Almashoora Latest News

Almashoora Latest News இலங்கையின் நம்பகரமான செய்தி! Almashoora Latest News The News Updater

27/07/2025

🔴இஸ்ரேலிய நிவாரணத்தில் ஏராளமானோர் காயம்!

இஸ்ரேலிய விமானங்கள் வீசிய குறைந்த அளவிலான உதவிக்காக பொதுமக்கள் போராடியதில் டஜன் கணக்கானோர் காயமடைந்தனர்.

இஸ்ரேல் தொடர்ந்து ஆறாவது மாதமாக மக்களை பட்டினியால் வாட்டி வதைத்த நிலையில், நேற்று முதல் நிவாரண பொருட்கள் சிலவற்றை ஆகாய மார்க்கத்தில் வீசி வருகிறது.

இதனை பெற்றுக்கொள்ள முண்டியடித்ததில் ஏராளமோனோர் காயமுற்றனர்.

27.07.2025
Almashoora Latest News

27/07/2025

🔴எமிரேற்சின் நிவாரண கப்பல்!
காஸாவில் ஏற்பட்டுள்ள #கடுமையான பஞ்சத்தை தொடர்ந்து 85 குழந்தைகள் உட்பட 127 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில்..

ஐக்கிய அரபு குடியரசு (UAE) சுமார் #ஏழாயிரம் டொன் உணவு பொருட்கள், மருந்துகள் மற்றும் தண்ணீர் பவுசர்கள், அம்பியூலன்ஸ் வண்டிகள் உட்படட்ட பொருகளை #காஸாவிற்கு அனுப்பி வைத்துள்ளது!

அதன் #முதற்கட்டமாக அவை நேற்று மாலை முதல் ஆகாய மார்க்கமாக உணவு பொட்டலங்கள் #பரசூட் மூலமும் காஸாவிற்கு வீசப்பட்டு வருகிறது.

எகிப்திலிருந்தும் சுமார் 90 #லாறிகளில் காஸாவிற்கு நிவாரண பொருட்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை இஸ்ரேலும் #நேற்றிரவு காஸா மீது உணவு பொட்டலங்களை வீசியது.

இதில் ஏராளமானோர் நெரிசலில் சிக்குண்டு காயப்பட்டனர் (காணொளி அடுத்த பதிவில்)

27.07.2025
Almashoora Latest News

27/07/2025

LATEST NEWS
உலகம் முழுவதும் எதிர்ப்பலை!
காஸாவிற்கு 10 மணி நேரம் நிவாரண பொருள் வழங்குவதாக இஸ்ரேல் அறிவிப்பு!
Almashoora Latest News

27/07/2025

🔴BREAKING
தீ பிடித்த #அமெரிக்கன் போயிங்க் விமானம்!

அமெரிக்காவின் #டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் #மியாமி செல்ல தயாரான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் போயிங் 737 மேக்ஸ் 8 விமானத்தின் இடது பிரதான தரையிறங்கும் கியரில் #தீப்பிடித்ததால், பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

173 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் அனைவரும் ஓடுபாதையில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

27.07.2025
Almashoora Latest News

26/07/2025

BREAKING NEWS
காஸாவில் இஸ்ரேலிய ராணுவம் மீது ஹமாஸ் ஸ்னைப்பர் தாக்குதல்.
6 ராணுவம் பலி!
Almashoora Latest News

🔴AID 🔴TRUCKS 🔴GAZAபசி பட்டினியால் வாடும்  #காஸாவின் சுமார் 20  #லட்சம் மக்களுக்காக ஆயிரக்கணக்கான டொன்  #நிவாரண பொருட்களு...
26/07/2025

🔴AID 🔴TRUCKS 🔴GAZA
பசி பட்டினியால் வாடும் #காஸாவின் சுமார் 20 #லட்சம் மக்களுக்காக ஆயிரக்கணக்கான டொன் #நிவாரண பொருட்களுடன் காத்துக்கிடக்கும் லாறிகளே இவை!

நிவாரண பொருட்களுடன் சுமார் 950 லாரிகள் இஸ்ரேலின் அனுமதிக்காக காத்து கிடக்கின்றன.

அனுமதி கிடைத்தால் #ஆறாயிரம் லாரிகளை அனுப்புவதற்கு தயாராக இருப்பதாக #ஐநா சபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை #அரபு நாடுகள் அனைத்தும் இணைந்து “மனிதாபிமான #நிவாரண பொருட்களை காஸாவிற்குள் எடுத்து செல்ல அனுமதி வழங்குமாறு” #டொனால்ட் ட்ரம்பிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

26.07.2025
Almashoora Latest News

25/07/2025

🔴விண்வெளியில் 🔴ஈரான்
இன்று வெள்ளிக்கிழமை, ஒரு #ரஷ்ய ராக்கெட் #ஈரானிய தகவல் தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்வெளிக்கு ஏவியுள்ளது.

#மேற்கத்திய ஆட்சியாளர்களை களை #நீண்டகாலமாக #கவலையடையச் செய்து வரும் ஒரு விண்வெளித் திட்டத்தின் சமீபத்திய சாதனை இதுவாகும்.

