Wayamba Freedom Media

Wayamba Freedom Media Wayamba Freedom Media is an independent entity which strives for social justice

20/12/2025

20/12/2025

20/12/2025
09/12/2024

சிரிய அதிபர் பஷார் அல் அஸ்ஸாத் ரஷ்யாவின் மொஸ்கோவில் தஞ்சம்
தகவல் : ரஷ்ய அரச ஊடகம்

01/12/2024

நாளைய தினம் வடமேல் மாகாண முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை

நிந்தவூர் மத்ரஸா மாணவர்களின் விபத்து குறித்து மத்ரஸா நிர்வாகிகள் விளக்கம்
28/11/2024

நிந்தவூர் மத்ரஸா மாணவர்களின் விபத்து குறித்து மத்ரஸா நிர்வாகிகள் விளக்கம்

காஷிபுல் உலூம் அரபுக்கல்லூரி நிந்தவூர் மதரஸா மாணவர்களின் விபத்தில் என்ன நடந்தது?மதரஸா நிர்வாகம் விளக்கம்.....! ...

மீண்டும் தலைதூக்க எத்தணிக்கும் பிரிவினைவாதம்...............................................................................
27/11/2024

மீண்டும் தலைதூக்க எத்தணிக்கும் பிரிவினைவாதம்...................................................................................
வடக்கிலும் கிழக்கிலும் எந்த வித தடையின்றி தடைசெய்யப்பட்ட LTTE இயக்கத்தின் பிரச்சாரம் அரங்கேறுகின்ற இவ்வேளையில் கனேடிய பாராளுமன்றத்திலும் பயங்கரவாதத்தின் நிழல்கள் தங்குதடையின்றி செயற்படுகின்றன.

ஸ்வீடன் நாட்டின் அபா ( ABBA) இசைக்குழுவின் நகலொன்றான ABBA TRIBUTE க்கு குடிபோதை நடுவில் கொச்சை ஆங்கிலத்தில் கருத்து தெரிவித்ததும் ஒட்டுமொத்த வெளிநாட்டுக் கொள்கையைக் கட்டியெழுப்பிவிட்டோம் என்ற அறிவீனமான இறுமாப்பில் இருந்திராமல் ஒட்டுமொத்த இலங்கையர்களுக்கே ஆப்பு வைக்கக் காத்திருக்கும் LTTE இயக்கம் தொடர்பான உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கையையும் சீரமைத்தால் சாலச்சிறந்ததாய் இருக்கும்.

LTTE பயங்கரவாதம் சந்தர்ப்பத்துக்கு ஏங்கிக்கொண்டிருக்கும்போது முளையிலேயே கிள்ளி எறியப்பட்ட பிரிவினைவாதத்துக்கு தடவிக்கொடுக்கும் நியாய தர்மம் அரசுக்குத் தேவையேயில்லை.நாமனைவரும் ஒன்றாய் LTTE பயங்கரவாத இயக்கத்துக்கு முட்டு கொடுக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் எதிர்ப்பது கட்டாயக் கடமையாகும்.தமிழ்பேசும் மக்களின் உரிமைகள் பயங்கரவாத இயக்கமொன்றுக்கு முட்டுக்கொடுத்துத் தான் பெற வேண்டுமென்ற நியாயத்தைக் கற்பித்தே ஒரு தலைமுறையின் வாழ்க்கையை நாசமாக்கி விட்டார்கள் படுபாவிகள்.பயங்கரவாதம் எனும் கொடிய அரக்கன் எந்த சமூகத்திலிருந்து வந்தாலும் அதை எதிர்ப்பது கட்டாயம் செய்யப்படவேண்டியதொன்றாகும்.

#குருநாகலை #பொலன்னறுவை #மொனராகலை #கேகாலை #அநுராதபுரம் #பதுளை #யாழ்ப்பாணம் #சிலாபம் #இரத்தினபுரி #மட்டக்களப்பு #திருகோணமலை #அம்பாறை #கல்முனை #வன்னி

Rising today in the House of Commons to present petition e-4981, calling for legal action against Sri Lanka under the Genocide Convention at the Internationa...

முக்கியமான அடுத்த 24 மணிநேரம்................................................................................தாழமுக்கம் ...
27/11/2024

முக்கியமான அடுத்த 24 மணிநேரம்................................................................................

தாழமுக்கம் இன்று புயலாக மாறும் சாத்தியம் - பாதிக்கப்படும் பிரதேசங்கள் மற்றும் வானிலையில் ஏற்படும் மாற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டு உள்ளது.

#குருநாகலை #புத்தளம் #பொலன்னறுவை #மொனராகலை #கேகாலை #அநுராதபுரம் #பதுளை #சிலாபம் #இரத்தினபுரி #மாத்தறை #மட்டக்களப்பு #திருகோணமலை #யாழ்ப்பாணம் t

கலா ஓயாவை அண்மித்தோருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை............................................................................
27/11/2024

கலா ஓயாவை அண்மித்தோருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..................................................................................

கலா ஓயா பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, நொச்சியாகம, ராஜாங்கனை, வனாத்தவில்லுவ, கருவலகஸ் ஏரி ஆகிய பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த தாழ்நில மக்கள்,

இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டுமென திணைக்களம் அறிவித்துள்ளது.

