய்திருக்கின்றார்கள் அல்லது விண்ணப்பித்திருக்கின்றார்கள்.தங்களுக்கு மாற்றுக்காணிகள் வழங்கப்பட வேண்டும் என்று. ஆகவே, பிரதேச செயலக அபிவிருத்திக் குழு கூட்டத்திலும் இது கலந்துரையாடப்பட்டிருக்கின்றது.

தயவுசெய்து இது சம்பந்தமாக அவசரமாக நடவடிக்கை மேற்கொண்டு அரச காணிகள் அன்மித்த பிரதேசத்தில் இருக்குமாயின் அத்தகைய காணிகளைப் பெற்று இழந்த காணிகளுக்கு உண்மையில் உரிமைதாரர்கள் இருக்கின்றார்கள், அவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா?என்றவாறு தனது வினாவை ரவூப் ஹக்கீம் தொடுத்தார்.

குறித

09/03/2025

கல்குடா முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்கு நாடாளுமன்றத்தில் தீர்வினைக்கோரிய ரவூப் ஹக்கீம்.

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) - ஓட்டமாவடி.

பாராளுமன்றத்தில் ( 04) பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் மீதான செலவு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கல்குடா முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தொடர்பில் பல்வேறு விடயங்களை பட்டியலிட்டு தனது ஆணித்தரமான கருத்துக்களை முன்வைத்தார்.

நாடாளுமன்றில் உரையாற்றிய அவர்,
நிலத்தொடர்பற்ற ஒரு பிரதேச செயலகம் ஒரு பிரதேசத்தை நிர்வாகம் செய்ய முடியாது. நிலத்தொடர்பற்ற வகையில் நிர்வாகம் கல்முனையில் அமைய வேண்டுமென்று தமிழ்த்தரப்பில் விரும்பப்படுகின்ற போது, அதேபோன்று, நிலத்தொடர்பற்ற வகையில் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற கோறளைப்பற்று மத்திக்கு சொந்தமாக ஏற்கனவே எல்லை நிர்ணய சபையால் நிர்ணயிக்கப்பட்ட ஜெயந்தியாய, ரிதிதென்ன போன்ற கிராமங்கள் மாத்திரம் இன்று கோறளைப்பற்று மத்தியோடு நிலத்தொடர்பற்ற வகையில் இணைக்கப்பட்டிருக்கிறது.

இது வேண்டுமென்று ஒரு அமைச்சரவைப்பத்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற விடயத்திற்கு மாற்றமானதாகும். ஏற்கனவே ஒரு ஆணைக்குழு பரிந்துரை செய்திருக்கத்தக்கதாக அது சம்பந்தமான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடாமல் வேண்டுமென்று தவிர்க்கப்பட்டு வருகின்றது.

11 கிராம சேவர் பிரிவுகள் உள்ளடக்கிய கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் எல்லைகள் சம்பந்தமாக பாரிய பிரச்சனை இருக்கிறது.

இந்தப்பிரச்சனைக்கான தீர்வை கட்டாயமாக இந்த அரசாங்கம் பெற்றுத்தர வேண்டும்.

இது ஒரு மிகப்பாரிய அநீதியாகும். 2000ம் ஆண்டு ஜூலை 13ம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவைத்தீர்மானம் பனம்பல ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானமாகும்.

குறிப்பாக, கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகத்திற்கு 18 கிராம சேவகர் பிரிவுகளும், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்கு 11 கிராம சேவகர் பிரிவுகளும் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு, அது சம்பந்தமான முடிவுகள் எட்டப்பட்டிருக்கும் நிலையில், வேண்டுமென்றே கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகம் சுமார் 686 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை தங்களுடைய ஆளுகைக்குள் வைத்துக் கொண்டிருக்கின்றது.

கோறளைப்பற்று மத்திக்கு ஆணைக்குழுவின் பரிந்துரையின் மேல் உரித்த

09/03/2025

வெளியேற்றப்பட்ட மக்களை மீள்குடியேற்றுமாறு பல்வேறு கோரிக்கைகள் பிரதேச செயலகத்தினூடாக விடுக்கப்பட்ட போதும், அது மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு சென்றடையவில்லை.

கிழக்கு மாகாணத்தில் இந்திய உதவியில் மேற்கொள்ளப்படவுள்ள வீட்டுத்திட்டங்களில் கள்ளிச்சையையும் உள்ளட்டக்கி மீள்குடியேற்றம் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

கள்ளிச்சை மீள்குடியேற்றம் தொடர்பில் 2011ம் ஆண்டு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாக நளீம் எம்பி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாகரைப்பிரதேச செயலக எல்லைக்குள் வசிக்கும் காரமுனை, நாவலடி போன்ற பிரதேசங்களில் நீண்டகாலமாக வசித்து வரும் மக்கள் காணி அனுமதிப்பத்திரங்களை குறித்த பிரதேச செயலகத்திலிருந்து பெற முடியாமல் ஓரங்கட்டப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.

காரமுனை, நாவலடியில் வாழும் முஸ்லிம்களுக்கு கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தினால் அநீதியிழைக்கப்படுகின்றது.