“ #நஹிட்-2 என்றழைக்கப்படும் #செயற்கைக்கோள் #ரஷ்யாவின் வோஸ்டோக்னி காஸ்மோட்ரோமில் இருந்து சோயுஸ் ராக்கெட்டைப் பயன்படுத்தி ஏவப்பட்டது.

110 கிலோகிராம் (240 பவுண்டுகளுக்கு மேல்) எடையுள்ள இந்த செயற்கைக்கோள் #ஈரானிய பொறியாளர்களால் #வடிவமைக்கப்பட்டுள்ளது.

#ஈரானின் விண்வெளித் திட்டத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப #முன்னேற்றங்கள் அதன் #பாலிஸ்டிக் ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்தை மேம்படுத்தவும் பயன்படுத்தப்படலாம் என்று மேற்கத்திய அரசாங்கங்கள் நீண்ட காலமாக கவலை தெரிவித்துள்ளன.

ஈரான் மற்றும் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி இடையேயான அணுசக்தி பேச்சுவார்த்தைகள் இஸ்தான்புல்லில் தொடங்குவதற்கு சற்று முன்பு ஏவுதல் அறிவிக்கப்பட்டது.

25.07.2025
Almashoora Latest News

🔴SRILANKAஇலங்கை முன்னாள் பிரபல அமைச்சர் பி. #தயாரத்ன காலமானார்! #அம்பாறை மாவட்டத்தை பிரநிதித்துவ படுத்திய அவர்,  #கல்லோய...
25/07/2025

🔴SRILANKA
இலங்கை முன்னாள் பிரபல அமைச்சர் பி. #தயாரத்ன காலமானார்!

#அம்பாறை மாவட்டத்தை பிரநிதித்துவ படுத்திய அவர், #கல்லோயா மற்றும் #மஹாவலி அபிவிருத்தி திட்டங்களின் முன்னோடியாக திகழ்ந்தவர்.

89 வயதில் இன்று காலமானார்.

25.07.2025
Almashoora Latest News

24/07/2025

🔴ISRAEL 🔴UKRAIN
#ஈரான் ரஸ்யாவுடன் கூட்டு சேர்ந்ததை தொடர்ந்து #இஸ்ரேல் உக்ரைனுடன் கூட்டு சேர்கிறது!

இஸ்ரேலிய #வெளியுறவு அமைச்சர் #கிடியோன்சார் தலைமையிலான குழுவொன்று நேற்றைய(23) தினம் உக்ரைன் சென்று அதன் அதிபரை சந்தித்து உரையாடிய தருணமே இதுவாகும்!

இதுபற்றி கருத்து பதிவிட்ட உக்ரைன் அதிபர் #செலேன்ஸ்கி

“முதன்மையாக பொருளாதார மற்றும் பாதுகாப்புத் துறைகளில் ஒத்துழைப்பு, உக்ரைனின் #வான் #பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் கூட்டு #ஆயுத உற்பத்திக்கான வாய்ப்புகள் குறித்தும் விவாதித்தோம்.”

“தெற்கு பிராந்தியங்களில் #நீர் விநியோக அமைப்புகளுக்கு உதவி வழங்க இஸ்ரேல் எடுத்த முடிவிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். இது மிகவும் முக்கியமானது.”

“மாசுபட்ட பகுதிகளில் மனிதாபிமான கண்ணிவெடிகளை அகற்றுவதில் ஆதரவை எதிர்பார்க்கிறோம். சந்திப்பின் போது இது குறித்து விவாதிக்கப்பட்டது. “இஸ்ரேல் எமக்கு உதவத் தயாராக இருப்பதற்கு நன்றி.”

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

24.07.2025
Almashoora Latest News

💔காஸா!எழுதி செல்லும்…! இறையின் கை…!24.07.2025Almashoora Latest News
24/07/2025

💔காஸா!
எழுதி செல்லும்…! இறையின் கை…!

24.07.2025
Almashoora Latest News

24/07/2025

🔴நம்பிக்கை! ❤️
#எகிப்தைச் சேர்ந்த #இளகிய மனம் கொண்ட ஒருவர், #உணவு நிரப்பப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்களை கடலில் வீசி, அது #காஸாவை சென்றடையும் என்ற உறுதியான #நம்பிக்கையில் #மன திருப்தி கொள்கிறார்.

பின்னர் அவர் #பாலஸ்தீனியர்களிடம் மன்னிப்பு கேட்டு, இந்த பாட்டில்கள் அவற்றின் இலக்கை அடைய வேண்டுமென #அல்லாஹ்விடம் (இறைவனிடம்) பிரார்த்தனையும் செய்தார்.

குறித்த அந்த நபரின் காணொளி உலகம் முழுவதும் பரவி வருகிறது!

#எண்ணங்களுக்கே கூலி! செயல்கள் யாவும் #எண்ணங்களை பொறுத்தே அமைகின்றன.

24.07.2025
Almashoora Latest News

24/07/2025

SHOCKING NEWS
காஸாவின் மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்கும் தீர்மானத்திற்கு சவூதி அரேபியா கடும் கண்டனம்!🙃👇
Almashoora Latest News

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Almashoora Latest News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Almashoora Latest News:

Share