தற்போது ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், வினாடிக்கு பத்தாயிரம் கன அடி நீர் கொள்ளளவு கலா ஓயாவிற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

அங்கமுவ நீர்த்தேக்கத்திலும் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், கலா ஓயாவிற்கு வினாடிக்கு 3650 கன அடி நீர் விடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீரற்ற காலநிலையினால் 17 மாவட்டங்களில் 59,629 குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சத்து ஏழாயிரத்து ஐந்நூற்று என்பது,

பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மாவட்டத்தில் 34,885 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து இருபத்து மூவாயிரத்து எண்ணூற்று எழுபத்தாறு பேர்,

அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உதய ஹேரத் தெரிவித்தார்.

இதேவேளை, அக்கரைப்பற்று – கல்முனை வீதியில் ஒலுவில் – கழிஓடை பகுதியில் பாலம் ஒன்று மூழ்கியதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாலம் மூழ்கியுள்ளதாக அப்பகுதியிலுள்ள எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மட்டக்களப்பு கல்லடி பாலத்தின் கீழ் மூன்று அடி தண்ணீர் தேங்கியிருப்பதால், மட்டக்களப்பு நகருக்கு செல்வது தடைப்பட்டுள்ளது.

மேலும், மட்டக்களப்பு நகரம் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

இந்நிலையில், கலாஓயாவின் வான் கதவுகள் தலா ஒரு அடி திறக்கப்பட்டுள்ளன. பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையுடனான வானிலை காரணமாக,

கலாஓயா 85500 ஏக்கர் அடி நீர் கொள்ளளவை எட்டியுள்ளதுடன் நேற்று காலை 10 மணியளவில் கலாஓயா குளம் நிரம்பி வழியும் மட்டத்தை எட்டியுள்ளது.

இதனையடுத்து கலாஓயாவின் அவசர வான் கதவுகள் இரண்டையும் 10 அடி வரை திறக்க கலாஓயாவுக்கு பொறுப்பான நீர்ப்பாசன பொறியியலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

வினாடிக்கு 10420 கன அடி நீர் கொள்ளளவு கலா ஓயாவிற்கு திறந்து விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Note : ஏனையோரும் தெரிந்துகொள்ள Share செய்யுங்கள்.

#குருநாகலை #பொலன்னறுவை #மொனராகலை #கேகாலை #அநுராதபுரம் #பதுளை #சிலாபம் #இரத்தினபுரி #மாத்தறை #புத்தளம்

அவசர அனர்த்த சூழ்நிலைகள் தொடர்பில் அறிவிக்க விசேட எண்.....................................................................
27/11/2024

அவசர அனர்த்த சூழ்நிலைகள் தொடர்பில் அறிவிக்க விசேட எண்...................................................................................

நாடளாவிய ரீதியில் மோசமான காலநிலை காரணமாக ஏற்படக்கூடிய அனர்த்த நிலைமைகளின் போதான அவசர சூழ்நிலைகளை அறிவிப்பதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் 24 மணிநேர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி,

0112 027 148
0112 472 757
0112 430 912
0112 013 051

ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தகவல்களை அறிவிக்க முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

[email protected] என்ற மின்னஞ்சல் மூலமும் அந்த மையங்களைத் தொடர்புகொள்ள முடியும்.

பொலிஸ் தலைமையகத்தில் இந்த விசேட நடவடிக்கை மையம் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனையோரும் தெரிந்துகொள்ள Share செய்யுங்கள்.

#குருநாகலை #பொலன்னறுவை #மொனராகலை #கேகாலை #அநுராதபுரம் #பதுளை #சிலாபம் #இரத்தினபுரி #மாத்தறை #புத்தளம்

வெளிநாட்டு  முதலீட்டு வாய்ப்புகளுக்காக  இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி கவன...
26/11/2024

வெளிநாட்டு முதலீட்டு வாய்ப்புகளுக்காக இலங்கை அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவது குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி கவனம் செலுத்தியது

• அரசாங்கத்தின் முறையான நிதி முகாமைத்துவத்தின் காரணமாக வெளிநாட்டு முதலீடுகள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டு வரும் நிலையில் அந்த முதலீட்டு வாய்ப்புக்களுக்கு உதவிகளை வழங்குவது குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி கவனம் செலுத்தியுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் ஜீ.என்.ஆர்.டீ.அல்போன்ஸூ ஆகியோருக்கு இடையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று (26) நடைபெற்ற சந்திப்பிலேயே இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.

அதற்கமைய வலுசக்தி,நவீன விவசாயம் மற்றும் காலநிலை அனர்த்த துறைகளில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டது.

மேற்படி துறைகளில் அரச துறையின் நேரடி முதலீட்டுக்கான வாய்ப்புகள், அரச மற்றும் தனியார் துறைகளின் கூட்டு முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் வலயப் பிரதானி டகியோ கொயிகே, ( Takeo Koike), ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் தகபுமி கடோனோ (Takafumi Kadono) , ஆசிய அபிவிருத்தி வங்கியின் சிரேஷ்ட நிபுணர் சந்தோஷ் பொகரெல் (Santhosh Pokharel), நிதி அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சமந்த பண்டார, நிதி அமைச்சின் பணிப்பாளர் உதேனி உடுகஹபத்துவ உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மூலம்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Address

Chilaw Town
61000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wayamba Freedom Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share