எனவே, காணிக்கச்சேரி நடாத்தப்படுகின்ற வேளையில் காரமுனை, நாவலடி பிரதேச மக்களுக்கும் காணி அனுமதிப்பத்திரங்களை வழங்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்ளவதாக கல்குடா முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும் ரவூப் ஹக்கீம் தீர்வினைக் கோரினார்.

09/03/2025

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவறான புரிதலை சுட்டிக்காட்டிய ரவூப் ஹக்கீம்

எம்.என்.எம்.யஸீர் அறபாத் (BA) -ஓட்டமாவடி.

தவறான புரிதலுடன் ஆணைக்குழு தேர்தல் அறிவிப்பை விடுத்துள்ளதாக பாராளுமன்றத்தில் 04ம் பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் மீதான செலவு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மார்ச் 17 முதல் 20ம் திகதி வரை கல்முனை மாநகர சபை, மன்னார், பூநகரி, எல்பிட்டிய, தெஹியத்தகண்டி பிரதேச சபைகள் தவிர்ந்த அனைத்து உள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்தல் விடுத்திருப்பதாக தினக்குரல் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட ஐந்து உள்ளூராட்சி மன்றங்கள் தவிர்ந்த ஏனைய உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு தேர்தல் நடத்தப்படும் என்பது இதன் அர்த்தமாகும்.

இந்த விடயம் சரி செய்யப்பட வேண்டும். குறிப்பிடப்பட்டிருக்கின்ற கல்முனை மாநகர சபைக்கு தடையுத்தரவு ஒன்றுள்ளதுடன், மன்னார் மற்றும் தெஹியத்தகண்டி பிரதேச சபைகளுக்கான எமது வேட்புமனு நிராகரிக்கப்பட்டமையினால் நானே அவ்வழக்கில் தோன்றி, உயர் நீதிமன்றத்தடையுத்தரவைப் பெற்றுக் கொண்டேன்.

அத்தடையுத்தரவு தேர்தலை நடத்துவதற்கெதிராக பெற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், குறித்த தடையுத்தரவு வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பானது. தற்போது வேட்புமனு இரத்தாகிவிட்டதால் அத்தடையுத்தரவு ஏற்புடையதாகாது.

தவறான புரிதலுடன் தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வறிவித்தலை விடுத்திருக்கின்றது. இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவிப்பதனுடன் இவ்வழக்கை வாபஸ் பெறுவதற்கு உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன். (கடந்த 06ம் திகதி வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

அதே நேரம். மன்னார், தெஹியத்தகண்டி உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இருக்கின்ற வேட்பு மனுவுக்கெதிராக தடையுத்தரவும் தற்போது இரத்தாகி விட்டது.

எம்மால் வாபஸ் பெறும்பட்சத்தில் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேர்தல்கள் நடத்த முடியும் எனத்தெரிவித்தார்.

குறித்த செய்தி தொடர்பான பின்னிணைப்பு

உள்ளூராட்சிமன்றத்தேர்தலுக்கு மன்னார், தெஹியத்தகண்டிய பிரதேச சபை ஆகியவற்றுக்கு முறையே ஸ்ரீலங்கா முஸ்லிம காங்கிரஸ், ஐக்கிய தேசிய கூட்டமைப்பு

21/12/2024

ஜனாஸாக்களின் விபரங்களைக்கோரிய போது கடந்த அரசாங்கம் சொன்னது போல் இந்த அரசாங்கமும் பதிலளித்தமை ஆச்சரியத்தை உண்டுபண்ணியது.

மேலும், இவ்விவகாரத்தில் அன்று தொடர்புபட்டிருந்தவர் மீண்டும் இந்த அரசாங்கத்தின் சுகாதார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படும் போது மீண்டுமொரு தவறு நடக்காது தடுக்கப்படும் என்பதோடு, அரசியல்வாதிகளின் அநீதியான செயற்பாடுகளுக்கு அரச நிருவாகிகள் துணை போவதற்கு அச்சப்படுவார்கள்.

அத்தோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைப்பதோடு, மீண்டும் இவ்வாறான மோசமான தவறு இடம்பெறாதென்பதை சட்டரீதியாக உறுதிப்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பாகவும் அமையும்.

இது துன்பகரமான சம்பவம். இனி இவ்வாறான சம்பவம் நடக்காதென்பதை ஆணித்தரமாகக்கூறும் அரசு, பாதிக்கப்பட்டோர் விபரங்களை வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடுள்ளது.

எனவே, இவ்விடயத்தில் நிரந்தரமாக ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தொடர்ந்தும் கரிசனையோடு போராடிவருவதைக் காண முடிகின்றது.

20/08/2024

இனவாதி அர்ஜுனாவின் சுயரூபம் வெளிப்பட்டது. வைத்தியர் சாபி அவர்களைப் பற்றி இவன் கூறிய அபாண்டமான கருத்துக்கள் தற்பொழுது வெளியாகியுள்ளன

20/11/2023

Follow the ஆரோக்கிய வாழ்வு Health Talk with Dr_S channel on WhatsApp:

Address

Batticoloa
30426

Alerts

Be the first to know and let us send you an email when Kalkudah 1st News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

YOUR ADVERTISEMENT HERE