என்றும் உன் நினைவுகளுடன்

என்றும் உன் நினைவுகளுடன் Dream waiting for you � �
16 years of love

08/03/2025
இனியும்இன்னொரு நிழல் தேடஇனியும்இன்னொரு விரல் கோர்க்க இனியும்இன்னொரு நதி கடக்கஇனியும்இன்னொரு கடல்சேரஇயலப் போவதில்லை...எடை...
19/02/2025

இனியும்
இன்னொரு நிழல் தேட
இனியும்
இன்னொரு விரல் கோர்க்க
இனியும்
இன்னொரு நதி கடக்க
இனியும்
இன்னொரு கடல்சேர
இயலப் போவதில்லை...

எடையிழந்து மிதக்கின்றேன்~
என் வானம் நீயென்றான நாள் முதலாய்.
ஏந்திக்கொள்வதும்
எறிந்து விளையாடுவதும்
உன் நிமித்தங்கள்...

மனதுக்குள் கனமில்லை என்றானபின்
எந்த உயரமும் வானம்!

🖼️🎨🖌️~ Siva

சிறுவயதில் பிரமிப்பை ஏற்படுத்தியவைகள்இப்போதெல்லாம்சலிப்படைய வைக்கிறது.திருவிழாக்கள்,புதுத்துணிகள்,பண்டிகைகள்,சில நேரங்கள...
21/08/2024

சிறுவயதில் பிரமிப்பை ஏற்படுத்தியவைகள்
இப்போதெல்லாம்
சலிப்படைய வைக்கிறது.

திருவிழாக்கள்,
புதுத்துணிகள்,
பண்டிகைகள்,
சில நேரங்களில் சினிமா கூட..

ஏன் இந்த மாற்றம் ??

கடந்து வந்த கடினமான தருணங்களா,

நிராசையாகிப் போன பேராசைகளா,

நிறைவேறாமல் போன சிறு சிறு கனவுகளா,

வேலை இல்லாமல் பசியுடன் சுற்றித் திரிந்த நாட்களா,

அவமானங்களின் போது அழுகையை அடக்கியதன் விளைவுகளா,

செக்கு மாட்டைப் போல ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் வாழ்வா?!

Maturity aa,

எதுவென சரியாய் சொல்லி விட முடியவில்லை..

மாறாக,

தனிமை கொஞ்சம் ஆறுதல் தருகிறது..

தலைகோதி தேற்றுகிறது,

இசை கொஞ்சம் இளைப்பாறுதல் தருகிறது..

பயணங்கள் உயிரோடிருப்பதை அவ்வப்போது நினைவூட்டுகிறது..!

ஆனால்,

ஏன்? இந்த இனம் புரியாத வெறுமை..?

நடுக்கடலில் தனித்து விடப் பட்டதை போன்ற தனிமை??

காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை..

ஆனால்,
இப்போதெல்லாம் ஏதும் பிரமிப்பை ஏற்படுத்துவதில்லை..

எதன் மீதும் தீராத காதல்

11/06/2024

Happy birthday Siva
12 June 💙❤️🥳

07/05/2024

Siva 1206 ❤️💙

19/04/2024

Siva❤️💙

Address

Usan
Chavakachcheri

Website

Alerts

Be the first to know and let us send you an email when என்றும் உன் நினைவுகளுடன் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category