
08/07/2025
லாராவின் சாதனையை முறியடிக்காதது ஏன் ?
வியான் முல்டர் சொன்னது இதைத்தான்....
"பிரையன் லாரா ஒரு சகாப்தம் - இதை நாம் மறுக்கவே முடியாது. இங்கிலாந்துக்கு எதிராக அவர் குவித்த 400 ரன்களுக்கு மேல் என்பது கிரிக்கெட் வரலாற்றில் பொறிக்கப்பட்ட ஒரு சாதனை.
அத்தகைய மகத்தான வீரரின் வசம் அந்த சாதனை இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. மீண்டும் எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தாலும், நான் ஒருவேளை அதே முடிவைத்தான் எடுப்பேன்.
ஏனெனில், அந்த பெருமைக்குரிய வீரர் தன்வசம் வைத்திருக்கும் ஒரு உலக சாதனையை பாதுகாக்க உதவுவது, விளையாட்டு வீரர்களுக்கு இடையேயான பரஸ்பர மரியாதையையும், விளையாட்டு உணர்வையும் வெளிப்படுத்துவதாகும்.
Wiaan Mulder ❤️
எல்லாருக்கும் இப்படியொரு மனது வராது !